அது அப்படித்தான் - 1 (தானே புயல், கனிமொழி)

 "தானே" ஆடிய கோர தாண்டவம்:



தானே ஆடிய கோர தாண்டவம் அனைவரும் அறிந்ததே... இதனால், புத்தாண்டை கொண்டாட முடியவில்லை என்று ஒரு புறமும், லீவுக்கு ஊருக்கு போக முடியவில்லை எனவும் ஒரு சாரர் வருந்திக்கொண்டிருக்க, இந்த புயலால் ஒரு மினி சுனாமியையே வாங்கியது போல தத்தளிப்பில் உள்ளது கடலோர பகுதிகள்.... புயல் செய்த கொடுமையை விட நமது அரசு செய்யும் கொடுமையே அதிகம்...


பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வசதிகள் இன்னும் செய்து தராமல் இழுத்தடிப்பு செய்து கொண்டு இருக்கின்றார்கள்...பார்வை இட வேண்டிய முக்கியமாமான பகுதிகளை பார்க்காமல், ஏதோ ஒரு பேருக்கு பார்த்து சென்று இருக்கிறார் தமிழக முதல்வர்... முழு அளவிடும் தெரியாமல் நிவார தொகை 850 கோடி என அறிவித்து விட்டார்..(அதில் பாதியாச்சும் மக்களுக்கு போய் சேருமா என்றால் சந்தேகம் தான்)




முதல்வரே இப்படியென்றால் மூஞ்சூறுகள் எப்படி இருக்கும் என நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்... எந்த அமைச்சரும் நேரில் செல்லாமல், லாட்ஜில் ரூம் போட்டு தங்கி விட்டு, மக்களை சந்தித்து குறை கேட்டதாகவும் நிவாரண உதவிகள் அளித்ததாகவும் சொல்லி இருக்கிறார்கள்...
( எந்த வழியா போனீங்க ன்னு ரூட்டு கேட்டா ஒரு வேளை மாட்டிக்குவாங்களோ???)

தானே புயல் ஓய்ந்தும் இவர்கள் ஓய மாட்டார்கள் போல் இருக்கிறது....

கலைஞர் தொலைக்காட்சியை மிதிக்காத கனிமொழி:


சென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்கு வரவேற்பு என்று கட்சிக்காரகள் கொடுத்த அலப்பறை கொஞ்ச நஞ்சம் இல்லை.. அடுத்த விமானம் பற்றிய அறிவிப்பை கேட்க முடியாத அளவு மேல தாளங்கள் ஒழிக்க,
அமோக வரவேற்ப்பு.. ஏதோ இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக ஜெயிலுக்கு போய் வந்தவர் மாதிரி.ரோடெங்கும் வாசகங்கள். சி.ஐ.டி நகர் வீட்டில் விருந்து என செய்யாத செலவுகள் என்று எதுவுமே இல்லை...
( இது எல்லாம் எவன் அப்பன் வீட்டு காசுன்னு இப்படி செலவு பண்ணுறாங்க???)

மகள் செய்த அலப்பறை போதாதென்று, இப்போது தாய்க்குலமும் கிளம்பி விட்டது.. கனிமொழியின் பிறந்தநாள் விழாவில் ராசாத்தி அம்மாள் சொன்னது இதோ...

"என் மகள் கனிமொழி கலைஞர் டிவி வாசலை கூட மிதிச்சது கிடையாது... ராஜாவோட ஆபீசுக்கு போனது கிடையாது
(நோட் பண்ணிக்கோங்க ஆபீஸ் தான்... கெஸ்ட் அவுஸ் னு சொல்லல)...
2ஜி யை பத்தி எதுவுமே தெரியாது... ஆனா அவ தீகார் ஜெயிலில் எவ்ளோ கஷ்டபட்டான்னு தெரியுமா?? உக்கார ஒரு சேர் இல்லை, டேபிள் இல்லை... படுக்க ஒரு பாய் கூட இல்லை.. கனியோட எவ்ளோ மூட்டை பூச்சிகள் இருந்துச்சு.. அவ பட்ட கஷ்டத்த சொல்லணும் னா, ஒரு நாள் போதாது... திடீர்னு ஒரு நாள் கழுத்தில் வீக்கம் இருக்கும், முகத்தில் கறுப்பு கறுப்பா இருந்ததை பாத்து வயிறு எரிஞ்சுது..." என்று அழ ஆரம்பிசுட்டாராம்...
(நீங்க அடிச்ச காசுக்கு இதெல்லாம் ரொம்ப கம்மி)
எல்லோரும் சோற்றில் பூசணியை மறைப்பார்கள்... இவரோ ஓர் தோட்டத்தையே மறைத்து விட்டார்...

ஈழத்தில் அத்தனை உயிர்கள் மடியும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தீர்களே, அப்போது தெரியவில்லையா பாசம் என்றால் என்னவென்று?? உங்கள் பிள்ளைக்கு ஒரு நியாயம், ஊரான் வீட்டு பிள்ளைக்கு ஒரு நியாயமா??
இதை கேட்டால் என்னை அரசியல்வாதி முத்திரை குத்தி விடுவார்கள்...

நமக்கு ஏதுப்பா வம்பு... நண்பன் படம் நல்லா ஓடுதாம்... எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்தா சொல்லுங்க... வாட்டர் பாட்டில் நான் ஸ்பான்சர் பண்றேன்.. :P

Comments