Visitors

hit counters

Monday, November 7, 2011

சிரிக்க மட்டுமே...

(இங்கு போடப்பட்டிருக்கும் காமெடி லைன்கள் யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல...)

வேலாயுதம் பார்த்துவிட்டு நொந்து போன கவுண்டமணி விஜயிடம் கேட்க்கும் சில அதிர்ச்சிக்குரிய கேள்விகள்...


கவுண்டமணி : டே தீக்குச்சி தலையா உன் திருப்பாச்சி கதை என்னடா....

விஜய் : அண்ணா அதுலயயும் எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுட கூடாதுன்னு அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....

விஜய் : சட்டை கலரை மாற்றி இருக்கேன்னா...

கவுண்டமணி : தெரியுண்டா உன்ன பத்தி...ஆமா இந்த சுறா படத்தோட கதையை சொல்றா...

விஜய் : மீனவ மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...

கவுண்டமணி : டேய் டாக்கால்டி மண்டையா... உன் குருவி படத்தோட கதை என்னடா....

விஜய் : கடப்பால அடிமையாய் இருக்கிற மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...

கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....

விஜய் : ??????

கவுண்டமணி : டே டப்பா தலையா உன் வில்லு படத்தோட கதை என்னடா....

விஜய் : என்னோட அப்பாவ தீவிரவாதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : டே அப்ப ஆதி படத்தோட கதை என்னடா....

விஜய் : என்னோட குடும்பத்தையே சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...

கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....

விஜய் : ஆதில தலைல வெத்தல எச்சி துப்பி இருப்பானுங்கனா...

கவுண்டமணி : டே அத ஓன் மூஞ்சில துப்பி இருக்கனும் டா....ஆமா நீ எல்லா படத்தலையும் பிச்சகாரனா இருந்துகிட்டு பணக்கார பொண்ண லவ் பண்ற

விஜய் : அண்ணா எந்த படத்தனா சொல்லுரிங்க? சிவகாசியா திருமலையா இல்ல வில்லுவானா ?

கவுண்டமணி : இனிமேல் நான் சினிமா வே பாக்க போறதில்ல டா... ஐயோ ராமா என்ன இந்த மாதிரி படமெல்லாம் பாக்க வைக்குற?

நன்றி: முகப்புத்தக நண்பர்கள்... 

Tuesday, October 4, 2011

கொள்ளையடிக்கும் தொ(ல்)லைக்காட்சிகள்


அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன?
கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில் இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.

பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.

இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.

உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?

தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.


இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.
திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
 

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:

1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.

2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.

3.கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும்

பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.

4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.

5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்

இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.

இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.

இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.நன்றி--சண்முக சுந்தரம் (முகப்புத்தகம்)

Wednesday, September 21, 2011

செவிக்கினிய செப்டம்பர் - இசை திருவிழா

இந்த மாதம் முழுதும் படங்களை விட பாடல்கள் தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன...திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மங்காத்தா பாடல்கள், படத்தின் வெற்றியில் ஒரு முக்கிய பங்கு என்பதில் சந்தேகமில்லை...."மச்சி ஓபன் த பாட்டில், விளையாடு மங்காத்தா" இதை சூரியன் எப்.எம் இல் போட்டே இன்னும் ஒட்டியிருக்கலாம்...
 
ஆனால் அதற்குள் பிரபு தேவா இயக்கத்தில் விஷால்,சமீரா ரெட்டி நடிப்பில் வெளிவரவிருக்கும் "வெடி" படத்தை வாங்கி விட்டது...இப்போது அதன் பாடல்களே ஒலித்துகொண்டிருக்கின்றன... அடுத்த படம் எப்ப சிக்க போகுதோ அது வரை நம்மள விடமாட்டாங்க....

Sunday, September 18, 2011

எதிரியை நண்பனாக்கும் அஜித்...தல போல வருமா!!!!!


ஏ.எம்.ரத்னம், அஜித்துக்கு சுமார் பதினைந்து கோடி கொடுத்திருக்கிறார் என கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். ஆனால் பணம் கைமாறவில்லை. வெறும் வார்த்தையளவில்தான் இருக்கிறது இந்த விவகாரம் என்றும் தகவல் வருகிறது.


பல வருடங்களுக்கு முன் நடந்தபெப்ஸி படைப்பாளிகள் பிரச்சினையில் அஜித் பெப்ஸி தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றார். ஆனால் ஏ.எம்.ரத்னம் படைப்பாளிகள் பக்கம். இந்த நேரத்தில் ரத்னம் அஜித்தை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. பெரும் தொகை ஒன்றை முற்பணமாகவும் கொடுத்திருந்தார். அஜித் எதிரணிக்கு ஆதரவாக நின்றதில் கடுப்பான ரத்னம், நாளை விடிவதற்குள் ரூபாயை எண்ணி மேசையில் வைத்தால் சரி, இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கூறிவிட்டார்.

Monday, September 12, 2011

ராகிணி எம்.எம்.எஸ் (RAAGINI MMS) (A) - விமர்சனம்...
பதிமூனாம் நம்பர் வீடு, ஜென்மம் எக்ஸ், யாவரும் நலம் வரிசையில் ஒரு நல்ல திகில் பேய் படம் ராகிணி எம்.எம்.எஸ்....முன்னரே சொல்லி விடுகிறேன் வீட்டில் அம்மா அப்பா இருக்கும் பொது இந்த படத்தை பார்த்து விடாதீர்கள்... செருப்படி நிச்சயம் உண்டு...

எனவே இப்படம் தனியாக அல்லது நண்பர்களுடனோ தான் பார்த்தாக வேண்டும்..அப்படி உள்ளன காட்சிகள்...சரி படத்திற்கு வருவோம்...

நகரத்தில் இருந்து தனக்கு தெரிந்தவரின் பங்களாவிற்கு வார இறுதியில்  தனது காதலியை டேட்டிங் க்கு அழைத்து செல்கிறான்... ஒரு கிராமத்தை தாண்டி ஒரு காட்டுக்கு நடுவில் இருண்டு கிடக்கிறது அந்த பங்களா... கொஞ்சம் தூரம் தாண்டி வண்டியை நிறுத்தி விட்டு நடந்து தான் செல்ல வேண்டும்...

ஒரு வழியாக மூன்று மணி நேரம் பயண களைப்பிற்கு பின்னர் பங்களாவிற்கு வருகின்றனர்...கதவை திறந்து லைட்டை தேடும் போதே காதலி தனது லீலையை தொடங்குகிறாள்... நாயகனோ அவசரம் வேண்டாம் என தடுக்கும் பொது பின்னால் வைத்த கவர் தானாக பிரிகிறது... அங்கே இருந்து ஆரம்பிக்கிறது திகில்...

Thursday, September 8, 2011

சொகுசுப்பயணம்


"பயணிகளின் நண்பன்" என்ற போர்டு பேருந்துகளில் நீங்கள் அதிகம் பார்க்கலாம்...ஆனால் நண்பனே சில நேரங்களில்எதிரி ஆகும்தருணமும் உண்டு... அது தான் இந்த அலுவலக நேரம்... காலை7.30 மணிமுதல் 10 மணி மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி ... இந்த நேரத்தில் நீங்கள் எந்த கூட்டமும் இன்றி நிம்மதியாக போனீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே அதிஷ்டக்காரர் தான்... அந்த அளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும்... இதில், ஒரு சில எரியாக்களுக்கு மிக குறைந்த பேருந்துகளே என்ற நிலையில் யோசித்து பாருங்கள்...கீழே உள்ள படத்தில் உள்ளது போல தான் இருக்கும்...சில நாட்கள் முன்பு வடபழனியில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் பேருந்தில் ஏறினேன்... வடபழனி டிப்போவிலேயே நிற்க முடியாத அளவுக்கு கூட்டம்... ட்ராப்பிக்கில் வேறு அங்கங்கு ஆட்கள் ஏற, கே கே நகர் செல்லும் போதே முழுதும் நிரம்பி வழிய ஆரம்பித்தது... அங்கங்கே நிறுத்தங்கள்... அடுத்து காலை கூட தரையில் வைக்க முடியாத நிலை...கூன் விழுந்த கிழவன் போல திரும்பி ஜன்னல் பக்கம் நின்று செல்ல வேண்டிய நிலை...


You may like this