Visitors

hit counters

Sunday, May 23, 2010

அவர் ட்ரைலர் - என் கை வண்ணத்தில்

என் நண்பர் செல்வக்குமார் அவர்களின் "அவர்" திரைப்படத்திற்கு ட்ரைலர் உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது...கணினியில் உட்கார்ந்தவுடன் ஆன்டணி, லெனின் ,V.T.விஜயன் என எல்லாரும் உள்ளே ஆதிக்கம் செய்ய துவங்கி கொண்டார்கள்...

கமல் சாரின் "மகாநதி" யில் தொடங்கிய AVID தொழில்நுட்பம் இன்னும் தமிழ் சினிமாவின் கைக்குள் சுழல்கிறது...

கோபி  கலை கல்லூரியில் படிக்கும் போதே ADOBE PREMIERE சாப்ட்வேரை பயன்படுத்தி சினிமா பாடல்களை எடிட் செய்து பார்ப்பேன்...கல்லூரி ஆண்டு விழாக்களிலும் என் எடிட்டிங் புகுந்து விளையாடியது  இன்னொரு கதை...

அது போக ADOBE AFTER EFFECTS இல் வீடியோக்களுக்கு விஷுவல் எபக்ட்ஸ் (VISUAL EFFECTS) செய்து பார்ப்பேன்...

அதற்க்கான இணைப்பு இதோ....

ADOBE PREMIERE இல் துவங்கிய என் சகாப்தம் இன்று இந்த படம் வரை வந்துள்ளது...கிடைத்த வாய்ப்பை விட முடியுமா என்ன???


ஆன்டணி சாரை மனதில் வேண்டிக்கொண்டு கை வைத்தேன்...என் கைவண்ணத்தில் எப்படியோ ட்ரைலர் எடிட்டிங் முடிந்துவிட்டது...இந்த படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் முற்றிலும் டிஜிட்டல்...இதோ  உங்களுக்காக!!!!!
இந்த படத்தில் நடிக்கும் அனைவரும் புது முகங்கள்...ஒரு குடும்பத்தில் நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் தான் கதை...ஆனால் கொலையோ கொள்ளையோ இல்லாத சஸ்பென்ஸ் த்ரில்லர். No Skin show!...எனவே குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் அமர்ந்து இரசிக்கலாம்.மிக முக்கியமான அம்சம் விஷிவல் கம்யுனிகேஷன் படிக்கும் மாணவர்கள் படத்தில் ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட துறைகளில்          பயன்படுத்தப்படுவார்கள்.

இதற்க்கு என்னுடைய எடிட்டிங் ஒரு சிறந்த உதாரணம்...இந்த படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் என்ன அனைத்தும் செல்வக்குமார் அவர்கள்...நல்ல வேலை எடிட்டிங், இசை , கேமரவையாச்சும் விட்டு வைத்துள்ளாரே...
இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் படத்தின் பூஜையே டிஜிட்டல் சினிமா பற்றிய கருத்தரங்குடன்தான் துவங்கியது...அனாவசிய சினிமா அலட்டல்கள் இல்லாத அமைதியான துவக்கம்...இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

மேலும் ,

FACEBOOK இல்,

அவர் பக்கத்தில் இணைய  http://tinyurl.com/AVAR-in-Facebook
 
அவர்  புகைப்படங்கள் - http://tinyurl.com/avar-Launch-photos
அவர்  பாடல் ரெக்கார்டிங் படங்கள் - http://tinyurl.com/AVAR-song-recording

இணையுங்கள் எங்களுடன் ...
உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கபடுகிறது...
மறக்காமல் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள்...

Saturday, May 22, 2010

குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்து, கும்மாளமா? -கவிஞர் தாமரை

  
குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்து, கும்மாளமா?
தடுக்கவேண்டும் தமிழ்த் திரையுலகம்!


குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறி்த்த கதை பழையது.குழியில் போட்டுப்புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது.வருகின்ற ஜுலை 3,4,5 ஆம் தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான்அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களைமொத்தமாகக் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் ஐய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்புக்கு மாற்றியுள்ளனர்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத்திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில்இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ளதமிழனின் இரத்தக்கறையைத் துடைத்து, தன் பாவத்தையும்மறைத்துக்கொள்வதே அது! இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) இந்த விழாவில் வைத்து பல ஆதாய வாசல்களைத் திறக்கவும், இலங்கைச் சந்தையில் விரிவாக வலைவீசவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழர் பகுதிகளில் மறுநிர்மாணம் என்ற பெயரில் கிடைக்கப்போகும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 'கன்ட்ராக்டுகள்'மீது குறி வைத்துள்ளது. புதிய செல்பேசி சந்தைக்காகவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Friday, May 7, 2010

8000 பேரை பலி கொண்ட போபால் கொடுமையும் ராஜீவ் மரணமும்


ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தாயார் 80 ஆவது வயதில் கடும் நோயால் பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வந்தால் ‘விடமாட்டோம்’ என்கிறார்கள். தமிழ்நாடு என்ன, கண்டவர்கள் நுழையும் ‘தர்ம சத்திரமா’ என்று பார்ப்பனத் திமிரோடு கேள்வி கேட்கிறார், சுப்ரமணியசாமி. இந்த எதிர்ப்புகளுக்கு முன் வைக்கப்படும் காரணம் என்ன? ராஜீவ் கொலை!

ஈழ விடுதலைப் போராட்டத்தையே ராணுவத்தால் ஒடுக்கிட அனைத்து உதவிகளையும் செய்தது சோனியா, மன்மோகன் ஆட்சி! காரணம் என்ன சொல்லப்பட்டது? அதே ராஜீவ் சாவுதான்! 19 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த பிறகும் நளினியை விடுதலை செய்யக் கூடாது. அவர் மரணத்தை சந்திக்கும் வரை சிறைக்குள்தான் இருக்க வேண்டும் என்று டெல்லி சோனியா வட்டாரமும், தமிழக போலி கதர்ச்சட்டை ‘கனபாடிகளும்’ கூப்பாடு போடுகிறார்கள். கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. ஆட்சி அதற்கு தண்டனிட்டு பணிந்து போய் கிடக்கிறது. சொல்லப்படும் காரணம் என்ன? ராஜீவ் கொலை செய்யப்பட்டார் என்பதுதான்!

You may like this