Visitors

hit counters

Sunday, October 31, 2010

சென்னை FILM FESTIVAL


சென்னை பிலிம் சேம்பர் மற்றும் செவன்த் சேனல் இணைந்து நடத்திய  அக்டோபர் 28 முதல் 31 வரையிலான  திரைதிருவிழா  இனிதேநிறைவு பெற்றது.இத்திருவிழாவில் முழுமையாக   என்னால் பங்களிப்பு கொள்ள முடியாதது சற்றே மனவருத்தம் தான்...எனினும் கோவா பிலிம் பெஸ்டிவல்,திருவனந்தபுரம் பிலிம் பெஸ்டிவல் ,சென்னை இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் என அடுக்கடுக்காய் குவிந்து கிடப்பதால் விடு மச்சி பாத்துக்கலாம் என மனதை தேற்றிக்கொண்டேன்..

நான்  பார்த்ததில் முக்கியமான படங்கள் இரண்டு...இப்படியுமா யோசிப்பாங்க என்று நம்மை என்னும் அளவு இருந்தன...
ஒன்று STRAYED மற்றொன்று POLYGAMY.

Monday, October 18, 2010

சிலம்பம்தமிழர்களின்  தற்காப்புக்கலை, வீரவிளையாட்டு, பெருமை "சிலம்பம்" உலகின் தலை சிறந்த தற்காப்புக்கலைகளில் ஒன்று, நம்மால் அந்த கலையை கத்துக்க முடியலாட்டினாலும்,ஏன் அந்த கலையின் வகைகள் , அருமை பெருமைகள தெரிஞ்சுக்ககூடாதுன்னு ஒரு ஆர்வம் வந்துடுச்சு.

எல்லாம் வல்ல நம் நண்பன் "கூகிள்" உதவியோட முடிஞ்ச அளவு தகவல்கள் திரட்டி இருக்கேன்.

சிலம்பம் எப்படி வந்துச்சு ? ஏன் வந்துச்சு ?

அந்த காலத்துல மலைவாழ் மக்கள் சிங்கம் புலி போன்ற மிருகங்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள கண்டுபிடிச்ச முறைதான் சிலம்பம்னு நாம இப்ப சொல்லுகிற கலை. அவங்க கையில் எப்போது இருக்க கூடிய சின்ன ஆயுதங்களான கம்பு, சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்கள பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள தான் இந்த கலையை பயன்படுதியிருக்காங்க .

எப்பயுமே இந்த ஆயுத்தங்களை வச்சுக்கிட்டு இருக்கது எப்படி சாத்தியம் ஆகும்னு ஒரு  கேள்வி இப்ப உங்க மனசுக்குள்ள வரலாம். அது சரியான கேள்வியே.

“சிலம்பக்கலையோட முக்கியமான பகுதி எந்த ஆயுதமுமே இல்லாமல் , கரங்களைக்கொண்டே தங்களை கொடிய மிருகங்களிடம் தற்காத்துக்கொள்வது.”

(மருதுபாண்டியர் ஒரு முறை வெறும் கரங்கலாலேயே புலி ஒன்றை சமாளித்து தப்பித்தார் என்று பாடநூல்களில் படித்தது ஞாபகம் வருகிறது)


சிலம்பக்கலையின் சிறப்புகளை அறிந்து கொண்ட முனிவர்கள் அதனை தமிழ்நாடு முழுவதும் பரப்பினர். அன்று முதல் சேர சோழ பாண்டிய மன்னர்கள் சிலம்பக்கலையை போற்றி வளர்த்தனர்.

அது சரி, அதென்ன பேரு "சிலம்பம்" ?

சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார்.

சிலம்பம் என்ற பெயர் "சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாக சொல்லபடுகிறது.


நம்மக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா ?

“இதில் வெறும் கரங்களை கொண்டு தற்காத்துகொள்ளும் கலைதான்,
பிறநாடுகள் வரை பரவி , அந்த நாடுகளில் மெருகேற்றபட்டு காரத்தே ஆனது என்று சொல்பவர்களும், அதன் காரணமாக தான் "கராத்தே" என்ற பெயர் கரம் என்ற பொருள் தருவதாக உள்ளது என்று வாதிடுவோரும் உள்ளனர்"

  கராத்தே கலையின் முன்னோடி குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்) புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார் . எனவே கராத்தே கலையின் முன்னோடி சிலம்பம் என்ற கருத்தும் உள்ளது.

சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு,கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கடுபடுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கி செல்வதாகவும் குறிப்பு ஒன்று உள்ளது.

பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது.அவர்கள் அந்த கம்பினை பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் .தமிழக எகிப்திய கலாச்சார பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.

சிலம்பத்தின் வகைகள் :
 1. சுவடு
 2. தெக்கன் சுவடு
 3. வடக்கன் சுவடு
 4. பொன்னுச் சுவடு
 5. தேங்காய் சுவடு
 6. ஒத்தைச் சுவடு
 7. குதிரைச்சுவடு
 8. கருப்பட்டிச் சுவடு
 9. முக்கோணச் சுவடு
 10. வட்டச் சுவடு
 11. மிச்சைச் சுவடு
 12. சர்சைச் சுவடு
 13. கள்ளர் விளையாட்டு
 14. சக்கர கிண்டி
 15. கிளவி வரிசை
 16. சித்திரச் சிலம்பம்
 17. கதம்ப வரிசை
 18. கருநாடக வரிசை

போன்றவை தான்.

(கராத்தே விளையாட்டின் "கடா' என்ற போர்ப்பிரிவு, தன் பெயரைப் பெற்றதற்கு, கதம்ப வரிசையைக் காரணம் என்றும் சொல்லபடுகிறது. இரண்டின் செயல்பாடுகளும் ஒரே போல் அமைந்தவை.)

மேலும் "குத்து வரிசை" என்ற சிலம்பத்தின் பிரிவு ஆயுதம் ஏதும் இல்லாத வெறும் கைகளை கொண்டு  செய்யும் முறை ஆகும்.

சிலம்பத்தில் பயன்படுத்த படும் ஆயுதங்கள் கம்பு, குறுங்கம்பு,மாடு  அல்லது கவரி (மான் கொம்பு),வாளும் கேடயமும், பட்டா,சுருள் பட்டா ,செண்டு ,லேசம், கட்டாரி, வளரி ,இடைகட்டி போன்றவையாகும்.

வளரி என்பது இருபக்கமும் கூர்மையான, மிக குறுகிய முனையும் மரத்தினால் ஆன கைபிடியும் கொண்ட ஆயுதம்.இதன் கூறிய பகுதியை பிடித்துகொண்டு தோளுக்கு மேல் தூக்கி எரிவதன் மூலம் 100 மீட்டர் தொலைவில் உள்ளவர்களை கூட தாக்கிவிடலாம்

(சுதந்திர போராட்டத்தின் போது , மருது பாண்டியகளின் வளரி வீசும் திறன் ஆங்கிலேயர்களை திணறடித்தது ஞாபகம் இருக்கலாம்)

  ஒருத்தன் கம்பு சுத்துரதுல திறமையானவனா இருந்தா , அவன் கம்பை கொண்டே அவன தாக்க வர எந்த ஆயுதத்தையும் தடுக்க முடியும்,அதுவும் எட்டு திசைகளில் இருந்து வருகிற ஆயுதங்களையும் தடுக்க முடியுனு சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.


வழக்கமா சிலம்பம் விளையாட பயன்படுத்தபடுற கம்பின் உயரம் , விளையாடுபவரின் நெற்றி வரையிலான உயரம் ஆகும்.
இங்கே ஒரு சில வீடியோகள சேர்த்திருக்கிறேன். நேரம் இருந்தால் கண்டிப்பாக பார்க்கவும்.
சரி இன்னைக்கு நிலைமை என்ன ?

இன்னைக்கு வெகு சிலரே சிலம்பக்கலையை கற்கின்றனர்.
இந்தியாவில் தமிழ்நாடு , கேரளா மற்றும் மலேசியா,பிரான்ஸ் போன்ற இடங்களில் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.
தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன்
வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயபடிப்பாக சிலம்பம் நடத்தபடுகிறது

உயிர் , சிந்து சமவெளின்னு மோசமான படங்கள குடுத்த இயக்குனர் சாமி அந்த பாவங்களைலாம் போக்குகிற மாதிரி , அவரோட அடுத்த  படம்
“சரித்திரம்" அ  சிலம்பக்கலைக்கு ஒரு ஆவணப்படமா கருதுகிற அளவுக்கு எடுத்துக்கிட்டு இருக்கிறதா கேள்விபட்டேன்.எந்த அளவுக்கு உண்மைனு தெரியல...

You may like this