Visitors

hit counters

Wednesday, February 17, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை - விமர்சனம்

எல்லா விஷயத்திலும் தனக்கு பெஸ்ட் ஆனது தான் வேணும் நு நினைக்கும் ஹீரோ மூன்று பெண்களை காதலித்து அதில் பெஸ்ட் ஆன பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள நினைத்து அதில் மாட்டிக்கொண்டு எப்படி தப்பிக்கிறார் என்பது தான் தீராத விளையாட்டுப் பிள்ளை...

சத்யம்,தோரணை படத்தின் தோல்விக்கு பிறகு விஷாலும் , வேட்டைக்காரன் தோல்விக்கு பிரமும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்.

பழைய இரண்டு  படங்களுடன்    ஒப்பிட்டுப்பார்க்கும்  போது இந்த படம் சற்று தேறியுள்ளது...விஷாலுடன் நீது சந்திரா,சராஹ் ஜானே திஸ் மற்றும் தனுஸ்ரீ தாதா ஆகியோர் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்...பழைய படங்களில் காட்டின ஹீரோஇசம் இல்லாமல் ஒரு சாக்லேட் பையனாக வலம் வந்திருக்கிறார்...

 
படத்தில் முக்கியமான பிளஸ் சந்தானம்,சத்யன் மற்றும் மயில்சாமியுடைய காமெடி கூட்டணி...முக்கியமாக சந்தானம் தான் டைமிங் காமெடிகளில் வெளுத்து வாங்குகிறார்...முக்கியமாக"அந்த பொண்ணு கேரெக்டர் சரியில்ல மச்சான் ஒரே ஒரு பையன  லவ் பண்ணி அவனையே கட்டிக்கனுமாமா,இவள பாத்து மத்த பொண்ணுங்க லாம் கெட்டு போய்டாதா" நு கேட்கும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது சரவெடி...  


ஆனால் படத்தின் முதல் பாதியை சந்தானமும் காமெடி குழுவுமே காபாற்றுகிறது...
"கருப்பா இருக்குறவன பொண்ணுகளுக்கு புடிக்காது நு எவன் டா சோனான்" போன்ற டயலாகுகளில் விசில் பறந்தாலும் சில நேரங்களில் தேவை இல்லாத காட்சி சேர்க்கைகள் கடுப்பேற்றுகின்றன...முதல் பாதியோ   இப்படி இருக்க இரண்டாம் பாதி இன்னும் மோசம்...யப்பா சாமி எப்படா பாட்டு போகும் என காத்திருக்க வைக்கிறது...இரண்டாம் பாதி படு இழுவை...

மூன்று நாயகிகளில் நீதுவை தவிர யாரும் பெரிதாக சோபிக்கவில்லை...ஆனால் கிளைமாக்ஸ் இல் சராஹ் விஷால் மீது நம்பிக்கை வைக்கும் நேரத்தில் நெஞ்சை தொடுகிறார்...


 நமக்கே பீலிங் ஆக இருக்கிறது...(இப்படி ஒரு பொண்ணு கிடைக்காதா?)


தனுஸ்ரீ போர்த்தி நடித்திருப்பது ஆச்சர்யம்...ஆஷிகுபனாயா நாயகி இப்படி நடிப்பார் என எவரும் எதிர்பார்த்திருக்கமாடார்கள்...


மூன்று நாயகிகளில் அதிகம் மனதில் நிற்பவர் நீது தான்...கவர்ச்சியிலும் வெளுத்து வாங்குகிறார்...யாவரும் நலம் படத்தில் வந்த நீதுவா இப்படி  என ஆச்சர்யமாக இருக்கிறது...

படத்தின் கிளைமாக்ஸ் ஐ தேவை இல்லாமல் இழுத்திருக்கிறார் இயக்குனர் திரு எதுக்கும் அவர் அப்பா டைரக்டர் அகத்தியன் கிட்ட அட்வைஸ் கேட்டிருக்கலாம்...அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு,யுவனின் இசை இரண்டுமே வெளுத்து வாங்குகிறது...ஆனால் பின்னணி இசையில் மற்றும் சில பல குழப்பங்கள்...

திடீரென என்ட்ரி கொடுக்கும் பிரகாஷ் ராஜ் வந்த வேகத்தில் ஓடி விடுகிறார்...எதற்கு வந்தார் என்று ஒண்ணுமே புரியவில்லை...ஹீரோ வை அடிக்க ஆள் இல்லை என்பதற்காக வேறு ஆளா கிடைக்கவில்லை????

 என்னவோ முதல் பாதி எடுத்து விட்டோமே என்பதற்காக படம் நகவது போல இருக்கிறது...கிளைமாக்ஸ் இல் பழைய நினைவை இழந்ததாக கூறும் சமயங்களில் நன்றாக யோசித்திருக்கிறார்...மூன்று பெண்களில் ஒருத்தியையே வில்லியாக காட்டினாலும்  படத்தை நகர்த்துவதில் கவனம் இழந்துவிட்டார்..

தேவை இல்லாத  இடங்களில் பக்க பக்க வசனங்களை விஷால் பேசும் நேரத்தில் எரிச்சலூட்டுகிறது...

எப்படியோ தோரணை,சத்யம் போன்ற படங்களுடன் ஒப்பிடும் போது விஷாலுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் தெரிகிறது...மற்ற படி ஒன்னும் பெரிதாக தெரியவில்லை...எப்படியோ காமெடி,மூன்று நாயகிகள்,பாடல்கள் என இந்த படம் தப்பித்துவிடும்...

1 comment:

shabi said...

இயக்குனர் திரு எதுக்கும் அவர் அப்பா டைரக்டர் அகத்தியன////மகனா மருமகனா.....

You may like this