"வாங்க சார் வாங்க சார்","ரெண்டு கர்சீப் பத்து ரூபா சார்"...இது போன்ற வசங்களை நீங்கள் தெருக்களில்,சாலை ஓரங்களில் பார்த்திருப்பீர்கள்....அதையெல்லாம் கண்டுகொலாமல் நமது வேலையே பார்த்துக்கொண்டே இருப்போம்...சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் வெறும் விண்டோ ஷாபிங் செய்ய,"சார் இந்த ஷர்ட் உங்களுக்கு நல்லா இருக்கும் சார்" நு சொல்லுபவர்களிடம் வேண்டுமென்றே இல்லாத ஒன்றை கேட்டு விட்டு வெளிவருவோம்...தினம்தினம் நின்று கொண்டே நரகம்காணும் அவர்களுக்குள்ளே இருக்கும் காதலை அழகாய் சித்தரிதிருப்பது தான் "அங்காடி தெரு"...

ஹீரோ பனிரெண்டாம் படிக்கும் மாணவன்...தந்தை விபத்தில் இறந்து போக குடும்ப சூழ்நிலையால் வேறு வழி இன்றி தன நண்பனுடன் சென்னையில் உள்ள பெரிய கடையில் வேலைக்கு சேர்கிறார்....அங்கு அனைவரும் அடிமைகள் போல நடத்தப்படுவதை பார்த்து கொதிக்கிறார்...ஆனால் வேறு வழி இன்றி குண்டுச்சட்டிக்குள் தான் குதிரை ஓட்ட வேண்டும் என புரிந்துகொண்டு இயந்திரமான வாழ்க்கை வாழ்கிறார்...இதற்கிடையில் நாயகியின் அறிமுகம்...
வெயில் படத்திலேயே நம்மை கட்டிபோட்ட வசந்த பாலன் இந்த படத்தில் நம்மை கண்ணீர் விட்டு அழ சில இடங்களில் அவகாசம் தருகிறார்...ஊழியர்களை கெட்ட வார்த்தைகளில் திட்டுவது,ரூம்க்குள் கூட்டிபோய் சித்ரவதை செய்வது...அவர்களுக்கான உணவு வழங்கும் முறை...இவற்றை காட்டும் பொது இது போன்ற தொழிலாளர்கள் படும் வேதனை புரிகிறது...
சிலமுறை நானும் சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருக்கிறேன்... எதையும் வாங்காமல் விலை மட்டும் கேட்டு வந்திருக்கிறேன்...இவர்களுக்கு இப்படியும் ஒரு பின்னணி இருக்கும் என காண்பித்து விட்டது...இந்த படத்தை பார்பவர்கள் இனிமேல் விளையாட்டுக்கும் கூட என்னை போல அங்கு விண்டோ ஷாப்பிங் செய்ய போக மாட்டார்கள்...
நாயகன் மகேஷ், நாயகி அஞ்சலி இருவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்...அதே போல நண்பனாக வரும் பாண்டி நடிப்பிலும் காமெடியிலும் வெளுத்து கட்டியிருக்கிறார்...அதிலும் பாண்டி,சோபியா காதல் காட்சிகள்,முக்கியமாக கடவுள் வாழ்த்துப்பாடலை கவிதையாய் தரும் காட்சிகள் வயிற்றை பதம் பார்க்கின்றன...அதே போல நாயகன்,நாயகி இருவரும் சொல்லும் பள்ளிப்பருவ காதல் காட்சிகள் ஓர் மினி ஆட்டோகிராப்... படம் முழுக்க நெல்லைமனம் வீசுகிறது...
சில்லாத்தி,குந்தாணி போன்ற கிராமத்து வார்த்தைகளும் படம் முழுக்க வலம் வருகின்றன....
சில்லாத்தி,குந்தாணி போன்ற கிராமத்து வார்த்தைகளும் படம் முழுக்க வலம் வருகின்றன....
அதே கடையில் காதல் செய்த இருவர் மாட்டிக்கொள்வது,ஆட்டோ காரர்களிடம் தப்பி ஓடுவது என ஒவ்வொரு காட்சியின் நெருடல்களையும் காண்பித்திருக்கிறார்...நாயகன் நாயகி மட்டும் இன்றி படத்தில் வரும் அனைவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்...உதாரணம் மேனேஜர், அண்ணாச்சி....
நாயகியின் தங்கை நாய் கூண்டிற்குள் படுத்து கிடப்பது,நாயகியை மேனேஜர் பாலியல் கொடுமைப்படுத்துவது என இதயத்தை கசக்கி விட்டார் இயக்குனர்...நாயகி அஞ்சலி நடிப்பில் ஒரு தேற்றம்...கற்றது தமிழ் படத்திருக்கு பிறகு ஒரு நல்ல படிக்கட்டு....படத்தில் அதிகம் கனியாகவே நம்மை இனிக்க வைக்கிறார்...
பேராண்மை படத்திற்கு பிறகு ஐங்கரனின் சிறந்த தயாரிப்பு என்றே கூறலாம்...ஜி.வீ.பிரகாஷ்,விஜய் ஆண்டனி கூட்டணியில் இசை அருமை...முக்கியமாக "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை,உன் பேரை சொல்லும் போதே " பாடல்கள் படம் பார்த்த பின்னும்,F.M கெட்ட பிறகும் காதினுள் ரீங்காரம் அடிக்கின்றன... ஸ்ரீகர் பிரசாத் இன் எடிட்டிங் அளவான வெட்டு ஒட்டு...
இந்த படத்தில் சிறு சிறு கேரக்டர்கள் அதிகம்..அதுவும் கதைக்கு பலம்...
1.கழிவறையை சுத்தம் செய்து காசு வாங்கும் ஒருவன்...
2.தன் அண்ணன் வேலை செய்வதாக கூறி பஸ் ஸ்டாண்டில் ஒருவரிடம் கடைப்பையை
வாங்கி வீட்டில் மாட்டி அழகு பார்க்கும் நாயகனின் தங்கை...
3.ஊனமானவன் மற்றும் அவன் மனைவி...
4.பார்வை இழந்த ஒரு வியாபாரி....
இதில் முக்கியமாக, ஊனமானவனின் மனைவி தனக்கு பிறந்த ஊனமான குழந்தையை பார்வை இழந்த ஒருவரிடம் காட்டி "ஊனமாகி பிறக்கணும்நு தான் நான் வேண்டினேன்...அப்ப தான் அவருக்கு பொறந்ததுநு ஊரு நம்பும்...இனிமேல் யாரும் என்ன தப்பா பேச மாட்டாங்க" நு சொல்லி முடிப்பதற்குள் தியேட்டர்க்குள் கைதட்டல்கள்....கிளைமாக்ஸ் காட்சியில் கண்களை குளமாகி விட்டார் இயக்குனர்...
ரங்கநாதன் தெருவின் உண்மை முகம் இன்று வெளிப்பட்டு விட்டது...சரவணா ஸ்டோர்ஸ் போன்ற உயர்ந்த கட்டிடங்கள் கொண்ட மட்டமான மனிதர்களின் மனதை பிரதிபலித்து விட்டன...
இந்த விமர்சனத்தை வெறும் வரிகளால் முடிக்கவிரும்பவில்லை...
Comments
அப்படியா? எல்லோரும் இசைதான் படத்தைக் கெடுத்துவிட்டது என எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..
"உன் பேரை சொல்லும் போதே",
"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை"...
இந்த இரண்டு பாடல்களையும் கேட்டால் நீங்கள் அப்படி கூற மாட்டீர்கள்...சில இடங்களில் பின்னணி இசை சோபிக்காமல் பொய் விட்டது உண்மை தான்...இசை வேறு பின்னணி இசை வேறு...புரிகிறதா தலைவரே ???
உங்கள் கேள்வி ரஜினி படத்தில் ஸ்டைல் நன்றாக இருக்குமா என்பது போல இருக்கிறது...விஷ்ணுபுரம் படித்தவர்கள் யாரும் இவரை மறக்க மாட்டார்கள்....அது மட்டும் இன்றி நான் கடவுள் படத்தில் இவரின் வரிகளை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்...எனவே அவரை தனியாக குறிப்பிட இயலாது...
நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள்...எல்லா ப்ளாகிலும் ஜெயமோகனின் வசனம் பற்றி குறிப்பிட்டிருப்பார்கள்...
முடியல!
விடுங்க BOSS...
LESS TENSION MORE WORK...MORE WORK LESS TENSION...
vaalthugal thoizharae ,,, kandippaga periya aalaaga varuvaeergal ...
im also writing ab log read it and post ur comment
wwww.rockfortraago.blogspot.com
ippadikku ungal nanban
RaaGo