உருமி - விமர்சனம்


ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம் என தொடங்கி கல்லூரி வரை நமது ஒவ்வொரு வருட பாட புத்தகத்திலும் உள்ள ஒரு பாடம் "வரலாறு"... ஆனால் வரலாறே பொய்யாக இருந்தால்??? அது போல ஒரு பொய்யில் உள்ள ஒரு உண்மை தான் இந்த "உருமி"...

1500 களில் கதை துவங்குகிறது... 

வாஸ்கோடகாமா என்னும் போர்சுக்கீசியன் முதன் முறையாக வியாபாரம் செய்ய இந்தியா வந்தடைகிறான்.. இந்தியாவில் அப்போதைய கால கட்டத்தில் இந்திய "மிளகு" க்கு ஈடான மிளகு எந்த நாட்டிலும் இல்லை... இதன் தரமும் இந்தியர்களையும் புரிந்து கொண்ட வாஸ்கோ சிலரை மட்டும் விட்டுவிட்டு நாடு திரும்புகிறான்... அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் சென்று அவர்கள் வேலையை தொடங்குகிறார்கள்...

இங்கு தான் ஆர்யாவுக்கு ஓபனிங் சீன்... அவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றுகிறார் (பாத்து பாத்து சலிச்சு போச்சு)... அதே நேரம் வாஸ்கோ மீண்டும் இந்தியா திரும்புகிறான்... இந்த முறை பெரும் படையுடன்... கப்பலில் ஹஜ் சென்ற முஸ்லீம்களை உயிருடன் கொல்கிறான்... பேச்சுவார்த்தைக்கு மகனையும், இன்னொருவனையும் ஆர்யா அனுப்ப, சென்ற இந்தியனின் காதை அறுத்து நாயின் காதை பொருத்தி அசிங்கப்படுத்துகிரார்கள். தக்க சமயம் பார்த்து மகனை காப்பாற்றி விட்டு அவர்களிடம் சுடப்படுகிரார் ஆர்யா.


பிறகு மீண்டும் கதை 2012 க்கு வருகிறது...ப்ரித்விராஜ், பிரபுதேவா கோவாவில் ஒரு BAR இல் வேலை செய்கிறார்கள்... பிரித்வி பேரில் உள்ள ஒரு பழைய நிலம் கேட்டு ஒரு வாய்ப்பு வர, மீண்டும் ஊருக்கு செல்கிறார்கள்...அந்த இடத்தில் ஒரு அனாதை இல்லம் இருக்கிறது... விற்க வேண்டாம் என அதை நிர்வகிக்கும் வித்யா பாலன் கேட்க, பணமே முக்கியம் என இடத்தை விற்க முடிவு செய்ய சில கும்பலால் கடத்தப்பட்டு அவர்களில் ஒருவன் பிரித்வியின் வரலாறை சொல்கிறான்.

மீண்டும் கதை 1500களில்,

கறையை தொட்ட மகன் பிணங்களிடம் இருந்த நகைகளை வைத்து "உருமி" செய்கிறான்... ஒரு முஸ்லீம் சிறுவனுடன் சேருகிறான். வளர்ந்து  ப்ரித்விராஜ், பிரபுதேவா ஆகிறார்கள். தன் தந்தையை கொன்றவர்களை கொன்றே தீர வேண்டும் என்ற வெறியுடன் இருக்க, கிடைத்த சந்தர்பங்களை எப்படி பயன்படுத்தினான். வாஸ்கோ வை கொன்றானா??? என்பது தான் மீதிக்கதை...

பாராட்டுகள் :
  1. எங்கு திரும்பினாலும் கையில் ஒரு ரோஜா, காபி ஷாப் , I AM IN LOVE WITH HER என்று அரைத்த மாவையே அரைத்த தமிழ் சினிமாவில் அரவானுக்கு பிறகு ஒரு மாறுபட்ட கதைக்களம்
  2. இது போன்ற ஒரு வரலாறு படம், போட்ட பணம் வருமா வராதா என்பது பற்றி கவலை படாமல் பணம் போட்ட ப்ரித்விராஜ்
  3. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு... (யானை சேற்றில் கால் வைக்கும் காட்சி அழகாக காட்டப்பட்டிருக்கும்)...
  4. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு... (சொல்ல வேண்டிய அவசியமே இல்லை) (ஆனாலும் மிக முக்கியமாக அருவி நீரின் வழியே ஜெனிலியாவை பார்க்கும் காட்சி -- எனக்கு பிடித்திருந்தது )
  5. பாடல்கள் மற்றும் பின்னணி இசை...
    (முக்கியமாக "கொண்டாடு" பாடல்)

பரித்விக்கு ஜெனிலியாவும், பிரவு தேவாவுக்கு நித்யா மேனனும் 
லவ்வுகிறார்கள்... அதிலும் பிரபு நித்யா காட்சிகள் படு சுவாரஸ்யம்... 
நித்யா மேனனை கரெக்ட் செய்ய பிரபு தேவா முயற்சி செய்யும் காட்சிகள் செம காமெடி....


சண்டை காட்சியிலும் சரி, பிடித்த முயலின் வயிற்றை பார்த்து இது கர்பமாக இருக்கு கொல்ல வேண்டாம்.என்று சொல்லும் இடத்திலும், முக்கியமாக ஜெனிலியாவிடம் கொஞ்சம் கூட வழியாத ஒரு வீரனாகவும் பரிதவி ராஜ் அப்ளாஸ் அடிக்கிறார்...

பிரித்வி + பிரபு தேவா காமிநேஷன் சூப்பர்... உடல் மொழியிலும் சரி வசனங்களும் சரி இருவருக்கும் சரியான பொருத்தம்...

இந்த படத்தை பார்த்தவர்கள் இனிமேல் ஜெனிலியாவை லூசு பொண்ணு என்று சொல்ல மாட்டார்கள்... அப்படி ஒரு நடிப்பு... கோபம, வீரம் என கண்ணிலேயே காட்டும் நேரத்திலும் சரி... சண்டை போடா வேண்டாம் என பிரித்வி சொல்லும் நேரத்தில் ஏக்கத்துடனும் கோவத்துடனும் பொண்ணுங்க சண்டை போடக்கூடாதா னு கேக்கும் இடத்திலும் சரி... செம நடிப்பு...

ஒரு சீனில், காலை உந்தி சுற்றி இன்னொரு காலை மடக்கி குனிந்தபடியே பிரித்வி யை பார்ப்பார்....அடங்கப்பா..!!! (பாவம் புள்ள எத்தனை TAKE எடுத்துச்சோ???)


வாஸ்கோ, வாச்கொவின் மகனாக வருபவன், கோழை இளவரசன், அவனுக்கு ஆமாம் போட்டு பிறகு மன்னரையே கொல்ல திட்டம் போட்டு கொடுக்கும் அந்த அரவான் கேரக்டரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்...

தேவை இல்லாதவை:

  1. ஒரு பாட்டில் தபு தேவை இல்லாத சேர்ப்பு... அயிடம் சாங் வைக்க இது என்ன பேரரசு படமா???
  2. 2012 இல் குகைக்குள் ஆர்யா பேசும் காட்சியில் ஆர்யாவின் குரல் படு கேவலம்
  3. வித்யாபாலன் வரும் சலனம் பாடல். திரைக்கதையில் ஒரு தேவை இல்லாத முட்டுக்கட்டை

படத்தில் பிடித்த வசனங்கள்:

  1. வித்யா பாலன்: உங்களுக்கு கொஞ்சம் கூட சமுதாய அக்கறை இல்லையா???
    பிரித்வி & பிரபு: (கலந்து பேசி விட்டு).... ஹ்ம்ம் இல்லை.
  2. அரவான்: உன் விரோதி யார்?
    பிரித்வி: கையில் ஒன்று வைத்து கண்ணில் கள்ளம் உள்ளவன்
  3. பிரபு தேவா: இப்பவும் அப்பா அது சொன்னாரு இது சொன்னாருன்னு சொல்லாதே... இந்த இடம் சரியில்ல... வா சீக்ரம் போய்டலாம்...
  4. பிரித்வி: நெஞ்சில் உரம் இருந்தால் என்னுடன் வா... ஆண்மையின் அர்த்தத்தை போர்களத்தில் காட்டுகிறேன்...
  5. அரவான்: படுக்கையிலாவது உன் ஆண்மையை காட்டு 
  6. பிரபு: உருமி மட்டும் தான் கொடுத்தியா??? இல்ல உன் மனசையும் சேர்த்து கொடுத்துட்டியா??
  7. பிரித்வி: என் உயிருக்குள் உயிராய் இரு பெண்ணே... எனக்காக உன் உயிரோடு திர்ம்புகிறேன்... 
  8. அரசன்: ஈசன் தந்த கடலுக்கு சுங்கம் வாங்க வெள்ளையனுக்கு என்னடா உரிமை? இதை தந்தவன் தொண்டை குழியில் சொருகி வை.
  9. பிரபு: அடுத்த பிறந்தநாளை நான் காணவே கூடாது. அது தானே உன் ஆசை.
  10. (இறக்கும் நேரத்தில் ப்ரித்வியிடம்) பிரபு: நாளைக்கு இந்த வவ்வாலிய ஒருத்தனுக்கும் தெரியாது... நீ எனக்கு ஒரு வாக்கு கொடு. அந்த பிசிராயன் வாஸ்கோவோட பெயரை, நாளைக்கு இந்த உலகம் வாழ்த்தக்கூடாது
  11. பிரித்வி: இந்த மண்ணில பிறந்து வாழ்ந்தவங்களோட கனவு... அந்த கனவு இப்ப என்னோடது...அந்த கனவை நனவாக்குவது என்னோட கனவு... 
குறைகள் வெகு சிலவே இருந்தாலும், ஒரு நல்ல திரைபடத்தை கொடுத்ததற்கு சந்தோஷ், பிரித்வி இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் ( ஒரு இந்தியனாய்)

-- G.A. கெளதம் 

Comments