Visitors

hit counters

Friday, April 16, 2010

அரைச்ச மாவை அரைப்போமா !(ஒரு கற்பனை)

(இப்பகுதியில் வரும் அனைத்து பெயர்களும், சம்பவங்களும், உரையாடல்களும், நிகழ்வுகளும் கற்பனையே…)

நடிகர் விஜய் அவரது வீட்டில் சோகமாக அமர்ந்திருக்க அவரை சமாதான செய்யச் செல்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர் அருகே இயக்குனர் பேரரசு

எஸ்.ஏ.சி : [விஜயிடம் சென்று பாடுகிறார் ] நீ அழுதா தாங்க மாட்டேன் .. நாலு வாரம் தூங்கமாட்டேன்.. வெற்றிப்படம் கொடுக்காம ஓயமாட்டேன்.

விஜய்: நீங்க வேற ஏம்பா கடுப்ப கௌப்பிக்கிட்டு. கொஞ்ச வருஷமா எந்த படமும் ஓட மாட்டேங்குதேங்கிற கோவத்துல இருக்கேன். வந்து பாடுறிங்களே..

[அப்போது சன் நெட்வோர்க்ல் இருந்து கால் வர எஸ்.ஏ.சி எடுத்து பேசி விட்டு வைக்கிறார்]

விஜய் : கோபமுடன் என்னவாம்?

எஸ்.ஏ.சி: உங்களை உடனே தேனி போகச் சொல்றாங்க

விஜய் : நாலு நாள் முன்னாடித்தானே தேனில மூளை மூடுக்கில இருக்கிற எல்லா தியேட்டர் முன்னாடியும் கால் வலிக்க நின்னு எல்லாரையும் வேட்டைகாரன் பார்க்கச் சொன்னேன் !

எஸ்.ஏ.சி:இப்ப தியேட்டர் இல்லையாம்.


விஜய் : வேற எங்கேயாம்?

எஸ்.ஏ.சி: தேனி பஸ் ஸ்டாண்டுல நின்னு வேட்டைகாரனை புரோமோட் பன்ன பிட் நோட்டிஸ் கொடுக்கனுமாம்

விஜய்: எப்படி இருந்த நான்.....

எஸ்.ஏ.சி: வேட்டைக்காரன் வேட்டுவெச்சிடுச்சிங்கிற விஷயம் எனக்கு மட்டும் தெரியாமலா இருக்கும் அதனாலதான் நம்பர் 1 மாவு மிஷினை கூட்டிட்டு வந்திருக்கேன்

விஜய்: புரியாமல் மாவு மிஷினா..?

எஸ்.ஏ.சி: ஆமாம்பா.. அரைச்ச மாவை போட்டாலும் அரைச்சி தள்ளுற மாவு மிஷின்தானே நம்ம பேரரசு, அடுத்த படம் அவர்ட்ட கொடுப்போம்.

பேரரசு : ஆமா சார்..வேலையே இல்லாம வெட்டியா இருக்கேன். ரொம்ப .. ரொம்ப புதுமையான சப்ஜெக்ட். உலகத்துல இப்படி ஒரு கதை யராலும் சொல்ல முடியாது. அதாவது அன்பான உங்க தங்கச்சிக்கு அருமையான மாப்பிள்ளை தேடி கட்டி வைங்கிற்ங்க.

விஜய் : இந்த கதையில் ஏதோ புளிச்ச வாசம் வருதே.. மாவு ரொம்ப.. ஸாரி கதை ரொம்ப பழசா..

பேரரசு: நீங்க திருப்பாச்சிய சொல்றிங்க.. அது வேற..

எஸ்.ஏ.சி: எப்டி சொல்றிங்க...?

பேரரசு: அதுல பட்டிக்காட்ல இருந்துகிட்டு டவுன் மாப்பிள்ளை தேடி கட்டி வைக்கிறிங்க.

எஸ்.ஏ.சி: அப்போ இதுல..?

பேரரசு: டவுன்ல இருக்கிற ஹூரோ கரெண்டே இல்லாத காட்டுல மாப்பிள்ளை பார்த்து தன் தங்கச்சிய கட்டிக்கொடுக்கிறார்.

விஜய் : தங்கச்சிய மேல அண்ணணுக்கு ஓன் இவ்வளவு கொலை வெறி..

பேரரசு: வெறி இல்ல சார் பாசம் அதாவது. தன்னோட தங்கச்சி மூணு வயசா இருக்கும்போது காசு வாங்கிக்கிட்டு கடலை முட்டாய் வாங்க ஓடினப்போ... கரெண்டு கம்பம் தடுக்கி விழுந்து காயமாயிடுச்சி! அப்பதான்..எந்த கரெண்ட்டு கம்பம் தடுக்கி விட்டசோ அந்த கம்பம் முன்னாடி நின்று ஒரு சபதம் போடுறிங்க.. ஏய் கரெண்ட் இருந்தாதானே கம்பம். கரெண்டே இல்லாத ஊர்ல என் தங்கசிய் கட்டிக்கொடுப்பேன்னு. சவால் விட்டுட்டு .. ஹை ஸ்பீடுல குனிஞ்சி தரையில ஒரு கோலம் போட்டுட்டு போறிங்க.

எஸ்.ஏ.சி: வழக்கமா மண்ணை அள்ளி தலையில ஸாரி நெத்தியில தானே பூசனும். அதானே விஜய் ரசிகருங்க விசிலடிக்க வசதியா இருக்கும்.

பேரரசு: இல்ல சார் அதை என்னோட போன படத்துல வெச்சிட்டேன், ஓரு படத்துல வெச்சி சீனை வேறபடத்துல வைக்கக் கூடாதுங்கறது என்னோட லட்சியம்.

எஸ்.ஏ.சி: ஏதோ.. அடிச்சுப் பிடிச்சி சன் டி.வி தலையில கட்டி படத்தை ஓட்டிடலாம் ! அப்புறம் பஞ்ச் டயாலாக் நிறைய வேணும் "வேட்டைக்காரன்" ஓடாமப்போனதுக்கு அதான் காரணம்.

விஜய் அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். படத்தோட டைட்டில் என்ன.?

பேரரசு: உளுத்தூர்பேட்டை னு வெச்சிருக்கேன் சார்

எஸ்.ஏ.சி: இன்னும் உங்கசிட்டேர்ந்து நிறைய எதிர்பார்க்கிறேன்

பேரரசு: அப்போ.. தண்டையார் பேட்டைனு மாத்திக்கலாம் சார், எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல.

எஸ்.ஏ.சி: சூப்பர்,, வெரிகுட் டைட்டில் ஓகே. பஞ்ச் டயலாக்..?

பேரரசு : கதை ரெடி பண்றதுக்கு முன்னாடி பஞ்ச் பயலாக் ரெடி பண்ணிட்டுதானே கதைகுள்ள போனேன். சொல்றேன் கேட்டுக்கங்க. சுவத்துல ஓடுறது பல்லி .. சுத்திசுத்தி ஓடுறது கில்லி.. செத்தாக்க போடுறது கொள்ளி.. சாமத்துல வீசுறது மல்லி..

எஸ்.ஏ.சி: வெரிகுட்.. அருமையான இருக்கு அடுத்து..?

பேரரசு: [ குஷியுடன் ] எரிமலையில ஏணியும், பனைமரத்துல பாலும் முடியவே முடியாது,

விஜய்: அசத்துறிங்க பேரரசு இன்னும் வீரமா எதாச்சும்..?

பேரரசு: கட்டபொம்மன் கைலயில கத்தி கார்பெண்டர் கைல சுத்தி ரெண்டையும் மாத்திப்போட்டா "க" சுவாயிடும் , "சு" கவாயிடும்.

எஸ்.ஏ.சி: அடடா,, அடடா தொடைய தட்டிக்கிட்டு இந்த பஞ்ச் டயலாக் விஜய் பேசினான்னா.. தியேட்டரே பத்தி எரியுமே..

பேரரசு : சார் .. ஒரு சின்ன கரெக்ஷன் இந்த டயலாக் எல்லாம் விஜய்க்கு இல்ல..

எஸ்.ஏ.சி: விஜய் இருவரும் கோரஸாக பின்னே.. ?

பேரரசு: இதெல்லாம் படத்துல "INTERVAL" 'இக்கு அப்புறமா நான் தோன்றி பேசுற பஞ்ச் டயலாக் !

என்றதும் இருவரும் கோபமாக பேரரசு மேல் பாய எஸ்கேப் பாகி தலைதெறிக்க ஓடுகிறார் பேரரசு.,

நன்றி : உத்தமபுத்திரன்-தடாகம்...

5 comments:

angel said...

very nice

Thirumalai Kandasami said...

Very funny,,Dialogues super..Keep it up.

☀நான் ஆதவன்☀ said...

:) வீட்டுக்கு ஆட்டோ வரப்போகுது :))

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

GREAT USE THIS CREATIVITY IN POSITIVE WAY

Anonymous said...

EXCELLENT CRITICS BUT THINK AND USE IT IN POSITIVE WAY MAN

You may like this