உதயம் NH4 - விமர்சனம்

(சில காலங்களாக எழுத முடியாமல் போனது சற்று வருத்தமே...  மீண்டும் எனது உதயம் இந்த உதயத்துடன் துவங்குகிறது )



உதயம் NH4 

(பொல்லாதவனுக்கு முன்னால் எழுதிய வெற்றி மாறனின் கதை...)

வெற்றி மாறனின் கதை திரைக்கதையில்,
வேல்ராஜின் ஒளிப்பதிவில்,
ஜி.வி. பிரகாஷ் இசையில்,
கிஷோர் படத்தொகுப்பில்

"ஆடுகளம்" படத்திற்கு பிறகு ஒரு படம் வெளிவரும் போது ஒருவித  எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது... அதை பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்...

சரி கதைக்கு வருவோம்.

கதையின் தொடக்கத்திலேயே ஒரு பெண்ணை கடத்துகிறார்கள் சித்தார்த் அண்ட் கோ ... பெண்ணின் அப்பா, தன் பெண்ணை கண்டுபிடிச்சு கொடுக்க ஒரு பெரிய என்கவுண்டர் ஏகாம்பரத்தை அணுக, அவர் தேடும் போது தான் தெரிகிறது இது கடத்தல் இல்லை, காதல் ஓட்டம் என்று... பின்னர் என்ன நடந்தது.. காதல் வென்றதா, புல்லட் வென்றதா??? இது தான் கதை....



  • நாயகனாக சித்தார்த், நாயகி அஷ்ரிதா ஷெட்டி...
  • அடுத்த போலீஸ் கதாபாத்திரத்தில் கே.கே. மேனன்... (நல்ல வரவு)
நிறைகள்:
  • ஏற்கனவே தொலைக்காட்சியில் ஹிட் அடித்த "யாரோ இவன்" பாடல் தான் என்னை திரைக்கு செல்ல உந்தியது...
  • பாடல்கள் என பார்த்தால் இரண்டு ஓகே... "யாரோ இவன்", "ஓரக்கண்ணால்"
  • படத்தின் மிகப்பெரிய பலம் வேல்ராஜின் ஒளிப்பதிவு... சாலைகள், முக்கியமாக இரவு பப்களை கேமிராவில் செதுக்கிய விதம் அருமை...
  • கதாபாத்திர தேர்வு... சைபர் க்ரைம் ஆபிசர்.... முக்கியமாக சித்தார்த் நண்பர்களாக வருபவர்கள் ... அதில் ஒருவரை "குளிர் 100 டிகிரி", "காதல் சொல்ல வந்தேன்" படங்களில் பார்த்த நினைவு...  அவர்களை வைத்து அடிக்கும் லூட்டிகள் கியூட்... முக்கியமாக இரவில் நாயகி வீட்டில் சென்று மாட்டும் இடம்...
  • மணி மாறனின் இயக்கம்.. பல இடங்களில் வெற்றி மாறனின் தாக்கம்... (முக்கியமாக போலீஸ் விசாரிக்கும் சீன்கள்)
குறைகள்:
  • பலவீனம் ஜி.வி யின் பின்னணி இசை... சில இடங்களில் செட் ஆகாத பின்னணி இசை... (RED CLIFF மியுசிக் லாம் தமிழ் க்கு எதுக்கு???)
  • "யாரோ இவன்" பாடல் கேட்கும் பொது "என் கண்மணி" பாடலை நினைவூட்டுகிறது... 

  • படத்தின் துவக்கத்தில் நான் லீனியரில் செல்லும் வேகம் பிடித்த திரைக்கதை இடைவேளைக்கு பிறகு கட்டிபோட்ட குதிரை ஆனது சோகத்திலும் சோகம்...
  • க்ளைமாக்ஸ் சீனில் இவளுக்கு 18 ஆயிடுச்சு... அதனால, கைது பண்ண முடியாது  நு சொல்றதெல்லாம் உச்சகட்ட காமெடி...
  • படத்தின் மிகப்பெரிய லாஜிக் ஓட்டையே 18  வயசு தான்... காலேஜ்  படிக்குற பொண்ணுக்கு எப்படி 18 ஆகாம இருக்க முடியும்???
  • போலீஸ் மேனன் க்கு அப்பப்ப வரும் மனைவியின் போன் உரையாடலை வைத்தே க்ளைமாக்சை எவரும் யூகிக்க முடியும்... இவர் எப்படியும் விட்டு விடுவார் என்று...
  • பெங்களூரை கதைக்களமாக வைக்க வேண்டிய அவசியம் என்ன?
  • இப்படி மேலும் பட்டியல் நீளும்... இது ஒரு வேளை, வெற்றி மாறனின் பட்டறையாக  இல்லாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்வோமா என்றால் அதன் வாய்ப்பு மிக குறைவு...


வெற்றி மாறனின் முந்தைய படங்களின் தாக்கங்கள் தான் இதன் முக்கிய காரணம்... போல்லாதவனுக்கு பாதி கூட பத்தாது.... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...

Comments