Visitors

hit counters

Wednesday, September 21, 2011

செவிக்கினிய செப்டம்பர் - இசை திருவிழா

இந்த மாதம் முழுதும் படங்களை விட பாடல்கள் தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன...திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மங்காத்தா பாடல்கள், படத்தின் வெற்றியில் ஒரு முக்கிய பங்கு என்பதில் சந்தேகமில்லை...."மச்சி ஓபன் த பாட்டில், விளையாடு மங்காத்தா" இதை சூரியன் எப்.எம் இல் போட்டே இன்னும் ஒட்டியிருக்கலாம்...
 
ஆனால் அதற்குள் பிரபு தேவா இயக்கத்தில் விஷால்,சமீரா ரெட்டி நடிப்பில் வெளிவரவிருக்கும் "வெடி" படத்தை வாங்கி விட்டது...இப்போது அதன் பாடல்களே ஒலித்துகொண்டிருக்கின்றன... அடுத்த படம் எப்ப சிக்க போகுதோ அது வரை நம்மள விடமாட்டாங்க....

Sunday, September 18, 2011

எதிரியை நண்பனாக்கும் அஜித்...தல போல வருமா!!!!!


ஏ.எம்.ரத்னம், அஜித்துக்கு சுமார் பதினைந்து கோடி கொடுத்திருக்கிறார் என கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். ஆனால் பணம் கைமாறவில்லை. வெறும் வார்த்தையளவில்தான் இருக்கிறது இந்த விவகாரம் என்றும் தகவல் வருகிறது.


பல வருடங்களுக்கு முன் நடந்தபெப்ஸி படைப்பாளிகள் பிரச்சினையில் அஜித் பெப்ஸி தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றார். ஆனால் ஏ.எம்.ரத்னம் படைப்பாளிகள் பக்கம். இந்த நேரத்தில் ரத்னம் அஜித்தை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. பெரும் தொகை ஒன்றை முற்பணமாகவும் கொடுத்திருந்தார். அஜித் எதிரணிக்கு ஆதரவாக நின்றதில் கடுப்பான ரத்னம், நாளை விடிவதற்குள் ரூபாயை எண்ணி மேசையில் வைத்தால் சரி, இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கூறிவிட்டார்.

Monday, September 12, 2011

ராகிணி எம்.எம்.எஸ் (RAAGINI MMS) (A) - விமர்சனம்...
பதிமூனாம் நம்பர் வீடு, ஜென்மம் எக்ஸ், யாவரும் நலம் வரிசையில் ஒரு நல்ல திகில் பேய் படம் ராகிணி எம்.எம்.எஸ்....முன்னரே சொல்லி விடுகிறேன் வீட்டில் அம்மா அப்பா இருக்கும் பொது இந்த படத்தை பார்த்து விடாதீர்கள்... செருப்படி நிச்சயம் உண்டு...

எனவே இப்படம் தனியாக அல்லது நண்பர்களுடனோ தான் பார்த்தாக வேண்டும்..அப்படி உள்ளன காட்சிகள்...சரி படத்திற்கு வருவோம்...

நகரத்தில் இருந்து தனக்கு தெரிந்தவரின் பங்களாவிற்கு வார இறுதியில்  தனது காதலியை டேட்டிங் க்கு அழைத்து செல்கிறான்... ஒரு கிராமத்தை தாண்டி ஒரு காட்டுக்கு நடுவில் இருண்டு கிடக்கிறது அந்த பங்களா... கொஞ்சம் தூரம் தாண்டி வண்டியை நிறுத்தி விட்டு நடந்து தான் செல்ல வேண்டும்...

ஒரு வழியாக மூன்று மணி நேரம் பயண களைப்பிற்கு பின்னர் பங்களாவிற்கு வருகின்றனர்...கதவை திறந்து லைட்டை தேடும் போதே காதலி தனது லீலையை தொடங்குகிறாள்... நாயகனோ அவசரம் வேண்டாம் என தடுக்கும் பொது பின்னால் வைத்த கவர் தானாக பிரிகிறது... அங்கே இருந்து ஆரம்பிக்கிறது திகில்...

Thursday, September 8, 2011

சொகுசுப்பயணம்


"பயணிகளின் நண்பன்" என்ற போர்டு பேருந்துகளில் நீங்கள் அதிகம் பார்க்கலாம்...ஆனால் நண்பனே சில நேரங்களில்எதிரி ஆகும்தருணமும் உண்டு... அது தான் இந்த அலுவலக நேரம்... காலை7.30 மணிமுதல் 10 மணி மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி ... இந்த நேரத்தில் நீங்கள் எந்த கூட்டமும் இன்றி நிம்மதியாக போனீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே அதிஷ்டக்காரர் தான்... அந்த அளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும்... இதில், ஒரு சில எரியாக்களுக்கு மிக குறைந்த பேருந்துகளே என்ற நிலையில் யோசித்து பாருங்கள்...கீழே உள்ள படத்தில் உள்ளது போல தான் இருக்கும்...சில நாட்கள் முன்பு வடபழனியில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் பேருந்தில் ஏறினேன்... வடபழனி டிப்போவிலேயே நிற்க முடியாத அளவுக்கு கூட்டம்... ட்ராப்பிக்கில் வேறு அங்கங்கு ஆட்கள் ஏற, கே கே நகர் செல்லும் போதே முழுதும் நிரம்பி வழிய ஆரம்பித்தது... அங்கங்கே நிறுத்தங்கள்... அடுத்து காலை கூட தரையில் வைக்க முடியாத நிலை...கூன் விழுந்த கிழவன் போல திரும்பி ஜன்னல் பக்கம் நின்று செல்ல வேண்டிய நிலை...


You may like this