The Conjuring விமர்சனம்


  1. வெள்ளை சேலை, தலையில் மல்லிகைப்பூ, கால் இருக்காது இது தான் தமிழ் பேய் ...
  2. மூஞ்சி எல்லாம் வெளுத்து போய் கண்ணு சுத்தி கருப்பா இருந்தா அது சைனீஸ் பேய் ...
  3. மூஞ்சியே பாக்க சகிக்காத அளவுக்கு நாக்கு நாலு இன்ச் வெளில தொங்கிட்டு இருந்தா அது நம்ம COMMON  அமெரிக்கன் பேய்..
இப்படி எல்லாபேய் படங்களையும் பார்த்து போன நமக்கு அவற்றின்  வடிவமைப்பு நன்றாகவே பழக்கப்பட்டிருக்கும்

காட்டுக்கு நடுவில் ஒரு பாழடைந்த வீடு, அதில் ஒரு படிக்கட்டு, ஒரு பெரிய ஆவி, ஒரு குழந்தை ஆவி, நாற்காலி தானாக ஆடுவது, நாய் உள்ளே வர மறுப்பது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

ஆனால் இதே டெம்ப்ளேட் விஷயங்களை வைத்து ஒரு நல்ல படம் கொடுக்க முடியும் என்று சொல்லியிருக்கிறது இந்த படம்... 

எட்  மற்றும் லாரின்  தம்பதியினர் அமானுஷ்யங்கள் பற்றி விசாரணை செய்பவர்கள் ...

அவர்களுக்கு ஒரு கேஸ் ...  வீட்டில் அமானுஷம் இருப்பதாக சந்தேகித்து உதவி கேட்கின்றனர் காரோலின் மற்றும் ரோஜர் தம்பதியினர்... அவர்களுடன் சேர்ந்து அந்த அமானுஷ்யத்தை விரட்டினார்களா என்பதே மீதிக்கதை...

உண்மையில் நடந்த கதை என்று போடும் போதே கொஞ்சம் வேர்க்க ஆரம்பித்து விடுகிறது... 



கதைக்கோ கதைக்களனுக்கோ  பெரிதாக .மெனக்கெடவில்லை.. ஆனால் அந்த கதையை நகர்த்திய விதம் தான் படத்தின் மிகப்பெரும் பலம்...

இயக்கம் ஜேம்ஸ் வான்... SAW, Insidious பார்த்த யாரும் இவரை எளிதில் மறந்து விட மாட்டார்கள்...

படத்தின் மிகப்பெரும் நாயகர்கள் கேமராமேன் John R. Leonetti மற்றும் இசையமைப்பாளர் Joseph Bishara...

கதை 1970 களில் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்ற ஆடை வடிவமைப்பு கணக்கச்சிதம் ...

எடுத்த உடனே திடுதிப்புன்னு பேய் முகத்தை காட்டாமல் ஒவ்வொரு படியாக அவை செய்யும் செயல்களை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு காட்சிகளை கோர்த்துள்ள விதம் அருமை ... 

பல இடங்களில் இசையுடன் விஷுவலும் சேர்ந்து நெஞ்சை உறைய வைக்கிறது ...

உதாரணம்: படிக்கட்டில் பேய் கை தட்டும் காட்சி... காற்றில் ஆடும் துணியில் பேய் உருவம் வரும் காட்சி ...



இப்படி நிறைகள் பல இருந்தாலும் குறைஎன்று பார்த்தால்  எப்படி அவ்வளவு எளிதில் ஒரு பேயை விரட்டி விட முடியும் என்பது தான்... நன்றாக டெம்பை  ஏற்றி விட்டு சப்பென முடிந்து விட்டது போன்ற ஒரு உணர்வு ...

படத்தின் முடிவில் இருந்தே தெரிகிறது அடுத்த பாகம் வரப்போகிறதென்று...

என்ன இருந்தாலும் தவறாமல் ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம்...


The Conjuring - Official Main Trailer [HD]


Comments

Pratheep said…
இந்த படத்தை பார்த்ததே ஜேம்ஸ்வானுக்காக மட்டுமே, ஒரு நல்ல ஹாரர் படத்தை எப்படி தர வேண்டும் என்று அவருக்கு எப்போதுமே தெரியும், இவருடைய முந்தய படம் insidious அளவுக்கு இல்லை என்றாலும் போர் அடிக்காமல் திரைக்கதையை நகர்த்தி சென்றது இவருடைய சிறப்பு. படத்தை ஒரு தரம் பார்க்கலாம். விமர்சனத்துக்கு நன்றி.