ராகிணி எம்.எம்.எஸ் (RAAGINI MMS) (A) - விமர்சனம்...




பதிமூனாம் நம்பர் வீடு, ஜென்மம் எக்ஸ், யாவரும் நலம் வரிசையில் ஒரு நல்ல திகில் பேய் படம் ராகிணி எம்.எம்.எஸ்....முன்னரே சொல்லி விடுகிறேன் வீட்டில் அம்மா அப்பா இருக்கும் பொது இந்த படத்தை பார்த்து விடாதீர்கள்... செருப்படி நிச்சயம் உண்டு...

எனவே இப்படம் தனியாக அல்லது நண்பர்களுடனோ தான் பார்த்தாக வேண்டும்..அப்படி உள்ளன காட்சிகள்...சரி படத்திற்கு வருவோம்...

நகரத்தில் இருந்து தனக்கு தெரிந்தவரின் பங்களாவிற்கு வார இறுதியில்  தனது காதலியை டேட்டிங் க்கு அழைத்து செல்கிறான்... ஒரு கிராமத்தை தாண்டி ஒரு காட்டுக்கு நடுவில் இருண்டு கிடக்கிறது அந்த பங்களா... கொஞ்சம் தூரம் தாண்டி வண்டியை நிறுத்தி விட்டு நடந்து தான் செல்ல வேண்டும்...

ஒரு வழியாக மூன்று மணி நேரம் பயண களைப்பிற்கு பின்னர் பங்களாவிற்கு வருகின்றனர்...கதவை திறந்து லைட்டை தேடும் போதே காதலி தனது லீலையை தொடங்குகிறாள்... நாயகனோ அவசரம் வேண்டாம் என தடுக்கும் பொது பின்னால் வைத்த கவர் தானாக பிரிகிறது... அங்கே இருந்து ஆரம்பிக்கிறது திகில்...


அவள் குளிக்க செல்லும் பொது அவனும் பின்னால் துரத்த கதவை சாத்திக்கொள்கிறாள்... கதவை வேகமாக இழுக்க, "சும்மா இரு டா என கத்துகிறாள் "... ஆனால் அந்த பக்கம் யாருமே இல்லை...வெறும் கதவே தட்டுகிறது...இப்படி அடுக்கடுக்காக திகில் மூட்டை ஏறும் நொடியில்...


டக்கென நாயகியின் தோழியின் ஜோடி வந்து இவர்கள் வேலைக்கு பல்ப்பு கொடுக்கிறது.. எப்படா போய் தொலைப்பாங்க என நொந்து போய் இருக்கும் பொது பாத்ரூம் சென்ற நண்பன் ரத்தத்துடன் வந்து இங்கு ஏற்கனவே இறந்த ஒரு பெண்ணின் ஆவி இருப்பதாக கூறி அவனது காதலியை கூட்டி சென்று விடுகிறான்...


"அவன் கிடக்கிறான் லூசு பய நீ வாடி செல்லம்" நு வந்த வேலையை தொடங்க முற்படும் பொது பின்னால் இருந்து இழுக்கிறது ஆவி... திரும்பி பயப்பட அப்போது தான் உணர்கிறான்...அவள் கைகளோ கட்டப்பட, அப்படியே விட்டு விட்டு தப்பிக்க முயல்கிறான்.. ரத்தத்துடன் திரும்பி வந்து அழுகிறான்... திடீரென அவன் குரல் மாறுகிறது... தன்னை தானே குத்திக் கொள்கிறான்... சாவி இல்லாமல் தப்பிக்க முடியாமல் திண்டாடுகிறாள்... வேறு வழி இன்றி தன் கையை கிழித்து தப்பிக்க முற்படுகிறாள்...



அப்போதும் விடாது கருப்பாய் துரத்துகிறது ஆவி... அவளின் அலறல் கேட்டு காப்பாற்ற வந்த இருவரையும் கொன்று விடுகிறது... அந்த கேப்பில் நாயகி தப்பிக்க முயல தூரத்தில் அவள் தோழி வந்த கார் தெரிகிறது..அதில் ஒரு பிணம் கிடக்கிறது... கார் ஸ்டார்ட் ஆகவும் மறுக்கிறது... பின் ஒரு சிறு குழியில் பதுங்கிக்கொள்ள அங்கே அவள் தோழியின் உடல் கிடக்கிறது...

டக்கென திரும்பி பார்த்தால் அந்த ஆவியின் முகம் க்ளோசப்பில்... யப்பா... (அதென்ன ஐஸ்வர்யா ராயா இப்படி க்ளோஸ் அப் ல காட்ட?)
தர தர வென அவளை பங்களாவிற்கு இழுத்து செல்கிறது.. சிறிது நேரம் கழித்து பார்த்தால் அவள் அருகில் உட்கார்ந்து "நான் அந்த குழந்தையை கொல்லவில்லை..இது ஏன் வீடு...இதை விட்டு நான் போக மாட்டேன்...யாரையும் வெளியே போகவும் விட மாட்டேன்" என டைலாக் பேசுகிறது...அவளின் உடலுக்குள் புகுந்து தற்கொலை செய்ய வைக்கிறது...அவளோ மறுக்க, கன்னத்தில் அறைகிறது... வெய்யில் வர, மறைகிறது...



அதன் பிறகு சில நாட்கள் கழித்து அவளை மன நலம் சரி இல்லாத நிலையில் கண்டெடுத்து ஆறு மாத காலம் சிகிச்சைக்கு பிறகு பழைய மன நிலைக்கு வந்ததும் இந்த கதையெல்லாம் சொல்கிறாள்...

இது உண்மையாக நடந்ததாக சொன்னாலும் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை... மேலும் நாயகனை அந்த ஆவி கொன்றது என்னை கேட்டால் தவறில்லை என்றே கூறுவேன்...தான் ஹீரோ ஆக வேண்டும் என்பதற்காக தன் காதலியுடன் உடலுறவு வைத்ததை படம் பிடிக்க தயாரானவனுக்கு இது ஏற்ற தண்டனை தான்...

தனியா பார்த்து தூக்கத்த விட்டால் என் மேல பலி போடாதீங்க...

மொத்தத்தில் ராகிணி எம்.எம்.எஸ். ஒரு கில்மா ப்ளஸ் டெரர்....

Comments

Thava said…
செம்ம சூப்பரான விமர்சனம்..அப்பப்ப சில காமெடி வரிகளை சேர்த்து இது என்ன ஹாரர் படம்தானானு சந்தேகம் பட வச்சிட்டீங்க..படம் பார்க்கனும் போல இருக்கு.பார்த்து விடுவேன்..நல்ல விமர்சனம்.
தாமதமாக கமெண்ட் போடுவதற்கு மன்னிகவும்..நன்றி.