பேருந்தா எமவாகனமா?


எப்போதும் வேலை இல்லாத நேரங்களில் நான் நகர உலா செல்வது வழக்கம்...("நான் எப்போது வேலையில் இருந்திருக்கிறேன் என்று கெட்டுவிடாதீர்கள்")....அப்போது புரசைவாக்கத்தில் இருந்து எக்மோர் வழியாக பேசன் நகர் செல்லும் TN 01 N 4935  எண் கொண்ட  ஒரு பேருந்தில் ஏறினேன்...முதலில் நன்றாக தான் நகர்ந்து கொண்டிருந்தது...பிறகு எக்மோர் க்கு இரண்டு நிறுத்தங்களுக்கு முந்திய ஒரு நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் நிறைய பேர் அடித்து பிடித்து ஏறினார்கள்...அப்போது மணி சரியாக மாலை 4.10 இருக்கும்...பாதி பேர் ஏற ஏற பேருந்து நகர ஆரம்பித்தது...மாணவர்கள் கத்ததொடங்கியும் ஓட்டுனர் அதை சட்டை செய்ய வில்லை...


நல்ல வேலை சற்று தூரத்தில் சாலை போலீஸ் இன் கண்ணில் பட வண்டி நின்றது...அனைத்து மாணவர்களும் ஏறி விட்டனர்...போலீஸ் வாகனம் பஸ் முன் நிறுத்தப்பட்டது...ஒரு போலீஸ் அதிகாரி வெளியே வந்து கண்ட படி திட்ட ஆரம்பித்து விட்டார்.."ஏன் யா உனக்கு அறிவே இல்லையா?இத்தன பேரு ஏறுறது உன் கண்ணனுக்கு தெரியலையா?"என கேட்க "இல்லை சார்.அவங்க வேணும்னே இப்படி பண்றாங்க" என பலியை மாணவர்கள் மீது போட முயன்றார்.அனால் அதை சட்டை செய்யாத போலீஸ் அதிகாரி அவரை கண்டித்தும் அல்லாமல் கொஞ்ச தூரம் அந்த மாணவர்களின் நிறுத்தம் வரை பின் வந்தது போலீஸ் வாகனம் ...

இளைய சமுதாயம் மாணவர்கள் கையில் என வசனம்  பேசும்  சமுதாயம் மாணவர்களை  ஏன் இப்படி அலட்சியப்படுத்துகிறது?ஒரு புறம் மாணவர்களை நம்பி இருக்கும் ஒரு சமுதாயம் இன்னொரு பக்கம் மாணவர்களை ரவுடிகலாகவே பார்க்கும் ஒரு சமுதாயம் என ஏன் இந்த ஏற்றத்தாழ்வுகள்?

Comments