Visitors

hit counters

Tuesday, March 9, 2010

கோபிசெட்டிபாளையம் -குட்டி கோடம்பாக்கம்

    நீங்கள் முன்னே வந்த தமிழ் சினிமா படங்களை பார்த்து இருப்பீர்கள்...பச்சை வயல்,பசுமையான தென் தோப்புகள்,சேற்றில் நடவு செய்யும் பெண்கள் ,மற்றும் நீரோடை போன்றவை இது எல்லாம் காமெராக்கள் பெரும்பாலும் சுட்ட இடம் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கோபிசெட்டிபாளையம் என்னும் சிறு நகரம் ஆகும்...நடிகர்  பிரபு நடித்து சக்கை போடு போட்ட "சின்னத்தம்பி" போன்ற படங்கள் கோபி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து படமாக்கபட்டதுதான்...  
 பாவனி அணை
நீங்கள் பார்க்கும் இந்த அணையில் உள்ள ஒரு பங்களாவில் தான் சின்னத்தம்பி படத்தின் "அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் " பாடல் படமாக்கப்பட்டது...  
 குருமந்தூர் பகுதி
கொண்டத்து காளியம்மன் கோயில் பாரியூர்

பாக்யராஜ் நடித்த "இது நம்ம ஆளு" படத்தில் வரும் பல காட்சிகள் இந்த கோவில் அருகே  தான் படமாக்கப்பட்டன...அதில் கோவிலில் அவருக்கும்,ஷோபனாவிருக்கும் ஒரு கச்சேரி நடப்பது போல ஒரு பாடல் காட்சி இருக்கும்..அதுவும் இந்த கோவிலுக்குள் எடுக்கப்பட்டது தான்...


எப்போது சென்னைஇல் இருந்து ஊருக்கு வந்தாலும் முடிந்தவரை இந்த கோவிலுக்கு செல்வேன்...அந்த அளவுக்கு இந்த கோவிலும்,கோவிலின் அருகில் உள்ள உருளை என்னும் பகுதியும் எனக்கு பிடிக்கும்...
ஏனென்றால் என் உயிர்தோழன் "அங்குராஜேஷ்"உடன் நான் சிந்திய அந்த நொடிகள் இன்னும் என் கண்களில் நிற்கின்றன...அவன் இல்லாத நேரங்களில் எப்போதாவது மனதுக்கு கஷ்டமாக இருந்தால் (அவன் இருந்தால் என் மனது கஷ்டப்பட விட மாட்டான்) நான் தனியாக சென்று இங்கு என்ன என்ன ஆட்டம் போட்டிருப்போம் என நினைத்து சிரிப்பேன்...

பார்ப்பதற்கு அப்பாவி போல் தெரியும் இந்த பெரியமனுஷன்  இப்போது ஈரோடு வெள்ளாளர் பொறியியல் கல்லூரியில் MCA படித்து வருகிறான்...அந்த கல்லூரியில்      பொறியியல் துறை மட்டும் தான் இரு பாலருக்கும்..மற்றபடி வெள்ளாளர்  மகளிர் கலை அறிவியல் கல்லூரி,வெள்ளாளர் மகளிர் மேல்நிலைப்பள்ளி,வெள்ளாளர் மகளிர் பாலிடெக்னிக் என அனைத்து வகையான மகளிர் கல்வி நிறுவனங்களும்  ஒரே வளாகத்தில் உள்ளன... கொடுத்து வச்சவன்டா நீ!!!!!   

 பச்சைமலை முருகன் கோயில்
உங்களுக்கு ஆளு இருக்கா??? தனியா பேசணும்னு நெனசீங்கனா அப்ப தைரியமா  இந்த கோவிலுக்கு வரலாம்...வெள்ளி சனி ஞாயிறு போன்ற நாட்களில் மட்டும் தான் ரஜினி படத்திற்கு வரும் ரசிகர்கள் கூட்டம் போல நிறைந்து இருக்கும்...மற்ற நாட்களில் விஜய் படத்தில் வரும் கூட்டம் போல குறைவா தான் இருக்கும்...(விஜய் சார் இதுக்கெலாம் பீல் பண்ணாதீங்கோ...  நடிக்க முயற்சி பண்ணுங்க...அதுக்கப்புறம் பாத்துக்கலாம்)
அடிப்படையில் கோபி ஓர் விவசாயம் சார்ந்த நகரம்...நெல்கரும்பு,மஞ்சள்,வாழை போன்றவை கோபி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகம் பயிரிடப்படும்...கோபி பகுதியை சுற்றிலும் ஏராளமான சுற்றுலாதலங்கள் உள்ளன...
பாவனி கொடிவேரி அணை,குண்டேரி பள்ளம் ,பாரியூர் கொண்டத்து காளியம்மன் திரு கோயில் , பவழமலை ,பச்சை மலை, முருகன் போன்றவை பிரசித்தி பெற்றவை ஆகும்... மேலும் புகழ் பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் , சந்தன புகழ் வீரப்பன் போன்றவற்றுக்கு புகழ் பெற்ற சத்தியமங்கலம் கோபிக்கு மிகவும் அருகாமையில் உள்ளது...
 
 கொங்கு நாட்டிற்கே உரித்த பாரம்பரிய மிக்க மக்கள் .பழக்க வழக்கத்தில் மிகவும் மரியாதையாக இருப்பார்கள் .மிகவும் அமைதியான நகரம்...இங்கு புகழ் பெற்ற அரசியல் வாதியாக எல்லோராலும் அறியப்பட்ட செங்கோட்டையன் இந்த பகுதியை சேர்ந்தவர்தான்...கொங்கு வெள்ளாள மக்கள் இங்கு பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர் .மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி...இதனால் தான் கோபி "செங்கோட்டையனின் கோட்டை" என அழைக்கப்படுகிறது...
நீங்கள் பார்க்கும் இந்த வயல்வெளி என் பழைய கல்லூரிதொழி ஒருத்தியின் வீட்டிற்கு அருகில் உள்ளது...எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு வாழ்க்கை!!!!!!....

 கொப்பு வாய்க்கால்

கோபியை சுற்றிலும் கொளப்பலூர் ,குருமந்தூர் ,நம்பியூர், அத்தாணி(கள்ளிபட்டி), அளுக்குளி ,கவுந்தபாடி போன்ற ஊர்களும் அமைந்துள்ளன .கல்விக்கு பல பள்ளிகள் ,கல்லூரிகள் கோபியில் உள்ளன .இதன் மூலம் சுற்று வட்டார பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைந்து வருகிறார்கள் . மொத்தம் இங்கு பதிமூன்று பள்ளிகள் (நானும் கோபியில் படித்தவன் தான்)உள்ளன மற்றும் கலை அறிவியல் ,பொறியியல் ,சமயற்கலை போன்றவருக்கு இங்கு கல்லூரிகள் உள்ளன .
நான் படித்த கல்லூரியான கோபி கலை அறிவியல் கல்லூரியும் இங்கு தான் அமைந்துள்ளது...இந்த கல்லூரியின் நூலகம் தான் கோவை பாரதியார் பல்கலைகழகத்தின்    கீழுள்ள கல்லூரி நூலகங்களில்  சிறந்த நூலகம்... ஒரு வேலை நான் வகுப்புக்கு போகாமல் தினமும் இங்கேயே இருந்ததால் இந்த பெயர் வந்திருக்குமோ????
பெரிய மனுஷன்னா சும்மாவா??? LOL :-D

மேலும் என் கல்லூரிக்கு அருகிலேயே  பங்களாபுதூர் க்கு செல்லும் வழியெங்கும் பச்சை பசேலென்று இருக்கும்...நம்பிக்கை இல்லையென்றால் கீழே உள்ள படத்தை பாருங்கள்...
மேலும் பங்களாபுதூர் அருகே மத்தாழக்கொம்பு  என்ற இடம் மிகவும் பிரசித்திபெற்றது...வருடம் முழுதும் நன்னீர் சுரக்கும் ஊற்று உள்ளது...இங்கு ஒரு சிறிய கோவிலும் உண்டு...அப்புறம் கோபினாவே அன்பு பவன் தான்...நகரின் மைய பகுதியில் அமைத்துள்ளது.
மேலும் அன்பு தங்கமாளிகை ,அன்பு சில்க்ஸ்,இந்தியா சில்க்ஸ் ,சங்ககிரி செட்டியார் ஜவுளிகடை போன்றவை இங்கு பிரசிதம்...

இது போக எனது ஆர்கூட்டில் (ORKUT) உள்ள போடோக்களும் பிகாசா (PICASA) போடோக்களும்  இணைத்துள்ளேன்...ஜாலியா ஒரு சுத்து சுத்திட்டு வாங்க...

 ஆர்கூட் புகைப்படங்கள் 
ஆர்க்கூட்டில் இருக்கும் கோபியின் போட்டோக்கள்..

அங்காளம்மன் கோவில் புகைப்படங்கள்
சத்தி அருகே உள்ள ஒரு கோவில்...எங்களின் குலதெய்வ கோவிலும் அதுதான்...    
மத்தாழக்கொம்பு புகைப்படங்கள் 
வருடம்  முழுதும் வற்றாத ஒரு நீரூற்று...  
பாரியூர் புகைப்படங்கள் 
ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்...


===================================================================================

மேலும் வெளியூரில் இருந்து இங்கு வர போக்குவரத்து வசதிகளும் இங்கு உள்ளன.ஈரோடு,கோவை,திருச்சி,கரூர்,திருப்பூர் என அனைத்து ஊர்களிலும் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது...
"கண்டிப்பா எங்க ஊருக்கு வாங்க"... 
இத வேற ஸ்டைல் இல் சொல்லட்டா???

1.ஆஆஹ்ஹ்ஹ்ஹ  அபிராமி!!! அபிராமி!!! கண்டிப்பா ஊருக்கு வாங்க...
- கமல் ஸ்டைல் 
2.கண்ணா!!!!நல்ல காத்து,நல்ல தண்ணி,நல்ல மனுஷங்க எல்லாம் வேணுமா???திரும்பி பாரு அதுதான் அந்த ஊரு கோகோகோகோபி....இந்த ஊரு எப்படி இருக்கு?...
- ரஜினி ஸ்டைல் 

3.கோபி வரணுமா? நீங்க பண்ண வேண்டியதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தாங்க...  சென்னை,பெங்களூர்,ஈரோடு, கோவை, திருச்சி, கரூர், திருப்பூர் இங்க எதாச்சும் ஒரு ஊருல இருக்குற பஸ் ஸ்டான்ட்கு போய் "கோபி" னு போர்ட் போட்டிருக்குற பஸ்ல ஏறிட்டு 97890 97707* ங்குற  நம்பர்க்கு கால் பண்ணுங்க..உங்களுக்கு எந்த ஹெல்ப் வேணும்நாளும் செய்யுறதுக்கு ரெடியா இருக்கேன் நான் உங்க RJ கெளதம்...நீங்க கேட்டுக்கிட்டு   இருக்கிறது ஜெய் FM...Stay Tune !!!!!!
 - FM ஸ்டைல் (சாரி பழகிடுச்சு :) )

 *-நிபந்தைகளுக்கு உட்பட்டது  (அதாவது நான் ஊரில் இருக்கும் போது)

23 comments:

கிரி said...

கெளதம் கோபி பற்றிய பதிவை படிக்கையில் ரொம்ப சந்தோசமா இருக்கு. நானும் கோபி தான்.

பாரியூர், பச்சைமலை, பவழ மலை, என்று ஊர் நினைவு வந்து விட்டது.. என்னமோ போங்க!

//கொங்கு நாட்டிற்கே உரித்த பாரம்பரிய மிக்க மக்கள் .பழக்க வழக்கத்தில் மிகவும் மரியாதையாக இருப்பார்கள் .மிகவும் அமைதியான நகரம்..//

கோபி இதற்க்கு தான் ரொம்ப பெயர் பெற்றது. இதனால் தான் மாற்றல் வாங்கி வருபவர்கள் இங்கேயே தங்கி விடுகிறார்கள்... நானும் கோபி பற்றி சில இடுகைகள் எழுதி இருக்கிறேன்.

கோபி பற்றிய இடுகைக்கு நன்றி

Sheae said...

I am one of those people who lost heart in the green and the slow paced life shown in those movies. I have this dream of coming to India(TN) and visit those places.

Really a wonderful and helpful post. Keep up the good work.

A great deal of information is being recorded in Tamil because of bloggers like you. Really appreciate that.

Sorry for writing in English :)

தாமோதர் சந்துரு said...

அண்ணா எல்லா சரியாத்தா சொன்னீங்க.
ஆனா எங்க மாப்பிளயோட EBEES ஈரோடு பிஸ்கட் பேக்கரியப் பத்தி ஒன்னுமே சொல்லுலிய்யேண்ணா.
அன்புடன்
சந்துரு

சரண் said...

அட்டகாசமானப் படங்கள்..
கோபி.. பாரியூர் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று.. ஒரே ஒரு முறைதான் வந்திருக்கிறேன்.. அந்தப் பயணம் என் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத ஒன்றாகும்..

படங்கள் யாவும் அருமை.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

SRI DHARAN said...

சொர்கமே என்றாலும்........... சூப்பர் பதிவுங்க இது மட்டும் இல்ல இன்னும் ஒரு சிறப்பு பாரியூர் அம்மன் கோவிலில் இருக்கு, அதாவது காந்திஜி, நேருஜி, நேதாஜி இந்த மூணு ஜிகளுக்கும் ஒரே கல்லில் ஆன சிலை ஒரே தூணில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி அமைப்பு உலகத்துலேயே இங்கதான் இருக்கு. இது பலருக்கும் தெரியாது. எல்லாம் சரி கொடிவேரி அணையையும் ஜி கே எஸ் பங்களாவையும் மறந்துட்டீங்களே கெளதம்..

- www.srisathish.blogspot.com

DHANS said...

நாலு வருஷம் சிதூட்டில் இருந்திருந்தாலும் கோபி வந்தது இல்லை, எதனை முறை திட்டம் போட்டிருக்கிறேன் வர முடிந்தது இல்லை, கண்டிப்பாக கூடிய செய்கிறம் ஒரு நாள் வருகிறேன். கொடிவேரி அணை பற்றியும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

எப்போ ஊரில் இருக்கீங்க சொல்லுங்க, எதாவது கெடா வெட்டுனா கூப்பிடுங்க :)

Sangkavi said...

நண்பரே நம்ம கொடிவேரியையும் சேர்த்துக்குங்க....

நானும் கோபியை அனுபவித்தவன்தான்....

கோபியில் இருக்கும்போது வாய்க்காலில் சென்று குளிக்கும் சந்தோசமே தனிதான்....

அப்படியே அந்த Word Verification தூக்கி விடுங்க நண்பரே....

Gowtham the OxygeN said...

//கோபி இதற்க்கு தான் ரொம்ப பெயர் பெற்றது. இதனால் தான் மாற்றல் வாங்கி வருபவர்கள் இங்கேயே தங்கி விடுகிறார்கள்... நானும் கோபி பற்றி சில இடுகைகள் எழுதி இருக்கிறேன்.//

கிரி மிக்க நன்றி...நானும் கண்டிப்பாக உங்கள் இடுக்கைகளை பார்க்கிறேன்...

Gowtham the OxygeN said...

//Sorry for writing in English :)//

Its ok Sheae...we are only maked languages..languages are not making us...

Gowtham the OxygeN said...

//EBEES ஈரோடு பிஸ்கட் பேக்கரியப் பத்தி ஒன்னுமே சொல்லுலிய்யேண்ணா.//


சொல்லிருக்கலாம் சந்துரு...ஆனா அங்க அக்கவுன்ட் வச்சுட்டு ஓடி வந்துட்டேன்..அதான்பா போடல...

LOL :D

Gowtham the OxygeN said...

//அட்டகாசமானப் படங்கள்..
கோபி.. பாரியூர் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று.. ஒரே ஒரு முறைதான் வந்திருக்கிறேன்.. அந்தப் பயணம் என் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத ஒன்றாகும்..

படங்கள் யாவும் அருமை.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..//


நன்றி சரண்..முடிந்தால் மீண்டும் வர முயற்சி செய்யுங்கள்...உங்களுக்காக நான் இருக்கிறேன்...

Gowtham the OxygeN said...

//எப்போ ஊரில் இருக்கீங்க சொல்லுங்க, எதாவது கெடா வெட்டுனா கூப்பிடுங்க :) //
by DHANS


அடப்பாவிகளா இதுல மட்டும் குறியா இருக்கீங்களா??? ஹா ஹா ஹா...சும்மா தான் சொன்னேன்..கண்டிப்பா கூப்பிடுறேன்..முடிஞ்சா கோபி வாங்க எங்கள் நண்பர்கள் இன்னும் அங்கு இருக்காங்க..உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

KarthickAK said...

Good round up.
My native place is close to kurumandhur!

Nostalgic!

Gowtham the OxygeN said...

nice to hear KaethickAK...

☀நான் ஆதவன்☀ said...

அருமையான இடுகை கௌதம் :)

// பாவனி அணை//

பவானி இல்ல?

Gowtham the OxygeN said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் ஆதவன் சார் ....

எம்.விஷ்ணு பிரகாஷ் said...

ebis,கொடிவேரி,மொடச்சூர் சந்தை,எங்க வாய்க்கால் ரோடு ஏரியா,நூங்கு,சீதா கல்யாண மட்டபம்,சைக்கிள்ள கும்பலா டியூசன் போறா பாப்பாக்கள்,etc etc..எல்லாத்தையும் மறந்துட்டிங்களே..

Gowtham the OxygeN said...

பாஸ் கோபி இப்போ ரொம்ப கேட்டு போச்சு...வாய்க்கால் ரோடு ஏரியா வில் அதிகம் வெட்டு குட்டு அடிதடிகள்...அப்புறம் இந்த வலைப்பூ படிக்குற எல்லாரும் என்ன நல்ல பையன் னு நெனச்சுட்டு இருக்காங்க...சீதா கல்யாண மண்டபத்தில் சொந்தக்காரங்கனு போய் சொல்லி கல்யாண வீட்ல சாப்பிட்டு மாட்டிக்கிட்டு கும்மு வாங்கினது,டியூசன் போற பாப்பாக்களை ரோடுல கிண்டல் பண்ணி அந்த பொண்ணுங்களோட மாமன்காரனுங்க கிட்ட அடி வாங்கினதுனு என் மானத்தை நானே வாங்கிக்கணுமா?? :P

Anonymous said...

கட்டுரை மிகவும் அருமை... நானும் கோபி தான்.. உங்கள் எழுத்து என்னோட வைரவிழா பள்ளி மற்றும் கோபி கலை கல்லூரியில் படித்த நாட்களை என்னுள் கொண்டு வந்தது. நன்றி. ஆனால் இப்போதெல்லாம் அந்த இயற்கை அழகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறதை உணர்கிறேன். ஒவ்வொரு முறை கோபி செல்லும் போதும் அது மேலும் மேலும் குறைவதை காண கஷ்டமாக இருக்கிறது... !!!

Gowtham Ece said...

hi da .....
i relay miss da ..........
gobi ...

Gowtham Ece said...

hi da........
i relay miss gobi da......

hema latha said...

Hi Gowtham,
Im Hema/Mano from Gobicheetipalayam. Im Finished my BE.,MBA From Nandha Engineering, Perunthurai.Why gowtham you are didt say about Famous of PKR(Womens) Arts & Scince college and DR Transport?????? It is very famous of gobichettipalayam. And ur missing Thalavadi hills, Timpam hills, Asanoor it is very famous of gobichettipalayam.Any how thanks to said about gobichettipalayam.

Gowtham GA said...

உண்மைய சொல்லணும்னா, உங்க அளவுக்கு எனக்கு தெரியாது... காலேஜ் வரைக்கும் வீட்ல இருந்தவங்க வெளில சுத்தவே விடல... இந்த பதிவை நான் எழுதும் போது, நான் சென்னையில் இருந்தேன்... துணைக்கு கூட நம்ம ஊருக்காரங்க யாரும் இல்லை.. ஏதோ என் அறிவுக்கு எட்டின வரைக்கும் போட்டிருக்கேன்... தவறு இருந்தால் மன்னிக்கவும்.. :)

You may like this