JOANNA (உலக சினிமா) - விமர்சனம்



ஹிட்லர் யூதர்களை களைந்தெடுக்கும் காலம் அது... கொத்து கொத்தாக யூதர்களை கொன்று குவிக்கும் அத்தருணத்தில் படம் தொடங்குகிறது...

முதல் காட்சி, ஹோட்டலில் சிறுமியிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள் அவள் அம்மா.. அவர்கள் ஆடர் செய்யும் உணவுகளை ஜோனா என்னும் பெண் குறிப்பெடுத்துக்கொள்கிறாள்...திடீரென ஒரு நபர் அவள் அம்மாவை அழைக்க, அந்த குழந்தையை அருகில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு போகும் படியும், நான் பேசி விட்டு வருவதாக அந்த சிறுமியை அனுப்பி வைக்கிறாள்... திடீரென ஹிட்லரின் படைகள் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த யூதர்களை வண்டியில் ஏற்றுகிறது...அதில் அந்த பெண்ணையும் ஏற்றி செல்கிறார்கள்...

சிலர் அந்த படையை பார்த்தவுடன் தேவாலையம் சென்று ஒளிந்து கொள்கின்றனர்... அந்த சிறுமியும் தன் அம்மா வருவாள் என காத்துக்கொண்டு இருக்கிறாள்... படைகள் செல்லும் சத்தம் கேட்டு மற்றவர்கள் எல்லாம் கிளம்பி விட அவள் மட்டும் அங்கேயே இருக்கிறாள்.அன்று முழுதும் அங்கேயே இருக்க, இரவாகி அடுத்த நாளே விடிந்து விடுகிறது... முன்தினம் ஹோட்டலில் குறிப்பெடுத்த ஜோனா அதிகாலையிலேயே அந்த சிறுமியை கண்டேடுக்கிறாள்... யாருக்கும் தெரியாமல் அந்த பெண்ணை வீட்டுக்கு கூட்டி செல்கிறாள்...


அவளை பற்றி விசாரிக்கிறாள்... அவளுக்கு, அவள் பெயர் ரோஸ் என்பதை தவிர வேறு எதுவும் தெரியாது... எப்படியாவது கண்டுபிடித்து அவள் அம்மாவிடம் சேர்ப்பதாக சொல்கிறாள் ஜோனா... தனக்கு தெரிந்த நண்பர்களிடம் இருந்து ஆடைகளை வாங்கி வருகிறாள்... யார் கதவை தட்டினாலும் திறக்காதே, என்று சொல்லிவிட்டு அவள் ஒளிவதற்கு ஒரு இடமும் காட்டுகிறாள்...


நாட்கள் செல்ல செல்ல இருவரும் நெருக்கமாகிறார்கள்... ஜோனா, தனது கணவன் ராணுவத்தில் வேலை செய்வதாகவும் அவருக்காக காத்திருப்பதாகவும் கூறுகிறாள்... அவர்கள் ஒரு மலையில் எடுத்த போட்டோவையும் காட்டுகிறாள்...



இரவு நேரத்தில் அவளை வெளியில் அழைத்து செல்கிறாள்... ரோசை வைத்திருப்பதால் இருக்கும் நெருக்கடிகளை உணர்கிறாள்... செய்து கொண்டிருந்த ஹோட்டல் வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேட, தபால் அலுவலகத்தில் சுத்தம் செய்யும் வேலை கிடைக்கிறது...

இதே நேரம் ரோஸ் கடும் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறாள்...அவளுக்கு சிகிச்சை அளிக்கக்கூட வெளியே கூட்டி போக முடியாத நிலையில் தெரிந்த மருத்துவரிடம் குறிப்புகள் பெற்றுக்கொண்டு அதை தொடர்கிறாள்.


அதே நேரம், சில உளவாளிகள் இதை நோட்டமிட்டு ராணுவத்திடம் சொல்லி விடுகின்றனர்... திடீரென அதிகாரிகள் ஜோனா வீட்டை சோதனையிட, ரோசை மறைத்து விடுகிறாள்... எதுவும் இல்லாமல் திரும்பி செல்லும் தருணம் அவள் ராணுவ வீரனின் மாணவி என்பது அறிந்து மன்னிப்பு கேட்கிறார்கள்... அதில் ஒரு மேஜர், ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு படித்து விட்டு வந்து தருவதாக சொல்கிறார்...(அப்போதே தெரிந்து விடுகிறது, அவர் ஏதோ எதிர்பார்க்கிறார் என்று)...


சில நாட்கள் கழித்து புத்தகத்தை கொடுக்க வரும் நேரம், ரோஸின் இருமல் சத்தம் கேட்டு அவளை கண்டுபிடித்துவிடுகிறான் மேஜர்... அப்போது, "உனக்கு இது தானே வேணும், இதுக்கு தானே வந்த" என்று சொல்லிவிட்டு ஆடைகளை களைகிறாள் ஜோனா...(நெஞ்சை உலுக்கிய காட்சி அது)....அவளுடன் உறவு கொண்டு விட்டு காலையில் தனது பணியாள் ஒருவனிடம் குழந்தைக்கு தேவையான மருந்துகளை அனுப்புகிறான்...

சரியாக வேலை செய்யவில்லை என்ற காரணத்தால் அவளை பணிநீக்கம் செய்கிறார்கள்... நாட்கள் செல்ல செல்ல, கணவனிடம் இருந்து எந்த கடிதமும் வராததால் கவலை அடைகிறாள்.. மேஜர் தனக்கு தெரிந்த அதிகாரிகளிடம் கேட்டு சொல்வதாக சொல்கிறான்... சில நாட்கள் கழித்து ஜோனாவின் கணவன் இறந்து விட்டதாக மேஜர் வந்து சொல்ல, அவன் தோள் மேல் சாய்ந்து கதறி அழுது மயங்கி விழுகிறாள்...


கணவன் இழந்த சோகத்தில் தத்தளிக்கும் தருணம், வேலை இல்லாததால் பணக்கஷ்டம் வேறு... அவளது பியானோவை விற்க முயற்சி செய்யும் நேரம்,  பியானோ வேண்டும் என்று ஒரு முகவரி குறிப்பிடப்படுகிறது... ஆனால் அந்த முகவரியில் இருந்த ராணுவ பிரிவோ, அவள் ஒரு யூத பெண்ணை வீட்டில் தங்க வைத்தது, மேஜருடன் கள்ள உறவு வைத்துக்கொண்டது போன்ற குற்றங்களால் அவள் தலை முடி வெட்டப்படுகிறது... கூனிக்குறுகி யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வருகிறாள்...

தபால் அலுவலகத்தில் உடன் வேலை செய்த ஒருவரிடம் பேசி, ரோசை ஒரு விடுதியில் சேர்க்கிறாள்... பின் தன் கணவனுடன் போட்டோ எடுத்த அதே மலைக்கு சென்று உயிரை விடுகிறாள்...


இந்த படத்தில் முக்கியமானவை:

இசை:

டைட்டில் போடும் நேரம் கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும், போகப்போக படத்துடன் இணைந்து கொள்கிறது... படத்தையும் இசையையும் பிரித்துபார்க்க முடியாது...

காட்சிகள்:
  1. ஜோனாவும் ரோசும் பேசும் காட்சிகள் அழகு...முக்கியமாக வசனங்கள்....
  2. தபால் அலுவலத்தில் வேலைக்கு பதிய ஒரு உயர் அதிகாரியை பார்க்க வேண்டும். அவர் ரொம்ப பிசியாக இருக்க, செக்யுரிட்டியிடம் ஏதோ ஒரு பெயர் சொல்லி அந்த நபர் அதிகாரியின் நண்பர்.... அவர் தான் இந்த நேரத்தில் பார்க்க வர சொன்னார் என சாதூர்யமாக பொய் சொல்லுவார்... அதிகாரியை பார்த்து விட்டு திரும்பும் பொது அவர் "இனிமேல் இல்லாத பெயரை நீயே உருவாக்காதே" என்று சொல்லுவார்...
  3. சோனாவின் வீட்டை சோதனை போடும் பொது அவள் மீது இருக்கும் கோபமும், எதுவும் கிடைக்கவில்லை என்ற பின் அவள் தனியாக இருக்கிறாள் என தெரிந்து அவளை அடைய ஜொள்ளு விடும் மேஜரின் காட்சி... அடுத்து, ரோஸின் உயிரை காக்க மேஜரிடம் தன்னையே கொடுக்கும் காட்சி...
படத்தின் க்ளைமாக்சில் அவளும் ரோசும் ஊரை விட்டு போவது போலவோ, இல்லை அதே ஊரில் போராடி வாழ்வது போலவோ காட்டியிருக்கலாம்... ரோசை விடுதியில் சேர்ப்பது, பின் தற்கொலை என படத்தை ஏன் இப்படி திருப்பினார் என தெரியவில்லை... உலக சினிமா என்றாலே கண்ணீரும் கம்பளியுமாக தான் இருக்க வேண்டுமா என்ன???

இப்படிக்கு,
கெளதம் G.A

Comments

Thava said…
அருமையான விமர்சனம்..நண்பரே..ஒரு சிறந்த உலக சினிமாவை அறிமுகம் செய்து வத்துள்ளீர்கள்.நன்றி.
சைக்கோ திரை விமர்சனம்..