அமெரிக்காவில் வெவேறு பகுதிகளில் வாழும் நான்கு திறமையான மேஜிக் கலைஞர்களை கண்காணிக்கும் ஒருவரிடம் இருந்து அழைப்பு வருகிறது... சரியாக ஒரு வருடம் கழித்து ஒரு லாஸ் வேகாஸில் ஒரு பெரிய மேஜிக் ஷோ.Arthur Tressler என்னும் இன்சுரன்ஸ் கம்பெனி நிறுவனர் தலைமையில் நான்கு பேரும் FOUR HORSEMEN என்ற பெயரின் மூலம் அறிமுகமாகி பிரான்சில் உள்ள ஒரு வங்கியை கொள்ளையடிக்கிறார்கள்...
அந்த கேஸை Dylan Rhodes என்ற FBI அதிகாரி விசாரிக்க, கூடவே இலவச இணைப்பாக Alma Dray என்ற INTERPOL அதிகாரியும் சேர்ந்து அந்த நான்கு பேரை கைது செய்கிறது... இருந்தாலும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுவிக்கிறது... அடுத்து இதை விட பெருசா பிளான் இருக்கு... முடிஞ்சா தடுத்துபாருங்க ன்னு ஹரி படத்து ஹீரோ மாதிரி பஞ்ச் டயலாக் விடறாங்க நாலு பேரும் ...
இப்போது அடுத்த ஷோ New Orleans நகரில்... இதில் Thaddeus Bradley என்னும் மேஜிக் கலைஞர் அவர்கள் மேஜிக் செய்யும் முறையை கண்டறிய முயல்கிறார்... ஆனால் நடந்ததோ வேறு, ட்ரஷர் அக்கவுண்டில் இருந்து 140 மில்லியனை லபக்கி, பார்வையாளர்கள் அக்கவுண்டில் சேர்க்கிறார்கள்... தமிழ் படங்களில் வருவது போலவே எப்பவும் போல ஹீரோ எஸ்கேப்... போலிஸ் புஸ் ஆகி விடுகிறது...
இந்த முறையும் பிடிக்க முடியாத கடுப்பில் FBI அதிகாரி இருக்கும் போது தான் அவருக்கு தெரிகிறது அவர் போன் டேப் செய்யப்படுவது... அதை வைத்து நியுயார்க் நகரில் உள்ள அவர்களின் முகவரியை கண்டுபிடித்து கைது செய்ய முற்படுகையில் மூவர் தப்பி விட, ஒருவர் மட்டும் கார் விபத்தில் இறக்கிறார்...
அப்போது ஒரு ஆவணம் சிக்க, அதை வைத்து திருட இருந்த கஜானாவை மீட்கிறார்கள்.
கார் விபத்தில் இறந்த நண்பனுக்கு YOUTUBE இல் இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு அவர்களின் கடைசி ஷோவுக்கான நேரத்தையும் அறிவிக்கிறார்கள்... ஒரு பக்கம் ஷோ நடந்து கொண்டு இருக்கும் போது தான் தெரிகிறது பிடித்த வண்டியில் ஒரு பைசா கூட இல்லை என்று, அடித்த பணத்தை அழகாய் Thaddeus Bradley காரில் வைத்து அவரை மாட்டி விட்டுகிறார்கள் 4 HORSEMEN ...
உண்மையில் எதற்க்காக இப்படி அவர்கள் திருட வேண்டும், Thaddeus Bradley ஐ ஏன் அவர்கள் மாட்டி விட வேண்டும், Arthur Tressler உடைய கல்லாவை எதற்கு காலி செய்ய வேண்டும், இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்தவன் யார்? ஒரே பதில். "படத்தில் காண்க"
முக்கியமான கதாப்பதிரங்கள்:
FBI AGENT ஆக வரும் மார்க் ரூபலோ (Mark Ruffalo), FOUR HORSEMEN ஐ பிடிக்க அவர் கண்ணில் இருக்கும் வெறி, கிட்டத்தட்ட அவர் முன்னே நடித்த ஹல்க் (HULK) ஐ நினைவு படுத்துகிறது...
INSURANCE கம்பெனி நடத்தி, தனக்கே இன்சூர் பண்ணிக்கொள்ளாமல் பணத்தை இழந்து தவிக்கும் ஆர்தர் ட்ரெஷர் பாத்திரத்தில் வந்த மைக்கேல் கேன் (Michael Caine)
அடுத்த மேஜிக் நிபுணர்களின் ரகசியங்களை வெளியிட்டு, கடைசியில் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட Thaddeus Bradley கதாப்பாத்திரத்தில் மோர்கன் ப்ரீமேன் (Morgan Freeman)
படத்தில் முக்கிய அம்சங்கள்.
- கதாபாத்திரங்கள் - இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. தெலுங்கு ஹீரோயின் போல தேவை இல்லாத சேர்ப்புகள் ஒன்று கூட இல்லை... அதே போல, நான்கு மேஜிக் கலைகர்களுக்கான அறிமுக காட்சிகள் பிரமாதம்...
- கதாபாத்திரங்களின் கோர்ப்பு...
- வேகமாய் அமைத்த திரைக்கதை... டக் டக் என நகரும் திரைக்கதையில் பல ஒட்டைகள் சட்டென தெரியவில்லை...
- வேகமான கேமரா மற்றும் நறுக்கென்ற படத்தொகுப்பு
- வேகத்திற்கு தகுந்தார் போல, பொருந்தக்கூடிய பின்னணி இசை. (முக்கியமாக மேஜிக் ஷோ நடக்கும் போது சேரும் பின்னணி இசை)
- CG காட்சிகளில் உழைப்பு நன்றாக தெரிகிறது.
- வசனங்கள்
படத்தின் ட்ரைலர் மற்றும் படமாக்கிய விதம்.
Comments