Visitors

hit counters

Sunday, July 13, 2014

OBAMA (SHORT FILM) - விமர்சனம்


"ஒபாமா" என டைட்டில் வைக்கும் போதே கண்டிப்பாக இந்த குறும்படம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்தேன்... 

படத்தின் துவக்கமே ஒரு பெரிய தொழிலதிபரை கடத்த கதையின் நாயகன் அன்பு மற்றும் பிஜாய் இருவரும் திட்டமிடுகிறார்கள்... அன்பு சொல்வது போலவே பாலோ செய்து கடத்தியும் விடுகிறான் பிஜாய்... 

பிறகு தொழிலதிபர் மனைவிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டி ஒரு பேங்க் அக்கவுண்ட்  நம்பருக்கு ஐந்து கோடி போட சொல்கிறான் அன்பு ...
போலீஸ் அக்கவுன்ட் நம்பரை பார்க்கையில் ஷாக்... அந்த தொழிலதிபரை கடத்திய பிஜாய் அக்கவுன்ட்... அப்போது ஒரு பார்சல் வருகிறது.. அதில் பிஜாய் கடத்திய வீடியோ இருக்கிறது...  

பிஜாயும் ஒரு தொழிலதிபர் என தெரிந்து தான் கடத்த வைக்கிறான் அன்பு... பிறகு பிஜாயை கட்டிப்போட்டு, அவன் கையில் துப்பாக்கியை வைத்து விட்டு... கடத்தப்பட்ட தொழிலதிபர் மீது தண்ணீர் தெளித்துவிட்டு சென்று விடுகிறான் அன்பு... அவன் முழித்து பார்க்கையில் எதிரே பிஜாய் துப்பாக்கியுடன் தூங்குவதை பார்த்து டக்கென்று காலில் இருந்த துப்பாகியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி விடுகின்றான்...  

போலீஸும், தொழில் போட்டியின் காரணமாக சக தொழிலதிபர் கொன்றதாக ஒரு முடிவுக்கு வருகின்றனர்... டிவியில் இந்த செய்தியை பார்த்துகொண்டிருக்கும் ஹீரோ  சிகரெட்டை வாயில் வைக்கிறார் பின் அதை அப்படியே தூக்கிபோட்டு காஸ்ட்லி சிகர்க்கு மாறுகிறார்.. 

அதற்க்கு பிறகே "ஒபாமா" என டைட்டில் வருகிறது... கிட்டத்தட்ட ஈசன் பட ஸ்டைல் தான்... 

இதற்க்கு பிறகு எப்படி இந்த கடத்தல் சாத்தியமானது எப்படி அவன் ஹீரோவிடம் சிக்கினான் இது மீதிக்கதை.. சொல்லபோனால் இந்த முடிச்சுகள் அவிழ்க்கும் காட்சிகள் படத்தின் பலம்... ஆனால் அதுவே படத்தின் பலவீனமாகவும் போய் விட்டது...

படத்தின் 80% காட்சிகள் நிகழ்வாகவும் 20% பிளாஷ்பேக் காட்சிகளாக வர வேண்டிய திரைக்கதை அப்படியே உல்டா ஆகி விட்டது...இருந்தாலும் எந்த இடத்திலும் உச் கொட்டும் அளவுக்கு இழுவை இல்லாத காட்சிகளாலும் ஒவ்வொரு பாயின்ட் ஆபில் கதை மாறும் போதும் எப்படி சாத்தியம் ஆனது என்பது அழகான திரைக்கதை...

படத்தின் இசையும் படத்தொகுப்பும் மிகப்பெரிய பலம்... ஒளிப்பதிவு ஓகே...

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் வேலையை சரியாக செய்கிறது... சில நொடிகளே வரும் ஒரு கதாபாத்திரம் கூட க்ளைமேக்ஸில் தேவைப்பட்டிருக்கிறது...

பிளாஷ்பேக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் க்ரிஸ்பியாக இருந்திருக்கும்...


கதையில் அன்பு என்ற பெயரில் வரும் பாலா ஹாசனை சுற்றியே முழுக்கதையும் நகர்வதை அறிந்து தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்... டயலாக் டெலிவரி எல்லாம்  அள்ளி வீசுகிறார்... கேமரா கூச்சம் என்றால் என்ன விலை என கேட்கும் அளவுக்கு வெகு இயல்பான நடிப்பு... தன் பாத்திரம் அறிந்து புகை பிடிப்பது, கேட்ட வார்த்தைகள், பஞ்ச் டயலாக் என அப்ளாஸ் அள்ளுகிறார்... "நமக்கு தேவை சிக்ஸர் அத புல் டாஸ் ல அடிக்குறோமா இல்ல யார்கர் ல அடிக்கிறோமாங்கிறது முக்கியமில்ல" இந்த ஒரு வசனத்திலேயே அப்ளாஸ் அடிக்கிறார்...


இயக்கம் விஜயசுந்தர்... தெளிவாக கால அவகாசம் எடுத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்... அதுமட்டும் இன்றி ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்...  சிறு சிறு குறைகளை நீக்கிவிட்டு பார்த்தால் ஒபாமா ஒரு தரமான த்ரில்லர்...

படத்தின் ட்ரைலர்


HAPPY MARRIED LIFE (SHORT FILM)- விமர்சனம்


முகநூல் நண்பர்கள் மூலம் கிடைத்த அழைப்பின் பேரில் AVM PREVIEW THEATER இல் சனிக்கிழமை மாலை 3.30அன்று திரையிடப்பட்டது HAPPY MARRIED LIFE எனும் குறும்படம் ...

நாடோடிகள் படத்தில் ஒரு வசனம் "கல்யாணம் ஆன எல்லோருக்கும் முதல் மூணு மாசம் சொர்க்கம் மாதிரி தான் இருக்கும்... அதுக்கப்புறம் ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு விரிசல் வரும் அதையும் தாண்டி யாரு ஒண்ணா இருக்காங்களோ அவங்க தான் உண்மையான தம்பதிகள்... அப்படி இருக்க முடியாதவங்க தான் இப்படி பாதியில அத்துக்கிட்டு அம்மா அப்பா வீட்டுக்கு போய்டுதுங்க..." 
இப்படம் கிட்டத்தட்ட அதை நினைவு படுத்தியது...

கதைக்காக பெரிதாக மெனக்கெடவில்லை... திருமணமான இரு தம்பதிகள் அவர்களுக்குள் சண்டை... நாளாக நாளாக அவர்களுக்குள் விரிசல் அதிகமாகிறது... இறுதியில் சேர்ந்தார்களா என்பது தான் கதை...

கணவனாக சஞ்சய்... சாப்பிட வருவது போல தண்ணீர் குடிக்கும் இடத்திலும், மனைவிக்கு பரிசாக கொடுத்த பொம்மையை உடைக்கும் போதும் கொடுக்கும் எக்ஸ்ப்ரெஷன் அருமை...

மனைவியாக நிஷா.. ஏற்கனவே "அகவிழி" என்னும் குறும்படத்தில் கவனம் ஈர்த்தவர்... இந்த படத்தில் எப்போதும் உர்ர் என்ற முகத்துடன் வர வேண்டிய நிர்பந்தம்...  கணவனை பற்றி தங்கையிடம் கோவிக்கும் போதும், பரிசை எடுக்க வருவது போல கணவனுக்கு பல்ப்பு கொடுக்கும் போதும் கொடுக்கும் ரியாக்சன் ப்ளஸ்...


இந்த படத்தின் ஹைலைட்டே இந்த படத்தின் இசையும் ஒளிப்பதிவும்... 
படம் முழுதும் வரும் தீம் மியூசிக் படத்தின் மிகபெரிய பலம்...

உர்ர்ர் என பேசி விட்டு 'மச்சி எப்படியாச்சும் சேர்த்து வைங்கடா" என புலம்பும் இடத்திலும், என்ன மச்சி நேத்து "ம்ம்மம்ம்ம்ம்???", "உடம்ப பாத்துக்கோங்க" என அப்ளாஸ் அடிக்கும் வசனங்கள்... 

படத்தின் டைட்டில் வொர்க் நன்றாக இருந்தது... 

பிரிவுக்கு பிறகு தான் படத்தின் துவக்கமே... எனவே எதற்காக சண்டை என்பது தெளிவாக விளங்கவில்லை... சும்மா சண்டை போட்டுகிட்டாங்க என்பது போல தான் துவங்குகிறது... அதே போல அவர்கள் சேரும் காட்சி இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்... 

நாயகனின் நண்பனாக கிஷோர் "பிலீவ் மீ டா" என்ற ஒரு வரியிலே அப்ளாஸ் வாங்குகிறார்... ஆனால் அவர் கொடுக்கும் ஐடியா பில்டப்புகள் பெரிதாக சோபிக்கவில்லை... 

இருந்தாலும் காதலை வைத்துக்கொண்டு மொக்கை போடும் குறும்படங்களை எல்லாம் தாண்டி ஒரு நல்ல குறும்படமாக வந்திருக்கிறது... இப்படத்திற்காக உழைத்த இயக்குநர் ஸ்ரீநிவாஸ்க்கும் மற்றும் படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 

விரைவில் YOUTUBE இல் வெளியிடுங்கள்... 

இதோ இந்த படத்தின் ட்ரைலர்...

Wednesday, July 9, 2014

நம்பியார் இசை வெளியீடு


ரொம்ப நாளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம்... ஏனென்றால் இந்த படத்தால் தான் ஸ்ரீகாந்தின் அடுத்த (நான் Asst. EDITORஆக  பணிபுரியும்)  படமான சாமியாட்டம் ஷூட்டிங் தள்ளி போய்க்கொண்டே சென்றது...  இத்தனை நாள் காத்திருந்ததற்கு ஏற்ற பலன் கிடைத்தது...


இந்த படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலர் பார்க்கும் போதே கிட்டத்தட்ட பாதி கதை புரிந்திருக்கும்... நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்கள் தான் நமக்கு நம்பியார்... அதனால் நம் வாழ்க்கையில் நாம் என்னென்னவெல்லாம் சந்திக்கிறோம் என்பது தான் கதை...


உண்மையிலேயே ஆடியோ ரிலீசுக்கு இவ்ளோ வரவேற்ப்பு இருக்குமென்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை... தேவி மெயின் ஸ்க்ரீன் நிறைந்து நிற்க இடம் இல்லை... சூர்யா, ஜீவா, பவர் ஸ்டார், பார்த்திபன், விஜய் ஆண்டனி, சரத் குமார், ஷாம், ஷாம், சமுத்திரக்கனி, நமிதா என பெரிய லிஸ்டே வந்திருந்தது...

எம்.ஸ். பிரபு இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்தது புது அனுபவம் அது இது என்று சொல்லிக்கொண்டு இருந்தார்... வந்த எல்லோரும் ஒரே மாடலில் கதை வித்தியாசம் ஸ்ரீகாந்தை தெரியும் அவர் நல்லவர் வல்லவர் என ஒரே மாதரியான புராணமே பாடிக்கொண்டிருந்தனர். பார்த்திபன் எப்போதும் போல நான்கு எதுகை மோனைகளுடன் அவருக்கே உரிய பாணியில் செவ்வனே பேசி விட்டு சென்றார்... இன்னும் எத்தனை காலம் தான் ஒரே மாவை அரைப்பார்களோ...

ட்ரைலர் கொடுத்த இம்பேக்டில் நம்பியார் கண்டிப்பாக, நம்பி-யார் வந்தாலும் பிடிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என நம்புவோம்...

Monday, July 7, 2014

அரிமா நம்பி(ARIMA NAMBI) - விமர்சனம்எப்படி ஒரு ப்ளேட் பிரியாணிக்கு ஆசைப்பட்டு ஹீரோ அலையும் படமாக பிரியாணி படம் வந்ததோ... கிட்டதட்ட அதே மாதிரி தான் ஒரு கிளாஸ் வோட்கா வுக்கு ஆசைப்பட்டு படம் பூரா அலையும் நாயகனின் கதையே அரிமா நம்பி...

ஹீரோ விக்ரம் பிரபு ஒரு PUB இல் ப்ரியா ஆனந்தை சந்திக்கிறார்... இம்பிரஸ் செய்ய பாடுகிறார் போன் நம்பர் வாங்குகிறார்... அடுத்த நாள் சேர்ந்து சரக்கடிக்குறாங்க... சரக்கு காலியாயிடுச்சுன்னு வீட்டுக்கு போய் சரக்கடிக்குறாங்க... மத்திய மந்திரி JD சக்கரவர்த்தி செய்த ஒரு கொலை மறைமுகமாக வீடியோ பிடிக்கப்பட அது ப்ரியா ஆனந்தின் தந்தை கையில் கிடைக்க அவரிடம் இருந்து வாங்குவதற்காக திடீர்னு ஒரு கும்பல் ப்ரியா ஆனந்தை கடத்திட்டு போக போலீஸ் உதவியுடன் வர அங்கே எந்த தடையமும் இல்லை... பின்னால் தான் தெரிகிறது இதில் போலீஸும் உள்கூட்டு... பின்னர் பிரியா ஆனந்தை கண்டுபிடித்தாரா? மந்திரியன் அம்பலம் YOUTUBE இல் ஏறியதா ? இதுவே மீதி கதை...நாயகனாக விக்ரம் பிரபு... இதுவே முதல் படமாக இருந்திருக்கலாம்... சண்டை காட்சிகளில் சேஸிங் காட்சிகளில் நல்ல உழைப்பு... ஆனால் நடிப்பில் இன்னும் தேவை.... காதல் காட்சிகள் செட் ஆகவில்லை... நீங்க நெறையா கமல் படம் பாருங்க சார்... 

சரக்கடிக்கும் கதாநாயகியாக பிரியா ஆனந்த்... இவரின் கதாபாத்திரம் ஏன் PUB, சரக்கு, மார்பு தெரியும் ஆடைகள் என உருவாக்கப்பட வேண்டும் ? என்ன தான் பணக்காரி என்றாலும்  நாயகி இந்த காலத்து பெண் என காட்ட வேறு வழியே இல்லையா ??? சரக்கடிப்பவளும் புகை பிடிப்பவளும் தான் இந்த காலத்து பெண் என இன்னும் எத்தனை காலம் தான் காட்டுவீர்கள்... இன்னும் நிர்வாணமாக காட்டாதது ஒன்று மட்டும் தான் குறை... 

திரையில் நாயகன் புகை பிடித்தாலும், நாயகி சரக்கடித்தாலும் அது வெறும் கதாபாத்திரம் தான் என்று என்னும் அடிப்படை அறிவு இங்கு எவருக்கும் கிடையாது... ரஜினி புகை பிடிப்பதை பார்த்து புகை பிடித்தவர்கள் அதிகம்...


நீர்க்குமிழியாய் வந்தாலும் ஒரு நாயகனுக்கு நிகரான பெயரை தட்டி சென்றுவிட்டார் MS பாஸ்கர்... நாயகனை காப்பாற்றும் காட்சியில் கிட்டத்தட்ட அவரே தான் ஹீரோ... 

வில்லனாக JD சக்கரவர்த்தி ஓகே ரகம்... சூது கவ்வும் படத்தில் பின்னாடி சூடு போட்டுக்கொண்ட போலிஸ் காரர் இந்த படத்தில் காலில் சூடு போட்டுக்கொண்டதை விட புதியதாய் எதுவும் இல்லை...

RD ராஜசேகரின் அனுபவமான ஒளிப்பதிவு படத்திற்கு அழகாய் பொருந்துகிறது... சேனல் வெளியே நடக்கும் பாடல் காட்சி அதற்க்கு உதாரணம். கண்ணுக்கு உறுத்தாத படத்தொகுப்பு வேகத்தை சீராக வைக்கிறது...


படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ட்ரம்ஸ் சிவமணி... யாரோ யார் அவள் பாடலும், அதை வைத்து அமைத்த தீம் மியூசிக்கும் அருமை... சேஸிங் காட்சிகளில் அருமையாக காட்சிகளுடன் பொருந்துகிறது...

எழுதி இயக்கியவர் முருகதாஸின் உதவி இயக்குனர் ஆனந்த்சங்கர்... குருவின் வேகமான திரைக்கதை சொல்லும் பாணியை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்... சென்ற வாரம் பார்த்த வடகறி போல முதல் பாதி முடிந்த பிறகு தான் கதையே ஆரம்பிக்குமோ என பயந்தேன்... நல்ல வேலை படம் துவங்கிய உடனே ஒரு பாடல் அடுத்து மீட்டிங் சீன் அடுத்து கடத்தல் என எடுத்த எடுப்பில் கதைக்குள் நுழைந்தது...


நாயகனின் கதாபாத்திரத்தை டெக்னாலஜியில் புகுந்து விளையாடும் இன்றைய காலத்து வாலிபனாக உருவாக்கியது படத்தில் வொர்கவுட் ஆகிறது... ஆனால் பல இடங்களில் நாயகன் தப்பிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ற மாதிரி காட்சிகள் வேண்டுமென்றே வைத்து போல உள்ளது... (உதாரணம்: லாட்ஜில் நுழையும் காட்சி, ஹோட்டலில் இருந்து தப்பிக்கும் காட்சி)

படம் முழுதும் இவர்கள் இருவரையே சுற்றி நகர்வதால் கதை வேகமாக நகர்கிறது... ஆனாலும் பல இடங்களில் லாஜிக் படு சொதப்பல்...

மெமரி கார்டில் வீடியோ இருப்பதை அறிந்த ஹீரோ ஏன் அதை வேறு காப்பி எடுத்து வைக்கல? நாமெல்லாம் சாதாரண ஒரு "பிட்டு" வீடியோ கிடைச்சாலே நாலு காப்பி எடுத்து வைப்போம் ;)

>

அதுவும் ஒரு மந்திரி கொலை செய்துவிட்டு போகும் போது கேமிரா இருக்கான்னு கூட பாக்க மாட்டாரா?

திடீர்னு கண்ட்ரோல் ரூமுக்கு மந்திரி வரார்... அதப்பண்ணு இதப்பண்ணு ன்னு சொல்றார்... எப்படி?

சாகும் தருவாயில் MS பாஸ்கருக்கு "நீ அடிப்பே குத்துவே மத்தவனுக்கு அடிக்க தெரியாதுன்னு" டையலாக் எதற்கு?

நாயகன் போகும் போது சிம் கார்டை கொலை நடந்த இடத்திலே எதற்கு போடணும்? சிம்மை வச்சு கண்டுபுடிச்சுடுவாங்க ன்னு கூட தெரியாதா? தூரம் போய் போட்டிருக்கலாமே ?


ஹேட்டல் ரூமில் வீடியோ அப்லோட் செய்யும் அந்த நேரத்தில் (AVM இல் செட் போட்ட மாதிரி) டூயட் பாடல் தேவை இல்லாத சேர்க்கை... மான்டேஜ் மாதிரி ஹோட்டல் ரூமுக்குள் இருந்திருந்தால் கூட ஓரளவு நன்றாக இருந்திருக்கலாம்...

க்ளைமாக்சில் இருந்த ட்விஸ்ட் எதிர்பார்த்தது தான்... ஆனால் எல்லோராலும் கண்டுபிடிக்க முடியாது...

குறைகள் என்று பெரிதாக எதுவும் இல்லாததால் "அரிமா நம்பி" ஒரு நல்ல ஆக்சன் த்ரில்லர்க்கான படமே.. கண்டிப்பாக நம்பி ஒரு முறை பார்க்கலாம்...

You may like this