Visitors

hit counters

Wednesday, May 8, 2013

எதிர்நீச்சல் - விமர்சனம்"உன் பெயரில் ஒன்றும் இல்லை... உன் திறமை மட்டுமே உன்னை முன்னிலைப்படுத்தும்"   என்னும் கருத்தையும், இந்திய விளையாட்டுத்துறையில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்களை களைய வேண்டும் என்றும் சொல்கிறது எதிர் நீச்சல்...

படத்தின் பெயர் கதைக்கு மட்டும் அல்ல... சிவகார்த்திகேயனுக்கும் பொருந்தும்.... விஜய் டிவியில்  அறிமுகமாகி, மேடை விழாக்கள் மூலம் பிரபலம் அடைந்து இன்று கதாநாயகனாக எதிர் நீச்சல் போட்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்...


அதாகப்பட்டது கதையின் நாயகன் சிவ கார்த்திகேயன் தனது "குஞ்சிதபாதம்" என்ற பெயரால் சமூகம் அவனை வித்தியாசமாக பார்க்க, தன் பெயரை "ஹரிஷ்" என மாற்றிக்கொள்கிறார்... அதன் பின் பிரியா ஆனந்தின் அறிமுகம் காதல் என நகர... மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது .... சென்னை மராத்தான் போஸ்டரை பார்த்துவிட்டு தன்னை நிரூபிக்க, சிறுவயது அத்லெடிக் திறமையை தூசி தட்டுகிறார்... பண பலத்தால் ஒடுக்கப்பட்ட வீராங்கனை நந்திதாவின் நட்பின் மூலம் போட்டியில் வென்றாரா, என்பது மீதிக்கதை...

இயக்கம் R.S. துரை செந்தில்குமார்...

ஒரு சீனில் முன் செல்பவன் மீது ஒருவன் ஸ்பெரே அடிக்க, அவன்  சிவ கார்த்திகேயன் மீது விழ, அவர் கையில் இருந்த பாட்டில் கீழே விழும்... அந்த நேரத்தில் ஒரு உகாண்டா இளைஞன் பாதி குடித்து மீதி கொடுத்து உதவும்   இடம் கியூட் ...எந்த இடத்திலும் ஹீரோயிசம் கட்டாத, சிவகார்த்திகேயனின் நடிப்பு பட்டாசு...

யாராவது "குஞ்சு" என அழைக்க வாடி வதங்கும்  போதும், காதல். காமெடி என அனைத்து இடங்களையும் தன்னால் முடிந்த வரை நிரப்பியுள்ளார்...

அங்கங்கே இருக்கும் குட்டி குட்டி ஜோக்குகள், படத்தின் மிகப்பெரிய பலம்... அதுவே படத்தின் முதல் பாதி வரை நம்மை கட்டி வைக்கிறது...

நாயகியாக ப்ரியா ஆனந்த்... வாமணன், 180 படங்களை விட இதில் இன்னும் சற்று மெருகேறியிருக்கிறார்... நடிப்பில் அல்ல, அழகில்... :)

மற்ற படத்தை போல, நாயகனுக்கு ஒரு காமெடி பீஸ் நண்பன் தேவை அல்லவா, எனவே நண்பனாக மெரினாவில் வந்த சதீஷ்...


படம் சொல்ல வரும் கருத்து உண்மையில் வரவேற்க வேண்டிய விஷயம் தான்... ஆனால், அதை நோக்கி கதை பயணப்படாதது தான் சற்று வருத்தம்... தொடக்கத்தில் பெயர் பிரச்சனை, காதல், காமெடி என நகர்வதும் காதல் மூலமே தடகளம் என்பதும்... அதை வைத்து பின் பாதி  சீரியசாக அமைவதும், சினிமாவுக்கு சரியானது என்றாலும், கதைக்குள் ஒன்றாமல் போய் விடுகிறது... நாயகன் ஒரு இடத்தில வேலைக்கு செல்கிறார்... பின், திடீரென தடகள முயற்சி, புவ்வாவுக்கு என்ன செய்கிறார்??? நாமே யூகித்துக்கொள்ள வேண்டும் போல???

பின் பாதியில் நந்திதாவின் STD ஐ அவ்வளவு இழுத்து காட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை... மாண்டேஜ் காட்சிகளாக கூட காட்டியிருக்கலாம்... தேவை இல்லாத இழுவை... நந்திதாவின் கதை சொல்லி முடிக்க, அதன் தாக்கம் குறையும் முன்னே கதை டக்கென மீண்டும் சிவ கார்த்திகேயன் மீது நகர்வது எரிச்சல்...


"மின் வெட்டு நாளில் " பாடல் ஒளிப்பதிவில் மட்டுமே வேல்ராஜ் தெரிகிறார்.. என்ன ஆச்சு சாரே???

இசை அனிருத்... எல்லா பாடல்களும் சூப்பர் ரகம் ... "சத்தியமா நீ எனக்கு "
பாடலில்  ஒயின் ஷாப் சீனில் ஸ்மார்ட் போனில் சரக்கு ஆடர் எடுத்துவிட்டு போகிறார்... இதே மாதிரி சீக்கிரம் நெறைய படம் ஆடர் எடுங்க அனிரூத் ...

தயாரிப்பு தனுஷ்... அது மட்டும் அல்லாது, ஒரு பாடலுக்கு நயன்தாராவுடன் குத்தாட்டம்  ஆடிவிட்டு போகிறார்... சிவகார்த்திகேயன், இயக்குனர் துரை செந்தில்குமார், பிரியா ஆனந்த் ஆகியோருக்கு இது முக்கியமான படமாக மாற்றிக்கொடுத்த பெருமை நம் தனுஷையே சேரும்...

கிஷோரின் படத்தொகுப்பு ஓகே ரகம்...

முதல் பாதி காமெடி, பின் பாதி சீரியஸ் ஆக கதை நகர்ந்தாலும் பெரிதாக முகம் சுளிக்கும் காட்சிகள் எதுவும் இல்லாதது தான் இந்த படத்திற்கு இன்னொரு ப்ளஸ்...

மொத்தத்தில் எதிர் நீச்சல்,
"தைரியமா நீச்சல் அடிக்கலாம் டிக்கெட் வாங்க..."

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

படமும் நன்று... விமர்சனமும் ரசித்தேன்...

You may like this