கார்த்திக் காலிங் கார்த்திக் - விமர்சனம்


தனக்கென்று யாரும் இல்லாத ஹீரோ கார்த்திக் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறார்...மிகவும் அமைதியான குணம் கொண்ட நமது ஹீரோ மிகவும் துரதிஷ்ட சாலி...பாவம்...இவர் மீது எப்போதுமே மூட்டை மூட்டையாக வேலை விழுகிறது...வடிவேலு ஒரு படத்தில் சொல்லும் "இந்த ரணகளத்துலையும்  உனக்கு கிளுகிளுப்பா?" என்பது போல இத்தனை பிரச்சனையிலும் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் தீபிகா படுகோனே வை ஒரு தலையாக காதலிக்கிறார்...



ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு முக்கியமான டாக்குமெண்டை முடிக்க  ஒரு நாள் இரவு முழுக்க வேலை செய்ய வேண்டி இருக்கிறது...ஆனால் மாற்றி பிரிண்ட் செய்வதால் மீண்டும் வேலை செய்ய சொல்லி போன் இல் மேனேஜர் அர்ச்சனை பாட கடுப்பாகிய ஹீரோ போனை உடைத்து விடுகிறார்...புது  போன் வாங்குகிறார்*...வாழ்கையே வெறுத்துப்போய் சாக தூக்கு மாத்திரை சாப்பிட முற்படும் போது கார்த்திக் என்ற பெயரில் ஒரு போன் கால் வருகிறது...

அதற்குப்பிறகு தினமும் ஐந்து மணிக்கு  கால் வருகிறது...இப்படி இரு, அப்படி இருக்காதே என ஐடியா கொடுக்கிறார் போன்  செய்யும்  கார்த்திக்  என்ற  நபர் ...தீபிகாவுடன் பேச்ளர் என்று சொல்லிக்கொண்டு சுற்றும் சக ஊழியனை அவனது மனைவியை வரவைத்து மாட்டி விடுகிறார்...அலுவலகத்திலும் பதவி  உயர்வு...தீபிகாவுடன் நட்பு காதலாக மாறுகிறது ....நடை உடை  என வாழ்க்கையே மாறுகிறது..அதற்கு பிறகும் மீண்டும் கால் வர வர அது தொல்லையாக மாறுகிறது...

ஒரு நாள் இதை பிரியங்காவிடம் கூற பிரச்சனை அதிலிருந்து ஆரம்பிக்கிறது...மன நோய் டாக்டர் ஆன ஷெபாலி ஷாஹ் ஐ சந்திக்கிறார்கள்...இதன் பிறகு வந்த அனைத்தும் வந்த வழியிலேயே செல்கிறது...வேலை போகிறது... பிரியங்கா சண்டை போட்டு பிரிந்து விடுகிறார்...என்ன செய்வது என புரியாத கார்த்திக் மும்பை யை விட்டு கொச்சின்க்கு யாரிடமும் சொல்லாமல் செல்கிறார்...

மாதங்கள் கழிகின்றன...தொ(ல்)லைபேசி  இல்லாமல் ஒரு நிம்மதியான வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...எல்லா பிரச்சனையும் தீர்ந்து விட்டதாக தீபிகாவிற்கு மெயில் அனுப்புகிறார்...அதே நேரம் அலுவலகத்தில் அதிகாரி ஊருக்கு செல்வதால் போன் வாங்கும் படி சொல்கிறார்...மீண்டும் மும்பை யில் வாங்கிய அதே போன் ஐ வாங்குகிறார்...வாங்கிய உடனே மீண்டும் போன்..மீண்டும் அதே நபர்...இந்த முறையும் தூக்கு மாத்திரை சாப்பிட்டு சாக முடிவு செய்கிறார்...அப்போது சரியாக தீபிகா படுகோனே வந்து காப்பாற்றி விடுகிறார்...(இது மட்டும் எல்லா படத்துலயும் எப்படி கரெக்டா நடக்குது????)

அப்போது தான் புரிகிறது கார்த்திக் என்ற பெயரில் வந்த கால்கள் அனைத்தும் அவரே ரெகார்ட் செய்த கால்கள்...அந்த போன் இல் ரெகார்ட் செய்து வைக்கும் REMINDER என்னும் வசதி இருக்கிறது...இவருக்குள் இருக்கும் இன்னொரு நபர் 3 மணி ஆனால் ரெகார்ட் செய்து 5 மணிக்கு கால் செய்வது போல வைக்கிறார்...(அதனால் தான் புது போன் வாங்குகிறார் என்று மேலே எழுதும் போது பக்கத்தில் ஒரு  *  குறி    சேர்த்தேன்) ...அந்நியன் படம் இரண்டாம் பாகம் பார்த்தது போல இருந்தது...கிட்டத்தட்ட அந்த படத்தில் காட்டப்படும் MULTIPLE PERSONALITY DISORDER என்ற வியாதி தான் இதிலும்..


இந்த படத்தில் பார்கான் அக்தர் நடித்தார் என்பதை விட அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்...அவர் "ராக் ஆன் " (Rock On) படத்தில் வாங்கிய Filmfare Best Male Debut அவரது இதற்க்கு ஒரு உதாரணம்...ஒரு தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், வசனகர்த்தா, கவிஞன் என ஏற்கனவே இதனை பேர் இவருக்குள் இருக்கிறார்கள்..இப்போது ஒரு சிறந்த நடிகனாகவும் தன்னை நிறுத்திக்கொண்டார்..   


தீபிகா படுகோனேவும் சளைத்தவர் இல்லை..தனக்கு கொடுத்த பாத்திரத்தில் சரியாக நிற்கிறார்...ஆபீசில் யாரும் பார்காத படி சிகரெட் குடிப்பது,ஹீரோக்கு இப்படி ஒரு வியாதி இருப்பது தெரிந்து பீல் பண்ணுவது,ஹீரோ இரண்டு ஆண்டுகளாக அனுப்ப நினைத்து ஆனால் பயந்து சேமித்து வைத்த ஈ மெயில்களை பார்க்கும் பொது பீல் பண்ணுவது என பிண்ணி எடுத்திருக்கிறார்...என்னை கேட்டால் ஓம் ஷாந்தி ஓம் படத்திற்கு பிறகு சிறப்பான நடிப்பு தீபிகா விற்கு இந்த படம் என்று  சொல்வேன்...பாடல்கள் அதிகம் இல்லாதது இந்த படத்திற்கு ஒரு ப்ளஸ்...(ஈரம் படத்தை போலவே)சிறிது நேரமே வந்தாலும் காச்சு மூச்சு னு கத்தும் பாத்திரத்தில் ராம் கபூரும், மனோதத்துவ நிபுணராக வரும் ஷெபாலி ஷாஹ் உம்  மனதில் நிற்கிறார்கள்...

இசை எப்பவும் போல ஷங்கர்-எசான்-லாய் கூட்டணி...ராக் ஆன் படத்தில் கானுக்கும் இவர்களுக்கும்  ஆரம்பித்த பந்தம் இன்னும் தொடர்கிறது...அடுத்து 2011 இல் வர இருக்கும் டான் 2 க்கும் இவர்கள் தான் இசை...கெளப்புங்க சார்...

ஒரு அமைதியான வெற்றி இயக்குனர் விஜய்  லல்வாணி அவர்களுக்கு...கிட்டத்தட்ட பேய் படம் போல ஒரு த்ரில்லர்  கதையை நகர்த்தி படத்தின் கடைசி  நொடி வரை யோசிக்க வைக்காத படி படத்தை நகர்த்தி இருக்கும் திறன் அருமை..இதை பார்க்கும் நமது ஈரம் படம் தான் நினைவுக்கு வரும்...ஈரம் படத்தின் இடைவெளியில் தான் அது பேய் என்பது நமக்கே தெரியும்...கிட்டத்தட்ட அதே போல தான் இதுவும்...இதிலிருந்தே இந்திய படங்களின் தரம் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது  என்பது நமக்கு தெரிகிறது...

கார்த்திக் காலிங் கார்த்திக் மொத்தத்தில் யாரையும் அழைக்காத ஒரு வெற்றி...

Comments