Visitors

hit counters

Wednesday, May 8, 2013

எதிர்நீச்சல் - விமர்சனம்"உன் பெயரில் ஒன்றும் இல்லை... உன் திறமை மட்டுமே உன்னை முன்னிலைப்படுத்தும்"   என்னும் கருத்தையும், இந்திய விளையாட்டுத்துறையில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்களை களைய வேண்டும் என்றும் சொல்கிறது எதிர் நீச்சல்...

படத்தின் பெயர் கதைக்கு மட்டும் அல்ல... சிவகார்த்திகேயனுக்கும் பொருந்தும்.... விஜய் டிவியில்  அறிமுகமாகி, மேடை விழாக்கள் மூலம் பிரபலம் அடைந்து இன்று கதாநாயகனாக எதிர் நீச்சல் போட்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்...


அதாகப்பட்டது கதையின் நாயகன் சிவ கார்த்திகேயன் தனது "குஞ்சிதபாதம்" என்ற பெயரால் சமூகம் அவனை வித்தியாசமாக பார்க்க, தன் பெயரை "ஹரிஷ்" என மாற்றிக்கொள்கிறார்... அதன் பின் பிரியா ஆனந்தின் அறிமுகம் காதல் என நகர... மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது .... சென்னை மராத்தான் போஸ்டரை பார்த்துவிட்டு தன்னை நிரூபிக்க, சிறுவயது அத்லெடிக் திறமையை தூசி தட்டுகிறார்... பண பலத்தால் ஒடுக்கப்பட்ட வீராங்கனை நந்திதாவின் நட்பின் மூலம் போட்டியில் வென்றாரா, என்பது மீதிக்கதை...

இயக்கம் R.S. துரை செந்தில்குமார்...

ஒரு சீனில் முன் செல்பவன் மீது ஒருவன் ஸ்பெரே அடிக்க, அவன்  சிவ கார்த்திகேயன் மீது விழ, அவர் கையில் இருந்த பாட்டில் கீழே விழும்... அந்த நேரத்தில் ஒரு உகாண்டா இளைஞன் பாதி குடித்து மீதி கொடுத்து உதவும்   இடம் கியூட் ...எந்த இடத்திலும் ஹீரோயிசம் கட்டாத, சிவகார்த்திகேயனின் நடிப்பு பட்டாசு...

யாராவது "குஞ்சு" என அழைக்க வாடி வதங்கும்  போதும், காதல். காமெடி என அனைத்து இடங்களையும் தன்னால் முடிந்த வரை நிரப்பியுள்ளார்...

அங்கங்கே இருக்கும் குட்டி குட்டி ஜோக்குகள், படத்தின் மிகப்பெரிய பலம்... அதுவே படத்தின் முதல் பாதி வரை நம்மை கட்டி வைக்கிறது...

நாயகியாக ப்ரியா ஆனந்த்... வாமணன், 180 படங்களை விட இதில் இன்னும் சற்று மெருகேறியிருக்கிறார்... நடிப்பில் அல்ல, அழகில்... :)

மற்ற படத்தை போல, நாயகனுக்கு ஒரு காமெடி பீஸ் நண்பன் தேவை அல்லவா, எனவே நண்பனாக மெரினாவில் வந்த சதீஷ்...


படம் சொல்ல வரும் கருத்து உண்மையில் வரவேற்க வேண்டிய விஷயம் தான்... ஆனால், அதை நோக்கி கதை பயணப்படாதது தான் சற்று வருத்தம்... தொடக்கத்தில் பெயர் பிரச்சனை, காதல், காமெடி என நகர்வதும் காதல் மூலமே தடகளம் என்பதும்... அதை வைத்து பின் பாதி  சீரியசாக அமைவதும், சினிமாவுக்கு சரியானது என்றாலும், கதைக்குள் ஒன்றாமல் போய் விடுகிறது... நாயகன் ஒரு இடத்தில வேலைக்கு செல்கிறார்... பின், திடீரென தடகள முயற்சி, புவ்வாவுக்கு என்ன செய்கிறார்??? நாமே யூகித்துக்கொள்ள வேண்டும் போல???

பின் பாதியில் நந்திதாவின் STD ஐ அவ்வளவு இழுத்து காட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை... மாண்டேஜ் காட்சிகளாக கூட காட்டியிருக்கலாம்... தேவை இல்லாத இழுவை... நந்திதாவின் கதை சொல்லி முடிக்க, அதன் தாக்கம் குறையும் முன்னே கதை டக்கென மீண்டும் சிவ கார்த்திகேயன் மீது நகர்வது எரிச்சல்...


"மின் வெட்டு நாளில் " பாடல் ஒளிப்பதிவில் மட்டுமே வேல்ராஜ் தெரிகிறார்.. என்ன ஆச்சு சாரே???

இசை அனிருத்... எல்லா பாடல்களும் சூப்பர் ரகம் ... "சத்தியமா நீ எனக்கு "
பாடலில்  ஒயின் ஷாப் சீனில் ஸ்மார்ட் போனில் சரக்கு ஆடர் எடுத்துவிட்டு போகிறார்... இதே மாதிரி சீக்கிரம் நெறைய படம் ஆடர் எடுங்க அனிரூத் ...

தயாரிப்பு தனுஷ்... அது மட்டும் அல்லாது, ஒரு பாடலுக்கு நயன்தாராவுடன் குத்தாட்டம்  ஆடிவிட்டு போகிறார்... சிவகார்த்திகேயன், இயக்குனர் துரை செந்தில்குமார், பிரியா ஆனந்த் ஆகியோருக்கு இது முக்கியமான படமாக மாற்றிக்கொடுத்த பெருமை நம் தனுஷையே சேரும்...

கிஷோரின் படத்தொகுப்பு ஓகே ரகம்...

முதல் பாதி காமெடி, பின் பாதி சீரியஸ் ஆக கதை நகர்ந்தாலும் பெரிதாக முகம் சுளிக்கும் காட்சிகள் எதுவும் இல்லாதது தான் இந்த படத்திற்கு இன்னொரு ப்ளஸ்...

மொத்தத்தில் எதிர் நீச்சல்,
"தைரியமா நீச்சல் அடிக்கலாம் டிக்கெட் வாங்க..."

Wednesday, May 1, 2013

சூது கவ்வும் - விமர்சனம்

ஒண்ணா காதல் காதல் காதல் (VTV, NPV)... இல்லைனா ரத்தம் ரத்தம் ரத்தம் (பரதேசி) ... இப்படி ஒரே ஜெனரில் படம் வந்து பாடாய் படுத்தி தொலைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் புது விதமாய் ஒரு ட்ரெண்டை உருவாக்கியது இந்த நாளைய இயக்குனர்களின் படங்கள்....

மைனா வுக்கு பிறகு ஒரு நல்ல படம் வெளி வந்தது சி.வி. குமாரின் மூலமே...
(ஸ்டுடியோ க்ரீன் ஞான வேல் ராஜாவுக்கும் அதில் பங்கு உண்டு)

கிடைத்த முதல் வாய்ப்பை வைத்து முதல் படத்தில் வாகை சூடிய இந்த அணி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்திற்கு பிறகு மூன்றாவது படைப்பை களம் இறக்கியுள்ளது..
பெண்ணால் வேலை இழந்த ஒருவன், நயன்தாரா வுக்கு கோவில் கட்டி சென்னை வந்த ஒருவன், ஜாகுவார் காரை ஓட்டி டங்குவாரு போன ஒருவன், இப்படி மூன்று பேரும் ஒரு சண்டையில், விஜய் சேதுபதியிடம் அணி சேர அவர்களின் பாதை மாறுகிறது... ஆள்கடத்தல் செய்ய, அதில் ஒரு டீல்... அமைச்சர் மகனை கடத்த சொல்லி... பின்னர் என்ன ஆகிறது... வெள்ளி திரையில் காண்க...

நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம் க்கு பிறகு, ஒரு சீரியசான காமெடி படம், சிரிக்க வைக்க வேண்டும் என்று வேண்டுமென்ற திணித்த வசங்கள் என்று ஏதும் இல்லை ... கதை சீரியசாகவே நகர்கிறது ஆனால் அங்காங்கே இருக்கும் குட்டி குட்டி விஷயங்கள் தான், அந்த வெற்றிடத்தை அழகாய் நிரப்புகிறது.... நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது...

உதாரணம்:
 • மந்திரி மகனை போலீஸ் உடையில் கடத்த முற்படும் பொது, ரவுடி கும்பல் அவர்கள் முன் வரும்... மீசையை முறுக்கி அவர்களை முறைப்பார்  விஜய் சேதுபதி.. போலீஸ் என்று பயந்து அவர்கள் பின்செல்ல, அவர்கள் வண்டி தெரு முனைக்கு சென்றதும் அரக்க பறக்க பயந்து வண்டிக்குள் ஏறும் காட்சி... அதில் விஜய் சேதுபதியின் பாடி லாங்குசெஜ் செம தூள்...
 • கடத்திய பிறகு அமைச்சருக்கு போன் போட்டு, உங்க பையன கடத்திட்டோம்.. நாளைக்கு சன்டே... நாங்க வேலை செய்ய மாட்டோம்... திங்கள் வந்து காசு வாங்கிக்குறோம் ன்னு சொல்லும் காட்சி...
இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்...


விஜய் செதுபதி வரும் வரை வெறும் அறிமுக காட்சிகளாக இருந்த காட்சிகள் வெறிகொண்டு வேகம் கொள்கிறது... கூடவே சீரியசான காமேடி லைன்கள்...

அதிலும் அவர் சொல்லும் 5 கடத்தல் கொள்கைகள் சூப்பர்... வசனம், நடிப்பு, பாடி லேங்குவேஜ் என அனைத்தும் நிறைவு செய்திருக்கிறார்...

கலை எட்டு மணிக்கு அலாரம் வைத்து சரக்கடிக்கும் ரமேஷ், "என்ன கைய புடிச்சு இழுத்தியா" ன்னு கேள்வி கேட்டு வேலையை விட்ட சாப்ட்வேர் இளைஞர்... நயன்தாரா வுக்கு கோவில் கட்டிய சிம்ஹா, விஜய் சேதுபதி அண்ணனாக வரும் டாக்டர், அமைச்சர் மகனாக வரும் கருணா, கடத்த சொல்லும் நம்பிக்கை கண்ணன், சில்லறை இல்லை ன்னு சொன்னதால் கோவத்துடன் அலையும் இளைஞன் இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் தேவைக்கேற்ற நிறைவு...

தினேஷின் ஒளிப்பதிவு சிக்ஸ்சர் , லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு ஓகே ராகம்...

சந்தோஷ் நாராயணன் இசையில் காசு பணம், கம்னா கம் ஹிட் ரகம் ... ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு விதம்...  பின்னணி இசையும் அருமை...

இயக்கம் நலன் குமரசாமி... "நடந்தது என்னன்னா" இந்த குறும்படத்தை பார்த்தவர்கள் கண்டிப்பாக இவரை மறக்க மாட்டார்கள்...  ஒவ்வொரு சீனிலும் இவரின் உழைப்பு தெரிகிறது...


படத்தின் முதற்பாதியில் விஜய் சேதுபதி, இல்லாத ஒரு பெண்ணிடம் பேசுவது போல எதற்கு காட்டப்பட வேண்டும்... க்ளைமாக்ஸ் காட்சிக்காகவா??

இடைவேளை வரை நன்றாக போய்க்கொண்டு இருந்த பாதை, போலீஸ் வந்தவுடன் அவர் POINT OF VIEW இல் அதிக காட்சிகள், பில்ட் அப் வைத்தது படத்திற்கு அவ்வளவு தேவை இல்லை... என்ன தான் டெரர் ன்னு காட்டினாலும் இறுதியில் விஜய் சேதுபதி அண்ட் கோ தான் ஜெய்க்கும் என்று முன்னரே நாம் எளிதாக யூகிக்கலாம்...குறைகள் வெகு சிலவே இருந்தாலும் ஒரு முழுமையான காமெடி சரவெடி...
சரக்கடிக்கும் காட்சிகள் சற்று குறைந்தால் குடும்பத்துடன் பார்க்க சற்று ஏதுவாக இருக்கும்...

மொத்தத்தில் சூது கவ்வும் - செம்ம்ம கவ்வு...

படத்தில் பிடித்த வசனங்கள்:
 1. ஜாகுவார் வண்டி ஒட்டி கொஞ்ச தூரம் போனேன்...
  ஹோட்டல் க்கு உள்ளே தானே ???
  இல்லை... ஹோட்டல விட்டு வெளில ஒரு நூறு மீட்டர் போயிருப்பேன்... அடி பிண்ணிட்டாங்க...
 2. நீங்க பேப்பரே படிக்க மாட்டீங்களா... ????
  மாட்டேன்.. தேதி மாத்தி ஒரே செய்தி போடுறாங்க...
 3. சார்.. சார். பதட்டப்படாதீங்க... (போனை கொடுத்து) இந்தாம்மா உங்க அப்பாவுக்கு ஆறுதல் சொல்லு...
 4. ராதா ரவி: இத்தனை நாள் எப்படி உங்க அப்பாவை எமாத்தினியோ அதே மாதிரி தான்.. உங்க அப்பாவுக்கு பதில் மக்கள்.. அவ்ளோ தான் அரசியல்...
 5. ராதா ரவி: அட... என்னமா தலை ஆட்டுறான் இந்த ஒரு தகுதி போதும் அமைச்சர் ஆகறதுக்கு...
 6. இவன கடத்த ப்ளான் லாம் வேணாம் ஒரு டி கடை போட்டா போதும்...
 7. ஏமாத்தறது ஈசி... அதுக்கு குருட்டுத்தனமான முட்டாள்தனமும், புத்திசாலித்தனமான முரட்டுத்தனமும் வேணும்...
 8. அய்யயோ...
  என்னடா???
  மணி 9.50.. பத்து மணிக்கு டாஸ்மாக் சாத்திருவான்...
 9. அந்த கார் நம்ம பின்னாடி வருது...
  இல்லை.. நாம தான் அதுக்கு முன்னாடி போயிட்டு இருக்கோம்...
 10. நான் கத்த மாட்டேன்... ப்ளீஸ் கர்சீப்பை எடுங்க... நாத்தம் தாங்க முடியல...
டிஜிட்டல் விளைவால், நானும் படம் எடுக்குறேன் என்று தலைவலியாய் வந்து கொண்டிருக்கும் படங்களுக்கு நடுவில் இந்த மாதிரியான படங்கள் கண்டிப்பாக அதிகம் வர வேண்டும்...

You may like this