காந்தி ஒரு சிறந்த தந்தையா ?- காந்தி மை பாதர்


இணையத்தில் பாட்டு கேட்டுக்கொண்டே உலாவும் போது ஒரே சில பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க எண்ணுவோம்...அந்த வகையில் மீண்டும் மீண்டும் கேட்க  வைத்து இந்த படத்தின் ஹரிலால் தீம் மியூசிக்...

எப்போதும் போல தூம்,பனா,ஜப் வீ மேட் என பாடல்களின் வரிசையில் நான் அதிகம் கேட்கும் இந்த படத்தின் போல்டர் தொலய மீண்டும்  அந்த இசையை டவுன்லோட் செய்தேன்...கேட்கும் போதே கண்களில் நீர் தாரை தாரையாக கொட்ட ஆரம்பிக்கின்றன கண்ணீர் மனதில்...பியுஷ் கனோஜியா தான் இந்த இசைக்கு சொந்தக்காரர்...




இந்த படம் ஹரிலால் காந்தி யின் Harilal Gandhi: A Life  என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது...தந்தையை போல வெளி நாடு சென்று படிக்க வேண்டும் என நினைத்து போக முடியாமல் தன் முஸ்லீம் மனைவி பிள்ளைகளுடன் தனித்து சென்று குடிகாரனாகி வறுமையில் வாடி இறந்த ஒரு காந்தி மகனின் கதை...

அணில் கபூர் தயாரித்த முதல் படமே அருமையான படமாகியுள்ளது...இப்படி ஒரு படம் எடுக்கும் தைரியம் கொண்ட உங்களுக்கு என்றுமே நான் தலை வணங்குகிறேன்...இந்த படத்தின் போஸ்டர் ஐ எங்கு பார்த்தாலும் உங்களின் நினைவு தான் வரும்...தன் சிந்தனையை அப்படியே திரையில் தெளித்த இயக்குனர் பெரோஸ் கானுக்கு சபாஷ்...


காந்தியின் மகனை நான் பார்த்ததில்லை...அனால் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் என தோன்றும் அளவுக்கு அக்க்ஷை கன்னா நடித்திருந்தார்...முஸ்லீம் பெண்ணாக பூமிகா வும் அருமை...


இன்னும்  கூட காந்தியின் மகன் யார் என்று கேட்டால் அக்க்ஷை கண்ணா என வாய் தவறி கூறி விடுவேன்...அனைத்து இந்தியர்களையும் தன் பிள்ளையாக கருதிய தேசத்தந்தை, தன் பிள்ளைக்கு மட்டும் ஏன் ஒரு சிறந்த தந்தையாக இருக்கவில்லை???


Comments