டிசம்பர் 24:கடைசி நாள்

டிசம்பர் 24:

கடைசி நாளான இன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் திரையரங்கை விட்டு வெளியே வந்தேன்...இந்த நாள் என் வாழ்வின் ஒரு மறக்க முடியாத நாளாக இருக்கலாம்..நான் என் மனதில் கோட்டை கட்டிய நபர்களின் பாதி பேரை ஒரே நாளில் பார்த்து விட்டேன்...இறுதி நாள் விழாவில் நடிகைகளும் இயக்குனர்களுமான ரேவதி மற்றும் சுஹாசினி அவர்களும் இயக்குனர் பி.வாசு ஆகியோர் முக்கிய பிரமுகர்களாகவும்,

அச்சமுண்டு அச்சமுண்டு நடிகர் பிரசன்னா,
திருதிரு துருதுரு இயக்குனர் நந்தினி,
பசங்க இயக்குனர் பாண்டிராஜ்,
இயக்குனரும் ந்டிகனுமான சேரன்,
இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என மூன்று அவதாரம் கொண்டுள்ள சசிகுமார் அவர்கள் என ஒரு பட்டாளமே விருந்தாளிகளாக வந்து அரங்கை கலகலப்பாகினார்கள்...




தமிழ் படத்தில் முதல் பரிசை அச்சமுண்டு அச்சமுண்டு படமும்,
இரண்டாவது பரிசை பசங்க படமும் பெற்றது...




பசங்க படதயாரிப்பாளர் என்ற முறையில் சசிகுமார் அவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது...


மேலும் சிறப்பு விருதாக பொக்கிஷம் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது...

பாண்டிராஜ்,பிரசன்னா,பி.வாசு,ரேவதி,சுஹாசினி என அனைவரும் பேச இனிவுடன் முடிவுற்றது...

அடுத்து போட்டோ எடுக்கும் படலம்...அனைவரையும் தேடி அலைந்தோம்...முதலில் எங்கள் கண்ணில் சிக்கியவர் சசிகுமார் அவர்கள்...இன்று பார்த்து கையில் ஒரு பேனா பேப்பர் கூட இல்லை...ஒரு பழைய விசிடிங் கார்டுடன் கையெழுத்து வாங்க சென்றேன்...சேரன் அவர்கள் நொடியில் மறைய சசிகுமார் அவரிடம் கார்டை நீட்டினேன்...நல்ல நேரம் முதலிலே அவர் கையில் பேனா இருந்தது...கையெழுத்து போட்டோ என ஒரே ஜாலி தான்...



அடுத்து போட்டோ வேட்டையில் சிக்கியவர் இயக்குனர் பி.வாசு அவர்கள்..."சார் ஒரு போட்டோ என்றவுடன் சிறிய சிரிப்புடன் என் தோள்  மேல் கை போட்டுகொண்டார்.."
அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சின்னத்தம்பி படம் தான் நினைவுக்கு வரும்... அந்த அளவு என்னை கட்டிப்போட்டவர் அவர்...


இதற்க்கு அடுத்து சிக்கிய அப்பாவி நடிகர் யாரென்றால் நமது அஞ்சாதே வில்லன்,படத்தில் மட்டும் அச்சம் கொண்ட நாயகன் நமது பிரசன்னா அவர்கள்...



இன்பத்திலும் ஒரு துன்பம் என்னவென்றால் மொத்தம் இரண்டு...
ஒன்று பாண்டிராஜ் அவர்களை காண முடியவில்லை...
இரோண்டு மாறி தாம்பரத்திற்கு பதிலாக கோருக்குபேட்டை ஏறிய பைத்தியக்காரத்தனம்..
இந்த நினைவுகளுடன் தாம்பரம் பேருந்திற்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து கோருக்குபேட்டை செல்லும் பேருந்தில் ஏறிவிட்டேன்...நீண்ட நேரம் களைத்து என்னடா இன்னும் தாம்பரம் வரவில்லை என்று கேட்டால் "தம்பி இது கோருக்கு பேட்டை" என கூற இளித்துக்கொண்டே இறங்கி சென்ட்ரல் சென்று மீண்டும் தாம்பரம் பஸ் ஐ பிடித்தேன்...shhhhhhhhh முடியல...

Comments