Visitors

hit counters

Wednesday, September 21, 2011

செவிக்கினிய செப்டம்பர் - இசை திருவிழா

இந்த மாதம் முழுதும் படங்களை விட பாடல்கள் தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன...திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மங்காத்தா பாடல்கள், படத்தின் வெற்றியில் ஒரு முக்கிய பங்கு என்பதில் சந்தேகமில்லை...."மச்சி ஓபன் த பாட்டில், விளையாடு மங்காத்தா" இதை சூரியன் எப்.எம் இல் போட்டே இன்னும் ஒட்டியிருக்கலாம்...
 
ஆனால் அதற்குள் பிரபு தேவா இயக்கத்தில் விஷால்,சமீரா ரெட்டி நடிப்பில் வெளிவரவிருக்கும் "வெடி" படத்தை வாங்கி விட்டது...இப்போது அதன் பாடல்களே ஒலித்துகொண்டிருக்கின்றன... அடுத்த படம் எப்ப சிக்க போகுதோ அது வரை நம்மள விடமாட்டாங்க....விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்...அதிலும் "என்ன ஆச்சு" மற்றும் "இப்படி மழை அடித்தால்" பாடல்கள் செம கியூட் ... "நான் பாம்பே பொண்ணு பாடல்" ஹிந்தி "ஓம்காரா" படத்தின் பாடலை நினைவூட்டுகிறது... 


 அதற்கு முன்னாலே விஜயின் "வேலாயுதம்" பாடல்கள் நல்ல பீக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது... படத்தை காப்பி அடிப்பது மாறி இப்போது வீடியோ கேம்களை காப்பி அடிக்க துவங்கி விட்டார்கள்... இப்படி ஒரு புது ட்ரெண்டை தமிழுக்கு கொண்டு வந்த பெருமை இயக்குனர் ராஜாவையே சேரும்... 
அவர் அப்படி என்றால் இளைய தளபதியோ "ரத்ததின் ரத்தமே,உயிரே உயிர் துடிப்பே, கிட்னியே, கல்லீரலே" என ஓபனிங் சாங் பாடுகிறார்... 

இதில் "நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கணும் நு எல்லாம் லைன் வச்சிருக்காங்க..." அதை விட "சொன்னா புரியாது  சொல்லுக்குள் அடங்காது நீங்க வச்ச பாசம்" நு கேமராவை பார்த்து ஓர் பாடல் வேறு... மக்கள் ரொம்ப பாவம் சார்.... எத்தனை நாள் தான் குழந்தையை கையில் வச்சிகிட்டு, ஆயாக்களை கட்டிப்புடிச்சிட்டு நாட்டுக்காக பீல் பண்ண போறீங்க????

பாஸ், இந்த "சுறா, வில்லு, குருவி, ஆதி, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன்" இந்த படம் எல்லாம் நினைவிருக்கா???
 
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!!!!

எப்படியோ "சிலாக்ஸ்" பாடல் விஜய் ரசிகர்களிடையே சரவெடி போட்டுக்கொண்டிருக்கிறது...அடுத்து நண்பன் வேறு...ஹ்ம்ம்... கிளப்புங்க....


அதற்கு பக்கத்திலேயே சைலண்டாக ஒலிக்கிறது "களவாணி" சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் "வாகை சூடவா" படத்தின் பாடல்கள்...
இசை கிப்ரான்... பாடல்கள் அருமை... முக்கியமாக "சர சர சார காத்து' பாடல் தான்... போஸ்டரை பார்த்தால் 1947 காலத்திய படம் போல தெரிகிறது... 


ரொம்ப நாளாய் இப்போ வரும் அப்போ வரும் என எதிர்பார்த்திருந்த செல்வராகவனின் "மயக்கம் என்ன" பாடல்கள் ஒரு வழியாய் வெளி வந்து விட்டன... சரி எப்பவும் நா.முத்துக்குமார் தானே எழுதி இருப்பாரு... இந்த முறை எத்தனை பாட்டு எழுதினாருனு பாத்தா செம ஷாக்... எல்லா பாட்டும் அண்ணன்,தம்பி ரெண்டு பெரும் மாறி மாறி எழுதி இருக்கிறாங்க...இசை ஜி.வி பிரகாஷ்....

தனுஷ்  இரண்டு பாடல் (அதில் "காதல் என் காதல்" பாடல் செல்வராகவனுடன்) பாடியுள்ளார்...  "ஓட ஓட" பாடல் வரிகள் கண்டிப்பாக கொஞ்ச நாளைக்கு டீன் ஏஜ் பசங்க வாயில் மாட்டி தினம் தினம் சாகும்...

தெய்வ திருமகனுக்கு பிறகு ஜி.வி க்கு ஒரு நல்ல கியர்...

("ஜி.வி.பிரகாஷ் அண்ணன் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்...ஏதேதோ மொழி பாடலில் இருந்து உருவுறீங்க...ஆனா யாரும் கண்டு புடிக்க முடியாத மாதிரி உருவுங்க...அப்டியே உருவினாலும் கொஞ்சம் உருட்டி பிரட்டி டோனை மாத்துங்க...ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நீங்க சுட்ட "TROY,300..etc" படத்தின் பின்னணி இசை எங்களுக்கு நல்லாவே தெரியும்...

ஏற்கனவே இந்த பிரச்சனையில் உங்களை இரண்டு படத்தில் இருந்து தூக்கி விட்டதா சொல்றாங்க... தெய்வ திருமகன் படத்தில் ஒரு பாடலை ஆங்கில கார்டூன் படத்தில் இருந்தும், ஆடுகளம் படத்தின் ஒரு பாடலை ஹாலிவுட்டில் இருந்தும் லவுட்டியதாக அமெரிக்காவில் இருக்கும் எங்க ரகசிய உளவாளிகள் சொல்லிப்புட்டாங்க...இதோ உங்கள் பார்வைக்காக யவர் ஆனர்...

  
 

அதனால தான் விஜயும் செல்வராகவனும் அடுத்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜை சந்தித்திருப்பதாக ஒரு உள் குத்தும் உண்டு... ஆனால் வேறு மொழியில் இருந்து உருட்டி போடும் திறமைமிகு இசையமைப்பாளர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதே அவர் தானே... எனவே கவலைப்படாதீங்கோ... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்... இதெல்லாம் நமக்குள்ளயே  இருக்கட்டும்...")

அய்யய்யோ எல்லாரும் பாத்துட்டீங்களா??? ஷ்ஷ்ஷ்ஷ்.. பப்ளிக் பப்ளிக்...


இப்போது மிச்சம் இருப்பது முருகதாஸ் இயக்கதில் சூர்யாவின் ஏழாம் அறிவு பாடல்களே...இசையமைப்பாளர் ஏற்கனவே "YOUTUBE" இல் "COPYCAT" நம்பர் ஒன்...எப்போதும் ரெண்டு ஆங்கில பாடல், ரெண்டு பிரெஞ்சு பாடல், ரெண்டு சைனீஸ் பாடல் நு உருவி போட்டு விடுவார்... இந்த படத்தில் ஒரு சீன பாடல் வேறு உள்ளது... பாத்து பாஸ்... குரோசிங் டைகர்,ஷாங்காய் நூன் எல்லாமே நாங்க பாத்துட்டோம்... கொஞ்சம் உஷாரு... 

வேறு  மொழி பாடல் என்றவுடன் "YOUTUBE" இல் சில பாடல்களை தேடும் பொது சிக்கிய இந்த அரேபிய பாடல் நினைவுக்கு வந்தது... இதோ உங்களுக்காக...

இதையாச்சும் விட்டு வைங்க சொந்தமா யோசிக்கும்(?!?!?!?) இ(ம்)சையமைப்பர்களே...


அட சொல்ல மறந்துட்டேன்... கோ, வெப்பம், வந்தான் வென்றான், எங்கேயும் எப்போதும் என இரண்டு நாயகர்கள் வரிசையில் இப்போது வர உள்ளது சேரனும் பிரசன்னாவும் இணையும் "முரண்" திரைப்படம்...இயக்குனர் ராஜன் மாதவ்... இசை சஜன் மாதவ்...பாடல்கள் கேட்கும் ரகம்... மறக்காம கேட்ருங்கோ...

No comments:

You may like this