Visitors

hit counters

Monday, January 2, 2012

2011இன் சில கவனிக்க வேண்டிய படங்கள்

என்ன தான் நல்ல கதைக்களம் இருந்தாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வித்தையான மார்க்கெட்டிங் எனும் விளம்பர யுக்தி இல்லாமல் மண்ணை கவ்விய படங்கள் பல உண்டு... அதை பற்றி விரிவாக பேசும் முன் 2011 இல் வெளிவந்த சில முக்கியமான படங்கள் இதோ...

தென்மேற்கு பருவக்காற்று:2011 இல் தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் படம்...நல்ல கதைக்களம் இருந்தும் ஏதோ சரியான மார்கெட்டிங் யுக்திகளை கையால் எடுக்காததால் வசூல் அளவில் தோல்வி அடைந்த படம்...இன்னும் சொல்ல போனால் இந்த படம் விருது பெற்ற பிறகு தான் இப்படி ஒரு படமே வந்ததாக நண்பர்கள் சொல்லும் போது "என்ன கொடும டா இது" என தோன்றும்...

ஆடுகளம்:

தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவந்த படம். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் பொல்லாதவன் செம ஹிட்.. ஆனால் இந்த படம் ஏனோ எதிர் பார்த்த அளவுக்கு ஓடாமல் போனது... இருந்தும் தனுஷ், வெற்றி மாறன், கிஷோர், ஜெயபாலன் என விருதுகளை அள்ளினார்கள்... "விருது வாங்கினால் மட்டும் போதுமா கல்லா கட்டலையே"... 


காவலன்:

ஏற்கனவே ஓடின அஞ்சும் இழுத்து மூடியதில் இளைய தளபதி செம அப்செட்...
"சுறா" படம் தியேட்டரில் ஓடியதை விட தியேட்டரை விட்டு ஓடியது தான் அதிகம்... இதன் விளைவு சன்னின் கிடுக்கு பிடியில் மாட்டி காவலன் வெளியிட முடியாமல் துவண்டு போனது. இவரும் தந்தையுன் போயஸ் கார்டன் சென்று அம்மாவின் ஆசியுடன் வெளிவந்த படம்...சித்திக் இயக்கத்தில் ஏற்கனவே மலையாளத்தில் கலக்கிய படம் தமிழில் சுப்பர் ஹிட்... இந்த படம் நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஆக்சிஜன்...

சிறுத்தை:

நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு கார்த்தியின் அடுத்த படம்... ஏற்கனவே தெலுங்கில் ஹிட் அடித்த ரவி தேஜாவின் படத்தின் உல்டா... இருந்தும் சந்தானத்தின் காமெடியால் பூஸ்டாகி படம் சக்கை போடு போட்டது...

யுத்தம் செய்:

மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடிப்பில் வெளிவந்த படம்..எப்போதும் அழுத கண்களுடனும் எண்ணெய் வடிந்த முகத்துடனும் இருக்கும் சேரன் இதில் புதிதாக தெரிந்தார்...அவர் மட்டும் அல்ல நடிப்பும் தான்... பெரிய வசூல் என்று சொல்லாவிட்டாலும் ஒரு நல்ல வசூல்....

பயணம்:

மொழி,அபியும் நானும் வரிசையில் ராதா மோகனின் அடுத்த படம்... முக்கியமாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று நம்பி போகும் இயக்குனர்களில் இவரும் ஒருவர்... பாடல்கள் இல்லை... இருந்தும் நல்ல கதைகளம் மற்றும் திரைக்கதை இருந்ததால் ஏதோ ஒரு நல்ல ரிசல்ட் கொடுத்தது...

கோ:

2011 இல் ஒரு பெரிய வசூல் அடித்த படம்...ஜீவா,ராதாவின் மகள் "கார்த்திகா",அஜ்மல் நடிப்பில் அயன் வெற்றிக்கு பிறகு கே.வி.ஆனந்தின் அடுத்த படம்...ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியது தான் இயக்குனரின் புத்திசாலித்தனம்...தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கிலும் நல்ல கலெக்சன்...ஏற்கனவே ஹாரிஸின் பாடல்கள் செம ஹிட்... இருந்தும் அஜ்மலை வில்லனாக்கி பிரகாஷ் ராஜை டம்மியாகிய காமெடி அழகான முழு சோற்று பூசணிக்காய்...இந்த படம் அடைந்த வெற்றியை விட இதன் மேல் சிம்பு கொண்ட கோவம் இன்னும் ஜீவாவுடன் வாய்க்கா தகராறில் உள்ளது...

வானம்:

ஒரு நல்ல மெசேஜ் சொன்ன படம்... சிம்பு,பரத்,அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த ஏற்கனவே தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த "வேதம்" படத்தின் காப்பி...சிம்புவின் "எவண்டி உன்ன பெத்தான்" பாடல் ஹிட் அடித்தும் "கோ"விற்கு நிகரான ஈடு கொடுக்க முடியாமல் கவ்வியது... இருந்தும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒரு நல்ல வசூல்...'கோ" வில் ஒழுங்காக நடிக்காமல் ஹீரோயின் சரியில்லை அத மாத்து இத மாத்து என்று சொன்னதுக்கு கே.வி.ஆனந்த இவரையே மாற்றி விட்டு ஜீவா வை போட, ஜீவாவுக்கு பிடித்தது சனி...இன்னும் விடவில்லை...

அழகர்சாமியின் குதிரை:

நான் மகான் அல்ல காமர்ஷியலுக்கு பிறகு சுசீந்திரனின் அடுத்த படம்... இளையராஜவில் இனிப்பான இசையும் நல்ல கதைக்களமும் இருந்தும் படம் ஏனோ ஓடவில்லை...இந்த படம் கிளவுட் நயனுக்கு பெரிய அடி...

ஆரண்ய காண்டம்:

எந்த படத்தின் பாதிப்பும் இல்லாமல் வெளிவந்த படம்...தியாகராஜா குமாரராஜா வின் இயக்கத்தில், யுவனின் பின்னணி இசையில் படம் அருமை... உலக சினிமா தரத்தில் ஒரு தமிழ்படம் என்றும் கூட இதை சொல்லலாம்...இருந்தும், இந்த படம் நல்லா இருக்கு போய் பாருங்க ன்னு சொல்லி முடிக்கும் முன்னரே தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டது மிகப்பெரும் கொடுமை...

அவன் இவன்:

"நான் கடவுள்" படத்திற்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் யுவனின் இசையில் வெளிவந்த படம்... எப்போதும் பாலாவின் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்...அதில் பத்து சதவிகிதம் கூட இந்த படம் பூர்த்தி செய்யாமல் போனது கொடுமையே... ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்து போன லைலா,சூர்யா கதாபாத்திரம் மீண்டும் மீண்டும் பார்க்க எரிச்சல்... முக்கியமாக ஆர்யாவின் தலைமுடி... இதில் ஒரே ஒரு ஆறுதல் விஷாலின் நடிப்பு... பாலா நன்றாகவே செதுக்கி இருக்கிறார்... இதனால் பீதியான ஆரியா,லிங்குசாமியின் "வேட்டை"யிலும் மாதவனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் "ஒய் திஸ் கோல வெறி" னு சூப் சாங் பாடிக்கிட்டு இருக்கார்...

காஞ்சனா (முனி-2):

இந்த ஆண்டின் ஹிட் லிஸ்ட் இல் மூன்றாம் இடத்தில காஞ்சனா... ராகவா லாரன்சின் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளிவந்த படம்..பெரிதாக சொல்லும் படி இல்லாவிட்டாலும் பேய் கதையை காமெடியாக நகர்த்திய தந்திரத்தில் நன்றாக கல்லா கட்டியது...இந்த படத்தின் இசை தமன் என்று விக்கி பீடியாவில் பார்க்கும் போது தான் தெரியும்... பாடல்கள் அவ்வளவு மொக்கை...தெய்வத்திருமகள்:

'மதராசப்பட்டினம்" வெற்றிக்கு பிறகு இயக்குனர் விஜய்யும், "ராவணன்" தோல்விக்கு பிறகு சியான் விக்ரமும் இணையும் படம்... UTV இன் முதல் படம்...
"I AM SAM" இன் அட்டர் காப்பி.. இருந்தும் விக்ரமின் நடிப்பு, ஜி.வி.பிரகாஷின் இசை என படத்திற்கு ஒரு நல்ல ஓபனிங் கிடைத்தது... "ப ப பா பா" பாடல் திருடிய விஷயம் ஜி.வி.யின் படியில் ஒரு சிறு சறுக்கல்....

மங்காத்தா:

இந்த வருடத்தின் மிகப்பெறிய ஹிட் படம் என்றால் அது மங்காத்தா மட்டுமே... "கோவா" தோல்விக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜீத் நடிப்பில் வெளிவந்த படம்... அசல் படத்தின் மந்தமான வசூலுக்கு பிறகு வெளிவந்த படம் பல விமர்சனத்தில் சிக்கியது... முக்கியமாக அஜித் நடித்த இந்த வில்லன் கதாபாத்திரம்...அடுத்து அவர் பெரிய "This is my f**king game"வசனம்... எல்லாரும் நல்லவனாக காட்டிக்கொண்டு சமுதாயத்திற்காக சேவை செய்வது போலவே நடிக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு கதாபாத்திரம் நடித்த அஜித் க்கு கண்டிப்பாக ஒரு சல்யூட் போட வேண்டும்...யுவன் இசையில் "விளையாடு மங்காத்தா" ஒரு பாடல் வெள்ளோட்டம் செம ஹிட் அடிக்கவே, எல்லா பாடல்களும் டாப்...

எங்கேயும் எப்போதும்:

மிகுந்த கால இடைவெளிக்கு பிறகு பெரிய நடிகர்கள் இல்லாமல் கதையை மட்டுமே நம்பி எடுத்து வெளிவந்த படம்...நல்ல வேளை நம்பின நம்பிக்கை மோசம் போகாமல் போனது...ஒரு விபத்து அதையும் முதலிலேயே காட்டி விடுவார்கள்...எப்படியும் அதன் பிறகு சுவாரசியம் இருக்காது... ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையை நகர்த்திய விதமே இயக்குனர் சரவணனின் திறமை... சத்யாவின் இசையில் பாடல்கள் நல்ல ஒப்னிங்கை எற்படுத்திக்கொடுத்தன...

வாகை சூடவா:

குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து "களவாணி" சற்குணம் மற்றும் விமல் நடிப்பில் வெளிவந்த படம்... கிப்ரான் இசை கொடுத்த ஓபனிங் படத்தில் இல்லாமல் போனது ஏமாற்றமே... நல்ல படம் என்று சொல்லும் படியாக இருந்தாலும் வசூலில் கோட்டை விட்டது...

சதுரங்கம்:

ஆறு வருடமாக கிடப்பில் கிடந்த கரு.பழனியப்பனின் படம்...ஆறு ஆண்டுக்கு முன் வெளி வந்திருந்தால் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் இதுவாக தான் இருந்திருக்கும்... அப்படி ஒரு கதை... இருந்தாலும் ஒரு நல்ல படம்...பத்திரிக்கைகாரனின் தந்திரம் அழகாக காட்டப்பட்டிருக்கும்...முக்கியமாக அந்த ஜெயில் காட்சிகள்...

முரண்:

எப்போதோ ஒரு முறை பார்த்த ஹிட்ச் காக் படத்தின் தழுவல் போல இருந்தாலும் நல்ல கதை அதை அமைத்த விதத்தில் பாஸ் மார்க்...ஆனால் தோற்றது சேரனை அந்த பாத்திரத்தில் போட்டது... போஸ்டரில் சேரன் முகம் பார்த்த உடனே பாதி கூட்டம் ரிவிட் அடித்தது... ஆனால் படத்தில் சேரன் நன்றாகவே நடித்திருந்தார்...

(இதுக்கு தான் ஒரே மாறி அழுதுக்குட்டே நடிக்க கூடாது ன்னு சொல்லுறது)


ஏழாம் அறிவு:

படம் பார்ப்பவனுக்கு அறிவே இல்லை என நினைத்து விட்டார் போல, இயக்குனர் முருகதாஸ்... சூர்யா,ஸ்ருதி ஹாசன் என பெரிய புள்ளிகள் நடித்திருந்தாலும் படம் டல் அடித்தது ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று... இந்த படம் போதி தர்மன் பற்றியா இல்லை அறிவியல் பற்றியா என்று நமக்கு புரியும் முன்னரே படம் முடிந்து விடுகிறது...அதை விட கொடுமை ஹாரிஸ் ஜெயராஜின் இசை... பெரிய மைனஸ்..இம்பேக்ட் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க முடியாமல் திணறுகிறது....சீன பாடல், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார், ரிங்கா ரிங்கா பாடல் டேக்ஸி பாடலின் காப்பி... 

இருந்தும் தமிழன் தமிழ் ரத்தம் என தமிழ் உணர்வை உசுப்பேற்றி ஒரு நல்ல கலெக்ஷன் பார்த்து விட்டது...

வேலாயுதம்:

ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவார் "நான் ஸ்ட்ராங்கா இல்ல அவன் வீக்கா" ன்னு...

அதே தான் இங்கே நடந்திருக்கிறது... ஏற்கனவே ஏழாம் அறிவு,வேலாயுதம் ரிலீசால் மயக்கம் என்ன, ஒஸ்தி பேக் பல்டி அடித்து தேதி மாற்றியது..எனவே ரெண்டில் ஒன்றை தான் பார்க்க வேண்டும் என்னும் நிலையில் கூட்டம் வேலாயுதம் பக்கம் சாய ஆரம்பித்தது....காரணம் கமர்ஷியல் மசாலா..நம் மக்கள் எப்போதுமே எதை கொடுத்தாலும் முழுதாக கொடுத்தால் பச்சை கோடி காட்டி விடுகிறார்கள என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம்... ஏழாம் அறிவு திரைக்கதையில் அரை வேக்காடு... ஆனால் வேலாயுதம் முழுமையான பக்கா மசாலா... சந்தானம் காமெடி, விஜய் அன்டணி யின் இசை என படத்திற்கு பக்க(கா) பலம்... இருந்தாலும் பழைய படங்களை போலவே விஜய் செய்யும் பக்க பக்க பஞ்ச் டயலாக்குகள், ஏற்கனவே ஹிட் அடித்த திருப்பாச்சியின் காப்பி வாசம் என குறைகள் இருக்கத்தான் செய்கிறது... இருந்தாலும் இரண்டையும் ஒப்பிடும் போது வேலாயுதம் தான் வசூல் கணக்கில் லீடிங்....

மயக்கம் என்ன:

ஆயிரத்தில் ஒருவன் தோல்விக்கு பிறகு செல்வராகவனும், வேங்கை தோல்விக்கு  பின் தனுஷும் இணையும் படம்... அண்ணனும் தம்பியும் மாறி மாறி பாடல்கள் எழுதி ஜி.வி.பிரகாஷ் இசையில் செம ஹிட்...ஆனால் படம் கொண்டு சென்ற தொய்வு எல்லார்க்கும் புடிக்கும் வண்ணம் இல்லை... இருந்தாலும் தனுஷின் உழைப்புக்கு நல்ல பெயர் கொடுத்த படம் என்று சொல்லலாம்...தெலுங்கு வரவு ரிச்சாவுக்கு முதல் படத்திலேயே நல்ல 
வாய்ப்பு

(நடிப்பதற்கு...இப்போதெல்லாம் நடிப்பதற்கா நாயகிகளை போடுகிறார்கள்??)

போராளி:

ஈசன் படம் மந்தமாக ஓடினாலும், இந்த கூட்டணியில் கல்லா கட்டிவிட்டது போராளி...நல்ல காமேடியால் தப்பித்தது... ஆனால் லாஜிக் வஸ்துவில் மாட்டிக்கொண்டது...எப்போதும் இருக்கும் ஜேம்ஸ் வசந்தன் கூட்டணியில் ஒரு சிறு மாற்றம்... இந்த முறை சுந்தர்.சி.பாபு

பாலை:

இப்போது நாம் இருக்கும் இந்த நிலத்தை பெற நம் முன்னோர்கள் எவ்வளவு போராடினார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம்... பெரிய படங்களின் ஆதிக்கத்தால் தியேட்டர் கிடைக்காமல் துவண்டு போனது கொடுமையிலும் கொடுமை... திரைக்கதை தெளிவு இல்லை, அது இது என குறைகள் எக்கச்சக்கம் இருந்தாலும், பத்தோடு பதினொன்றாக காதல் கதை எடுக்காமல் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததே இயக்குனரின் தைரியம்... படத்திற்கு பாராட்டாமல் விட்டாலும் எடுத்த முயற்சிக்காக கண்டிப்பாக பாராட்ட வேண்டும்... படத்தின் மதிப்பெண்களை தாண்டி கௌரவப்படுதியது ஆனந்த விகடன்... ஜீன்ஸ்,டைட் டி ஷர்ட் அணியும் நமது இளசுகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்...இல்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு நாம் யார் என்பது தெரியாமலே போய் விடும்..,

உச்சிதனை முகர்ந்தால்:

இலங்கை தமிழர் கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்... செய்வோம் செய்வோம் என்று கடைசி வரை வாயில் வடை சுட்டு இலங்கை தமிழரை காப்பாற்ற முடியாமல் போன தமிழகஅரசு, இந்த படம் எடுத்து வெளியிடும் வரை வாயை மூடிக்கொண்டு இருந்ததற்கு கோடானகோடி நன்றிகள்...வசூலில் பெரிதும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை என்றாலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்...

மௌனகுரு:

பேருக்கு ஏற்றார் போல மௌனமாக வந்தே வெற்றி பெற்று விட்டான் மௌனகுரு... முழுதும் திரைக்கதையை மட்டுமே நம்பி அதை நகர்த்திய சாமர்த்தியம் அருமை...அருள்நிதிக்கு இந்த படம் ஒரு பெரிய மயில்கல்... எப்போதும் இசையில் ஹிட் அடிக்கும் தமன் இந்த முறை பாடல்களில் மைனஸ்...ஆனால் பின்னணி இசையில் ட்ரிப்பில் ஷாட்...சரியான கதாப்பாத்திர தேர்வு போன்றவற்றால் முதலில் மந்தமாக போன படம், இரண்டாம் வாரம் நல்ல கலெக்சன் (தகவல் நன்றி: கேபிள் சங்கர்)
.......

ஒட்டு மொத்தமாக பார்த்தால் இந்த ஆண்டின் சிறந்த மூன்று படங்கள்

1. மங்காத்தா
2. கோ
3. காஞ்சனா

இப்படிக்கு,

கெளதம் G.A

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தொகுப்பு! நல்ல அலசல்! வாழ்த்துக்கள்! நன்றி!

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

http://confidencecorner.blogspot.com/2011/12/2011.html
before one week i also wrote a detail report of tamil cinema 2011 read and pass ur comments daa nice and short cutre comments and review u missed some films and thenmerku paruvakatru released in 2010 note this point ur honour and keep continueing ur writ
ings

You may like this