Visitors

hit counters

Wednesday, November 10, 2010

டல் அடித்த தீபாவளி

பொதுவாக தீபாவளியன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளிவரும்...சொந்த ஊருக்கு செல்பவர்கள் காலை எண்ணெய் தேய்த்து குளித்து புது ஆடைகள் உடுத்தி பட்டாசுகள் வெடித்த பின் காலை உணவை முடித்து விட்டு செய்யும் முதல் காரியம் நரபர்களுக்கு போன் செய்து எந்த அரங்கில் எந்த படம் என்பது தான்...சிலர் முந்தைய நாளே விசாரித்து வைத்துகொள்வார்கள்...

உடனே வண்டியை எடுத்துக்கொண்டு திரை அரங்கிருக்கு செல்வோம்...அங்கே நமக்கு முன்னாலே நண்பர்கள் கைகளில் டிக்கெட்டுடன் நின்று கொண்டிருப்பார்கள்...ஆனால் இப்போது தலைகீழாகிவிட்டது...இந்த முறை நண்பர்களுக்கு போன் செய்தால் "போடா மச்சான் பெருசா எந்த படமும் வரல டா...வந்ததும் மொக்க டா " என்று புலம்புகிறார்கள்...

Tuesday, November 9, 2010

மைனா - விமர்சனம்

 
இதெல்லாம் ஏன்பா ரிலீஸ் ஆச்சுனு யோசிக்கும் படங்களுக்கு இடையில் ,பெரிய ஹீரோ ஹீரோயின் இல்லாமாமல் கதையை மட்டும் வைத்து இயக்கப்படும் படங்கள் சமீப காலங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது...

அந்த  வகையில் இப்போது சேர்ந்திருப்பது மைனா...

நாயகன்  விதார்த் "தொட்டுப்பார்" படத்தில் தொடாத நாயகன் இதில் செம டச்...நாயகி அமலா பால். "சிந்து சமவெளி" பார்த்தவர்கள் யாரும் இவரை அவ்ளோ சீக்கிரம் மறக்க மாட்டாங்க... ;) (நான் படத்தை மட்டும் தான் சொன்னேன்.தப்பா நெனசுக்காதீங்க)

தீபாவளிக்கு  முந்தைய தினத்தில் இருந்து நகர்கிறது கதை...15  நாள் ரிமாண்டில் வைக்கப்படும் நாயகன் ஒரு நாள் முன்னதாகவே தப்பிக்கிறான்...
தலை தீபாவளிக்காக தயாராகும் போலீஸ்கும்பல் இவனால் பிரச்சனையில் சிக்க,அவனை தேடி ஊருக்கு செல்கிறார்கள் சேதுவும் ராமையாவும்...அந்த நேரத்தில் மைனாவுக்கு கல்யாணம் முடிவு செய்ய அடிதடியில் அவனை பிடித்து மீண்டும் திரும்பி ஜெயில் வரும் வரை நடக்கும் விஷயங்கள் தான் இப்படத்தின் கதை...

Sunday, October 31, 2010

சென்னை FILM FESTIVAL


சென்னை பிலிம் சேம்பர் மற்றும் செவன்த் சேனல் இணைந்து நடத்திய  அக்டோபர் 28 முதல் 31 வரையிலான  திரைதிருவிழா  இனிதேநிறைவு பெற்றது.இத்திருவிழாவில் முழுமையாக   என்னால் பங்களிப்பு கொள்ள முடியாதது சற்றே மனவருத்தம் தான்...எனினும் கோவா பிலிம் பெஸ்டிவல்,திருவனந்தபுரம் பிலிம் பெஸ்டிவல் ,சென்னை இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் என அடுக்கடுக்காய் குவிந்து கிடப்பதால் விடு மச்சி பாத்துக்கலாம் என மனதை தேற்றிக்கொண்டேன்..

நான்  பார்த்ததில் முக்கியமான படங்கள் இரண்டு...இப்படியுமா யோசிப்பாங்க என்று நம்மை என்னும் அளவு இருந்தன...
ஒன்று STRAYED மற்றொன்று POLYGAMY.

Monday, October 18, 2010

சிலம்பம்தமிழர்களின்  தற்காப்புக்கலை, வீரவிளையாட்டு, பெருமை "சிலம்பம்" உலகின் தலை சிறந்த தற்காப்புக்கலைகளில் ஒன்று, நம்மால் அந்த கலையை கத்துக்க முடியலாட்டினாலும்,ஏன் அந்த கலையின் வகைகள் , அருமை பெருமைகள தெரிஞ்சுக்ககூடாதுன்னு ஒரு ஆர்வம் வந்துடுச்சு.

எல்லாம் வல்ல நம் நண்பன் "கூகிள்" உதவியோட முடிஞ்ச அளவு தகவல்கள் திரட்டி இருக்கேன்.

சிலம்பம் எப்படி வந்துச்சு ? ஏன் வந்துச்சு ?

அந்த காலத்துல மலைவாழ் மக்கள் சிங்கம் புலி போன்ற மிருகங்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள கண்டுபிடிச்ச முறைதான் சிலம்பம்னு நாம இப்ப சொல்லுகிற கலை. அவங்க கையில் எப்போது இருக்க கூடிய சின்ன ஆயுதங்களான கம்பு, சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்கள பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள தான் இந்த கலையை பயன்படுதியிருக்காங்க .

எப்பயுமே இந்த ஆயுத்தங்களை வச்சுக்கிட்டு இருக்கது எப்படி சாத்தியம் ஆகும்னு ஒரு  கேள்வி இப்ப உங்க மனசுக்குள்ள வரலாம். அது சரியான கேள்வியே.

“சிலம்பக்கலையோட முக்கியமான பகுதி எந்த ஆயுதமுமே இல்லாமல் , கரங்களைக்கொண்டே தங்களை கொடிய மிருகங்களிடம் தற்காத்துக்கொள்வது.”

(மருதுபாண்டியர் ஒரு முறை வெறும் கரங்கலாலேயே புலி ஒன்றை சமாளித்து தப்பித்தார் என்று பாடநூல்களில் படித்தது ஞாபகம் வருகிறது)


சிலம்பக்கலையின் சிறப்புகளை அறிந்து கொண்ட முனிவர்கள் அதனை தமிழ்நாடு முழுவதும் பரப்பினர். அன்று முதல் சேர சோழ பாண்டிய மன்னர்கள் சிலம்பக்கலையை போற்றி வளர்த்தனர்.

அது சரி, அதென்ன பேரு "சிலம்பம்" ?

சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார்.

சிலம்பம் என்ற பெயர் "சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாக சொல்லபடுகிறது.


நம்மக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா ?

“இதில் வெறும் கரங்களை கொண்டு தற்காத்துகொள்ளும் கலைதான்,
பிறநாடுகள் வரை பரவி , அந்த நாடுகளில் மெருகேற்றபட்டு காரத்தே ஆனது என்று சொல்பவர்களும், அதன் காரணமாக தான் "கராத்தே" என்ற பெயர் கரம் என்ற பொருள் தருவதாக உள்ளது என்று வாதிடுவோரும் உள்ளனர்"

  கராத்தே கலையின் முன்னோடி குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்) புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார் . எனவே கராத்தே கலையின் முன்னோடி சிலம்பம் என்ற கருத்தும் உள்ளது.

சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு,கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கடுபடுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கி செல்வதாகவும் குறிப்பு ஒன்று உள்ளது.

பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது.அவர்கள் அந்த கம்பினை பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் .தமிழக எகிப்திய கலாச்சார பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.

சிலம்பத்தின் வகைகள் :
 1. சுவடு
 2. தெக்கன் சுவடு
 3. வடக்கன் சுவடு
 4. பொன்னுச் சுவடு
 5. தேங்காய் சுவடு
 6. ஒத்தைச் சுவடு
 7. குதிரைச்சுவடு
 8. கருப்பட்டிச் சுவடு
 9. முக்கோணச் சுவடு
 10. வட்டச் சுவடு
 11. மிச்சைச் சுவடு
 12. சர்சைச் சுவடு
 13. கள்ளர் விளையாட்டு
 14. சக்கர கிண்டி
 15. கிளவி வரிசை
 16. சித்திரச் சிலம்பம்
 17. கதம்ப வரிசை
 18. கருநாடக வரிசை

போன்றவை தான்.

(கராத்தே விளையாட்டின் "கடா' என்ற போர்ப்பிரிவு, தன் பெயரைப் பெற்றதற்கு, கதம்ப வரிசையைக் காரணம் என்றும் சொல்லபடுகிறது. இரண்டின் செயல்பாடுகளும் ஒரே போல் அமைந்தவை.)

மேலும் "குத்து வரிசை" என்ற சிலம்பத்தின் பிரிவு ஆயுதம் ஏதும் இல்லாத வெறும் கைகளை கொண்டு  செய்யும் முறை ஆகும்.

சிலம்பத்தில் பயன்படுத்த படும் ஆயுதங்கள் கம்பு, குறுங்கம்பு,மாடு  அல்லது கவரி (மான் கொம்பு),வாளும் கேடயமும், பட்டா,சுருள் பட்டா ,செண்டு ,லேசம், கட்டாரி, வளரி ,இடைகட்டி போன்றவையாகும்.

வளரி என்பது இருபக்கமும் கூர்மையான, மிக குறுகிய முனையும் மரத்தினால் ஆன கைபிடியும் கொண்ட ஆயுதம்.இதன் கூறிய பகுதியை பிடித்துகொண்டு தோளுக்கு மேல் தூக்கி எரிவதன் மூலம் 100 மீட்டர் தொலைவில் உள்ளவர்களை கூட தாக்கிவிடலாம்

(சுதந்திர போராட்டத்தின் போது , மருது பாண்டியகளின் வளரி வீசும் திறன் ஆங்கிலேயர்களை திணறடித்தது ஞாபகம் இருக்கலாம்)

  ஒருத்தன் கம்பு சுத்துரதுல திறமையானவனா இருந்தா , அவன் கம்பை கொண்டே அவன தாக்க வர எந்த ஆயுதத்தையும் தடுக்க முடியும்,அதுவும் எட்டு திசைகளில் இருந்து வருகிற ஆயுதங்களையும் தடுக்க முடியுனு சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.


வழக்கமா சிலம்பம் விளையாட பயன்படுத்தபடுற கம்பின் உயரம் , விளையாடுபவரின் நெற்றி வரையிலான உயரம் ஆகும்.
இங்கே ஒரு சில வீடியோகள சேர்த்திருக்கிறேன். நேரம் இருந்தால் கண்டிப்பாக பார்க்கவும்.
சரி இன்னைக்கு நிலைமை என்ன ?

இன்னைக்கு வெகு சிலரே சிலம்பக்கலையை கற்கின்றனர்.
இந்தியாவில் தமிழ்நாடு , கேரளா மற்றும் மலேசியா,பிரான்ஸ் போன்ற இடங்களில் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.
தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன்
வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயபடிப்பாக சிலம்பம் நடத்தபடுகிறது

உயிர் , சிந்து சமவெளின்னு மோசமான படங்கள குடுத்த இயக்குனர் சாமி அந்த பாவங்களைலாம் போக்குகிற மாதிரி , அவரோட அடுத்த  படம்
“சரித்திரம்" அ  சிலம்பக்கலைக்கு ஒரு ஆவணப்படமா கருதுகிற அளவுக்கு எடுத்துக்கிட்டு இருக்கிறதா கேள்விபட்டேன்.எந்த அளவுக்கு உண்மைனு தெரியல...

Friday, September 17, 2010

தெற்காசிய திரைப்பட விழாவில் தமிழ்ப் படம்
திரைப்பட விழாக்களில் தமிழ்ப் படங்கள் பங்கு பெறுவது அதிக‌ரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் மணிரத்னம் கௌரவப்படுத்தப்பட்டார்.

பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், பசங்க போன்ற படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் பாராட்டுகளை‌ப் பெற்றன.


வரும் அக்டோபர் மாதம் தெற்காசிய திரைப்பட விழா நடக்கிறது. இத்திரைப்பட விழாவில் பங்கு பெறுவது ம‌ரியாதைக்குரியதாக கருதப்படுகிறது. 


இந்தத் திரைப்பட விழாவில் திரையிட எஸ்.பி.பி.சரண் தயா‌ரித்திருக்கும் ஆரண்ய காண்டம் திரைப்படம் தேர்வாகி‌யிருப்பது தமிழ்‌த் திரையுலகுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.


தெற்காசிய திரைப்பட விழாதைத் தொடர்ந்து மேலும் சில தமிழ்ப் படங்கள் திரையிட தேர்வாகும் வாய்ப்பும் உள்ளது.

Sunday, August 22, 2010

இனிது இனிது - விமர்சனம்மறந்து போன இனிமையான நமது கல்லூரி வாழ்க்கையை நினைவு படுத்தும் ஒரு படம் தான் இனிது இனிது...தெலுங்கில் படுஹிட்டான ஹாப்பி டேஸ் படம் இரண்டு வருடத்திற்கு பிறகு ரீமேக் ஆகியிருக்கிறது...தெலுங்கில் ஹிட் ஆன படங்களில் நாம் எத்தனையோ படங்களை ரீமேக் செய்து அதை தமிழில் ஹிட் செய்திருந்தாலும்,இனிது இனிது தமிழில் ரீமேக் செய்ய அவசியமான படம் தான்...புரியாத மொழியில் பார்த்திருந்தாலும் அந்த படம் கல்லூரி வாழ்க்கையின் ஒரு பகுதியை அழகாய் படம் பிடித்து காத்திருக்கும்...

அந்த வகையில் பாராட்டலாம்...இந்த படமும் தமிழில் ரீமேக் ஆனால் எப்படி இருக்கும் என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான் தமிழில் ஓகே ஆனது பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் மூலமாக...இப்போது நமக்கு புரிந்த 
மொழியில் அதும் திரையில்.....

Friday, August 20, 2010

காதல் சொல்ல வந்தேன் - விமர்சனம்

தேவதையை கண்டேன்,திருவிளையாடல் ஆரம்பம் மற்றும் மலைக்கோட்டை வெற்றியை தொடர்ந்து பூபதி பாண்டியன் இயக்கும் நான்காவது படம்...எனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்...கல்லூரி சென்ற முதல் நாளே நாயகியை பார்த்ததும் காதலில் விழுகிறார் நமது கதையின் நாயகன்....ஆனால் நாயகி FINAL YEAR படிக்கிறார்... ராகிங் மூலம் நண்பர்கள் ஆகிறார்கள்...நாயகன் காதலிப்பது தெரிந்தபின் நாயகி நாயகி நாயகனிடம் இருந்து விலகுகிறாள்...பிறகு இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் கதை...

Sunday, August 15, 2010

அன்புள்ள சந்தியா....

படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்
வரிகள் : நா.முத்துக்குமார்

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காற்றில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்
(அன்புள்ள..)

எந்தப்பக்கம் நீ சொல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே
தூறல் வந்தால் கோலங்கள் அழியும்
காலம் வந்தால் கல்வெட்டும் அழியும்
என்றும் பென்ணே என் காதல் அழியாதே
அடி கோவில் மூடினால் கூட
கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை
உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி
(அன்புள்ள..)

தாயை கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளைப்போலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அறியாதா
என்றோ யாரோ உன் கையை தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே அறீவான்
அன்பே அது நானாகக்கூடாதா
உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை
உயிரோடு எறிக்குதே என்னை
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி
(அன்புள்ள..)


Friday, August 13, 2010

இறுகிக்கொண்டிருக்கும் இந்தியாவின் பிடி - 1


பச்சை பசேல் என்ற புல்வெளி அதில் கலைநயமிக்க வெள்ளைநிற மாளிகை, நீல வான பின்னனி, ஒங்கி வளர்ந்த மரங்களுக்கிடையில் ஒய்யார குதியாட்டம் போடும் முயல்குட்டிகள், அழகான மனைவி, அறிவார்ந்த குழந்தைகள் இப்படி ஒரு ஆனந்த வாழ்வு ஒரு மனிதனுக்கு கிடைத்துவிட்டால் நிம்மதி என்பது தாமாக வந்துவிடுமா?
      அதிக ரத்த அழுத்தம்  , நானூறை தாண்டும் சக்கரை, நெஞ்சு படபடப்பு, இத்தனை நோய் ஒரு புறம் என்றால் எமன் மாதிரி  வந்து உட்கார்ந்து கொண்ட புற்றுநோய் எப்படி வரும் சந்தோஷம்.  கோட்டை கட்டி வாழ்ந்தாலும் உடல் கூடெல்லாம் நோயால் சூழப்பட்டால் எங்கேயிருந்து மகிழ்ச்சி வரும்.  ஒட்டை வீட்டில் உறங்கினாலும், அடுத்த வேளைக்கு உணவு இல்லை என்றாலும், மாற்ற கூட துணியில்லையென்றாலும் ஆரோக்கியம் மட்டும் இருந்துவிட்டால் ஆனைகூட்டம் எதிரே வந்தாலும் பூனைகளை போல் தூக்கி போடலாம் அதனால் தான் நமது முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற  செல்வம் என்றார்கள்.


        ஒரு தனிமனித சுகவாழ்வுக்கு ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ ஏன் அதை விட முக்கியமானது ஒரு தேசத்தின் பாதுகாப்பு.  வெள்ளி பனிமலையில் தூங்காத இரவுகளை தினசரி ராணுவவீரன் எதிர்கொண்டால் தான் வீட்டு திண்ணையில் நாம் நிம்மதியாக தூங்க முடியும் என்ற வார்த்தை மிகைப்படுத்தப்பட்ட கருத்து அல்ல, கண் முன் நிஜமாக நிற்கும் உண்மையாகும்.     தேச பாதுகாப்பு என்றவுடன்  நமது மனக்கண் முன்னால் காஷ்மீர் பள்ளத்தாக்குகளும் குஜராத் கடற்கரைகலும், ராஜஸ்தான் பாலைவனங்கலும் தான் நமக்கு நினைவுக்கு வரும்.  இந்தியாவின் விரோதி யாரென்று தெருவில் கோலி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவனை கூப்பிட்டு கேட்டாலும், திண்ணையில் பல்லாங்குழி ஆடும் பாட்டியிடம் கேட்டாலும் பாகிஸ்தான் என்று பளிச்சென்று பதில் வரும், நிஜமாகவே நமது எதிரி நாடு பாகிஸ்தான் தானா?  பாகிஸ்தான் மட்டும் தானா? நேரு காலம் தொடங்கி மன்மோகன்சிங் காலம் வரையில் காங்கிரஸ் அரசாங்கம் அப்படி தான் சொல்லி கொண்டு வருகிறது.  அல்கொய்தா தாலிபான் இன்னும் என்னென்னவோ வாயில் நுழையாத அரபு பெயர்களில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தான் வழியாக தான் இந்தியாவிற்குள் நுழைகின்றன.   


நமது நாடெங்கும் குண்டுகளை வைப்பதும், பாரளுமன்றத்துகுள்ளேயே தாக்குதல் நடத்துவதும், மும்பை பெருநகரத்தில் ஆக்கிரமிப்பு செய்வதும் பாகிஸ்தான் உளவு படையின் கைங்கர்யம் தானே.  அதனால் காங்கிரஸ் சொல்லுவது சரியாகத் தான் இருக்கும் என்று ஆடு மேய்க்கும் அண்ணாமலையிலிருந்து கணிப்பொறி தட்டும் கவிதா வரையிலும் நம்புகிறார்கள்.   இந்த நம்பிக்கை உண்மையா?


     நம்பிக்கை என்னவோ உண்மைதான் ஆனால் பாகிஸ்தான் மட்டும் தான் எதிரியென்று காங்கிரஸ் சொல்லுவது உண்மையல்ல.  வடஎல்லையில் பாகிஸ்தானில் மட்டுமல்ல, ஆப்கானிஸ் தானிலிருந்தும்  பயங்கரவாதிகள் உடுருவுகிறார்கள் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் சீனாவின் ஆக்கிரமிப்பு கரம் ரகசியமாக நீண்டு கொண்டுயிருக்கிறது.  வங்கதேசத்தில் இருந்து அந்நிய அடிப்படைவாத அமைப்புகள் நாட்டிற்குள் குடியுரிமை பெற்று சுகந்திரமாக நடமாடுகிறார்கள்.   நேற்றுவரை நேபாளத்தில் இருந்த மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு பொதுவுடமை தீவிரவாதிகளின் சர்வதிகார அரசு பொறுப்பேற்று ஈரம் காய்வதற்குள்ளே இந்திய நக்சல்பாரி இயக்கங்களோடு கைகோர்க்க ஆரம்பித்துவிட்டது.  


     இந்திய அரசின் பழிவாங்கும் போக்கால் இலங்கையின் இனவாத அரசு புத்துயிர் பெற்று சீன பங்காளிகளோடு உறவாடி அமைதி பூங்கவான இந்தியாவின் தெற்கு எல்லையில் பீரங்கி முழக்கங்கள் வருங்காலத்தில் கேட்க வழி ஏற்பட்டு இருக்கிறது.  மக்மோகன் எல்லை கோட்டை பொருட்படுத்தாத சீனா அருணாச்சல பிரதேச மாநிலத்தையே தனக்கு சொந்தமென உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டது.  பக்கத்து நாடான பர்மா கூட இன்று இந்தியாவுக்கு நண்பன் இல்லை.  பூடானும், மாலத்தீவும் தொடர்ந்து நண்பர்களாகயிருப்பார்களா என்பதும் சந்தேகமே, ஆக இத்தனை எதிரிகள் நம்மை நாலாபுறமும் சுற்றி நின்று கொத்தி குதற முயற்சிக்கும் போது பாகிஸ்தானை மட்டும் பகையாளியாக காட்டுவது மக்களை திசை திருப்பும் முயற்சி ஆகும்.

      ராணுவரீதியில் பார்க்கும் போது பாகிஸ்தான் என்பது நமது பெண்களின் பாவாடை நாடாவுக்கு சமமானது. அமெரிக்க அண்ணா மட்டும் அந்நாட்டை கண்ணெடுத்து பார்க்கவில்லையென்றால் வெறும் ஐந்து மணி நேர தாக்குதலிலே இஸ்லாமாபாத்தை டெல்லியோடு இணைத்து விடலாம்.  ஆனால் சீனா அப்படியல்ல பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் நம்மை விட பெரியது , என்று மட்டும் தான் நாம் நினைத்து கொண்டியிருக்கிறோம்.   உண்மையில் சீனாவின் ராணுவபலம் என்பது தற்போதைய சூழலில் பீம புஷ்டி கொண்டது என்றே சொல்லலாம்.  இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு அதன் ராணுவபலம் அமெரிக்காவுக்கு இணையாகிவிடுமாம்.


  கடந்த 2009-தாம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்தி முன்றாம்தேதியன்று சீனாவில் உள்ள கிங்டாவோ என்ற இடத்தில் முதலாவது சர்வதேச கப்பல் படை அணிவகுப்பு நடந்தது.  இந்த அணிவகுப்பில் பங்குபெற இந்தியாவிலிருந்து இரண்டு போர் கப்பல்கள் உட்பட பதினாலு நாடுகளிலிருந்தும் பல  போர் கப்பல்கள் வந்து கலந்து கொண்டன.  ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடித்த கையோடு இந்த அணிவகுப்பை நடத்தி சர்வதேச ராணுவ நிபுணர்களின் வியப்பிற்கு உரம் போட்டது, எனது பொருளாதார பலம் என்பது உலகம் நினைப்பது போல சாதாரணமானது அல்ல, ஒரே நேரத்தில் சர்வதேச விளையாட்டையும், சர்வதேச ராணுவ அணிவகுப்பையும் என்னால் நடத்த முடியும் என்று உலகத்தின் முகத்தில் ஒங்கி அறைந்து சொல்வது போல சொல்லி சீனா உலகை அதிர வைத்திருக்கிறது. 

தொடரும் -    

நன்றி : உஜிலாதேவி....

Sunday, May 23, 2010

அவர் ட்ரைலர் - என் கை வண்ணத்தில்

என் நண்பர் செல்வக்குமார் அவர்களின் "அவர்" திரைப்படத்திற்கு ட்ரைலர் உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது...கணினியில் உட்கார்ந்தவுடன் ஆன்டணி, லெனின் ,V.T.விஜயன் என எல்லாரும் உள்ளே ஆதிக்கம் செய்ய துவங்கி கொண்டார்கள்...

கமல் சாரின் "மகாநதி" யில் தொடங்கிய AVID தொழில்நுட்பம் இன்னும் தமிழ் சினிமாவின் கைக்குள் சுழல்கிறது...

கோபி  கலை கல்லூரியில் படிக்கும் போதே ADOBE PREMIERE சாப்ட்வேரை பயன்படுத்தி சினிமா பாடல்களை எடிட் செய்து பார்ப்பேன்...கல்லூரி ஆண்டு விழாக்களிலும் என் எடிட்டிங் புகுந்து விளையாடியது  இன்னொரு கதை...

அது போக ADOBE AFTER EFFECTS இல் வீடியோக்களுக்கு விஷுவல் எபக்ட்ஸ் (VISUAL EFFECTS) செய்து பார்ப்பேன்...

அதற்க்கான இணைப்பு இதோ....

ADOBE PREMIERE இல் துவங்கிய என் சகாப்தம் இன்று இந்த படம் வரை வந்துள்ளது...கிடைத்த வாய்ப்பை விட முடியுமா என்ன???


ஆன்டணி சாரை மனதில் வேண்டிக்கொண்டு கை வைத்தேன்...என் கைவண்ணத்தில் எப்படியோ ட்ரைலர் எடிட்டிங் முடிந்துவிட்டது...இந்த படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் முற்றிலும் டிஜிட்டல்...இதோ  உங்களுக்காக!!!!!
இந்த படத்தில் நடிக்கும் அனைவரும் புது முகங்கள்...ஒரு குடும்பத்தில் நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் தான் கதை...ஆனால் கொலையோ கொள்ளையோ இல்லாத சஸ்பென்ஸ் த்ரில்லர். No Skin show!...எனவே குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் அமர்ந்து இரசிக்கலாம்.மிக முக்கியமான அம்சம் விஷிவல் கம்யுனிகேஷன் படிக்கும் மாணவர்கள் படத்தில் ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட துறைகளில்          பயன்படுத்தப்படுவார்கள்.

இதற்க்கு என்னுடைய எடிட்டிங் ஒரு சிறந்த உதாரணம்...இந்த படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் என்ன அனைத்தும் செல்வக்குமார் அவர்கள்...நல்ல வேலை எடிட்டிங், இசை , கேமரவையாச்சும் விட்டு வைத்துள்ளாரே...
இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் படத்தின் பூஜையே டிஜிட்டல் சினிமா பற்றிய கருத்தரங்குடன்தான் துவங்கியது...அனாவசிய சினிமா அலட்டல்கள் இல்லாத அமைதியான துவக்கம்...இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

மேலும் ,

FACEBOOK இல்,

அவர் பக்கத்தில் இணைய  http://tinyurl.com/AVAR-in-Facebook
 
அவர்  புகைப்படங்கள் - http://tinyurl.com/avar-Launch-photos
அவர்  பாடல் ரெக்கார்டிங் படங்கள் - http://tinyurl.com/AVAR-song-recording

இணையுங்கள் எங்களுடன் ...
உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கபடுகிறது...
மறக்காமல் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள்...

Saturday, May 22, 2010

குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்து, கும்மாளமா? -கவிஞர் தாமரை

  
குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்து, கும்மாளமா?
தடுக்கவேண்டும் தமிழ்த் திரையுலகம்!


குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறி்த்த கதை பழையது.குழியில் போட்டுப்புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது.வருகின்ற ஜுலை 3,4,5 ஆம் தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான்அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களைமொத்தமாகக் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் ஐய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்புக்கு மாற்றியுள்ளனர்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத்திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில்இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ளதமிழனின் இரத்தக்கறையைத் துடைத்து, தன் பாவத்தையும்மறைத்துக்கொள்வதே அது! இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) இந்த விழாவில் வைத்து பல ஆதாய வாசல்களைத் திறக்கவும், இலங்கைச் சந்தையில் விரிவாக வலைவீசவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழர் பகுதிகளில் மறுநிர்மாணம் என்ற பெயரில் கிடைக்கப்போகும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 'கன்ட்ராக்டுகள்'மீது குறி வைத்துள்ளது. புதிய செல்பேசி சந்தைக்காகவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Friday, May 7, 2010

8000 பேரை பலி கொண்ட போபால் கொடுமையும் ராஜீவ் மரணமும்


ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தாயார் 80 ஆவது வயதில் கடும் நோயால் பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வந்தால் ‘விடமாட்டோம்’ என்கிறார்கள். தமிழ்நாடு என்ன, கண்டவர்கள் நுழையும் ‘தர்ம சத்திரமா’ என்று பார்ப்பனத் திமிரோடு கேள்வி கேட்கிறார், சுப்ரமணியசாமி. இந்த எதிர்ப்புகளுக்கு முன் வைக்கப்படும் காரணம் என்ன? ராஜீவ் கொலை!

ஈழ விடுதலைப் போராட்டத்தையே ராணுவத்தால் ஒடுக்கிட அனைத்து உதவிகளையும் செய்தது சோனியா, மன்மோகன் ஆட்சி! காரணம் என்ன சொல்லப்பட்டது? அதே ராஜீவ் சாவுதான்! 19 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த பிறகும் நளினியை விடுதலை செய்யக் கூடாது. அவர் மரணத்தை சந்திக்கும் வரை சிறைக்குள்தான் இருக்க வேண்டும் என்று டெல்லி சோனியா வட்டாரமும், தமிழக போலி கதர்ச்சட்டை ‘கனபாடிகளும்’ கூப்பாடு போடுகிறார்கள். கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. ஆட்சி அதற்கு தண்டனிட்டு பணிந்து போய் கிடக்கிறது. சொல்லப்படும் காரணம் என்ன? ராஜீவ் கொலை செய்யப்பட்டார் என்பதுதான்!

Friday, April 16, 2010

அரைச்ச மாவை அரைப்போமா !(ஒரு கற்பனை)

(இப்பகுதியில் வரும் அனைத்து பெயர்களும், சம்பவங்களும், உரையாடல்களும், நிகழ்வுகளும் கற்பனையே…)

நடிகர் விஜய் அவரது வீட்டில் சோகமாக அமர்ந்திருக்க அவரை சமாதான செய்யச் செல்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர் அருகே இயக்குனர் பேரரசு

எஸ்.ஏ.சி : [விஜயிடம் சென்று பாடுகிறார் ] நீ அழுதா தாங்க மாட்டேன் .. நாலு வாரம் தூங்கமாட்டேன்.. வெற்றிப்படம் கொடுக்காம ஓயமாட்டேன்.

விஜய்: நீங்க வேற ஏம்பா கடுப்ப கௌப்பிக்கிட்டு. கொஞ்ச வருஷமா எந்த படமும் ஓட மாட்டேங்குதேங்கிற கோவத்துல இருக்கேன். வந்து பாடுறிங்களே..

[அப்போது சன் நெட்வோர்க்ல் இருந்து கால் வர எஸ்.ஏ.சி எடுத்து பேசி விட்டு வைக்கிறார்]

விஜய் : கோபமுடன் என்னவாம்?

எஸ்.ஏ.சி: உங்களை உடனே தேனி போகச் சொல்றாங்க

விஜய் : நாலு நாள் முன்னாடித்தானே தேனில மூளை மூடுக்கில இருக்கிற எல்லா தியேட்டர் முன்னாடியும் கால் வலிக்க நின்னு எல்லாரையும் வேட்டைகாரன் பார்க்கச் சொன்னேன் !

எஸ்.ஏ.சி:இப்ப தியேட்டர் இல்லையாம்.

Sunday, April 4, 2010

யார் டாக்டர் ????டாக்டர்களை கடவுளாக வழிபடும் நமது இந்திய நாட்டில் டாக்டர்கள் மீதான வழக்குகளும் அதிகரித்த வண்ணமே உள்ளன...எடுத்துக்காட்டாக, நான் அடையாரில சென்று கொண்டு இருந்தபோது  சாலையில் திடீரென கூட்டம் நிரம்பி வழிந்தது...ட்ராபிக் ஜாம் ஆகாதது தான் குறை என்னுமளவுக்கு அப்படியொரு கூட்டம்...

என்ன தான் நடக்குது என பார்க்கும் போது தான் தெரிந்தது...அந்த இடம் அடையார் மலர் மருத்துவமனையின் முகப்பு என்று...ஒரு டாக்டரின் கவனக்குறைவால் ஒரு வயதானவர் இறந்துவிட்டார்...முதலில் வந்து இறங்கியது சன் டிவியும்,தமிழன் டிவியும்...கண்மூடி கண்திறக்கும் நேரத்திற்குள் அடுக்கடுக்காய் வந்து கடைவிரித்து விட்டன ஏனைய டிவிகளும் ...


 நள்ளிரவு அட்மிட் செய்த ஒரு வயதானவரை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எந்த ஒரு மருத்துவ வசதியும் கொடுக்காததால் தான், அவர் இறந்திருப்பதாக இறந்தவரின் உறவினர் டிவியில் பேட்டி அளித்துள்ளார்...ஒரு மருத்துவமனையில் அவசரத்திற்கு கூட ஒரு மருத்துவர் இல்லை என்றால் எந்த அளவில் அந்த நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என நீங்களே ஊகிதுக்கொல்லுங்கள்...

ஒரு பக்கம் பணத்திற்காக சுகப்ரசவம் செய்ய விடாமல் ஆப்றேஷன் செய்யும் டாக்ரர்கள்,மறு பக்கம் இப்படி நோயாளிகள் மீது கவலை கொள்ளாத நிர்வாகம்...அரசு மருத்துவமனைகளில் சரியாக கவனிக்க மாட்டார்கள் என்றுதான் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கிறார்கள்...அங்கும் இப்படி என்றால் சாதாரண மக்கள் வேறு எங்கு தான் போவார்கள்???

Wednesday, March 31, 2010

மரத்தைத் தாண்டி வருவாயா? (வயிறு குலுங்க ஒரு காமெடி )

இந்த கட்டுரையில் வரும் எதுவும் யாரையும் குறிப்பிடுவன அல்ல..
(மவனுன்களா இந்த வார்த்தைய போட்டு தானடா எல்லா படத்துல இருந்தும் தப்பிக்கிறீங்க)...
......
மரத்தைத் தாண்டி வருவாயா?
(நீங்கள் பார்த்த லொள்ளு சபாவை போலவே)

உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட ட்ரை பண்ணினன்??...

இதுதான் வாழைப்பழம்...

அவ்ளோ அழகு...
yellow ...
இனிப்பானது...
EATABLE...
அவகிட்ட ஒரு SMELL இருக்கு...... 
AND SWEET TOO...
அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும்...

ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்?
என்ன பிரச்சினை???

இன்னைக்கு வாழைக்குலையை பறிச்சிட்டுப் போய்ட்டாங்க அதுதான் பிரச்சினை... 


ஆனா நாம யார சாப்பிடப்போறோம்னு போறோம்னு முன்னாடியே டிசைட் பண்ண முடியுமா என்ன?

வாழைப்பழத்தை தேடிக்கிட்டு போக முடியாது…
அது வளரணும்… அதுவா பழுக்கணும்…

மத்தவங்க நடமாடுற இடத்தில போடணும்… தலைகீழ வழுக்கி விழுத்தணும்…
எப்பவுமே இனிப்பாவே இருக்கணும்… 

Monday, March 29, 2010

தன்னம்பிக்கையின் உச்சகட்டம்....


14 ஆம் நூற்றாண்டில்,கொலம்பஸ் தலைமையிலான 20 பேர் கொண்ட குழு புதிய உலகைக்காணும் ஆவலில் ஸ்பெயின் நாட்டிலிருந்து கடல் வழியே புறப்பட்டது. 24 நாட்களாகத் தொடர்ந்து பயணம் எந்தக் கரையும் தென்படவில்லை. ரொனால்டோ என்பவர் உணவுக்கான பொறுப்பாளர்.

இருக்கக்கூடிய உணவு தற்போது திரும்பிச்சென்றால் மட்டுமே போதுமானது. 24நாட்களில் சொந்த நாட்டை அடையலாம். தொடர்ந்து பயணம் செய்தால் எல்லோரும் உணவுக்கு வழியின்றி கடலிலேயே செத்து மடிய வேண்யது தான். ரொனால்டோ சகபயணிகளிடம் கேட்டபோது அவர்களும் வந்த வழியே திரும்புவது தான் நல்லது என்று விரும்பினர்.

Saturday, March 27, 2010

அங்காடி தெரு - விமர்சனம்

"வாங்க சார் வாங்க சார்","ரெண்டு கர்சீப் பத்து ரூபா சார்"...இது போன்ற வசங்களை நீங்கள் தெருக்களில்,சாலை ஓரங்களில் பார்த்திருப்பீர்கள்....அதையெல்லாம் கண்டுகொலாமல் நமது வேலையே பார்த்துக்கொண்டே இருப்போம்...சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் வெறும் விண்டோ ஷாபிங் செய்ய,"சார் இந்த ஷர்ட் உங்களுக்கு நல்லா இருக்கும் சார்" நு சொல்லுபவர்களிடம் வேண்டுமென்றே இல்லாத ஒன்றை கேட்டு விட்டு வெளிவருவோம்...தினம்தினம் நின்று கொண்டே நரகம்காணும் அவர்களுக்குள்ளே  இருக்கும்  காதலை  அழகாய் சித்தரிதிருப்பது தான் "அங்காடி தெரு"...


ஹீரோ பனிரெண்டாம் படிக்கும் மாணவன்...தந்தை விபத்தில் இறந்து போக குடும்ப சூழ்நிலையால் வேறு வழி இன்றி தன நண்பனுடன் சென்னையில் உள்ள பெரிய கடையில் வேலைக்கு சேர்கிறார்....அங்கு அனைவரும் அடிமைகள் போல நடத்தப்படுவதை பார்த்து கொதிக்கிறார்...ஆனால் வேறு வழி இன்றி குண்டுச்சட்டிக்குள் தான் குதிரை ஓட்ட வேண்டும் என புரிந்துகொண்டு இயந்திரமான வாழ்க்கை வாழ்கிறார்...இதற்கிடையில் நாயகியின் அறிமுகம்...

Wednesday, March 17, 2010

சூப்பர் ஸ்டார்க்கு ஆப்பு வைக்க கைகோர்க்கும் சுள்ளான்      பல மாதங்களாக நீடித்து வந்த இழுபறி நிலையை மைக்ரோசாப்ட் மற்றும் யாஹூ நிறுவனங்கள் ஒரு பத்தாண்டு ஒப்பந்தத்தினைப் போட்டு முடிவிற்குக் கொண்டு வந்துள்ளன...தேடல் இயந்திரம் தொழில் நுட்பத்திலும் அதனைச் சார்ந்த விளம்பர வர்த்தகத்திலும் Google கொண்டிருக்கும் முதல் இடத்தை அசைத்துப் பார்ப்பதற்காகவே இந்த ஒப்பந்தம் இருக்குமோ என்ற எண்ணம் இணைய உலகில் அனைவருக்கும் எழுந்துள்ளது...
 
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தப்படி Microsoft நிறுவனத்தின் Bing தேடல் இயந்திரத்தினை தன் தளத்தில் Yahoo பயன்படுத்திக் கொள்ளும். அத்துடன் விளம்பர இட விற்பனையை உலக அளவில் மேற்கொள்ளும் உரிமையை Yahoo மட்டுமே பெறுகிறது. ..Yahoo நிறுவனம், அதன் பயனாளர்கள் மற்றும் இணைய வர்த்தகச் சந்தை ஆகிய அனைத்திற்கும் பல பயன்களை இந்த ஒப்பந்தம் தரும் என்று Yahoo நிறுவன தலைவர் அறிவித்துள்ளார்...மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பால் ஸ்டீமர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இரு நிறுவனங்களும் வெற்றி அடையும் ஒரு இனிய ஒப்பந்தம் இது என்று குறிப்பிட்டார்...
 

பேசும் படம் - சொல்வதை செய்வோம்

Saturday, March 13, 2010

பேசும் படம்...


 முதலில் இந்த படத்தை பாருங்கள்...பிறகு நான் சொல்லுகிறேன்... என்ன படத்தை உத்து உத்து பாத்தாச்சா ???? அந்த கருப்பு நிறத்தில் இருக்கும் உருவம் ஒட்டகம் என நினைப்பவர்கள் கன்னத்தில் போட்டுகொள்ளுங்கள்...உண்மையில் அந்த கருப்பு நிறம் ஒட்டகத்தின் நிழல் மட்டுமே...வேண்டும் என்றால் இன்னும் நன்றாக உத்துப்பாருங்கள்...ஒட்டகத்தின் கால் நிழலில் தெரியும் வெள்ளை நிறமே உண்மையான ஒட்டகம்...

இந்த புகைப்படம்  2005 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படமாக அறிவித்தது NATIONAL GEOGRAPHIC...எப்படித்தான் இப்படிலாம் யோசிக்குராங்களோ????


Tuesday, March 9, 2010

கோபிசெட்டிபாளையம் -குட்டி கோடம்பாக்கம்

    நீங்கள் முன்னே வந்த தமிழ் சினிமா படங்களை பார்த்து இருப்பீர்கள்...பச்சை வயல்,பசுமையான தென் தோப்புகள்,சேற்றில் நடவு செய்யும் பெண்கள் ,மற்றும் நீரோடை போன்றவை இது எல்லாம் காமெராக்கள் பெரும்பாலும் சுட்ட இடம் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கோபிசெட்டிபாளையம் என்னும் சிறு நகரம் ஆகும்...நடிகர்  பிரபு நடித்து சக்கை போடு போட்ட "சின்னத்தம்பி" போன்ற படங்கள் கோபி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து படமாக்கபட்டதுதான்...  
 பாவனி அணை
நீங்கள் பார்க்கும் இந்த அணையில் உள்ள ஒரு பங்களாவில் தான் சின்னத்தம்பி படத்தின் "அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் " பாடல் படமாக்கப்பட்டது...  
 குருமந்தூர் பகுதி
கொண்டத்து காளியம்மன் கோயில் பாரியூர்

பாக்யராஜ் நடித்த "இது நம்ம ஆளு" படத்தில் வரும் பல காட்சிகள் இந்த கோவில் அருகே  தான் படமாக்கப்பட்டன...அதில் கோவிலில் அவருக்கும்,ஷோபனாவிருக்கும் ஒரு கச்சேரி நடப்பது போல ஒரு பாடல் காட்சி இருக்கும்..அதுவும் இந்த கோவிலுக்குள் எடுக்கப்பட்டது தான்...

Sunday, March 7, 2010

காந்தி ஒரு சிறந்த தந்தையா ?- காந்தி மை பாதர்


இணையத்தில் பாட்டு கேட்டுக்கொண்டே உலாவும் போது ஒரே சில பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க எண்ணுவோம்...அந்த வகையில் மீண்டும் மீண்டும் கேட்க  வைத்து இந்த படத்தின் ஹரிலால் தீம் மியூசிக்...

எப்போதும் போல தூம்,பனா,ஜப் வீ மேட் என பாடல்களின் வரிசையில் நான் அதிகம் கேட்கும் இந்த படத்தின் போல்டர் தொலய மீண்டும்  அந்த இசையை டவுன்லோட் செய்தேன்...கேட்கும் போதே கண்களில் நீர் தாரை தாரையாக கொட்ட ஆரம்பிக்கின்றன கண்ணீர் மனதில்...பியுஷ் கனோஜியா தான் இந்த இசைக்கு சொந்தக்காரர்...


Saturday, March 6, 2010

சச்சின் - சாதனைகளின் கதவு


உலகெங்கும் உள்ள ஒட்டு மோத்த கிரிகெட் ரசிகர்களின் மனதிலும் இன்னும் நிலைத்து நிற்கும் வரலாறு நாயகன் சச்சின் தான்...இன்று வரை கிரிக்கெட்டில் இந்தியாவின் அடையாளம்...கிரிக்கெட் உலகின் அழியாப்புகழ் கொண்டவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் நிற்கும் இவர் எத்தனையோ காயங்களுக்கு பிறகும் அறுவை சிகிச்சைக்கு பிறகும் இன்னும் களத்தில் புகுந்து மக்கள் மனதை வேட்டையாடிக்கொண்டு விளையாண்டு கொண்டிருக்கிறார்...(வேட்டையாடு விளையாடு)


தனது முந்தைய சாதனைகளை முறியடிப்பது தான் சச்சின் அவர்களுக்கு பொழுது போக்கு என்றே கூறலாம்...அந்த அளவுக்கு  தலைவர்  செய்யாத  சாதனைகளே  கிடையாது ...இது வரை அவரின் கனவாக இருந்த இரட்டை சதமும் அடித்து, இரட்டை சதம் அடித்த முதல் மனிதர் மற்றும் முதல் இந்தியர் என நமது தேசத்திற்கே  பெருமை தேடிக் கொடுத்து விட்டார் ...(கோவில் பட வடிவேலு ஸ்டைல் இல் எங்கயாச்சும் ஆள வச்சு இதெல்லாம் பண்றீங்கள???)  

அவரின் சில துணுக்குகள் :

எல்லா பவுலர்களின் பந்தையும் சிதறடிக்கும் சச்சின் 98 இல் ஷேன் வார்னே  வின் பந்துகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டவர்...அதன் பின் ஒரு மாதத்திற்கும மேலாக சென்னை இல் தங்கி சிவராமகிருஷ்ணரிடம் பயிற்சி எடுத்திருக்கிறார்...(அதற்க்கு பிறகு அவர் ஆடிய ஆட்டமென்ன????)

Friday, March 5, 2010

கடவுளின் நிறம் என்ன?1992 ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு கறுப்பின வாலிபனை வெள்ளை போலீசார் தாக்கினார்கள். அந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி நீதிமன்றத்தில் சாட்சியமாக்கப்பட்டும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். இதனால் லொஸ் எஞ்செல்ஸ் நகரில் கலவரம் வெடித்ததை உலகம் மறந்திருக்காது. இதன் தாக்கம் டைரக்டர் ஸ்பைக் லீயை "மல்கம் எக்ஸ்" திரைப்படம் எடுக்க தூண்டியிருக்க வேண்டும். கறுப்பின இளைஞனை போலீசார் தாக்குவதும், அமெரிக்க தேசியக்கொடி தீப்பற்றி எரிவதுமாக படத்தின் ஆரம்பக் காட்சிகள் அமைந்துள்ளன. 

பிற்காலத்தில் தலைவராவதற்கு உரிய எந்த அறிகுறியும், இளம் மல்கமிடம் இருக்கவில்லை. சராசரி கறுப்பின இளைஞனாக தனது நண்பர்களுடன் வீதியில் வலம் வருகிறார். வெள்ளை நிறக் காதலியுடன் உல்லாசமாக பொழுது போக்குகிறார். இதைவிட நிழல் உலகத் தொடர்புகள், போதைப் பொருள் பாவனை, இரவு விடுதிகள், திருட்டுகள் என வாழ்ந்து வந்தவர். வீடுடைப்பு திருட்டில் அகப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறுகின்றார். தனிமைச் சிறையில் வாடும் போது, அங்கே ஒரு கிறிஸ்தவ மத போதகர் வருகிறார். ஆனால் அவரைப் பார்க்க மல்கம் விரும்பவில்லை. "உங்கள் இயேசு எனக்கு எதுவுமே செய்யவில்லை. வெள்ளையர் பக்கமே நிற்கிறார்." என விரக்தியின் விளிம்பில் கதறுகின்றார்.  

கார்த்திக் காலிங் கார்த்திக் - விமர்சனம்


தனக்கென்று யாரும் இல்லாத ஹீரோ கார்த்திக் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறார்...மிகவும் அமைதியான குணம் கொண்ட நமது ஹீரோ மிகவும் துரதிஷ்ட சாலி...பாவம்...இவர் மீது எப்போதுமே மூட்டை மூட்டையாக வேலை விழுகிறது...வடிவேலு ஒரு படத்தில் சொல்லும் "இந்த ரணகளத்துலையும்  உனக்கு கிளுகிளுப்பா?" என்பது போல இத்தனை பிரச்சனையிலும் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் தீபிகா படுகோனே வை ஒரு தலையாக காதலிக்கிறார்...


Tuesday, March 2, 2010

1 ஜிபி பிராட்பேண்ட் - கலக்கும் கூகுள் பைபர்

நம்ம ஊரில் பிராட்பேண்ட் சர்வீஸின் வேகம் இன்னும் 256 Kbps-லேயே நொண்டியடித்துக் கொண்டிருக்க, பல வெளிநாடுகளில் 100 mbps -க்கும் அதிகமான வேகத்தில் பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்கப்படுகின்றன...


இந்தியாவில் வசூலிக்கப்படுவதை விட குறைந்த தொகையே அங்கெல்லாம் வசூலிக்கப்படுவதாக சொல்கிறார்கள். இப்போதுதான் இந்தியால் 4 Mbps, 8 Mbps என்று வேகம் சற்றே அதிகப்படுகிறது. ஆனால் கட்டணம் தீட்டிவிடுகிறார்கள்.
ஆனால் கூகுள் நிறுவனம் தனது ஃபைபர் நெட்வொர்க் மூலம் 1 GB வேகம் கொண்ட அதிநவீன பிராட்பேண்ட் இணைப்புகளை வழங்குவதில் தீவிரமாக உள்ளது.
இந்த அதிவேக இன்டர்நெட் இணைப்பு வசதியைப் பெறும் முதல்நாடு நெதர்லாண்ட்ஸ்தான்...

முதல் கட்டமாக நெதர்லாந்தின் ரெஜிஃபைபர் நிறுவனம் கேபிஎன் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளத கூகுள்.
இதன் மூலம் தனது 3 லட்சம் வாடிக்கையாளர்கள் அத்தனை பேருக்கும், எஃப்டிடிஎச் மூலம் ஒரு ஜிபி வேகத்தில் பிராண்ட்பேண்ட் சேவை வழங்க ரெஜிஃபைபர் திட்டமிட்டுள்ளது. முதல் முறையாக ஸீவோர்ல்ட் நகரம் இந்த சேவையை பெற உள்ளது...

அமெரிக்காவிலும்…
கூகுளின் இந்த புதிய திட்டத்தை அமெரிக்காவில் செயல்படுத்துமாறகு ஒபாமா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கலிபோர்னியாவை மையமாகக் கொண்டுதான் கூகுள் இயங்குகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
அமரிக்காவின் அழைப்பை ஏற்று, போர்ட்லேண்டில் முழுமையான 1 ஜிபி பிராண்ட்பேண்ட் சேவையை கூகுள் வழங்குகிறது.
இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, இந்த ஆண்டுக்குள் 5 லட்சம் வீடுகளுக்கு 1 ஜிபி பிராண்ட்பேண்ட் வசதி தரப்பட்டுவிடும் என கூகுள் அறிவித்துள்ளது.
இதற்கு தோதாக நாடு முழுவதும் புதிய ஆப்டிகல் பைபர் கேபிள்களை மாற்ற அமெரிக்க நகர மேயர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
நம்மாளுங்க இன்னும் 3 ஜி ஸ்பெக்ட்ரம் பஞ்சாயத்தையே முடிப்பதைக் காணோம்.. எல்லா வசதிகளையும் கொண்ட இந்தியா எப்போது இந்த அளவு வேகத்துக்கு மாறப்போகிறதோ!

கொச்சின் பயணம்

சென்ற வருடம் கோபி கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் போது போட்டிகளுக்கு சென்ற கல்லூரிகளில் கேரளாவை சேர்ந்த நாராயண குரு கல்லூரியும் ஒன்று...அந்த கல்லூரியின் MCA Dept HOD தமிழகத்தை செர்ந்தவர் என்பதால் அழைப்பு வந்தது  ...அந்த கல்லூரியோ அமைந்திருப்பது எர்ணாகுளம் அருகே ஆளுவா என்ற இடத்தில்...அங்கிரிந்து தான் உதயமானது எனது வேறு மாநில பயணங்கள்...
சென்ற வருடம் நேரம் இல்லாத காரணத்தால் சரியாகவே கொச்சின் சுற்றிப்பார்க்க முடியவில்லை...இந்த முறை ஒரு சிறந்த நண்பனை துணைக்கு அனுபியுள்ளார் கடவுள்...

பிப்ரவரி 10 :

காலை கல்லூரியை அடைந்தோம்...இந்த முறை போட்டிகள் இருந்தும் நாங்கள் பெரிதாக எதிலும் கலந்துகொள்ளவில்லை... ஏதோ பேருக்கு தலையை காட்டிவிட்டு அருகில் உள்ள செராய் பீச் க்கு புறப்பட்டோம்...எர்ணாகுளம்,கொச்சின் இரண்டிலுமே கடற்கரை என்னும் ஒன்று இல்லை..(அது போன்ற கரை  Backwater என அழைக்கப்படுகிறது)...சென்னை யை போல சாதாரண கரையை பார்க்க வேண்டுமானால் நாம் செராய் பீச்க்கு  தான் படைஎடுக்கவேண்டும்...


Monday, March 1, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்


மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட கெளதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா விண்ணைதாண்டும் அளவுக்கு திரையரங்குகளில் நல்ல துவக்கம் கண்டுள்ளது...இது வரை கெளதம் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் என்றிருந்த நிலை மாறி நமது ஆஸ்கார் நாயகன் ரகுமான் இசை அம்மைக்கப்படுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ...அதற்க்கேற்றால் போல பாடல்களும் சூப்பர் டூபர் ஹிட் ஆகியுள்ளது ...அலை படத்திற்குப்பிறகு மீண்டும் சிம்பு த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளது...

"ஊர்ல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும் போது நான் மட்டும் எப்படி ஜெர்சி ய லவ் பண்ணினேன்"...இந்த வரிகளுடன் துவங்குகிறது படம்...

Saturday, February 20, 2010

யாகூ வை பின்னுக்கு தள்ளிய பேஸ்புக்

இத்தனை நாளாக அமெரிக்காவின் ஜாம்பவானாக இருந்த யாகூவை பின்னுக்கு தள்ளி விட்டு இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது பேஸ்புக்(FACEBOOK)...2008 க்கு முன்புவரை அமெரிக்காவிலேயே முதல் இடத்தில் இருந்த இணையதளமான யாகூ வை கூகிள் பின்னுக்கு தள்ளி இன்று வரை முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது...இப்போது அந்த இரண்டாவது இடத்திற்கும் ஆப்பு வைத்து விட்டது பேஸ்புக்...இப்போது பாவம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது...

Friday, February 19, 2010

ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்திஆபாச இணையதளங்கள்,நடிகர் நடிகைகளைப்பற்றி அவதூறான செய்திகளை இணையதளம் மற்றும் பிளாக்குகளில் அத்துமீறி பரப்புபவர்கள், காப்பூரிமம் பெற்ற இணையதளத்தில் இருந்து வெளியிடப்படும் தகவல்களை திருடி தங்கள் இனையப்பக்கத்தில் வெளியீடுபவர்கள் என அனைவரையும் விரைந்து பிடிக்க
சைபர்கிரைம் புதியயுக்தியை கையாண்டுள்ளது.

தங்களுக்கு பிடித்த் பெயரில் பிளாக் வைத்து ஆபாசபடங்கள், செய்திகள், மென்பொருள், வீடியோக்கள்,பாடல்கள் என அனைத்தையும் அனுமதியின்றி வெளியீட்டு வருகின்றனர். சோசியல் நெட்வொர்க்கான கூகுள் பிளாக்ஸ்பாட்,வேர்டுபிரஸ் இன்னும் பல தளங்கள் மூலம் தான் இந்த தகவல் அனைவருக்கும் பரிமாறப்படுகின்றன.

பேருந்தா எமவாகனமா?


எப்போதும் வேலை இல்லாத நேரங்களில் நான் நகர உலா செல்வது வழக்கம்...("நான் எப்போது வேலையில் இருந்திருக்கிறேன் என்று கெட்டுவிடாதீர்கள்")....அப்போது புரசைவாக்கத்தில் இருந்து எக்மோர் வழியாக பேசன் நகர் செல்லும் TN 01 N 4935  எண் கொண்ட  ஒரு பேருந்தில் ஏறினேன்...முதலில் நன்றாக தான் நகர்ந்து கொண்டிருந்தது...பிறகு எக்மோர் க்கு இரண்டு நிறுத்தங்களுக்கு முந்திய ஒரு நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் நிறைய பேர் அடித்து பிடித்து ஏறினார்கள்...அப்போது மணி சரியாக மாலை 4.10 இருக்கும்...பாதி பேர் ஏற ஏற பேருந்து நகர ஆரம்பித்தது...மாணவர்கள் கத்ததொடங்கியும் ஓட்டுனர் அதை சட்டை செய்ய வில்லை...

Wednesday, February 17, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை - விமர்சனம்

எல்லா விஷயத்திலும் தனக்கு பெஸ்ட் ஆனது தான் வேணும் நு நினைக்கும் ஹீரோ மூன்று பெண்களை காதலித்து அதில் பெஸ்ட் ஆன பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள நினைத்து அதில் மாட்டிக்கொண்டு எப்படி தப்பிக்கிறார் என்பது தான் தீராத விளையாட்டுப் பிள்ளை...

சத்யம்,தோரணை படத்தின் தோல்விக்கு பிறகு விஷாலும் , வேட்டைக்காரன் தோல்விக்கு பிரமும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்.

பழைய இரண்டு  படங்களுடன்    ஒப்பிட்டுப்பார்க்கும்  போது இந்த படம் சற்று தேறியுள்ளது...விஷாலுடன் நீது சந்திரா,சராஹ் ஜானே திஸ் மற்றும் தனுஸ்ரீ தாதா ஆகியோர் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்...பழைய படங்களில் காட்டின ஹீரோஇசம் இல்லாமல் ஒரு சாக்லேட் பையனாக வலம் வந்திருக்கிறார்...

 
படத்தில் முக்கியமான பிளஸ் சந்தானம்,சத்யன் மற்றும் மயில்சாமியுடைய காமெடி கூட்டணி...முக்கியமாக சந்தானம் தான் டைமிங் காமெடிகளில் வெளுத்து வாங்குகிறார்...முக்கியமாக"அந்த பொண்ணு கேரெக்டர் சரியில்ல மச்சான் ஒரே ஒரு பையன  லவ் பண்ணி அவனையே கட்டிக்கனுமாமா,இவள பாத்து மத்த பொண்ணுங்க லாம் கெட்டு போய்டாதா" நு கேட்கும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது சரவெடி...  


ஆனால் படத்தின் முதல் பாதியை சந்தானமும் காமெடி குழுவுமே காபாற்றுகிறது...
"கருப்பா இருக்குறவன பொண்ணுகளுக்கு புடிக்காது நு எவன் டா சோனான்" போன்ற டயலாகுகளில் விசில் பறந்தாலும் சில நேரங்களில் தேவை இல்லாத காட்சி சேர்க்கைகள் கடுப்பேற்றுகின்றன...

Sunday, February 7, 2010

திருச்சி to நெல்லை


ஒரு குறும்பட விழாவிற்காக ஜனவரி 28 அன்று திருச்சி சென்றோம்...பாரதிதாசன் பல்கழைக்கழகத்தில் "பயாஸ்கோப்" என்ற பெயரில் இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடந்தது...குறும்பட இயக்குனரும் நான் காண வேண்டும் என நினைத்த இயக்குனருமான இயக்குனர் R.P அமுதன் அவர் வருகை புரிந்திரயுந்தார்...அவரை காண வேண்டும் என நான் நினைத்ததற்கு முக்கியமான காரணம் ஒரு முறை எடிட்டர் லெனின் அவரையும் அவரின் "பீ" குறும்படத்தைபற்றியும் கூறியது தான்... 


சில குறும்படங்கள் (அமுதனின் "பீ" உட்பட)திரையிடப்பட்டன...அதைப்பற்றிய விவாதங்களும் நடைபெற்றன...பல்கழைக்கழகத்தின் மாணவர்கள்,ஆசிரியர்கள் என அனைவரும் எங்களை நன்றாக கவனித்துக்கொண்டார்கள்...அவர்களுக்கு என் நன்றி என்றும் உண்டு...

 முடிவில் அமுதன் அவர்களுடன் உரையாடிவிட்டு சான்றிதழ்களுடன் விடை பெற்றுக்கொண்டோம்...

சான்றிதழ்களுடன் வெளியே வரும்போது தான் அங்கு ஷக்ரியா என்ற போட்டிக்கான கோப்பையை பார்த்தேன்...இதை பார்க்கும் போது சென்ற வருடம் தனியாக வந்து இரண்டு பரிசுகளுடன் சென்ற நிகழ்வு நினைவுக்கு வந்தது...அப்போது நான் கோபி கலைக்கல்லூரியில் படித்து வந்தேன்...


கோவா-இளமைக்கொண்டாட்டம்பன்னைபட்டி என்ற கிராமத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஊரை விட்டு போய் படம் பார்த்ததற்காக கண்டிக்கபடுகிராகள்...(அதும் ஆங்கிலப்படமாம்!!!)இதனால் ஊரை விட்டு சிறிது காலம் போய் விடலாம் என்று என்னும் மூவரும் மதுரையில் உள்ள நண்பனை பார்க்க செல்கிறார்கள்...அங்கே அவனுக்கு வெள்ளைக்காரியுடன் திருமணம் நடக்க அதிர்கின்றனர்...அவனோ கோவா வில் இவளை பிடித்ததாக கூற மூவரும் கோவா சென்று ஆங்கில பெண்களைக் காதலித்து கல்யாணம் செய்து வெளிநாடு போய் விடலாம் என்று கில்மாவான திட்டம் போடுகிறார்கள்...கோவா கிளம்புகிறார்கள் பின்னர் என்னை நடக்கிறது?காதலித்தார்களா இல்லை ஊருக்கே திரும்பி போய்டாங்களா என்பது தான் கதை...(கதை இருக்கிறதா படத்தில்?????)  


Saturday, January 30, 2010

தமிழ் படம்- சிரிப்பு சரவெடி

சென்னை யில் வெட்டியாக இருப்பதை விட்டு விட்டு உருப்படியாக திருச்சி க்கு ஒரு செமினார் க்காக வந்தேன்.அரங்கம் நிறைந்த அந்த ஊர்வசி தியேட்டரில் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கினோம் தமிழ் படத்திற்காக...


இந்தியாவில் முதன் முறையாக Spoofing என்னும் மற்ற படங்களை கிண்டலடிக்கும் முறை இந்த படத்தில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

படம் தொடக்கத்தில் இருந்தே காமெடி அருவி கொட்ட ஆரம்பிக்கிறது.கள்ளிப்பால் ("சுத்தமானது சுகாதாரமானது என்று பிரிண்ட் செய்யப்பட்ட டப்பாவில்") கொடுக்கும் போது என்னை மெட்ராஸ் அனுப்பிவிடுங்க என்று குழந்தை சொல்வது.


ஹீரோ பெரியவன் ஆக சைக்கிள் சக்கரத்தை சுற்றுவது,ஒரே பாட்டில் அதும் காபி சொல்லி வருவதற்கும் முன்பே ஹீரோ பணக்காரன் ஆவது (அண்ணாமலை,படையப்பா) என தமிழ் சினிமா வின் முந்தைய சகிக்க முடியாத விஷயங்களை கலாய்திருக்கிரார்கள்...


You may like this