கொச்சின் பயணம்

சென்ற வருடம் கோபி கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் போது போட்டிகளுக்கு சென்ற கல்லூரிகளில் கேரளாவை சேர்ந்த நாராயண குரு கல்லூரியும் ஒன்று...அந்த கல்லூரியின் MCA Dept HOD தமிழகத்தை செர்ந்தவர் என்பதால் அழைப்பு வந்தது  ...அந்த கல்லூரியோ அமைந்திருப்பது எர்ணாகுளம் அருகே ஆளுவா என்ற இடத்தில்...அங்கிரிந்து தான் உதயமானது எனது வேறு மாநில பயணங்கள்...
சென்ற வருடம் நேரம் இல்லாத காரணத்தால் சரியாகவே கொச்சின் சுற்றிப்பார்க்க முடியவில்லை...இந்த முறை ஒரு சிறந்த நண்பனை துணைக்கு அனுபியுள்ளார் கடவுள்...

பிப்ரவரி 10 :

காலை கல்லூரியை அடைந்தோம்...இந்த முறை போட்டிகள் இருந்தும் நாங்கள் பெரிதாக எதிலும் கலந்துகொள்ளவில்லை... ஏதோ பேருக்கு தலையை காட்டிவிட்டு அருகில் உள்ள செராய் பீச் க்கு புறப்பட்டோம்...எர்ணாகுளம்,கொச்சின் இரண்டிலுமே கடற்கரை என்னும் ஒன்று இல்லை..(அது போன்ற கரை  Backwater என அழைக்கப்படுகிறது)...சென்னை யை போல சாதாரண கரையை பார்க்க வேண்டுமானால் நாம் செராய் பீச்க்கு  தான் படைஎடுக்கவேண்டும்...




உண்மையில் மிக அழகிய கடற்க்கரை தான் அது...கோழிக்கோடு அடைந்த வாஸ்கோடகாமாவை போல அவ்வளவு மகிழ்ச்சி...எனக்கும் என்னுடன் வந்த அந்த அப்பாவி துஷார் வர்மா என்ற வட நாட்டு நண்பனுக்கும்...எப்போதும் போல காமெடியான போடோக்களை எடுத்துக்கொண்டோம்...


பிப்ரவரி 11 :

கொச்சின் இல் ஒரு இடம்  விடாமல் சுற்றதொடங்கினோம் ...இங்கே நம் ஊரில் டவுன் பஸ் இருப்பதைப்போல அங்கே படகுகள் இருக்கின்றன...குறைந்த கட்டணத்திலும் விரைவாகவும் நாம் நினைத்த இடத்தை அடையலாம்...



 வெலிங்கடன் கடல்,மட்டன்சேரி ராஜாவின் அரண்மனை,பல்கட்டி அரண்மனை என அனைத்தையும் காண படகில் தான் பயணித்தோம்...இரண்டு ஜிபிக்கு போடோக்கள் எடுத்தோம் இதில் ஒரு விந்தை என்னவென்றால் நானும் என் நண்பனும் சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை..அனைத்தும் நான் அவனுக்காக,அவன் எனக்காக எடுத்த போடோக்களே ...
 

 
மேலே உள்ள படத்தில் நீல நிற உடையில்  ஒன்னும் தெரியாத குழந்தை போல முகம் வைத்திருக்கும் இவன் தான் என் தோழன் துஷார் வர்மா...எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி பயோ டெக்னாலஜி படிக்க சட்டிஸ்கர் இல் இருந்து வந்திருக்கிறான் ...(உண்மையில் நன்றாக படிப்பான்...என்னைப்போல இல்லை )

சரி சரி சிரிக்க வேண்டாம்...அதற்கடுத்து அன்று இரவு ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் இல் நடக்கும்  சர்வதேச  மீன்கள் கண்காட்சி செல்ல திட்டமிட்டு திரும்பும்  நேரத்தில் ASIAN EXPLORER என்ற சிங்கப்பூர் கப்பலை பார்த்து அதை   போட்டோ  எடுக்க  நினைத்து   தடை செய்யப்பட பகுதியில் நுழைந்து விட்டோம்...அவ்வளவு தான், திடீரென ஒருவர்  வந்து  ஆங்கிலத்தில்  தஸ்ஸு  புஸ்ஸு  என கத்ததொடங்கி விட்டார்...தீவிரவாதியை சோதனையிடுவது போல ஆயிரத்தெட்டு கேள்விகள் நல்ல வேலை கையில் காலேஜ் ஐடி கார்டு இருந்ததால் தப்பித்தோம்...எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே !!!!


ஆனால் அவர் ரொம்ப நல்லவர் போல...படகு  வரும்  இடத்திற்கு   அவரே எங்களை ட்ராப் செய்து விட்டு போனார்...


பரவாயில்லை கொடுத்த 40 ரூபாய்க்கு அறிய விதமான மீன்களை எல்லாம் பார்த்தோம்...
அன்று இரவு என்ன  ஆனதென்றே தெரியவில்லை...திடீரென அம்மா நினைவு...எந்த விக்ரமன் படம் பார்த்தேன் என நியாபஹம்  இல்லை..எனக்கு தெரியும் இது அவரின் வேலை தான் என்று...எனவே எர்ணாகுளத்தில் இருந்து துஷாரை சென்னைக்கு அனுப்பி டாடா காட்டி விட்டு ஈரோடு செல்லும் டி கார்டன் ரயிலில் கிளம்பினேன்...

எழுதும் என்னை பாராட்டுவதை விட படிக்கும் உங்களையே நீங்கள்  பாராடிக்கொளுங்கள்...இதை படிக்கும் அளவுக்கு உங்கள் மனது தாங்கியதற்கு...  :)


Comments