என்ன தான் நல்ல கதைக்களம் இருந்தாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வித்தையான மார்க்கெட்டிங் எனும் விளம்பர யுக்தி இல்லாமல் மண்ணை கவ்விய படங்கள் பல உண்டு... அதை பற்றி விரிவாக பேசும் முன் 2011 இல் வெளிவந்த சில முக்கியமான படங்கள் இதோ...
தென்மேற்கு பருவக்காற்று:
2011 இல் தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் படம்...நல்ல கதைக்களம் இருந்தும் ஏதோ சரியான மார்கெட்டிங் யுக்திகளை கையால் எடுக்காததால் வசூல் அளவில் தோல்வி அடைந்த படம்...இன்னும் சொல்ல போனால் இந்த படம் விருது பெற்ற பிறகு தான் இப்படி ஒரு படமே வந்ததாக நண்பர்கள் சொல்லும் போது "என்ன கொடும டா இது" என தோன்றும்...
ஆடுகளம்:
தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவந்த படம். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் பொல்லாதவன் செம ஹிட்.. ஆனால் இந்த படம் ஏனோ எதிர் பார்த்த அளவுக்கு ஓடாமல் போனது... இருந்தும் தனுஷ், வெற்றி மாறன், கிஷோர், ஜெயபாலன் என விருதுகளை அள்ளினார்கள்...
"விருது வாங்கினால் மட்டும் போதுமா கல்லா கட்டலையே"...
காவலன்:
ஏற்கனவே ஓடின அஞ்சும் இழுத்து மூடியதில் இளைய தளபதி செம அப்செட்...
"சுறா" படம் தியேட்டரில் ஓடியதை விட தியேட்டரை விட்டு ஓடியது தான் அதிகம்... இதன் விளைவு சன்னின் கிடுக்கு பிடியில் மாட்டி காவலன் வெளியிட முடியாமல் துவண்டு போனது. இவரும் தந்தையுன் போயஸ் கார்டன் சென்று அம்மாவின் ஆசியுடன் வெளிவந்த படம்...சித்திக் இயக்கத்தில் ஏற்கனவே மலையாளத்தில் கலக்கிய படம் தமிழில் சுப்பர் ஹிட்... இந்த படம் நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஆக்சிஜன்...
சிறுத்தை:
நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு கார்த்தியின் அடுத்த படம்... ஏற்கனவே தெலுங்கில் ஹிட் அடித்த ரவி தேஜாவின் படத்தின் உல்டா... இருந்தும் சந்தானத்தின் காமெடியால் பூஸ்டாகி படம் சக்கை போடு போட்டது...
யுத்தம் செய்:
மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடிப்பில் வெளிவந்த படம்..எப்போதும் அழுத கண்களுடனும் எண்ணெய் வடிந்த முகத்துடனும் இருக்கும் சேரன் இதில் புதிதாக தெரிந்தார்...அவர் மட்டும் அல்ல நடிப்பும் தான்... பெரிய வசூல் என்று சொல்லாவிட்டாலும் ஒரு நல்ல வசூல்....
பயணம்:
மொழி,அபியும் நானும் வரிசையில் ராதா மோகனின் அடுத்த படம்... முக்கியமாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று நம்பி போகும் இயக்குனர்களில் இவரும் ஒருவர்... பாடல்கள் இல்லை... இருந்தும் நல்ல கதைகளம் மற்றும் திரைக்கதை இருந்ததால் ஏதோ ஒரு நல்ல ரிசல்ட் கொடுத்தது...
கோ:
2011 இல் ஒரு பெரிய வசூல் அடித்த படம்...ஜீவா,ராதாவின் மகள் "கார்த்திகா",அஜ்மல் நடிப்பில் அயன் வெற்றிக்கு பிறகு கே.வி.ஆனந்தின் அடுத்த படம்...ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியது தான் இயக்குனரின் புத்திசாலித்தனம்...தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கிலும் நல்ல கலெக்சன்...ஏற்கனவே ஹாரிஸின் பாடல்கள் செம ஹிட்... இருந்தும் அஜ்மலை வில்லனாக்கி பிரகாஷ் ராஜை டம்மியாகிய காமெடி அழகான முழு சோற்று பூசணிக்காய்...இந்த படம் அடைந்த வெற்றியை விட இதன் மேல் சிம்பு கொண்ட கோவம் இன்னும் ஜீவாவுடன் வாய்க்கா தகராறில் உள்ளது...
வானம்:
ஒரு நல்ல மெசேஜ் சொன்ன படம்... சிம்பு,பரத்,அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த ஏற்கனவே தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த "வேதம்" படத்தின் காப்பி...சிம்புவின் "எவண்டி உன்ன பெத்தான்" பாடல் ஹிட் அடித்தும் "கோ"விற்கு நிகரான ஈடு கொடுக்க முடியாமல் கவ்வியது... இருந்தும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒரு நல்ல வசூல்...'கோ" வில் ஒழுங்காக நடிக்காமல் ஹீரோயின் சரியில்லை அத மாத்து இத மாத்து என்று சொன்னதுக்கு கே.வி.ஆனந்த இவரையே மாற்றி விட்டு ஜீவா வை போட, ஜீவாவுக்கு பிடித்தது சனி...இன்னும் விடவில்லை...
அழகர்சாமியின் குதிரை:
நான் மகான் அல்ல காமர்ஷியலுக்கு பிறகு சுசீந்திரனின் அடுத்த படம்... இளையராஜவில் இனிப்பான இசையும் நல்ல கதைக்களமும் இருந்தும் படம் ஏனோ ஓடவில்லை...இந்த படம் கிளவுட் நயனுக்கு பெரிய அடி...
ஆரண்ய காண்டம்:
எந்த படத்தின் பாதிப்பும் இல்லாமல் வெளிவந்த படம்...தியாகராஜா குமாரராஜா வின் இயக்கத்தில், யுவனின் பின்னணி இசையில் படம் அருமை... உலக சினிமா தரத்தில் ஒரு தமிழ்படம் என்றும் கூட இதை சொல்லலாம்...இருந்தும், இந்த படம் நல்லா இருக்கு போய் பாருங்க ன்னு சொல்லி முடிக்கும் முன்னரே தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டது மிகப்பெரும் கொடுமை...
அவன் இவன்:
"நான் கடவுள்" படத்திற்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் யுவனின் இசையில் வெளிவந்த படம்... எப்போதும் பாலாவின் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்...அதில் பத்து சதவிகிதம் கூட இந்த படம் பூர்த்தி செய்யாமல் போனது கொடுமையே... ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்து போன லைலா,சூர்யா கதாபாத்திரம் மீண்டும் மீண்டும் பார்க்க எரிச்சல்... முக்கியமாக ஆர்யாவின் தலைமுடி... இதில் ஒரே ஒரு ஆறுதல் விஷாலின் நடிப்பு... பாலா நன்றாகவே செதுக்கி இருக்கிறார்... இதனால் பீதியான ஆரியா,லிங்குசாமியின் "வேட்டை"யிலும் மாதவனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் "ஒய் திஸ் கோல வெறி" னு சூப் சாங் பாடிக்கிட்டு இருக்கார்...
காஞ்சனா (முனி-2):
இந்த ஆண்டின் ஹிட் லிஸ்ட் இல் மூன்றாம் இடத்தில காஞ்சனா... ராகவா லாரன்சின் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளிவந்த படம்..பெரிதாக சொல்லும் படி இல்லாவிட்டாலும் பேய் கதையை காமெடியாக நகர்த்திய தந்திரத்தில் நன்றாக கல்லா கட்டியது...இந்த படத்தின் இசை தமன் என்று விக்கி பீடியாவில் பார்க்கும் போது தான் தெரியும்... பாடல்கள் அவ்வளவு மொக்கை...