Visitors

hit counters

Friday, September 6, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்


எதிர் நீச்சல் கொடுத்த ஓபனிங், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை அதிகம் எதிர்பார்க்க வைத்திருக்கிறது... கூடவே ஊற தாங்கும் பாடலும், ஊதா கலரு ரிப்பன் பாடலும் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிவிட்டிருக்கின்றன... அதன் தாக்கம் இதில் நன்றாகவே தெரிந்தது... மதகதராஜா நாக்கு தள்ளியதில் போட்டி இல்லாமல் தனியாக களம் இறங்கியுள்ளது... 

சூது கவ்வும் படத்திற்கு பிறகு, ஒரு நல்ல முழு நகைச்சுவை திரைப்படமாய் இதை நீங்கள் எதிர்பார்க்கலாம்...

கதையின் துவக்கத்தில் ஒரு சண்டை. அது காவல் நிலையம் போக, அதில் சத்யராஜ் பற்றியும் அவர் மகளை அவரே கௌரவ கொலை செய்துவிட்டதாக ஒருவர் உளறிவிட அதை வைத்து போலீஸ் அவரை கைது செய்கிறது. பிணத்தை மேகமலையில் புதைத்தகாக கூற, அந்த இடத்திற்கு போலீசுடன் சத்யராஜ் செல்லும் போது அங்கே இருந்து நினைவலைகள் (பிளாஸ்பேக்) துவங்குகிறது.


கதைக்களமான சிலுக்குவார்பட்டியில் கிட்டத்தட்ட ஒரு நாட்டமை ஸ்டைலில் வாழ்ந்து வருகிறார் சிவனாண்டி (சத்யராஜ்).. கூடவே நான்கு அல்லக்கைகள்... அவர் தும்மினாலும் அதில் பெருமை பேசும் ஒரு ஜால்ரா கூட்டம்... அதே ஊரில் சண்டித்தனம் செய்துகொண்டு இருக்கிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவனும் கதாநாயகனுமாகிய போஸ்பாண்டி (சிவகார்த்திகேயன்), கூடவே வரும் ஏழரை நண்பனாக கோடி (பரோட்டா சூரி)... 


சத்யராஜ் குடும்பத்தில் முதல் இரண்டு மகளுக்கும் நல்ல சம்பந்தத்துடன்(?!?!?!?) திருமணம் முடிய, மூன்றாம் பெண்ணையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணம் செய்ய நினைக்கும் போது சிவகார்த்திகேயன் கொடுத்த வழக்கால் திருமணம் நிற்கிறது... பிறகென்ன, எதிர்பார்த்தது போலவே கதாநாயகனை லவ்வ துவங்குகிறார் கதையின் நாயகி லதாபாண்டி (ஸ்ரீ திவ்யா)...

இந்த விஷயம் சத்யராஜுக்கு தெரிய வர, உடனே வேறு மாப்பிள்ளையுடன் திருமணதிற்கு ஏற்பாடு செய்கிறார். நடு இரவு இருவரும் தப்பித்து ஓட, அவர்களை தேடி சத்யராஜ் செல்கிறார்... அத்துடன் நினைவலைகள் முடிந்து மேகமலையை அடைகின்றனர்... கதையின் முடிச்சு படத்தின் இறுதியில் தான் அவிழ்கிறது... அது தான் எதிர்ப்பார்க்காத கதையின் திருப்பம்... அதை திரையில் காண்க... 


போஸ் பாண்டியாய் சிவகார்த்திகேயன். நக்கல், நையாண்டி, எடக்கு, முடக்கு, திமிரு, முக்கல், முனகல்  என அனைத்து துறைகளிலும் முதுகலைபட்டம் பெற்ற ஒருவராய் இதில் தெரிகிறார்... அதிலும் அவரும் சூரியும் அடிக்கும் லூட்டிகள் திரையில் சரவெடி... நிறுத்த முடியாத சிரிப்பு... அவர்களுக்குள் கலாய்த்துக்கொள்ளும் இடமாகட்டும், அடுத்தவர்களை கலாய்க்கும் இடத்திலும் காமெடி விசில் பறக்கிறது... அது மட்டும் இல்லாது சிவகார்த்திகேயனிடம் நடிப்பிலும் ஒரு நல்ல தேர்ச்சி தெரிகிறது... 

எதிர் நீச்சல் படத்தில் ஓட்ட பந்தயம் அது இது என சில சிதறல்கள் இருந்தன... இதில் அது போல ஒன்றும் இல்லாத தெளிவான கதைக்களமே அவருக்கு பெரிய வரம்... எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்ய முழுமையான வாய்ப்பு... இது போன்ற கதைக்களத்தில் ஒரு சிக்கல் உள்ளது... ஒன்று படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிடும் இல்லை சூப்பர் பிளாப் ஆக்கிவிடும்... 

இதில் சிவகார்த்திகேயன் முதல் தரம்... கொடுத்த இடங்களையெல்லாம் சூரியுடன் நிரப்பும் நடிப்பும் டைமிங் சென்ஸும் அற்புதம்... 


லதாபாண்டியாக ஸ்ரீ திவ்யா. நடிப்பில் பெரிய ஸ்கோர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அந்த அளவுக்கு பெரிய வாய்ப்பும் இல்லை ஒரு சில இடங்களை தவிர... ஸ்கூல் பெண்ணாக  சுடிதாரை விட, சேலையில் ரொம்ப அழகாய் இருக்கிறார்... (அது மட்டும் ஏன் என்று எனக்கு தெரியவில்லை. எங்கள் கல்லூரியிலும் இதே போல தான் மொக்கை பிகர்கள் கூட சேலையில் நஸ்ரியா ஆகிவிடுவார்கள்)

எப்போதும் கையில் துப்பாகியுடன் வரும் சத்யராஜ், கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்... க்ளைமேக்ஸ் மட்டும் தான் அவருக்கு கொஞ்சம் ஒட்டவில்லை...

இயக்குனர் ராஜேஷின் வசனங்கள் படத்தின் முதுகெலும்பு என்றே சொல்லலாம்... 
 • "உனக்கு ஒரு டீ டிகாஷன் கூடவா இல்லை.
  டேய் அது டெடிகேஷன் டா".
 • "என்னைய விட்டுட்டு போனா கூட பரவால. திருவிழாவுல டெல்லி அப்பளம் விக்கிறவன் மாதிரி இருக்கான் அவனை போய் கட்டிகிட்டாளே"
 • "டேய் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம படி.
  ஆமா, நீ பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணுவ"
 • (காதலில் தோற்ற சோகத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனிடம்)
  "அண்ணே எங்க அக்கா உங்களை பாக்கணுமாம் கூப்பிடறாங்க.
  அப்படியா, உங்க அக்கா பாக்க நல்லா இருப்பாங்களா"
  ஐயோ, நான் சொன்னது லதா அக்கா..

இவை எல்லாம் ஒரு பானை சோற்றின் ஒரு சோறு.

சில இடங்களில் வசனங்கள் சின்க் இல்லை... ஒரு இடத்தில் வசனமே இல்லை (இந்த பொண்ணுங்களே இப்படிதான் பாடலுக்கு முன்)

இமானின் பாடல்கள் ரத்தினங்கள்... ஏற்கனவே சொன்னது போல "ஊற காக்க உண்டான சங்கம்", "ஊதா கலரு ரிப்பன்", "இந்த பொண்ணுங்களே இப்படிதான்", "பாக்காதே பாக்காதே" என படத்தின் 90% பாடல்கள் ஏற்கனவே ஹிட்... படத்தின் வெற்றி மற்றும் நல்ல ஓபனிங் இரண்டிற்கும் இவை முக்கியப்பங்கு...


ஒரு இடத்தில் சத்யராஜின் க்ளோசப் காட்சியும் மாஸ்டர் காட்சியும் செட் ஆகவில்லை (எடிட்டர் கவனத்திற்கு)

சூது கவ்வும் படத்தில் 5 விதிகள் போடுவது போல, இந்த மாதிரி படங்களில் ஒரே விதி "லாஜிக் அறவே கூடாது"... இதை கிண்டலுக்காக சொல்லவில்லை... ஒரு முழுமையான காமெடி கதையில் முழுமையான லாஜிக் எதிர்பார்ப்பது தவறு... அப்படி எதிர்பார்த்தால் அது கதையின் ஓட்டத்தை பாதிக்க கூட காரணமாக அமையலாம்... எனவே லாஜிக்கை அறவே தவிர்த்து விடுங்கள். 

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நடிகர், வந்த புதிதில் மூன்று படங்கள் வரிசையாக ஹிட் ஆக, ஆக்சன் பன்ச் டயலாக் என காரசாரமாக நடிக்க துவங்கினார்... படங்களோ வரிசையாக பிளாப் ஆக துவங்கின... நயன்தாராவுடன் ஒரு படத்தில் காமெடி கலந்த ஒரு நாயகனாய் நடிக்க, படம் நல்ல ஹிட். அதன் பிறகு தான் அவருடைய பாணியை தானே வடிவமைத்துக்கொண்டார். பின்னர் அவரே சிவகார்த்திகேயனை வைத்து "எதிர் நீச்சல்" படத்தை தயாரித்தார்... அவர் நடிகர் "தனுஷ்". 

அதே போல, சிவகார்த்திகேயன் தனது கதைக்களம் பற்றி தெளிவாக அறிந்திருப்பார் என்று நம்புகிறேன்... இனிமேலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடிக்கிறேன் பேர்வழி என்று மொக்கை போட்டுக்கொண்டு இருப்பதை தவிர்த்து, இதே போன்ற கதைகளை தேர்ந்தெடுத்தால் கூடிய விரைவில் சி.எம் ஆகி விடலாம்... ;-)

மொத்தத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், விநாயகரின் ஆசிர்வாதத்துடன் விநாயகர் சதூர்த்தி விடுமுறையில் குடும்பதுடன் பார்க்க வேண்டிய படம்...

Saturday, August 31, 2013

NOW YOU SEE ME விமர்சனம்


அமெரிக்காவில் வெவேறு பகுதிகளில் வாழும் நான்கு திறமையான மேஜிக் கலைஞர்களை  கண்காணிக்கும் ஒருவரிடம் இருந்து அழைப்பு வருகிறது... சரியாக ஒரு வருடம் கழித்து ஒரு லாஸ் வேகாஸில் ஒரு  பெரிய மேஜிக் ஷோ.Arthur Tressler என்னும் இன்சுரன்ஸ் கம்பெனி நிறுவனர் தலைமையில் நான்கு பேரும்  FOUR HORSEMEN என்ற பெயரின் மூலம் அறிமுகமாகி பிரான்சில் உள்ள ஒரு வங்கியை கொள்ளையடிக்கிறார்கள்...  


அந்த கேஸை Dylan Rhodes என்ற FBI அதிகாரி விசாரிக்க, கூடவே இலவச இணைப்பாக Alma Dray என்ற INTERPOL அதிகாரியும் சேர்ந்து அந்த நான்கு பேரை கைது செய்கிறது...  இருந்தாலும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுவிக்கிறது... அடுத்து இதை விட பெருசா பிளான் இருக்கு... முடிஞ்சா தடுத்துபாருங்க ன்னு ஹரி படத்து ஹீரோ மாதிரி பஞ்ச் டயலாக் விடறாங்க நாலு பேரும் ... 


இப்போது அடுத்த ஷோ New Orleans நகரில்... இதில்  Thaddeus Bradley என்னும் மேஜிக் கலைஞர் அவர்கள் மேஜிக் செய்யும் முறையை கண்டறிய முயல்கிறார்... ஆனால் நடந்ததோ வேறு, ட்ரஷர் அக்கவுண்டில் இருந்து 140 மில்லியனை லபக்கி, பார்வையாளர்கள்  அக்கவுண்டில் சேர்க்கிறார்கள்... தமிழ் படங்களில் வருவது போலவே எப்பவும் போல ஹீரோ எஸ்கேப்... போலிஸ் புஸ் ஆகி விடுகிறது...


 இந்த முறையும் பிடிக்க முடியாத கடுப்பில் FBI அதிகாரி இருக்கும் போது தான் அவருக்கு தெரிகிறது அவர் போன் டேப் செய்யப்படுவது... அதை வைத்து நியுயார்க் நகரில் உள்ள அவர்களின் முகவரியை கண்டுபிடித்து கைது செய்ய முற்படுகையில் மூவர் தப்பி விட, ஒருவர் மட்டும் கார் விபத்தில் இறக்கிறார்...
அப்போது ஒரு ஆவணம் சிக்க, அதை வைத்து திருட இருந்த கஜானாவை மீட்கிறார்கள்.

கார் விபத்தில் இறந்த நண்பனுக்கு YOUTUBE இல் இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு அவர்களின் கடைசி ஷோவுக்கான நேரத்தையும் அறிவிக்கிறார்கள்... ஒரு பக்கம் ஷோ நடந்து கொண்டு இருக்கும் போது தான் தெரிகிறது பிடித்த வண்டியில் ஒரு பைசா கூட இல்லை என்று, அடித்த பணத்தை அழகாய்  Thaddeus Bradley காரில் வைத்து அவரை மாட்டி விட்டுகிறார்கள் 4  HORSEMEN ...


உண்மையில் எதற்க்காக இப்படி அவர்கள் திருட வேண்டும்,  Thaddeus Bradley ஐ ஏன் அவர்கள் மாட்டி விட வேண்டும், Arthur Tressler உடைய கல்லாவை எதற்கு காலி செய்ய வேண்டும், இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்தவன் யார்? ஒரே பதில். "படத்தில் காண்க"

முக்கியமான கதாப்பதிரங்கள்:

FBI AGENT ஆக வரும் மார்க் ரூபலோ (Mark Ruffalo), FOUR HORSEMEN ஐ பிடிக்க அவர் கண்ணில் இருக்கும் வெறி, கிட்டத்தட்ட அவர் முன்னே நடித்த ஹல்க் (HULK) ஐ நினைவு படுத்துகிறது...

INSURANCE கம்பெனி நடத்தி, தனக்கே இன்சூர் பண்ணிக்கொள்ளாமல் பணத்தை இழந்து தவிக்கும்  ஆர்தர் ட்ரெஷர் பாத்திரத்தில் வந்த மைக்கேல் கேன் (Michael Caine)

அடுத்த மேஜிக் நிபுணர்களின் ரகசியங்களை வெளியிட்டு, கடைசியில் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட Thaddeus Bradley கதாப்பாத்திரத்தில் மோர்கன் ப்ரீமேன் (Morgan Freeman)

படத்தில் முக்கிய அம்சங்கள்.
 • கதாபாத்திரங்கள் - இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. தெலுங்கு ஹீரோயின் போல தேவை இல்லாத சேர்ப்புகள் ஒன்று கூட இல்லை... அதே போல, நான்கு மேஜிக் கலைகர்களுக்கான அறிமுக காட்சிகள் பிரமாதம்...
 • கதாபாத்திரங்களின் கோர்ப்பு...
 • வேகமாய் அமைத்த திரைக்கதை... டக் டக் என நகரும் திரைக்கதையில் பல ஒட்டைகள் சட்டென தெரியவில்லை...
 • வேகமான கேமரா மற்றும் நறுக்கென்ற படத்தொகுப்பு 
 • வேகத்திற்கு தகுந்தார் போல, பொருந்தக்கூடிய பின்னணி இசை. (முக்கியமாக மேஜிக் ஷோ நடக்கும் போது சேரும் பின்னணி இசை)
 • CG காட்சிகளில் உழைப்பு நன்றாக தெரிகிறது.
 • வசனங்கள்
மற்ற ட்விஸ்ட்கள் கூட பரவாயில்லை, யார் அந்த ஐந்தாம் நபர் என்பது தான் மிகப்பெரிய ஷாக். (அதை சொன்னால் காரம் குறைந்துவிடும் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்)

படத்தின் ட்ரைலர் மற்றும் படமாக்கிய விதம்.Tuesday, August 20, 2013

The Stoning of Soraya M விமர்சனம்


1990, Freidoune Sahebjam என்ற நாவலாசிரியர் சாலையில் செல்லும் போது வண்டி பழுதாக, அருகில் உள்ள குஹ்பேயா என்னும் கிராமத்திற்குள் ரிப்பேர் செய்ய வருகிறார்... அங்கே சாரா என்ற பெண் அவரை சந்தித்து  நேற்று நடந்த விஷயத்தை சொல்கிறாள்.. அதை தனது டேப்பில் பதிய துவங்குகிறார்...

அங்கிருந்து சொராயாவின் கதை துவங்குகிறது...

சொராயா சாராவின் நல்ல தோழி,  அலி என்பவரின் மனைவி, இரண்டு குழந்தைக்கு தாய்...

அலி ஒரு 14 வயது பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறான்... எனவே சொராயாவை விவாகரத்து செய்ய முற்படுகையில், "வீணான பிரச்னை வேண்டாம் சொராயாவை ஒரு பக்கம் வைத்துக்கொள்... இன்னொரு பக்கம் அந்த பெண்ணை கட்டிக்கோ... இல்லன்னா, அவளுக்கும் அவளின் குழந்தைக்கும் நீ ஜீவனாம்சம் கொடுக்கணும்... " ன்னு ஐடியா கொடுத்து சொராயாவை பணிய வைக்க முற்படுகையில் அவளோ கண்டபடி திட்டி அனுப்பி விடுகிறாள்...

அதே நேரம், அவர்கள் ஊரில் ஒரு பெண் இறக்க அந்த குழந்தைகளை தான் பார்த்துக்கொள்வதாக சொராயா முற்பட இதை வைத்து அவள் மீது பொய்யான வழக்கு ஜோடிக்கப்படுகிறது ...அதாவது அந்த குழந்தைகளின் தந்தை மீது தவறான முறையில் நடந்து கொண்டதற்காக அவளை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர்...அவளின் சொந்த பிள்ளைகள் உட்பட எல்லா சாட்சிகளும் அவளுக்கு எதிராக அமைய, அவள் மீது கல் எறியப்படுகிறது... 

இத்தனையும் கேட்ட அந்த  எழுத்தாளன் டேப்புடன் தப்பி செல்ல, ஊர் தலைவன் தடுக்க,  தந்திரமாக தப்பித்து செல்கிறான்...

பின் இதை  La Femme Lapidée என்ற பிரெஞ்ச் நூலின் மூலம் உலகறிய செய்தார்...

இந்த கதையே The Stoning of Soraya M என்ற பெயரில் 2008 இல் வெளிவந்தது....

இந்த படத்தில் மிக முக்கியமானது சொராயாவாக நடித்த Mozhan Marnò இன் நடிப்பும், சாராவாக நடித்த Shohreh Aghdashloo இன் நடிப்பும்... அதிலும் தான் சாகப்போகிறோம் என தெரிந்த பின்னும், கல்லடிக்கும் காட்சிகளில் சொராயா காட்டும் முகபாவங்கள் அருமை...

தவறு செய்யாத மனிதன் எவனும் இல்லை.. அதற்காக இப்படி ஒரு கொடிய தண்டனை தேவையா? இது தான் இந்த படத்தன் கேள்வி...

Monday, August 12, 2013

The Conjuring விமர்சனம்


 1. வெள்ளை சேலை, தலையில் மல்லிகைப்பூ, கால் இருக்காது இது தான் தமிழ் பேய் ...
 2. மூஞ்சி எல்லாம் வெளுத்து போய் கண்ணு சுத்தி கருப்பா இருந்தா அது சைனீஸ் பேய் ...
 3. மூஞ்சியே பாக்க சகிக்காத அளவுக்கு நாக்கு நாலு இன்ச் வெளில தொங்கிட்டு இருந்தா அது நம்ம COMMON  அமெரிக்கன் பேய்..
இப்படி எல்லாபேய் படங்களையும் பார்த்து போன நமக்கு அவற்றின்  வடிவமைப்பு நன்றாகவே பழக்கப்பட்டிருக்கும்

காட்டுக்கு நடுவில் ஒரு பாழடைந்த வீடு, அதில் ஒரு படிக்கட்டு, ஒரு பெரிய ஆவி, ஒரு குழந்தை ஆவி, நாற்காலி தானாக ஆடுவது, நாய் உள்ளே வர மறுப்பது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

ஆனால் இதே டெம்ப்ளேட் விஷயங்களை வைத்து ஒரு நல்ல படம் கொடுக்க முடியும் என்று சொல்லியிருக்கிறது இந்த படம்... 

எட்  மற்றும் லாரின்  தம்பதியினர் அமானுஷ்யங்கள் பற்றி விசாரணை செய்பவர்கள் ...

அவர்களுக்கு ஒரு கேஸ் ...  வீட்டில் அமானுஷம் இருப்பதாக சந்தேகித்து உதவி கேட்கின்றனர் காரோலின் மற்றும் ரோஜர் தம்பதியினர்... அவர்களுடன் சேர்ந்து அந்த அமானுஷ்யத்தை விரட்டினார்களா என்பதே மீதிக்கதை...

உண்மையில் நடந்த கதை என்று போடும் போதே கொஞ்சம் வேர்க்க ஆரம்பித்து விடுகிறது... கதைக்கோ கதைக்களனுக்கோ  பெரிதாக .மெனக்கெடவில்லை.. ஆனால் அந்த கதையை நகர்த்திய விதம் தான் படத்தின் மிகப்பெரும் பலம்...

இயக்கம் ஜேம்ஸ் வான்... SAW, Insidious பார்த்த யாரும் இவரை எளிதில் மறந்து விட மாட்டார்கள்...

படத்தின் மிகப்பெரும் நாயகர்கள் கேமராமேன் John R. Leonetti மற்றும் இசையமைப்பாளர் Joseph Bishara...

கதை 1970 களில் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்ற ஆடை வடிவமைப்பு கணக்கச்சிதம் ...

எடுத்த உடனே திடுதிப்புன்னு பேய் முகத்தை காட்டாமல் ஒவ்வொரு படியாக அவை செய்யும் செயல்களை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு காட்சிகளை கோர்த்துள்ள விதம் அருமை ... 

பல இடங்களில் இசையுடன் விஷுவலும் சேர்ந்து நெஞ்சை உறைய வைக்கிறது ...

உதாரணம்: படிக்கட்டில் பேய் கை தட்டும் காட்சி... காற்றில் ஆடும் துணியில் பேய் உருவம் வரும் காட்சி ...இப்படி நிறைகள் பல இருந்தாலும் குறைஎன்று பார்த்தால்  எப்படி அவ்வளவு எளிதில் ஒரு பேயை விரட்டி விட முடியும் என்பது தான்... நன்றாக டெம்பை  ஏற்றி விட்டு சப்பென முடிந்து விட்டது போன்ற ஒரு உணர்வு ...

படத்தின் முடிவில் இருந்தே தெரிகிறது அடுத்த பாகம் வரப்போகிறதென்று...

என்ன இருந்தாலும் தவறாமல் ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம்...


The Conjuring - Official Main Trailer [HD]


Wednesday, May 8, 2013

எதிர்நீச்சல் - விமர்சனம்"உன் பெயரில் ஒன்றும் இல்லை... உன் திறமை மட்டுமே உன்னை முன்னிலைப்படுத்தும்"   என்னும் கருத்தையும், இந்திய விளையாட்டுத்துறையில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்களை களைய வேண்டும் என்றும் சொல்கிறது எதிர் நீச்சல்...

படத்தின் பெயர் கதைக்கு மட்டும் அல்ல... சிவகார்த்திகேயனுக்கும் பொருந்தும்.... விஜய் டிவியில்  அறிமுகமாகி, மேடை விழாக்கள் மூலம் பிரபலம் அடைந்து இன்று கதாநாயகனாக எதிர் நீச்சல் போட்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்...


அதாகப்பட்டது கதையின் நாயகன் சிவ கார்த்திகேயன் தனது "குஞ்சிதபாதம்" என்ற பெயரால் சமூகம் அவனை வித்தியாசமாக பார்க்க, தன் பெயரை "ஹரிஷ்" என மாற்றிக்கொள்கிறார்... அதன் பின் பிரியா ஆனந்தின் அறிமுகம் காதல் என நகர... மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது .... சென்னை மராத்தான் போஸ்டரை பார்த்துவிட்டு தன்னை நிரூபிக்க, சிறுவயது அத்லெடிக் திறமையை தூசி தட்டுகிறார்... பண பலத்தால் ஒடுக்கப்பட்ட வீராங்கனை நந்திதாவின் நட்பின் மூலம் போட்டியில் வென்றாரா, என்பது மீதிக்கதை...

இயக்கம் R.S. துரை செந்தில்குமார்...

ஒரு சீனில் முன் செல்பவன் மீது ஒருவன் ஸ்பெரே அடிக்க, அவன்  சிவ கார்த்திகேயன் மீது விழ, அவர் கையில் இருந்த பாட்டில் கீழே விழும்... அந்த நேரத்தில் ஒரு உகாண்டா இளைஞன் பாதி குடித்து மீதி கொடுத்து உதவும்   இடம் கியூட் ...எந்த இடத்திலும் ஹீரோயிசம் கட்டாத, சிவகார்த்திகேயனின் நடிப்பு பட்டாசு...

யாராவது "குஞ்சு" என அழைக்க வாடி வதங்கும்  போதும், காதல். காமெடி என அனைத்து இடங்களையும் தன்னால் முடிந்த வரை நிரப்பியுள்ளார்...

அங்கங்கே இருக்கும் குட்டி குட்டி ஜோக்குகள், படத்தின் மிகப்பெரிய பலம்... அதுவே படத்தின் முதல் பாதி வரை நம்மை கட்டி வைக்கிறது...

நாயகியாக ப்ரியா ஆனந்த்... வாமணன், 180 படங்களை விட இதில் இன்னும் சற்று மெருகேறியிருக்கிறார்... நடிப்பில் அல்ல, அழகில்... :)

மற்ற படத்தை போல, நாயகனுக்கு ஒரு காமெடி பீஸ் நண்பன் தேவை அல்லவா, எனவே நண்பனாக மெரினாவில் வந்த சதீஷ்...


படம் சொல்ல வரும் கருத்து உண்மையில் வரவேற்க வேண்டிய விஷயம் தான்... ஆனால், அதை நோக்கி கதை பயணப்படாதது தான் சற்று வருத்தம்... தொடக்கத்தில் பெயர் பிரச்சனை, காதல், காமெடி என நகர்வதும் காதல் மூலமே தடகளம் என்பதும்... அதை வைத்து பின் பாதி  சீரியசாக அமைவதும், சினிமாவுக்கு சரியானது என்றாலும், கதைக்குள் ஒன்றாமல் போய் விடுகிறது... நாயகன் ஒரு இடத்தில வேலைக்கு செல்கிறார்... பின், திடீரென தடகள முயற்சி, புவ்வாவுக்கு என்ன செய்கிறார்??? நாமே யூகித்துக்கொள்ள வேண்டும் போல???

பின் பாதியில் நந்திதாவின் STD ஐ அவ்வளவு இழுத்து காட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை... மாண்டேஜ் காட்சிகளாக கூட காட்டியிருக்கலாம்... தேவை இல்லாத இழுவை... நந்திதாவின் கதை சொல்லி முடிக்க, அதன் தாக்கம் குறையும் முன்னே கதை டக்கென மீண்டும் சிவ கார்த்திகேயன் மீது நகர்வது எரிச்சல்...


"மின் வெட்டு நாளில் " பாடல் ஒளிப்பதிவில் மட்டுமே வேல்ராஜ் தெரிகிறார்.. என்ன ஆச்சு சாரே???

இசை அனிருத்... எல்லா பாடல்களும் சூப்பர் ரகம் ... "சத்தியமா நீ எனக்கு "
பாடலில்  ஒயின் ஷாப் சீனில் ஸ்மார்ட் போனில் சரக்கு ஆடர் எடுத்துவிட்டு போகிறார்... இதே மாதிரி சீக்கிரம் நெறைய படம் ஆடர் எடுங்க அனிரூத் ...

தயாரிப்பு தனுஷ்... அது மட்டும் அல்லாது, ஒரு பாடலுக்கு நயன்தாராவுடன் குத்தாட்டம்  ஆடிவிட்டு போகிறார்... சிவகார்த்திகேயன், இயக்குனர் துரை செந்தில்குமார், பிரியா ஆனந்த் ஆகியோருக்கு இது முக்கியமான படமாக மாற்றிக்கொடுத்த பெருமை நம் தனுஷையே சேரும்...

கிஷோரின் படத்தொகுப்பு ஓகே ரகம்...

முதல் பாதி காமெடி, பின் பாதி சீரியஸ் ஆக கதை நகர்ந்தாலும் பெரிதாக முகம் சுளிக்கும் காட்சிகள் எதுவும் இல்லாதது தான் இந்த படத்திற்கு இன்னொரு ப்ளஸ்...

மொத்தத்தில் எதிர் நீச்சல்,
"தைரியமா நீச்சல் அடிக்கலாம் டிக்கெட் வாங்க..."

Wednesday, May 1, 2013

சூது கவ்வும் - விமர்சனம்

ஒண்ணா காதல் காதல் காதல் (VTV, NPV)... இல்லைனா ரத்தம் ரத்தம் ரத்தம் (பரதேசி) ... இப்படி ஒரே ஜெனரில் படம் வந்து பாடாய் படுத்தி தொலைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் புது விதமாய் ஒரு ட்ரெண்டை உருவாக்கியது இந்த நாளைய இயக்குனர்களின் படங்கள்....

மைனா வுக்கு பிறகு ஒரு நல்ல படம் வெளி வந்தது சி.வி. குமாரின் மூலமே...
(ஸ்டுடியோ க்ரீன் ஞான வேல் ராஜாவுக்கும் அதில் பங்கு உண்டு)

கிடைத்த முதல் வாய்ப்பை வைத்து முதல் படத்தில் வாகை சூடிய இந்த அணி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்திற்கு பிறகு மூன்றாவது படைப்பை களம் இறக்கியுள்ளது..
பெண்ணால் வேலை இழந்த ஒருவன், நயன்தாரா வுக்கு கோவில் கட்டி சென்னை வந்த ஒருவன், ஜாகுவார் காரை ஓட்டி டங்குவாரு போன ஒருவன், இப்படி மூன்று பேரும் ஒரு சண்டையில், விஜய் சேதுபதியிடம் அணி சேர அவர்களின் பாதை மாறுகிறது... ஆள்கடத்தல் செய்ய, அதில் ஒரு டீல்... அமைச்சர் மகனை கடத்த சொல்லி... பின்னர் என்ன ஆகிறது... வெள்ளி திரையில் காண்க...

நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம் க்கு பிறகு, ஒரு சீரியசான காமெடி படம், சிரிக்க வைக்க வேண்டும் என்று வேண்டுமென்ற திணித்த வசங்கள் என்று ஏதும் இல்லை ... கதை சீரியசாகவே நகர்கிறது ஆனால் அங்காங்கே இருக்கும் குட்டி குட்டி விஷயங்கள் தான், அந்த வெற்றிடத்தை அழகாய் நிரப்புகிறது.... நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது...

உதாரணம்:
 • மந்திரி மகனை போலீஸ் உடையில் கடத்த முற்படும் பொது, ரவுடி கும்பல் அவர்கள் முன் வரும்... மீசையை முறுக்கி அவர்களை முறைப்பார்  விஜய் சேதுபதி.. போலீஸ் என்று பயந்து அவர்கள் பின்செல்ல, அவர்கள் வண்டி தெரு முனைக்கு சென்றதும் அரக்க பறக்க பயந்து வண்டிக்குள் ஏறும் காட்சி... அதில் விஜய் சேதுபதியின் பாடி லாங்குசெஜ் செம தூள்...
 • கடத்திய பிறகு அமைச்சருக்கு போன் போட்டு, உங்க பையன கடத்திட்டோம்.. நாளைக்கு சன்டே... நாங்க வேலை செய்ய மாட்டோம்... திங்கள் வந்து காசு வாங்கிக்குறோம் ன்னு சொல்லும் காட்சி...
இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்...


விஜய் செதுபதி வரும் வரை வெறும் அறிமுக காட்சிகளாக இருந்த காட்சிகள் வெறிகொண்டு வேகம் கொள்கிறது... கூடவே சீரியசான காமேடி லைன்கள்...

அதிலும் அவர் சொல்லும் 5 கடத்தல் கொள்கைகள் சூப்பர்... வசனம், நடிப்பு, பாடி லேங்குவேஜ் என அனைத்தும் நிறைவு செய்திருக்கிறார்...

கலை எட்டு மணிக்கு அலாரம் வைத்து சரக்கடிக்கும் ரமேஷ், "என்ன கைய புடிச்சு இழுத்தியா" ன்னு கேள்வி கேட்டு வேலையை விட்ட சாப்ட்வேர் இளைஞர்... நயன்தாரா வுக்கு கோவில் கட்டிய சிம்ஹா, விஜய் சேதுபதி அண்ணனாக வரும் டாக்டர், அமைச்சர் மகனாக வரும் கருணா, கடத்த சொல்லும் நம்பிக்கை கண்ணன், சில்லறை இல்லை ன்னு சொன்னதால் கோவத்துடன் அலையும் இளைஞன் இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் தேவைக்கேற்ற நிறைவு...

தினேஷின் ஒளிப்பதிவு சிக்ஸ்சர் , லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு ஓகே ராகம்...

சந்தோஷ் நாராயணன் இசையில் காசு பணம், கம்னா கம் ஹிட் ரகம் ... ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு விதம்...  பின்னணி இசையும் அருமை...

இயக்கம் நலன் குமரசாமி... "நடந்தது என்னன்னா" இந்த குறும்படத்தை பார்த்தவர்கள் கண்டிப்பாக இவரை மறக்க மாட்டார்கள்...  ஒவ்வொரு சீனிலும் இவரின் உழைப்பு தெரிகிறது...


படத்தின் முதற்பாதியில் விஜய் சேதுபதி, இல்லாத ஒரு பெண்ணிடம் பேசுவது போல எதற்கு காட்டப்பட வேண்டும்... க்ளைமாக்ஸ் காட்சிக்காகவா??

இடைவேளை வரை நன்றாக போய்க்கொண்டு இருந்த பாதை, போலீஸ் வந்தவுடன் அவர் POINT OF VIEW இல் அதிக காட்சிகள், பில்ட் அப் வைத்தது படத்திற்கு அவ்வளவு தேவை இல்லை... என்ன தான் டெரர் ன்னு காட்டினாலும் இறுதியில் விஜய் சேதுபதி அண்ட் கோ தான் ஜெய்க்கும் என்று முன்னரே நாம் எளிதாக யூகிக்கலாம்...குறைகள் வெகு சிலவே இருந்தாலும் ஒரு முழுமையான காமெடி சரவெடி...
சரக்கடிக்கும் காட்சிகள் சற்று குறைந்தால் குடும்பத்துடன் பார்க்க சற்று ஏதுவாக இருக்கும்...

மொத்தத்தில் சூது கவ்வும் - செம்ம்ம கவ்வு...

படத்தில் பிடித்த வசனங்கள்:
 1. ஜாகுவார் வண்டி ஒட்டி கொஞ்ச தூரம் போனேன்...
  ஹோட்டல் க்கு உள்ளே தானே ???
  இல்லை... ஹோட்டல விட்டு வெளில ஒரு நூறு மீட்டர் போயிருப்பேன்... அடி பிண்ணிட்டாங்க...
 2. நீங்க பேப்பரே படிக்க மாட்டீங்களா... ????
  மாட்டேன்.. தேதி மாத்தி ஒரே செய்தி போடுறாங்க...
 3. சார்.. சார். பதட்டப்படாதீங்க... (போனை கொடுத்து) இந்தாம்மா உங்க அப்பாவுக்கு ஆறுதல் சொல்லு...
 4. ராதா ரவி: இத்தனை நாள் எப்படி உங்க அப்பாவை எமாத்தினியோ அதே மாதிரி தான்.. உங்க அப்பாவுக்கு பதில் மக்கள்.. அவ்ளோ தான் அரசியல்...
 5. ராதா ரவி: அட... என்னமா தலை ஆட்டுறான் இந்த ஒரு தகுதி போதும் அமைச்சர் ஆகறதுக்கு...
 6. இவன கடத்த ப்ளான் லாம் வேணாம் ஒரு டி கடை போட்டா போதும்...
 7. ஏமாத்தறது ஈசி... அதுக்கு குருட்டுத்தனமான முட்டாள்தனமும், புத்திசாலித்தனமான முரட்டுத்தனமும் வேணும்...
 8. அய்யயோ...
  என்னடா???
  மணி 9.50.. பத்து மணிக்கு டாஸ்மாக் சாத்திருவான்...
 9. அந்த கார் நம்ம பின்னாடி வருது...
  இல்லை.. நாம தான் அதுக்கு முன்னாடி போயிட்டு இருக்கோம்...
 10. நான் கத்த மாட்டேன்... ப்ளீஸ் கர்சீப்பை எடுங்க... நாத்தம் தாங்க முடியல...
டிஜிட்டல் விளைவால், நானும் படம் எடுக்குறேன் என்று தலைவலியாய் வந்து கொண்டிருக்கும் படங்களுக்கு நடுவில் இந்த மாதிரியான படங்கள் கண்டிப்பாக அதிகம் வர வேண்டும்...

Monday, April 22, 2013

உதயம் NH4 - விமர்சனம்

(சில காலங்களாக எழுத முடியாமல் போனது சற்று வருத்தமே...  மீண்டும் எனது உதயம் இந்த உதயத்துடன் துவங்குகிறது )உதயம் NH4 

(பொல்லாதவனுக்கு முன்னால் எழுதிய வெற்றி மாறனின் கதை...)

வெற்றி மாறனின் கதை திரைக்கதையில்,
வேல்ராஜின் ஒளிப்பதிவில்,
ஜி.வி. பிரகாஷ் இசையில்,
கிஷோர் படத்தொகுப்பில்

"ஆடுகளம்" படத்திற்கு பிறகு ஒரு படம் வெளிவரும் போது ஒருவித  எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது... அதை பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்...

சரி கதைக்கு வருவோம்.

கதையின் தொடக்கத்திலேயே ஒரு பெண்ணை கடத்துகிறார்கள் சித்தார்த் அண்ட் கோ ... பெண்ணின் அப்பா, தன் பெண்ணை கண்டுபிடிச்சு கொடுக்க ஒரு பெரிய என்கவுண்டர் ஏகாம்பரத்தை அணுக, அவர் தேடும் போது தான் தெரிகிறது இது கடத்தல் இல்லை, காதல் ஓட்டம் என்று... பின்னர் என்ன நடந்தது.. காதல் வென்றதா, புல்லட் வென்றதா??? இது தான் கதை.... • நாயகனாக சித்தார்த், நாயகி அஷ்ரிதா ஷெட்டி...
 • அடுத்த போலீஸ் கதாபாத்திரத்தில் கே.கே. மேனன்... (நல்ல வரவு)
நிறைகள்:
 • ஏற்கனவே தொலைக்காட்சியில் ஹிட் அடித்த "யாரோ இவன்" பாடல் தான் என்னை திரைக்கு செல்ல உந்தியது...
 • பாடல்கள் என பார்த்தால் இரண்டு ஓகே... "யாரோ இவன்", "ஓரக்கண்ணால்"
 • படத்தின் மிகப்பெரிய பலம் வேல்ராஜின் ஒளிப்பதிவு... சாலைகள், முக்கியமாக இரவு பப்களை கேமிராவில் செதுக்கிய விதம் அருமை...
 • கதாபாத்திர தேர்வு... சைபர் க்ரைம் ஆபிசர்.... முக்கியமாக சித்தார்த் நண்பர்களாக வருபவர்கள் ... அதில் ஒருவரை "குளிர் 100 டிகிரி", "காதல் சொல்ல வந்தேன்" படங்களில் பார்த்த நினைவு...  அவர்களை வைத்து அடிக்கும் லூட்டிகள் கியூட்... முக்கியமாக இரவில் நாயகி வீட்டில் சென்று மாட்டும் இடம்...
 • மணி மாறனின் இயக்கம்.. பல இடங்களில் வெற்றி மாறனின் தாக்கம்... (முக்கியமாக போலீஸ் விசாரிக்கும் சீன்கள்)
குறைகள்:
 • பலவீனம் ஜி.வி யின் பின்னணி இசை... சில இடங்களில் செட் ஆகாத பின்னணி இசை... (RED CLIFF மியுசிக் லாம் தமிழ் க்கு எதுக்கு???)
 • "யாரோ இவன்" பாடல் கேட்கும் பொது "என் கண்மணி" பாடலை நினைவூட்டுகிறது... 

 • படத்தின் துவக்கத்தில் நான் லீனியரில் செல்லும் வேகம் பிடித்த திரைக்கதை இடைவேளைக்கு பிறகு கட்டிபோட்ட குதிரை ஆனது சோகத்திலும் சோகம்...
 • க்ளைமாக்ஸ் சீனில் இவளுக்கு 18 ஆயிடுச்சு... அதனால, கைது பண்ண முடியாது  நு சொல்றதெல்லாம் உச்சகட்ட காமெடி...
 • படத்தின் மிகப்பெரிய லாஜிக் ஓட்டையே 18  வயசு தான்... காலேஜ்  படிக்குற பொண்ணுக்கு எப்படி 18 ஆகாம இருக்க முடியும்???
 • போலீஸ் மேனன் க்கு அப்பப்ப வரும் மனைவியின் போன் உரையாடலை வைத்தே க்ளைமாக்சை எவரும் யூகிக்க முடியும்... இவர் எப்படியும் விட்டு விடுவார் என்று...
 • பெங்களூரை கதைக்களமாக வைக்க வேண்டிய அவசியம் என்ன?
 • இப்படி மேலும் பட்டியல் நீளும்... இது ஒரு வேளை, வெற்றி மாறனின் பட்டறையாக  இல்லாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்வோமா என்றால் அதன் வாய்ப்பு மிக குறைவு...


வெற்றி மாறனின் முந்தைய படங்களின் தாக்கங்கள் தான் இதன் முக்கிய காரணம்... போல்லாதவனுக்கு பாதி கூட பத்தாது.... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...

You may like this