Visitors

hit counters

Monday, March 1, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்


மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட கெளதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா விண்ணைதாண்டும் அளவுக்கு திரையரங்குகளில் நல்ல துவக்கம் கண்டுள்ளது...இது வரை கெளதம் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் என்றிருந்த நிலை மாறி நமது ஆஸ்கார் நாயகன் ரகுமான் இசை அம்மைக்கப்படுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ...அதற்க்கேற்றால் போல பாடல்களும் சூப்பர் டூபர் ஹிட் ஆகியுள்ளது ...அலை படத்திற்குப்பிறகு மீண்டும் சிம்பு த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளது...

"ஊர்ல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும் போது நான் மட்டும் எப்படி ஜெர்சி ய லவ் பண்ணினேன்"...இந்த வரிகளுடன் துவங்குகிறது படம்...
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் கார்த்திக் என்ற சிம்பு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் இயக்குனர் ஆக முயற்சி செய்கிறார்...அதே நேரம் புதிதாக குடி வந்திருக்கும் வீடு ஒனர் மகளான த்ரிஷாவை பார்த்தவுடனே காதல் கொள்கிறார்...சொல்லவும் முயற்சி செய்கிறார்...அந்த சமயத்தில் காக்க காக்க படத்தின் கேமரா மேன்  உதவி கிடைக்கிறது...அவர் மூலமாக கே.எஸ்.ரவிக்குமாரிடம்  வாய்ப்பு  கிடைக்கிறது...


ஒரு நாள் திடீரென த்ரிஷாவிடம் காதலை சொல்ல திடீரென ஒரு வாரம் அலப்புழா மறைகிறார்...சிம்பு வும் காக்க காக்க கேமராமேன் உடன் அங்கு செல்கிறார்...சந்திக்கிறார்...காதல் வேண்டாம் நண்பர்களாக இருக்கலாம் என்று முடிவுக்கு வர ஒரே நாளில் அடுத்த நாள் இரவே ரயிலில் நட்பு முறிகிறது...மீண்டும் காதலிப்பதாக சிம்பு உறுதியாக இருக்கிறார்...த்ரிஷாவும் தான் காதலிப்பதை ஒப்புக்கொள்கிறார் ஆனால் தனது குடும்ப நிலையையும்  தந்தையின் கண்டிப்பையும் விளக்குகிறார்...இறுதியில் இவர்கள் காதல் வென்றதா ? பெரிய இயக்குனர் ஆனாரா ? என்பது தான் கதை....

உண்மையில் இது ஒரு வித்தியாசமான காதல் கதை...அதையும் வித்தியாசமாக சொல்ல முற்பட்டிருக்கிறார் கெளதம் மேனன்...


இந்த படத்தில் த்ரிஷா கேரளத்துப்பைங்கிளியாக வலம் வந்துள்ளார்...சிம்பு மிகவும் வித்தியாசமாக தெரிகிறார்...நடிப்பில்லும் ஒரு முதுமை,பக்குவம் தெரிகிறது...ஒரு புது சிம்புவை இதில் நாம் காண முடிகிறது...இத்தனை நாள் எங்கு போனீர்கள் விரல் வித்தை நாயகனே...இந்த படத்தில் த்ரிஷா,சிம்பு இருவருமே மிகவும் அழகாக தெரிகிறார்...அழகின் ரகசியம் என்னவென்று கெளதம் மேனனிடம் கேட்டால் " லவ் உங்றது எனனனு தெரியுமா " அப்படின்னு ஆரம்பிசுடுறார்...

ஈரம் படத்தில் கேமரா மூலம் நம்மை மிரட்டிய மனோஜ் இந்த படத்தில் காதலின் மூலம் கலக்கிஇருக்கிறார்...அழப்புழாவின் அழகை கொஞ்சம் கூட சிந்தாமல் திரையில் தெளித்துள்ளார்...எல்லாம் இருந்தும் இரண்டாம் பாதி சற்று தோய்வையே கண்டுள்ளது...முதல் பாதியில் காதல் இருப்பதை த்ரிஷா ஒப்புக்கொண்டதும் அதை வைத்து இரண்டாம் பாதியில் மீண்டும் மீண்டும் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள்  இழுவை...த்ரிஷாவுக்கு பின்னணிகுரல் முழுதும் பொருந்தவில்லை...

எ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை அருமை...ஆனால் சில இடங்களில் காதைக்கிளிக்கிறது...ஹோஸான,ஓமனப்பெண்ணே பாடல்கள் திரையரங்கை தாளம் போட வைக்கின்றன...கெளதம் மேனன் மெக்கானிக்கல் படித்துவிட்டு வந்தவர் என்பதால் எப்போது பார்த்தாலும் தனது படத்தின் ஹீரோக்களை மெக்கானிகல் ஸ்டுடன்ட் ஆகவே காட்டுகிறார்...(எ.கா மின்னலே,வாரணம் ஆயிரம்)...சார் அடுத்த படத்துலயாவது இதெல்லாம் மாத்துவீங்களா???
க்ளைமாக்ஸ் சொன்னது போலவே வித்தியாசமாக அமைக்கப்படிருப்பது அருமை...
மொத்தத்தில் இந்தப்படம் கெளதம் மேனன் , சிம்பு இருவருக்கும் முக்கியமான படிக்கட்டு...

5 comments:

சசிகுமார் said...

நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கொஞ்சம் நம்ம பக்கமும் வந்து பாருங்க தலைவா
www.vandhemadharam.blogspot.com

LawrencE said...

"ஊர்ல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும் போது நான் மட்டும் எப்படி ஜெர்சி ய லவ் பண்ணினேன்"


ஜெர்சி அல்ல ஜெசி.... ;)
.
சீக்கிரம் படம் பார்க்கணும்!

Gowtham the OxygeN said...

லாரன்ஸ் னு பேரு வச்சுக்குட்டு நீங்க மட்டும் த்ரிஷா போட்டோ வா வச்சுக்கலாம்...எங்களுக்கு மட்டும் ஜெசி ஜெர்சி ஆக கூடாதா??? ;)

youth said...

Padam ellam superb ah than iruku ..ana original love feelinga eppadi konduvantharnu than theriyala ..Gowtham maennanuku oru salaam...See my blog for new movies

www.tamilsparrowdownloads.blogspot.com

Gowtham the OxygeN said...

கெளதம்னு பேரு வச்சவங்க எல்லாம் அப்படித்தானே இருப்பாங்க... :D

You may like this