HAPPY MARRIED LIFE (SHORT FILM)- விமர்சனம்


முகநூல் நண்பர்கள் மூலம் கிடைத்த அழைப்பின் பேரில் AVM PREVIEW THEATER இல் சனிக்கிழமை மாலை 3.30அன்று திரையிடப்பட்டது HAPPY MARRIED LIFE எனும் குறும்படம் ...

நாடோடிகள் படத்தில் ஒரு வசனம் "கல்யாணம் ஆன எல்லோருக்கும் முதல் மூணு மாசம் சொர்க்கம் மாதிரி தான் இருக்கும்... அதுக்கப்புறம் ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு விரிசல் வரும் அதையும் தாண்டி யாரு ஒண்ணா இருக்காங்களோ அவங்க தான் உண்மையான தம்பதிகள்... அப்படி இருக்க முடியாதவங்க தான் இப்படி பாதியில அத்துக்கிட்டு அம்மா அப்பா வீட்டுக்கு போய்டுதுங்க..." 
இப்படம் கிட்டத்தட்ட அதை நினைவு படுத்தியது...

கதைக்காக பெரிதாக மெனக்கெடவில்லை... திருமணமான இரு தம்பதிகள் அவர்களுக்குள் சண்டை... நாளாக நாளாக அவர்களுக்குள் விரிசல் அதிகமாகிறது... இறுதியில் சேர்ந்தார்களா என்பது தான் கதை...

கணவனாக சஞ்சய்... சாப்பிட வருவது போல தண்ணீர் குடிக்கும் இடத்திலும், மனைவிக்கு பரிசாக கொடுத்த பொம்மையை உடைக்கும் போதும் கொடுக்கும் எக்ஸ்ப்ரெஷன் அருமை...

மனைவியாக நிஷா.. ஏற்கனவே "அகவிழி" என்னும் குறும்படத்தில் கவனம் ஈர்த்தவர்... இந்த படத்தில் எப்போதும் உர்ர் என்ற முகத்துடன் வர வேண்டிய நிர்பந்தம்...  கணவனை பற்றி தங்கையிடம் கோவிக்கும் போதும், பரிசை எடுக்க வருவது போல கணவனுக்கு பல்ப்பு கொடுக்கும் போதும் கொடுக்கும் ரியாக்சன் ப்ளஸ்...


இந்த படத்தின் ஹைலைட்டே இந்த படத்தின் இசையும் ஒளிப்பதிவும்... 
படம் முழுதும் வரும் தீம் மியூசிக் படத்தின் மிகபெரிய பலம்...

உர்ர்ர் என பேசி விட்டு 'மச்சி எப்படியாச்சும் சேர்த்து வைங்கடா" என புலம்பும் இடத்திலும், என்ன மச்சி நேத்து "ம்ம்மம்ம்ம்ம்???", "உடம்ப பாத்துக்கோங்க" என அப்ளாஸ் அடிக்கும் வசனங்கள்... 

படத்தின் டைட்டில் வொர்க் நன்றாக இருந்தது... 

பிரிவுக்கு பிறகு தான் படத்தின் துவக்கமே... எனவே எதற்காக சண்டை என்பது தெளிவாக விளங்கவில்லை... சும்மா சண்டை போட்டுகிட்டாங்க என்பது போல தான் துவங்குகிறது... அதே போல அவர்கள் சேரும் காட்சி இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்... 

நாயகனின் நண்பனாக கிஷோர் "பிலீவ் மீ டா" என்ற ஒரு வரியிலே அப்ளாஸ் வாங்குகிறார்... ஆனால் அவர் கொடுக்கும் ஐடியா பில்டப்புகள் பெரிதாக சோபிக்கவில்லை... 

இருந்தாலும் காதலை வைத்துக்கொண்டு மொக்கை போடும் குறும்படங்களை எல்லாம் தாண்டி ஒரு நல்ல குறும்படமாக வந்திருக்கிறது... இப்படத்திற்காக உழைத்த இயக்குநர் ஸ்ரீநிவாஸ்க்கும் மற்றும் படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 

விரைவில் YOUTUBE இல் வெளியிடுங்கள்... 

இதோ இந்த படத்தின் ட்ரைலர்...

Comments