Visitors

hit counters

Thursday, December 24, 2009

தமிழ் வாழ்க - தமிழ் கடிகாரம்சென்னை திரைப்பட விழாவிற்கென ராயப்பெட்டைக்கு சென்றபோது அதற்கு அருகிலுள்ள  ஒரு சிறிய உணவகத்தில் கண்ட கடிகாரம் இது...

உலகத்திரைப்பட விழாக்கள் - திணறும் தமிழ்நாடு

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசும் உலக அளவிலான திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து,அதிக செலவு செய்து நடத்திக்கொண்டிருக்கிறது...அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கோவா திரைப்படவிழா,திருவனந்தபுரம் திரைப்பட விழா....Etc...

ஆனால் உலக அளவில் முன்னேறிக்கொண்டிருக்கும் அளவுக்கு தமிழ் சினிமா இருக்கும் இந்த நிலையிலும் கூட ஏன் தமிழக அரசாங்கம் இதை செய்ய யோசிக்கிறது என்று தான் தெரியவில்லை...சென்னை திரைப்பட விழாவில் எஸ்.வி.சேகர் அவர்கள் பேசிய போது மிகுந்த வேதனையாக இருந்தது...
தனியாக அவர்களே ஒரு அமைப்பை ஏற்படுத்தி Sponsers மூலம் படங்களை வெளி நாடுகளில் இருந்து கொண்டு வந்து,வெளி நாட்டு இயக்குனர்களை வரவழைத்து அவர்களுக்கு ஏற்ற அனைத்து  செலவுகளையும் sponsers மூலம் செய்திருக்கிறது...அந்த அளவுக்கு இங்கு என்ன இல்லாமல் போய் விட்டது என தெரியவில்லை...

தமிழ் சினிமாவுக்கு  வரி விலக்கை கொண்டு வந்த முதல்வர் கலைஞர் அவர்கள் இதற்கும் ஏதாவது செய்தால் எளிதாக உலகெங்கும் தமிழ் சினிமா முத்திரை பதிக்கும் என்பதில் ஐயமில்லை...

டிசம்பர் 24:கடைசி நாள்

டிசம்பர் 24:

கடைசி நாளான இன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் திரையரங்கை விட்டு வெளியே வந்தேன்...இந்த நாள் என் வாழ்வின் ஒரு மறக்க முடியாத நாளாக இருக்கலாம்..நான் என் மனதில் கோட்டை கட்டிய நபர்களின் பாதி பேரை ஒரே நாளில் பார்த்து விட்டேன்...இறுதி நாள் விழாவில் நடிகைகளும் இயக்குனர்களுமான ரேவதி மற்றும் சுஹாசினி அவர்களும் இயக்குனர் பி.வாசு ஆகியோர் முக்கிய பிரமுகர்களாகவும்,

அச்சமுண்டு அச்சமுண்டு நடிகர் பிரசன்னா,
திருதிரு துருதுரு இயக்குனர் நந்தினி,
பசங்க இயக்குனர் பாண்டிராஜ்,
இயக்குனரும் ந்டிகனுமான சேரன்,
இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என மூன்று அவதாரம் கொண்டுள்ள சசிகுமார் அவர்கள் என ஒரு பட்டாளமே விருந்தாளிகளாக வந்து அரங்கை கலகலப்பாகினார்கள்...
தமிழ் படத்தில் முதல் பரிசை அச்சமுண்டு அச்சமுண்டு படமும்,
இரண்டாவது பரிசை பசங்க படமும் பெற்றது...
பசங்க படதயாரிப்பாளர் என்ற முறையில் சசிகுமார் அவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது...


மேலும் சிறப்பு விருதாக பொக்கிஷம் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது...

பாண்டிராஜ்,பிரசன்னா,பி.வாசு,ரேவதி,சுஹாசினி என அனைவரும் பேச இனிவுடன் முடிவுற்றது...

அடுத்து போட்டோ எடுக்கும் படலம்...அனைவரையும் தேடி அலைந்தோம்...முதலில் எங்கள் கண்ணில் சிக்கியவர் சசிகுமார் அவர்கள்...இன்று பார்த்து கையில் ஒரு பேனா பேப்பர் கூட இல்லை...ஒரு பழைய விசிடிங் கார்டுடன் கையெழுத்து வாங்க சென்றேன்...சேரன் அவர்கள் நொடியில் மறைய சசிகுமார் அவரிடம் கார்டை நீட்டினேன்...நல்ல நேரம் முதலிலே அவர் கையில் பேனா இருந்தது...கையெழுத்து போட்டோ என ஒரே ஜாலி தான்...அடுத்து போட்டோ வேட்டையில் சிக்கியவர் இயக்குனர் பி.வாசு அவர்கள்..."சார் ஒரு போட்டோ என்றவுடன் சிறிய சிரிப்புடன் என் தோள்  மேல் கை போட்டுகொண்டார்.."
அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சின்னத்தம்பி படம் தான் நினைவுக்கு வரும்... அந்த அளவு என்னை கட்டிப்போட்டவர் அவர்...


இதற்க்கு அடுத்து சிக்கிய அப்பாவி நடிகர் யாரென்றால் நமது அஞ்சாதே வில்லன்,படத்தில் மட்டும் அச்சம் கொண்ட நாயகன் நமது பிரசன்னா அவர்கள்...இன்பத்திலும் ஒரு துன்பம் என்னவென்றால் மொத்தம் இரண்டு...
ஒன்று பாண்டிராஜ் அவர்களை காண முடியவில்லை...
இரோண்டு மாறி தாம்பரத்திற்கு பதிலாக கோருக்குபேட்டை ஏறிய பைத்தியக்காரத்தனம்..
இந்த நினைவுகளுடன் தாம்பரம் பேருந்திற்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து கோருக்குபேட்டை செல்லும் பேருந்தில் ஏறிவிட்டேன்...நீண்ட நேரம் களைத்து என்னடா இன்னும் தாம்பரம் வரவில்லை என்று கேட்டால் "தம்பி இது கோருக்கு பேட்டை" என கூற இளித்துக்கொண்டே இறங்கி சென்ட்ரல் சென்று மீண்டும் தாம்பரம் பஸ் ஐ பிடித்தேன்...shhhhhhhhh முடியல...

டிசம்பர் 23

டிசம்பர் 23:

இன்றும் சில பல வேலைகள் காரணமாக இன்றும் தாமதம், விக்ரமாதித்தனை துரத்தும் வேதாளம் போல தொடர்ந்தது...அரங்கில் நுழையும் போது கிட்டதட்ட இரண்டு படங்கள் முடிந்தே விட்டன..Alive என்ற அல்பேனியா படத்திருக்கு நுழைந்தோம்...படம் ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக நகர்ந்ததால் பக்கத்துக்கு அரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் Angels With Dirty Wings என்ற ஜெர்மானிய  படத்திற்கு  தாவினோம்...தெரியாமல் போய்விட்டோம் போல ஏன்டா வந்தோம் என எண்ணிக்கொண்டு மீண்டும் அந்த பழைய படத்திற்கே சென்றோம்...தலையை சொரிந்து கொண்டே கதையும் புரியாமல் ஒன்றும் புரியாமல் பக்கத்தில் இருந்தவர்களிடம் பல்லைக்காட்டிக்கொண்டு வெளியே வந்தோம்...  The Other Bank என்ற நேற்றைய படமே மீண்டும் திரையிடப்பட்டது...இன்னும் அந்த படம் என் நெஞ்சில் இனிக்கிறது என்றே கூறலாம்..

Tuesday, December 22, 2009

டிசம்பர் 22

டிசம்பர் 22:

அதிகாலை என்பது என்னைப்பொறுத்த வரை பத்து மணி என நினைக்கிறேன்...6 மணிக்கு அலாரம் வைத்து விட்டு 10 மணிக்கு எழுந்திரிக்கும் ஒரே புத்திசாலி நான் மட்டும் தான்... லேட் ஆக போனதில் ஹாஸ்டல் மெஸ் இல் சாப்பாடு காலி...சார்ஜ் இறங்கிய நோக்கியா போன் போல முகத்தை தொங்க விட்டு விரைந்தேன் கேண்டீன் க்கு...பிறகு ராயப்பேட்டை க்கு போகும் போது முந்தைய நாள் போலவே மணி கிட்டதட்ட 1 க்கு மேல் ஆனது...திரைக்கு உள்ளே நுழையும் போதே ஒரு படம் முடிவுக்கு வர தலையை சொரிந்து கொண்டே வெளியே வந்தேன்...

மதியம் மணி 2.45 இந்த படத்தின் கதையை கூட சரியாக கவனிக்கவில்லை...
உள்ளே சென்று அமர்ந்த பிறகு இந்த படத்தை பற்றி புத்தகத்தை புரட்டிய போது தான் அதிர்ச்சி...

அந்த அதிர்ச்சி "10 Wins & 1 Nomination"...பத்து விருது பெற்ற ஒரு படம் அது...யப்பா என்ன ஒரு கதை...ஒரு சிறுவனை வைத்து அழகாக கதையை நகர்த்தி இருக்கிறார்கள்...தான் தகப்பனை தேடி சொந்த ஊருக்கு செல்லும் ஒரு சிறுவனின் கதை தான் "The Other Bank" என்ற Georgia மொழிப்படம்...வாய்ப்பு கிடைக்கும் போது இந்த படத்தை பார்க்கத்தவறாதீர்கள்...


அடுத்த படமானது சைக்கோ போன்ற ஒரு வித்தியாசமான கதை கொண்ட மிகவும் முக்கியமான கென்னஸ் ஐயே கலக்கிய ஒரு படம்...படத்தின் பெயர் "ANTICHRIST".

குழந்தையை இழந்த தம்பதிகளிடையே நடக்கும் ஒரு மனப்போராட்டம் தான் இந்தப்படம்...
இந்த படத்தின் நாயகன் William Dafoe என்றால் நம்மில் பலருக்கு தெரியாது அனால் ஸ்பைடர் மேன் வில்லன் என்றால் எல்லாருக்கும் தெரியும்...அவரே தான்..இதற்கும் மேல் தெரியவில்லை என்றால் கீழே உள்ள படத்தை பார்க்கவும்...அவர் தானா என்றெல்லாம் யோசிக்காதீர்கள் அவரே தான்...
இந்த படத்தில் நாயகனுக்கும் நாயகி இருவருக்கும் சிறந்த பங்குண்டு...இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த படம் கென்னஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது...சில பிரச்சனைகளையும் சந்தித்தது...

இந்த படத்திற்கான சிறந்த நடிகை விருது Chalotte Gainsbourg அவர்களுக்கு வழங்கப்பட்டது..."இந்த படம் அப்படி என்ன பெருசா பிரச்சனைய பாதிருக்கபோகுது?" இப்படி யோசிப்பவர்கள் முதலில் இந்த படத்தை பாருங்கள்...அப்புறம் உங்களுக்கே புரியும்...Monday, December 21, 2009

டிசம்பர் 21

டிசம்பர் 21 :

டிசம்பர் 20 இரவு பெய்த கனத்த மழை கல்லூரிக்கு செல்ல முட்டுக்கட்டை போட்டது...தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓடிச்சென்று கடைசி ரயிலை பிடித்து ஒரு வழியாக ஹாஸ்டல்க்கு வந்து சேர்ந்தேன்...ஓடிய சோர்வு அறைக்கு சென்றவுடன் அப்படியே பிணம் போல கட்டிலில் விழுந்துவிட்டேன்...பிறகு காலை எழுந்து பார்க்க மணி 9 பிறகு அடித்து பிடித்து கிளம்பி பேருந்தில் ஏறும் போது மணி 11.30 க்கும் மேல்...

அரங்கம் செல்லும் போது எனக்கு தெரிந்த என் கல்லூரி தோழி ID கார்டு தொலைக்க சில கொக்கு மாக்கு வேலைகள் செய்து அவளை அரங்கிருக்கு கூடி செல்வதற்குள் மணி 2.30 க்கும் மேலாக இருந்தது...3 மணிக்கு சரியாக மூன்றாவது படம்...அடுத்து "The Living Ghost" என்ற ஒரியா மொழிப்படம்...
காட்டுவாசிகளின் வாழ்கையை சித்தரிக்கும் படம்...
இந்த படத்தைப்பற்றி வெளிப்படையாக பெசமுடியாமைக்கு மன்னிக்கவும்...எனினும் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் Prasandha Nandha அவர்களுக்கு நன்றி...நன்றாக உணர்ந்து இந்த படத்தை இயக்கியுள்ளார்...

அதற்கு அடுத்து "மே" என்ற Czech மொழிப்படம்...இந்த படம் கிட்டத்தட்ட நம்ம பாரதிராஜா ஸ்டைல் இல் எடுக்கப்பட ஒரு காதல் திரைப்படம்...கேமரா சிறப்பாக செயல்பட்டிருக்கிறது...பின்னணி இசையும் படத்திற்கு தக்கவாறு சரியாக அமைந்திருக்கிறது...

டிசம்பர் 20

டிசம்பர் 20:

சோம்பல் யாரைதான் விட்டது முந்தைய நாளின் பாதி தூக்கம் அடுத்தநாள் விடியலை தள்ளிப்போட்டது... 1.30 மணிக்கு சன்னமாக உள்ளே நுழைந்தோம்...படம் தலை கால் புரியாமல் இருந்தாலும் நன்றாக தன் இருந்தது...படத்தின் பெயர் PIERRE THE MAD என்ற பிரெஞ்சு படம்...படத்தின் முடிவில் நாயகன் புதை குழியில் புதையும் நேரத்தில் ஒருவர் உதவிக்கு வர அதை வேண்டாமென மறுத்து விட்டு இறந்து போகிறார்...ஒரு வேலை கடன் ஏதாவது வாங்கி இருப்பார் என நினைக்கிறேன்...திடீரென அவனது இரு நண்பர்களும் தூக்கு மாட்டிக்கொள்கிறார்கள்...

ஏன் எதற்கு என ஒனும் புரியாமல் மண்டயைக்கொடைந்து கொண்டிருக்க என் நண்பன் "சார் இந்த படத்தோட கதை என்ன " அப்படி ஒருவருடன் கேட்க அவர் எங்களை ஒரு மாதிரி பார்க்க அப்படியே தலையில் துண்டை போட்டுக்கொண்டு வெளியே வந்தோம்...நான் நினைக்கிறேன் ஒரு வேலை அவரும் எங்களை போலவே லேட் ஆகா வந்திருப்பாரோ? அடுத்த முறை பார்த்தல் கண்டிப்பாக கேட்பேன்....(அவர் அடிக்காமல் இருந்தால்)
அடுத்த படம் Landscape No.2 என்ற Slovakia படம்...இதும் கிட்டதட்ட தமிழ் படம் மாதிரி தான் ஒரு பக்கம் ஒரு மனைவி மறு பக்கம் இன்னொரு பெண் என சுற்றும் நாயகனிடம் சிக்குகிறது ஒரு ஓவியம் மற்றும் ஒரு முக்கியமான அரசாங்க ஆவணம்...அதனால் அவனை சுற்றி இருக்கும் அனைவரும் கொல்லப்படுகிறார்கள்...படத்தின் முடிவில் நாயகனை கொல்லவரும் வில்லன் ஆவணங்களை நெருப்பில் போட்டு விட்டு ஏன் தானே குழியில் விழுந்து இறக்கிறார் என்பது தான் தெரியவில்லை...இதில் பாவம் அதனை கொலைக்கான பழி நாயகன் மீது விழவே நாயகன் கைது செய்யப்படுகிறார்..ஹயோஒ பாவம்...

டிசம்பர் 19

டிசம்பர் 19 :

mukkiyamaana தருணங்களில்

அலாரம் வைப்பது முக்கியம் என்பது இன்று காலை தான் உணர்ந்தேன்...8 மணிக்கு எழுந்து அவச அவசரமாக கிளம்ப முதல் படம் கோவிந்தா ஆனது...

நாங்கள் கோட்டை விட்டது 6 Awards & 11 Nominations பெற்ற Shake Hands With The Devil The journey of Romeo Dallaire என்ற Documentry படம்...


ஆனால் துன்பத்திலும் ஒரு இன்பம் என்னவென்றால் Chameleon என்ற ஹங்கேரி படம் தான்...படத்தின் கதை கிட்டதட்ட கள்வனின் காதலி, நான் அவன் இல்லை எல்லாம் கலந்த மாதிரி தான் இருந்தது...ஆனால் முடிவும் தமிழ் படம் போலவே ஹீரோ திருந்தி முடிந்தது...

அடுத்து Heaven,Hell..Earth என்ற ஒரு Slavokiya மொழிப்படம்...கிட்டத்தட்ட இதும் தமிழ் சினிமா போல தன்...சிந்து பைரவி படத்தை நினைவூட்டியது...இதிலும் நாயகன் திருந்தி விட்டார்...என்ன கொடும சரவணன் இது?

அடுத்த படம் Film Chamber of Commerce அரங்கில்...பசங்க படத்திற்கு சசிகுமார் அவர்கள் வருகிறார் என எவரோ போட்ட போடில் விரைந்தோம்...அரங்கினுள் விரைந்த பொது பசங்க நாயகர்கள் கிஷோர் மற்றும் ஸ்ரீ ராம் உள்ளே நின்று கொண்டிருந்தார்கள்...

கிஷோர் இப்போது கூட வில்லன் மாதிரியே பார்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது...ரெண்டு பெரும் மாற்றி மாற்றி போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை...பைக் ஓட்டுவது போல வெறும் கையில் ஓட்டுவது,வகுப்பறை சண்டைகள்,ரைம்ஸ் என அனைத்தும் நமது பழைய பள்ளி நினைவுகளை மீட்கின்றன...இயக்குனர் பாண்டி ராஜ்க்கு வாழ்த்துக்கள்...

டிசம்பர் 18

டிசம்பர் 18 :

விபத்தின் காயம் சற்று தனியவே எப்போதும் போல கிளம்பினோம்...இன்று எங்களின் போட்டோ வேட்டையில் சிக்கியவர் நடிகர் ரமேஷ் கண்ணா...

அடுத்து 432 என்ற அர்ஜென்டினா படம்...இந்த படத்தை இயக்கிய இயக்குனர் Mercedes Farrols நிருபர்களுக்குபெட்டியில் நடிகரும் CIFF இன் Vice Charman ஆகிய S.V.சேகர் அவர்களும் உடன் இருந்தார்...கோவா திரைப்பட திருவிழாவில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை அவர் தலையில்...

மதியம் திரையிட்ட Beyond The Circle என்ற வங்கதேசத்து படம் அப்பா மகனின் உறவை அழகாக சித்தரித்தது...புல்லாங்குழலின் இசையும் இந்த படத்திற்கு ஒரு பிளஸ்...

படத்தை பார்த்துவிட்டு கிளம்பும் தருணம் வர சன் டிவி யின் வருகை...அவர்களின் பார்வையில் நான் சிக்க இந்த படங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க நு சொல்ல,இதுக்கு மேல வேற என்ன வேணும்?

மைக்கை கையில் பிடித்தவுடன் நாக்கெல்லாம் நடுங்க ஆரம்பித்தது...அதையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஏதோ உளறினேன்...20 ஆம் தேதி இரவு வண்ணத்திரை நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் என தெரிவித்து விட்டு கண்ணில் இருந்து மாயமாக மறைந்து விட்டார் சன் டிவி கேமரா மேன்...

டிசம்பர் 17

டிசம்பர் 17 :
இன்று கொஞ்சம் லேட் ஆகத்தான் கிளம்பினேன்...தாம்பரத்தில் ஏற்பட்ட சிறிய விபத்து மேலும் சிறிய தாமதத்தை தந்தது...நோண்டிய கால்களுடன் அரங்கில் நுழைந்த பின் பார்த்த ஒரு படம் A Citizen A Detective And A Thief. என்ற ஒரு எகிப்து மொழிப்படம்.படம் மிக அருமை...போட்டி போட்டு படத்தின் நாயகர்கள் மூவரும் நடித்திருந்தார்கள்...

அடுத்த படமான The Return of The Stroks என்ற slovakia மொழிப்படம் பார்க்கும் தருணத்தில் கால் வலி அதிகமாக நடையைக்கட்டினோம் ஹாஸ்டல் க்கு...

Thursday, December 17, 2009

படங்களுக்கு திருவிழா (டிசம்பர் 16-24)

திருவிழாவில் படங்கள் வந்த காலம் மாறி படங்களுக்கு திருவிழா வந்து விட்டது...டிசம்பர் 16 முதல் 24 வரை உலக திரைப்படங்களின் திருவிழா சென்னை woodlends அரங்கில் நடைபெறுகிறது... 38 நாடுகளின் 120 திரைப்படங்கள் மூன்று கலையரங்குகளில் திரையிடப்படுகிறது...இதில் ஒரு கொடுமை என்னவென்றால் ஒரே நேரத்தில் 3 படங்கள் திரையிடுவதால் ஒன்று பார்த்தல் மீதி 2 படம் கோவிந்தா ஆகி விடுகிறது...இதற்க்கு ஆரம்ப கட்டணமாக ரூபாய் 300 நிர்ணயித்துள்ளார்கள்...9 நாட்கள் விழாவிற்கு 300 ரூபாய் மிகவும் குறைவு தான்...


டிசம்பர் 16 :

முதல் நாள் தொடக்க விழாவானது Dr. S. ஜகத்ரக்ஷஹன்(Dept of Information & Broadcasting, Govt. of India, New Delhi.)அவர்களின் தலைமையில் நடிகர் பருத்திவீரன் புகழ் கார்த்திக்,நடிகை தேவயாணி மற்றும் பேராண்மை திரைப்பட இயக்குனர் ஜனநாதன் முன்னிலையில் நடைபெற்றது...

தொடக்க திரைப்படமாக ஸ்பெயின் இயக்குனர்
Pedro Almodovar அவர்களின் BROKEN EMBRACES திரைப்படம் திரையிடப்பட்டது...அந்த தொடக்க விழாவின் பொது நடிகர் கார்த்திக் பேசிய பிறகு ஒரு சிறு படையே கூடி விட்டது...பார்க்க சென்ற எங்களுக்கு பெரிய அதிர்ச்சி...நொந்து பொய் படிக்கிடையில் நின்று கொண்டு போன் இல் பேசிக்கொண்டிருக்கும்போது தீடீரென என் கண் முன்னே என்னை கடக்க அப்படியா போனை பக்கெட் இல் வைத்து விட்டு ஓடி பொய் என் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்...Monday, December 14, 2009

மீண்டும் பசங்க ஆதிக்கம்- ரெனிகுண்டா
பசங்க படத்தின் மூலம் ஒரு புது திரைக்கதை அமைத்த பாண்டி ராஜுக்கு பின்னால் அடுத்த இயக்குனராக பன்னீர் செல்வம் காலடி எடுத்து வைத்துள்ளார்...
தொடக்கத்திலே அதிரடியை காட்டி அசத்தி இருக்கிறார்...தொடக்கம் முதலே கணேஷ் ரகவேந்த்ரனின் இசை மிரட்டுகிறது...அதும் மாட்டு தாவணி பாடலில் அனைவரையும் ஆட வைத்திருக்கிறார்...கேமரா ஷக்தி சிறப்பாக செய்திருக்கிறார்...
படத்தின் கதை :
படத்தின் நாயகன் ஷக்தி பள்ளிக்கூடம் படித்து வருகிறார்...அப்பாவும் அம்மாவும் ஒரு ரவுடியால் இழக்க கொலை முயற்சியில் சிறை செல்கிறார்...அங்கு நான்கு சிறுவர்களின் நட்பால் சிறையில் இருந்து தப்பி மும்பை செல்ல முற்சிக்கிறார்...ரயிலில் பிரச்சனை செய்து தப்பிக்க ரேணிகுண்டா வில் இறங்குகுரார்கள்...அங்கு எதேர்ச்சையாக பழைய தோழனை பார்க்க சில நாட்கள் தங்குகிறார்கள்....அப்போது யாரும் என்னாத ஒரு பெரிய புள்ளியை கொலை செய்கிறது...அடுத்து oru கொலை மட்டும் செய்யுமாறு கூற அந்த முயற்சியில் ஜெய்த்தார்களா இல்லை சிக்கிக்கொண்டார்கள என்பது தன் கதை...இதில் நாயகியையும் முக்கிய பாத்திரமாக காத்திருப்பது கதைக்கு பலம்...

நாயகியையும் நாயகனையும் வளைத்து வளைத்து காட்டும் கேமரா மற்றவர்களின் மீது சரியாக பாயவில்லை...முதல் சந்திப்பில் எப்படி தான் தமிழ் சினிமா வில் மட்டும் காதல் மலருது தெரியவில்லை...இதை முதலில் ஆராய வேண்டும்...நாயகனை மிகவும் மிகைப்படுத்தி காட்டாமல் சாதாரமாக காட்ட்டிருப்பது ஒரு பிளஸ்...கேமரா வும் இசையும் இந்த படத்தின் முக்கிய அம்சம்..

டப்பா என்ற பெயர் கொண்ட சிறுவன் காமெடி யில் வெளுத்து வாங்குகிறார்..."இந்த பசங்க ஐஸ் கிரீம் சாப்திர பசங்க" என்று சாதாரணமாக சொல்கிறார்...மொட்டை பக்கத்தில் ரெண்டு மூன்று அடி ஆட்கள் என எதிர்பார்த்தது போலவே இருக்கிறார்கள்...அந்தரா வின் உண்மையான முகத்தை காடிருக்கிரார்கள்...பின்னணி இசையும் படத்துக்கு எதுவாக அமைந்திருக்கிறது...
கிளைமாக்ஸ் காட்சியில் ரொம்ப ஓட விட்டு விட்டார்கள் பாவம்...நாயகி சனுஷா
ஒரு ஊமையாக அறிமுகமாகி பரிதாபத்தை பெறுகிறார்...பேசாமல் இருந்தாலும் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார்...
படத்தின் இறுதியில் நாயகனையும் சாகடித்து கண்களில் கண்ணீர் கொட்ட வைக்கிறார் இயக்குனர்...
மொத்தத்தில் ரெனிகுண்டா   "செம லு பிக்அப் லு "...

You may like this