OBAMA (SHORT FILM) - விமர்சனம்


"ஒபாமா" என டைட்டில் வைக்கும் போதே கண்டிப்பாக இந்த குறும்படம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்தேன்... 

படத்தின் துவக்கமே ஒரு பெரிய தொழிலதிபரை கடத்த கதையின் நாயகன் அன்பு மற்றும் பிஜாய் இருவரும் திட்டமிடுகிறார்கள்... அன்பு சொல்வது போலவே பாலோ செய்து கடத்தியும் விடுகிறான் பிஜாய்... 

பிறகு தொழிலதிபர் மனைவிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டி ஒரு பேங்க் அக்கவுண்ட்  நம்பருக்கு ஐந்து கோடி போட சொல்கிறான் அன்பு ...
போலீஸ் அக்கவுன்ட் நம்பரை பார்க்கையில் ஷாக்... அந்த தொழிலதிபரை கடத்திய பிஜாய் அக்கவுன்ட்... அப்போது ஒரு பார்சல் வருகிறது.. அதில் பிஜாய் கடத்திய வீடியோ இருக்கிறது...  

பிஜாயும் ஒரு தொழிலதிபர் என தெரிந்து தான் கடத்த வைக்கிறான் அன்பு... பிறகு பிஜாயை கட்டிப்போட்டு, அவன் கையில் துப்பாக்கியை வைத்து விட்டு... கடத்தப்பட்ட தொழிலதிபர் மீது தண்ணீர் தெளித்துவிட்டு சென்று விடுகிறான் அன்பு... அவன் முழித்து பார்க்கையில் எதிரே பிஜாய் துப்பாக்கியுடன் தூங்குவதை பார்த்து டக்கென்று காலில் இருந்த துப்பாகியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி விடுகின்றான்...  

போலீஸும், தொழில் போட்டியின் காரணமாக சக தொழிலதிபர் கொன்றதாக ஒரு முடிவுக்கு வருகின்றனர்... டிவியில் இந்த செய்தியை பார்த்துகொண்டிருக்கும் ஹீரோ  சிகரெட்டை வாயில் வைக்கிறார் பின் அதை அப்படியே தூக்கிபோட்டு காஸ்ட்லி சிகர்க்கு மாறுகிறார்.. 

அதற்க்கு பிறகே "ஒபாமா" என டைட்டில் வருகிறது... கிட்டத்தட்ட ஈசன் பட ஸ்டைல் தான்... 

இதற்க்கு பிறகு எப்படி இந்த கடத்தல் சாத்தியமானது எப்படி அவன் ஹீரோவிடம் சிக்கினான் இது மீதிக்கதை.. சொல்லபோனால் இந்த முடிச்சுகள் அவிழ்க்கும் காட்சிகள் படத்தின் பலம்... ஆனால் அதுவே படத்தின் பலவீனமாகவும் போய் விட்டது...

படத்தின் 80% காட்சிகள் நிகழ்வாகவும் 20% பிளாஷ்பேக் காட்சிகளாக வர வேண்டிய திரைக்கதை அப்படியே உல்டா ஆகி விட்டது...



இருந்தாலும் எந்த இடத்திலும் உச் கொட்டும் அளவுக்கு இழுவை இல்லாத காட்சிகளாலும் ஒவ்வொரு பாயின்ட் ஆபில் கதை மாறும் போதும் எப்படி சாத்தியம் ஆனது என்பது அழகான திரைக்கதை...

படத்தின் இசையும் படத்தொகுப்பும் மிகப்பெரிய பலம்... ஒளிப்பதிவு ஓகே...

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் வேலையை சரியாக செய்கிறது... சில நொடிகளே வரும் ஒரு கதாபாத்திரம் கூட க்ளைமேக்ஸில் தேவைப்பட்டிருக்கிறது...

பிளாஷ்பேக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் க்ரிஸ்பியாக இருந்திருக்கும்...


கதையில் அன்பு என்ற பெயரில் வரும் பாலா ஹாசனை சுற்றியே முழுக்கதையும் நகர்வதை அறிந்து தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்... டயலாக் டெலிவரி எல்லாம்  அள்ளி வீசுகிறார்... கேமரா கூச்சம் என்றால் என்ன விலை என கேட்கும் அளவுக்கு வெகு இயல்பான நடிப்பு... தன் பாத்திரம் அறிந்து புகை பிடிப்பது, கேட்ட வார்த்தைகள், பஞ்ச் டயலாக் என அப்ளாஸ் அள்ளுகிறார்... "நமக்கு தேவை சிக்ஸர் அத புல் டாஸ் ல அடிக்குறோமா இல்ல யார்கர் ல அடிக்கிறோமாங்கிறது முக்கியமில்ல" இந்த ஒரு வசனத்திலேயே அப்ளாஸ் அடிக்கிறார்...


இயக்கம் விஜயசுந்தர்... தெளிவாக கால அவகாசம் எடுத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்... அதுமட்டும் இன்றி ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்...  சிறு சிறு குறைகளை நீக்கிவிட்டு பார்த்தால் ஒபாமா ஒரு தரமான த்ரில்லர்...

படத்தின் ட்ரைலர்


Comments