அரிமா நம்பி(ARIMA NAMBI) - விமர்சனம்



எப்படி ஒரு ப்ளேட் பிரியாணிக்கு ஆசைப்பட்டு ஹீரோ அலையும் படமாக பிரியாணி படம் வந்ததோ... கிட்டதட்ட அதே மாதிரி தான் ஒரு கிளாஸ் வோட்கா வுக்கு ஆசைப்பட்டு படம் பூரா அலையும் நாயகனின் கதையே அரிமா நம்பி...

ஹீரோ விக்ரம் பிரபு ஒரு PUB இல் ப்ரியா ஆனந்தை சந்திக்கிறார்... இம்பிரஸ் செய்ய பாடுகிறார் போன் நம்பர் வாங்குகிறார்... அடுத்த நாள் சேர்ந்து சரக்கடிக்குறாங்க... சரக்கு காலியாயிடுச்சுன்னு வீட்டுக்கு போய் சரக்கடிக்குறாங்க... மத்திய மந்திரி JD சக்கரவர்த்தி செய்த ஒரு கொலை மறைமுகமாக வீடியோ பிடிக்கப்பட அது ப்ரியா ஆனந்தின் தந்தை கையில் கிடைக்க அவரிடம் இருந்து வாங்குவதற்காக திடீர்னு ஒரு கும்பல் ப்ரியா ஆனந்தை கடத்திட்டு போக போலீஸ் உதவியுடன் வர அங்கே எந்த தடையமும் இல்லை... பின்னால் தான் தெரிகிறது இதில் போலீஸும் உள்கூட்டு... பின்னர் பிரியா ஆனந்தை கண்டுபிடித்தாரா? மந்திரியன் அம்பலம் YOUTUBE இல் ஏறியதா ? இதுவே மீதி கதை...



நாயகனாக விக்ரம் பிரபு... இதுவே முதல் படமாக இருந்திருக்கலாம்... சண்டை காட்சிகளில் சேஸிங் காட்சிகளில் நல்ல உழைப்பு... ஆனால் நடிப்பில் இன்னும் தேவை.... காதல் காட்சிகள் செட் ஆகவில்லை... நீங்க நெறையா கமல் படம் பாருங்க சார்... 

சரக்கடிக்கும் கதாநாயகியாக பிரியா ஆனந்த்... இவரின் கதாபாத்திரம் ஏன் PUB, சரக்கு, மார்பு தெரியும் ஆடைகள் என உருவாக்கப்பட வேண்டும் ? என்ன தான் பணக்காரி என்றாலும்  நாயகி இந்த காலத்து பெண் என காட்ட வேறு வழியே இல்லையா ??? சரக்கடிப்பவளும் புகை பிடிப்பவளும் தான் இந்த காலத்து பெண் என இன்னும் எத்தனை காலம் தான் காட்டுவீர்கள்... இன்னும் நிர்வாணமாக காட்டாதது ஒன்று மட்டும் தான் குறை... 

திரையில் நாயகன் புகை பிடித்தாலும், நாயகி சரக்கடித்தாலும் அது வெறும் கதாபாத்திரம் தான் என்று என்னும் அடிப்படை அறிவு இங்கு எவருக்கும் கிடையாது... ரஜினி புகை பிடிப்பதை பார்த்து புகை பிடித்தவர்கள் அதிகம்...


நீர்க்குமிழியாய் வந்தாலும் ஒரு நாயகனுக்கு நிகரான பெயரை தட்டி சென்றுவிட்டார் MS பாஸ்கர்... நாயகனை காப்பாற்றும் காட்சியில் கிட்டத்தட்ட அவரே தான் ஹீரோ... 

வில்லனாக JD சக்கரவர்த்தி ஓகே ரகம்... சூது கவ்வும் படத்தில் பின்னாடி சூடு போட்டுக்கொண்ட போலிஸ் காரர் இந்த படத்தில் காலில் சூடு போட்டுக்கொண்டதை விட புதியதாய் எதுவும் இல்லை...

RD ராஜசேகரின் அனுபவமான ஒளிப்பதிவு படத்திற்கு அழகாய் பொருந்துகிறது... சேனல் வெளியே நடக்கும் பாடல் காட்சி அதற்க்கு உதாரணம். கண்ணுக்கு உறுத்தாத படத்தொகுப்பு வேகத்தை சீராக வைக்கிறது...


படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ட்ரம்ஸ் சிவமணி... யாரோ யார் அவள் பாடலும், அதை வைத்து அமைத்த தீம் மியூசிக்கும் அருமை... சேஸிங் காட்சிகளில் அருமையாக காட்சிகளுடன் பொருந்துகிறது...

எழுதி இயக்கியவர் முருகதாஸின் உதவி இயக்குனர் ஆனந்த்சங்கர்... குருவின் வேகமான திரைக்கதை சொல்லும் பாணியை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்... சென்ற வாரம் பார்த்த வடகறி போல முதல் பாதி முடிந்த பிறகு தான் கதையே ஆரம்பிக்குமோ என பயந்தேன்... நல்ல வேலை படம் துவங்கிய உடனே ஒரு பாடல் அடுத்து மீட்டிங் சீன் அடுத்து கடத்தல் என எடுத்த எடுப்பில் கதைக்குள் நுழைந்தது...


நாயகனின் கதாபாத்திரத்தை டெக்னாலஜியில் புகுந்து விளையாடும் இன்றைய காலத்து வாலிபனாக உருவாக்கியது படத்தில் வொர்கவுட் ஆகிறது... ஆனால் பல இடங்களில் நாயகன் தப்பிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ற மாதிரி காட்சிகள் வேண்டுமென்றே வைத்து போல உள்ளது... (உதாரணம்: லாட்ஜில் நுழையும் காட்சி, ஹோட்டலில் இருந்து தப்பிக்கும் காட்சி)

படம் முழுதும் இவர்கள் இருவரையே சுற்றி நகர்வதால் கதை வேகமாக நகர்கிறது... ஆனாலும் பல இடங்களில் லாஜிக் படு சொதப்பல்...

மெமரி கார்டில் வீடியோ இருப்பதை அறிந்த ஹீரோ ஏன் அதை வேறு காப்பி எடுத்து வைக்கல? நாமெல்லாம் சாதாரண ஒரு "பிட்டு" வீடியோ கிடைச்சாலே நாலு காப்பி எடுத்து வைப்போம் ;)

>

அதுவும் ஒரு மந்திரி கொலை செய்துவிட்டு போகும் போது கேமிரா இருக்கான்னு கூட பாக்க மாட்டாரா?

திடீர்னு கண்ட்ரோல் ரூமுக்கு மந்திரி வரார்... அதப்பண்ணு இதப்பண்ணு ன்னு சொல்றார்... எப்படி?

சாகும் தருவாயில் MS பாஸ்கருக்கு "நீ அடிப்பே குத்துவே மத்தவனுக்கு அடிக்க தெரியாதுன்னு" டையலாக் எதற்கு?

நாயகன் போகும் போது சிம் கார்டை கொலை நடந்த இடத்திலே எதற்கு போடணும்? சிம்மை வச்சு கண்டுபுடிச்சுடுவாங்க ன்னு கூட தெரியாதா? தூரம் போய் போட்டிருக்கலாமே ?


ஹேட்டல் ரூமில் வீடியோ அப்லோட் செய்யும் அந்த நேரத்தில் (AVM இல் செட் போட்ட மாதிரி) டூயட் பாடல் தேவை இல்லாத சேர்க்கை... மான்டேஜ் மாதிரி ஹோட்டல் ரூமுக்குள் இருந்திருந்தால் கூட ஓரளவு நன்றாக இருந்திருக்கலாம்...

க்ளைமாக்சில் இருந்த ட்விஸ்ட் எதிர்பார்த்தது தான்... ஆனால் எல்லோராலும் கண்டுபிடிக்க முடியாது...

குறைகள் என்று பெரிதாக எதுவும் இல்லாததால் "அரிமா நம்பி" ஒரு நல்ல ஆக்சன் த்ரில்லர்க்கான படமே.. கண்டிப்பாக நம்பி ஒரு முறை பார்க்கலாம்...

Comments