நம்பியார் இசை வெளியீடு


ரொம்ப நாளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம்... ஏனென்றால் இந்த படத்தால் தான் ஸ்ரீகாந்தின் அடுத்த (நான் Asst. EDITORஆக  பணிபுரியும்)  படமான சாமியாட்டம் ஷூட்டிங் தள்ளி போய்க்கொண்டே சென்றது...  இத்தனை நாள் காத்திருந்ததற்கு ஏற்ற பலன் கிடைத்தது...


இந்த படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலர் பார்க்கும் போதே கிட்டத்தட்ட பாதி கதை புரிந்திருக்கும்... நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்கள் தான் நமக்கு நம்பியார்... அதனால் நம் வாழ்க்கையில் நாம் என்னென்னவெல்லாம் சந்திக்கிறோம் என்பது தான் கதை...


உண்மையிலேயே ஆடியோ ரிலீசுக்கு இவ்ளோ வரவேற்ப்பு இருக்குமென்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை... தேவி மெயின் ஸ்க்ரீன் நிறைந்து நிற்க இடம் இல்லை... சூர்யா, ஜீவா, பவர் ஸ்டார், பார்த்திபன், விஜய் ஆண்டனி, சரத் குமார், ஷாம், ஷாம், சமுத்திரக்கனி, நமிதா என பெரிய லிஸ்டே வந்திருந்தது...

எம்.ஸ். பிரபு இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்தது புது அனுபவம் அது இது என்று சொல்லிக்கொண்டு இருந்தார்... வந்த எல்லோரும் ஒரே மாடலில் கதை வித்தியாசம் ஸ்ரீகாந்தை தெரியும் அவர் நல்லவர் வல்லவர் என ஒரே மாதரியான புராணமே பாடிக்கொண்டிருந்தனர். பார்த்திபன் எப்போதும் போல நான்கு எதுகை மோனைகளுடன் அவருக்கே உரிய பாணியில் செவ்வனே பேசி விட்டு சென்றார்... இன்னும் எத்தனை காலம் தான் ஒரே மாவை அரைப்பார்களோ...

ட்ரைலர் கொடுத்த இம்பேக்டில் நம்பியார் கண்டிப்பாக, நம்பி-யார் வந்தாலும் பிடிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும் என நம்புவோம்...

Comments