டிசம்பர் 22

டிசம்பர் 22:

அதிகாலை என்பது என்னைப்பொறுத்த வரை பத்து மணி என நினைக்கிறேன்...6 மணிக்கு அலாரம் வைத்து விட்டு 10 மணிக்கு எழுந்திரிக்கும் ஒரே புத்திசாலி நான் மட்டும் தான்... லேட் ஆக போனதில் ஹாஸ்டல் மெஸ் இல் சாப்பாடு காலி...சார்ஜ் இறங்கிய நோக்கியா போன் போல முகத்தை தொங்க விட்டு விரைந்தேன் கேண்டீன் க்கு...பிறகு ராயப்பேட்டை க்கு போகும் போது முந்தைய நாள் போலவே மணி கிட்டதட்ட 1 க்கு மேல் ஆனது...திரைக்கு உள்ளே நுழையும் போதே ஒரு படம் முடிவுக்கு வர தலையை சொரிந்து கொண்டே வெளியே வந்தேன்...

மதியம் மணி 2.45 இந்த படத்தின் கதையை கூட சரியாக கவனிக்கவில்லை...
உள்ளே சென்று அமர்ந்த பிறகு இந்த படத்தை பற்றி புத்தகத்தை புரட்டிய போது தான் அதிர்ச்சி...

அந்த அதிர்ச்சி "10 Wins & 1 Nomination"...பத்து விருது பெற்ற ஒரு படம் அது...யப்பா என்ன ஒரு கதை...ஒரு சிறுவனை வைத்து அழகாக கதையை நகர்த்தி இருக்கிறார்கள்...தான் தகப்பனை தேடி சொந்த ஊருக்கு செல்லும் ஒரு சிறுவனின் கதை தான் "The Other Bank" என்ற Georgia மொழிப்படம்...வாய்ப்பு கிடைக்கும் போது இந்த படத்தை பார்க்கத்தவறாதீர்கள்...






அடுத்த படமானது சைக்கோ போன்ற ஒரு வித்தியாசமான கதை கொண்ட மிகவும் முக்கியமான கென்னஸ் ஐயே கலக்கிய ஒரு படம்...படத்தின் பெயர் "ANTICHRIST".

குழந்தையை இழந்த தம்பதிகளிடையே நடக்கும் ஒரு மனப்போராட்டம் தான் இந்தப்படம்...
இந்த படத்தின் நாயகன் William Dafoe என்றால் நம்மில் பலருக்கு தெரியாது அனால் ஸ்பைடர் மேன் வில்லன் என்றால் எல்லாருக்கும் தெரியும்...அவரே தான்..இதற்கும் மேல் தெரியவில்லை என்றால் கீழே உள்ள படத்தை பார்க்கவும்...அவர் தானா என்றெல்லாம் யோசிக்காதீர்கள் அவரே தான்...








இந்த படத்தில் நாயகனுக்கும் நாயகி இருவருக்கும் சிறந்த பங்குண்டு...இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த படம் கென்னஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது...சில பிரச்சனைகளையும் சந்தித்தது...

இந்த படத்திற்கான சிறந்த நடிகை விருது Chalotte Gainsbourg அவர்களுக்கு வழங்கப்பட்டது..."இந்த படம் அப்படி என்ன பெருசா பிரச்சனைய பாதிருக்கபோகுது?" இப்படி யோசிப்பவர்கள் முதலில் இந்த படத்தை பாருங்கள்...அப்புறம் உங்களுக்கே புரியும்...



Comments