Visitors

hit counters

Sunday, October 31, 2010

சென்னை FILM FESTIVAL


சென்னை பிலிம் சேம்பர் மற்றும் செவன்த் சேனல் இணைந்து நடத்திய  அக்டோபர் 28 முதல் 31 வரையிலான  திரைதிருவிழா  இனிதேநிறைவு பெற்றது.இத்திருவிழாவில் முழுமையாக   என்னால் பங்களிப்பு கொள்ள முடியாதது சற்றே மனவருத்தம் தான்...எனினும் கோவா பிலிம் பெஸ்டிவல்,திருவனந்தபுரம் பிலிம் பெஸ்டிவல் ,சென்னை இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் என அடுக்கடுக்காய் குவிந்து கிடப்பதால் விடு மச்சி பாத்துக்கலாம் என மனதை தேற்றிக்கொண்டேன்..

நான்  பார்த்ததில் முக்கியமான படங்கள் இரண்டு...இப்படியுமா யோசிப்பாங்க என்று நம்மை என்னும் அளவு இருந்தன...
ஒன்று STRAYED மற்றொன்று POLYGAMY.


STRAYED :

 இது ஒரு ரஷிய மொழிப்படம்...இயக்கியவர் "Akan Satayev".இப்படத்தில் மொத்த கதாபாத்திரமே மூன்று நபர்கள் தான்...நாயகன் வழி மாறி மனைவி மற்றும் குழந்தை யுடன் வேறு இடத்திற்கு செல்ல வண்டி பளுதாகிறது...இரவு முழுதும் அங்கேயே செல்ல காலையில் மனைவி,குழந்தை காணமல் போக,அதே சமயம் சற்று தூரத்தில் ஒரே ஒரு வீடு அதில் அப்பா மகள் என இருவர்.அவர்கள் உதவியுடன் இந்த இடத்தை விட்டு சென்றானா? குடும்பத்தை கண்டுபிடித்தானா என்பது தான்  இந்த மூன்று பேருக்குள் நடக்கும் கதையான "STRAYED" படம்...


படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர்...ஒரு நொடி கூட போர் அடிக்கவில்லை...இங்கே தான் இயக்குனரின் Perfection தெளிவாக உள்ளது...

KhasanKydyraliev அவர்களின்  கேமிரா,RenatGaissin அவர்களின்             பின்னணி இசை கதைக்கு நச்சென பொருந்துகிறது...கதையுடன் விலகாமல் தெளிவாக நகர்வது அருமை....

எடிட்டிங் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை...                                                         கேமிரா,பின்னணி இசை பின்னிப்பினைய அதனுள் ஒரு கலவையாய் ஒவ்வொரு FRAME உம் தெளிவாக நகர்த்தி இருக்கிறார்...
கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்...

POLYGAMY :

ஒரே மனைவியை பார்த்து போர் அடித்து விட்டது என்று நினைப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வேறு ஒரு பெண்ணாய் மனைவி இருந்தால் எப்படி இருக்கும்????இது தான் PALYGAMY படத்தின் கதை....

கதையின்படி நாயகன் ஆண்ட்ராஸ் ஒரு எழுத்தாளன்.மனைவி லீலா டீச்சர்.காலங்கள் நகர திடீரென வேறு ஒரு பெண் வீட்டு வேலைகள் செய்துகொண்டு இருக்கிறாள்...நான் தான் லீலா என்கிறாள்...குழம்பி பொய் திருமண போட்டோ,வீடியோ எடுத்து பார்க்கிறான்...  அதிலும் அதே போட்டோ இருக்க,இன்னும் குழம்பி தவிக்கிறான்...பிறகு இதையே தனக்கு சாதகமாக்கி தினம் தினம் ஒவ்வொரு பெண்ணுடன் குஜாலாக இருக்கிறான்...இறுதியில் இதற்கு என்ன தீர்வு என்பது தான் கதை...

திடீரென்று வேறொரு உருவத்தில் மனைவியை பார்த்து குழம்பி விழி பிதுங்கி நிற்கும் சமையத்தில்  "நீ நடிகன் டா உனக்கு த்ரிஷா கிடைப்பாடா என்று நாமே டையலாக் பேசலாம்"...அப்படி ஒரு நடிப்பு...நாயகிக்கு நடிப்பு துவக்கத்திலும் இறுதியிலும் மட்டுமே எனினும் அதையும் செம்மையாய் பூர்த்தி செய்துவிட்டார்...
துவக்கம் முதல் இறுதி வரை நாயகனுக்கு அடுத்தபடியாக அவனது தோழன்...அவனுடன் சேர்ந்து அடிக்கும் டைமிங் காமெடிகள் மினி கவுண்டமணி செந்தில்.சில இடங்களில் காட்சி தொய்வுகள் இருந்தாலும் அதையெல்லாம் சரிகட்டி விட்டது கதை நகர்வு...

குறிப்பு : (இப்படி நமக்கும் நடந்தால் எப்படி இருக்கும் என்று திருமணம் ஆனவர்கள் எண்ணி பார்க்க வேண்டாம்...கிணத்துல குதிச்சாச்சு எந்த கிணத்தில் குதிச்சா என்ன???? :P ) 

இந்த பிலிம் பெஸ்டிவல் முடிவுக்கு வரவே, அடுத்து கோவா பிலிம் பெஸ்டிவல்க்கு  தயாராகி வருகிறேன்...அதில் திரையிடும் படங்களின்   விபரங்கள் விரைவில்...

2 comments:

philosophy prabhakaran said...

இரண்டு படங்களும் அருமை... இரண்டில் எனக்கு strayed அதிகம் பிடித்திருக்கிறது... பதிவிறக்கி பார்க்க முயல்கிறேன்...

Gowtham the OxygeN said...

மிக்க நன்றி தோழரே...வீட்டில் யாரும் இல்லாத பொது பாருங்கள்...இல்லாவிடில் அடுப்பரையில் இருந்து பூரிக்கட்டை பறக்கும்....

You may like this