காதல் சொல்ல வந்தேன் - விமர்சனம்

தேவதையை கண்டேன்,திருவிளையாடல் ஆரம்பம் மற்றும் மலைக்கோட்டை வெற்றியை தொடர்ந்து பூபதி பாண்டியன் இயக்கும் நான்காவது படம்...எனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்...



கல்லூரி சென்ற முதல் நாளே நாயகியை பார்த்ததும் காதலில் விழுகிறார் நமது கதையின் நாயகன்....ஆனால் நாயகி FINAL YEAR படிக்கிறார்... ராகிங் மூலம் நண்பர்கள் ஆகிறார்கள்...நாயகன் காதலிப்பது தெரிந்தபின் நாயகி நாயகி நாயகனிடம் இருந்து விலகுகிறாள்...பிறகு இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் கதை...

நாயகனாக பாலாஜி...கனா காணும் காலங்கள்,பட்டாளம் என ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட முகம் தான்...நாயகி மேக்னா ராஜ் கொழுகொழுவென அழகாக இருக்கிறார்...ஆனால் சிறிதாய் ஒரு முதுமை தெரிகிறது...நாயகனின் தோழனாக குளிர் 100 Degree கார்த்திக் சபேஷ்...

TRAILER,பாடல்கள் என அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும்,அதை நிறைவு செய்ய தவறி இருக்கிறார்...முதல் பாதி முழுதும் கலகலப்பான காட்சிகளால் நகர்ந்தாலும் இரண்டாம் பாதி தொய்வடைந்து விட்டது போலவே தோன்றுகிறது...பல இடங்களில் காட்சி தெய்வுகள் நன்றாகவே தெரிகிறது...


நாயகன் நாயகி ஜோடி சரியாக பொருந்த வில்லை...ஆனால் சீனியர் என காண்பிப்பதால் ஓரளவுக்கு பொருந்துகிறது....முதல் பாதி முழுதும் பாலாஜி,கார்த்திக்,சிங் மற்றும் கஜனி மியூசிக் கொடுத்து பில்டப் காட்டும் சீனியர் போன்றவர்களால் கலகலவென நகர்கிறது... 

பல இடங்களில் டைமிங் டைலாக்குகள் தான் படத்தை காப்பாற்றுகின்றன...

சில சாம்பிள்கள் :

1.என்னது ,பார்த்ததுமே லவ்வா?

பின்னே, 15 வருஷம் கழிச்சு லவ் பண்ண சொல்றியா?

2.உனக்கு ஏன் நாநு - நு பெயர் வெச்சாங்க?

குழந்தை பிறந்ததும் ஜோசியர்ட்ட ஐடியா கேட்டாங்க,அவர் நா அல்லது நு அப்படிங்கற எழுத்துல ஆரம்பிக்கற மாதிரி பெயர் வெச்சா நல்லாருக்கும்னாரு,ரொம்ப நல்லாருக்கட்டும்னு 2 எழுத்தையும் சேர்த்தே வெச்சுட்டாங்க.

3.அவளுக்குப்பிடிச்ச இந்த நாயை நான் வீட்டுக்கு எடுத்துட்டு வந்து வளர்த்தா அவளுக்கு லவ் வருமா?

வரும்,உன் மேல இல்ல,நாய் மேல.

4.என்னது,உன் பேரு ஹேப்பி கிங்கா?

அதாங்க ஆனந்தராஜ்

5. டீ குடிக்கலாம் வா

பழக்கமில்லை.காசா குடுத்துடுங்க.செலவுக்கு ஆகும்.

6.நான் உனக்கு மச்சான் வேலை பார்க்கலாம்,நீ எனக்கு மாமா வேலை பார்க்கக்கூடாதா?.....Etc

நாயகியின் அறிமுக காட்சியில் பூ விழும் காட்சியெல்லாம் அப்பப்பா....எப்படி தான் இப்படிலாம் யோசிப்பாங்களோ நு பீல் பண்ண வைத்து விடுகிறது....பாக்யராஜ் படத்தில் வந்த முருங்கைக்காய் போல,இந்த படத்தில் சாக்லேட்...இனிமேல் பசங்க கையில புத்தகம் இருக்கோ இல்லையோ சாக்லேட் இருக்கும்...மனநல டாக்டராக ஆர்யா ஒரு சீனில் வந்தாலும் க்யூட்....

பல இடங்களில் மேக்னா சரியாக பொருந்துகிறார்...ஆனால் ஒரு ஜூனியர் பையன் கிட்ட எப்படி இருக்கணும் நு கூட ஒரு லிமிட் தெரியாமலா பழகுவாங்க???

ஒரு சீனில் நாயகி காரம் சாப்பிட்டு அதை நாயகனின் காலரில் துடைப்பது...யப்பா...நீங்களே சொலுங்க இப்படி லாம் பண்ணினா யாருக்கு தான் லவ் வராது??? 

யுவன் இசையில் பாடல்கள் அருமை...அதிலும் அன்புள்ள சந்தியா சூப்பர் டச்....
சாமி வருகுது பாடலில் பாலாஜியின் பர்பாமன்ஸ் அருமை...மச்சி பின்னிட்ட...

பிரவீன் ஸ்ரீகாந்தின் எடிட்டிங்...படத்திற்கு ஒரு கூடுதல் பலம்...

திரைக்கதை படு சொதப்பலாக நகர்கிறது...சீனியர் நாயகனிடம் உதவ வேண்டி கேட்கும் இடங்களில்,என்ன கொடும சார் இது...ஒரு சீனியர் இப்படியுமா கேனத்தனமாக இருப்பான்???

இதை விட படு மோசமான இடம் எது என்றால் க்ளைமாக்ஸ் தான்....நாயகன் இறந்த பிறகு எப்படி தான் நண்பர்கள்,தோழன் பஸ் டிரைவர்,அப்பா அம்மா என 
எப்படி தான் அனைவருக்கும் செய்தி போனதோ???ஓரிரு நொடிகளில் கூடி விடுகிறார்கள்... 

மொத்தத்தில் காதல் சொல்ல வந்தேன் ஒரு கதையை ஒழுங்காக சொல்ல வந்திருக்கலாம்...

குறிப்பு - படம் ஓடுகிறதோ இல்லையோ அடுத்த படமான "வெடி" படத்திற்கு தயாராகி விட்டார் பூபதி பாண்டியன்...கேடி படத்திற்கு பிறகு,விக்ரமுக்கு நாயகியாக ஜோடி சேர்கிறார் இலியானா...(ப்ளஸ்டூ ல State First வந்தா கூட இவ்ளோ சந்தோஷம் இருக்காதுப்பா).... 

Comments