சொகுசுப்பயணம்


"பயணிகளின் நண்பன்" என்ற போர்டு பேருந்துகளில் நீங்கள் அதிகம் பார்க்கலாம்...ஆனால் நண்பனே சில நேரங்களில்எதிரி ஆகும்தருணமும் உண்டு... அது தான் இந்த அலுவலக நேரம்... காலை7.30 மணிமுதல் 10 மணி மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி ... இந்த நேரத்தில் நீங்கள் எந்த கூட்டமும் இன்றி நிம்மதியாக போனீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே அதிஷ்டக்காரர் தான்... அந்த அளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும்... இதில், ஒரு சில எரியாக்களுக்கு மிக குறைந்த பேருந்துகளே என்ற நிலையில் யோசித்து பாருங்கள்...கீழே உள்ள படத்தில் உள்ளது போல தான் இருக்கும்...



சில நாட்கள் முன்பு வடபழனியில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் பேருந்தில் ஏறினேன்... வடபழனி டிப்போவிலேயே நிற்க முடியாத அளவுக்கு கூட்டம்... ட்ராப்பிக்கில் வேறு அங்கங்கு ஆட்கள் ஏற, கே கே நகர் செல்லும் போதே முழுதும் நிரம்பி வழிய ஆரம்பித்தது... அங்கங்கே நிறுத்தங்கள்... அடுத்து காலை கூட தரையில் வைக்க முடியாத நிலை...கூன் விழுந்த கிழவன் போல திரும்பி ஜன்னல் பக்கம் நின்று செல்ல வேண்டிய நிலை...






இது பத்தாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் வேறு ஏறி விட அவர்களின் நிலையை பார்த்து பரிதாப படுவதை தவிர வேறு வழி இல்லை... அங்கே இங்கே என சுற்றி அசோக் பில்லர் தொடும் பொது கிட்டத்தட்ட அரை மணி நேரம் தாண்டி விட்டது... இந்த நிலை தான் இப்படி என்றால் கண்டக்டரின் நிலை இன்னும் அதோ கதி தான்...

இது போன்ற நேரங்களில் எட்டு ருபாய் டிக்கெட்டுக்கு பத்து ரூபாய் கொடுத்தால் மிச்சம் காந்தி கணக்கு தான்...அசோக் பில்லரில் ஏறியவர்கள்கூறியதேன்னவேன்றால் "இங்கிருந்து பெசன்ட் நகர் செல்ல இந்த என் பேருந்துகள் மட்டுமே...அரை மணி நேரமாக இந்த பேருந்திற்காக காத்திருக்கிறோம்...சைதாப்பேட்டை வந்துவிட்டால் கூட்டம் கொஞ்சம் குறைந்து விடும்"...

அசோக்  நகரில் இருந்து மேற்கு மாம்பலம் வழியாக சி.ஐ.டி நகர் வந்து உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலையை தொட்டது... அப்புறம் எப்போதும் போல அங்கங்கு சிக்னலில் ஒவோருவராக கழன்று கொண்டிருக்க, அவர்களை திட்டி தீர்த்து விட்டார்கள் அம்மணிகள் "இடிக்குரதுக்குன்னே வரானுங்க சனியன் புடிச்சவனுங்க ..... etc" இவங்களுக்கெல்லாம் அறிவே இல்லைங்க ன்னு ஒத்து ஊதிக்கொண்டே அடுத்த சைதாபேட்டை சிக்னலில் இறங்கி விட்டேன்... அதன் பிறகு தான் நிம்மதியாக கொஞ்சம் மூச்சு விட விட முடிந்தது...


ஏற்கனவே  அதிகமாக பேருந்துகளை விட்டிருகிரார்கள்... அப்புறம் ஏன் இப்படி என யோசித்தால் ஒரே பதில் தான்.... எத்தனை பஸ் டிப்போவிர்க்கு போனாலும் குறிப்பிட்ட பஸ் தான் வெளியே வருகிறது...சரியான நேரத்தில் அதிகமான பேருந்துகளை குறிப்பிட்ட சாலைகளில் (முக்கியமாக 18K செல்லும் மேற்கு சைதாபேட்டை,பெசன்ட் நகர் செல்லும் 5E சாலைகளில்) கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்....


Comments