The Stoning of Soraya M விமர்சனம்


1990, Freidoune Sahebjam என்ற நாவலாசிரியர் சாலையில் செல்லும் போது வண்டி பழுதாக, அருகில் உள்ள குஹ்பேயா என்னும் கிராமத்திற்குள் ரிப்பேர் செய்ய வருகிறார்... அங்கே சாரா என்ற பெண் அவரை சந்தித்து  நேற்று நடந்த விஷயத்தை சொல்கிறாள்.. அதை தனது டேப்பில் பதிய துவங்குகிறார்...

அங்கிருந்து சொராயாவின் கதை துவங்குகிறது...

சொராயா சாராவின் நல்ல தோழி,  அலி என்பவரின் மனைவி, இரண்டு குழந்தைக்கு தாய்...

அலி ஒரு 14 வயது பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறான்... எனவே சொராயாவை விவாகரத்து செய்ய முற்படுகையில், "வீணான பிரச்னை வேண்டாம் சொராயாவை ஒரு பக்கம் வைத்துக்கொள்... இன்னொரு பக்கம் அந்த பெண்ணை கட்டிக்கோ... இல்லன்னா, அவளுக்கும் அவளின் குழந்தைக்கும் நீ ஜீவனாம்சம் கொடுக்கணும்... " ன்னு ஐடியா கொடுத்து சொராயாவை பணிய வைக்க முற்படுகையில் அவளோ கண்டபடி திட்டி அனுப்பி விடுகிறாள்...

அதே நேரம், அவர்கள் ஊரில் ஒரு பெண் இறக்க அந்த குழந்தைகளை தான் பார்த்துக்கொள்வதாக சொராயா முற்பட இதை வைத்து அவள் மீது பொய்யான வழக்கு ஜோடிக்கப்படுகிறது ...அதாவது அந்த குழந்தைகளின் தந்தை மீது தவறான முறையில் நடந்து கொண்டதற்காக அவளை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர்...



அவளின் சொந்த பிள்ளைகள் உட்பட எல்லா சாட்சிகளும் அவளுக்கு எதிராக அமைய, அவள் மீது கல் எறியப்படுகிறது... 

இத்தனையும் கேட்ட அந்த  எழுத்தாளன் டேப்புடன் தப்பி செல்ல, ஊர் தலைவன் தடுக்க,  தந்திரமாக தப்பித்து செல்கிறான்...

பின் இதை  La Femme Lapidée என்ற பிரெஞ்ச் நூலின் மூலம் உலகறிய செய்தார்...

இந்த கதையே The Stoning of Soraya M என்ற பெயரில் 2008 இல் வெளிவந்தது....

இந்த படத்தில் மிக முக்கியமானது சொராயாவாக நடித்த Mozhan Marnò இன் நடிப்பும், சாராவாக நடித்த Shohreh Aghdashloo இன் நடிப்பும்... அதிலும் தான் சாகப்போகிறோம் என தெரிந்த பின்னும், கல்லடிக்கும் காட்சிகளில் சொராயா காட்டும் முகபாவங்கள் அருமை...

தவறு செய்யாத மனிதன் எவனும் இல்லை.. அதற்காக இப்படி ஒரு கொடிய தண்டனை தேவையா? இது தான் இந்த படத்தன் கேள்வி...

Comments