டிசம்பர் 21

டிசம்பர் 21 :

டிசம்பர் 20 இரவு பெய்த கனத்த மழை கல்லூரிக்கு செல்ல முட்டுக்கட்டை போட்டது...தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓடிச்சென்று கடைசி ரயிலை பிடித்து ஒரு வழியாக ஹாஸ்டல்க்கு வந்து சேர்ந்தேன்...ஓடிய சோர்வு அறைக்கு சென்றவுடன் அப்படியே பிணம் போல கட்டிலில் விழுந்துவிட்டேன்...பிறகு காலை எழுந்து பார்க்க மணி 9 பிறகு அடித்து பிடித்து கிளம்பி பேருந்தில் ஏறும் போது மணி 11.30 க்கும் மேல்...

அரங்கம் செல்லும் போது எனக்கு தெரிந்த என் கல்லூரி தோழி ID கார்டு தொலைக்க சில கொக்கு மாக்கு வேலைகள் செய்து அவளை அரங்கிருக்கு கூடி செல்வதற்குள் மணி 2.30 க்கும் மேலாக இருந்தது...3 மணிக்கு சரியாக மூன்றாவது படம்...







அடுத்து "The Living Ghost" என்ற ஒரியா மொழிப்படம்...
காட்டுவாசிகளின் வாழ்கையை சித்தரிக்கும் படம்...
இந்த படத்தைப்பற்றி வெளிப்படையாக பெசமுடியாமைக்கு மன்னிக்கவும்...எனினும் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் Prasandha Nandha அவர்களுக்கு நன்றி...நன்றாக உணர்ந்து இந்த படத்தை இயக்கியுள்ளார்...

அதற்கு அடுத்து "மே" என்ற Czech மொழிப்படம்...இந்த படம் கிட்டத்தட்ட நம்ம பாரதிராஜா ஸ்டைல் இல் எடுக்கப்பட ஒரு காதல் திரைப்படம்...கேமரா சிறப்பாக செயல்பட்டிருக்கிறது...பின்னணி இசையும் படத்திற்கு தக்கவாறு சரியாக அமைந்திருக்கிறது...

Comments