டல் அடித்த தீபாவளி

பொதுவாக தீபாவளியன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளிவரும்...சொந்த ஊருக்கு செல்பவர்கள் காலை எண்ணெய் தேய்த்து குளித்து புது ஆடைகள் உடுத்தி பட்டாசுகள் வெடித்த பின் காலை உணவை முடித்து விட்டு செய்யும் முதல் காரியம் நரபர்களுக்கு போன் செய்து எந்த அரங்கில் எந்த படம் என்பது தான்...சிலர் முந்தைய நாளே விசாரித்து வைத்துகொள்வார்கள்...

உடனே வண்டியை எடுத்துக்கொண்டு திரை அரங்கிருக்கு செல்வோம்...அங்கே நமக்கு முன்னாலே நண்பர்கள் கைகளில் டிக்கெட்டுடன் நின்று கொண்டிருப்பார்கள்...ஆனால் இப்போது தலைகீழாகிவிட்டது...இந்த முறை நண்பர்களுக்கு போன் செய்தால் "போடா மச்சான் பெருசா எந்த படமும் வரல டா...வந்ததும் மொக்க டா " என்று புலம்புகிறார்கள்...



சென்ற தீபாவளி அன்று நிரம்பும் கூட்டம் கூட இந்த முறை இல்லை...
இந்த தீபாவளிக்கு திரைக்கு வந்த படங்கள் :

1.வ - குவாட்டர் கட்டிங்
2.உத்தம புத்திரன்
3.வல்லக்கோட்டை
4.மைனா

 வெளிவந்த படங்களில் திரையில் நல்ல ஓட்டம்  காண்பிப்பது  பிரபு சாலமனின் "மைனா" மட்டுமே...மற்ற படங்கள் எல்லாமே சுமார் ரகமே...


(ஏற்கனவே மைனா விமர்சனம் பதித்துவிட்டேன்...கீழ் இடுக்கையில்  பார்க்கவும்)

"வ" - பாடல்கள்,விளம்பரம் என பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதை திரையில் தக்க வைத்துக்கொள்ள தவறி விட்டது...திரைக்கதையில் அப்படி ஒரு சொதப்பல்... 
பல இடங்களில் கதை எங்கு செல்கிறது  எதற்கு செல்கிறது என இயக்குனருக்கு  தெரியவில்லை போல ...நிரவ் ஷாவின் கேமிரா,ஆண்டனியின் எடிட்டிங்,ஜி.வி.பிரகாஷின் இசை என நல்ல டீமை வைத்துக்கொண்டு சொதப்புவது தான் மனதுக்கு வருத்தமாக உள்ளது...   

"உத்தம புத்திரன்" - விஜய் ஆண்டனி இசை மட்டுமே பலம்...ஆனால் "யாரடி நீ மோகினி,குட்டி" தந்த மித்திரன் ஜவகர் இந்த முறை திரைக்கதையில் தவற விட்டு விட்டு விட்டார்...கதையை பார்த்தால் நான்கைந்து  விக்ரமன்  படங்களின் கலவை போலவே உள்ளது...  

பல இடங்களில் சொதப்பல்... "செதுக்கி எடுத்த சிலைய " பாடல் கேட்கும் பொது இருந்த விறுவிறுப்பு திரையில் சொம்பேறியாகிவிட்டது...


வல்லக்கோட்டை  - அர்ஜூன் படத்தில் பெரிதாக என்ன கதை இருக்க போகிறது???ஒண்ணா நாட்டுக்காக சண்டை,இல்லை நண்பனுக்காக சண்டை...மொத்தத்தில் சண்டை மட்டும் இருந்தால் போதும்...சார் கொஞ்சம் வெரைட்டி ரோல் பண்ணுங்க...இப்படி பார்த்து பார்த்தே போர் அடிக்குது...நீங்க ஆக்சன்  கிங் தான்...அதுக்காக 24  மணி நேரமும் சண்டை போடலாமா??? 

கஞ்சா கருப்பு சத்யன் ஷகிலா(மேடம்) என இருந்தும் சிரிப்பு தான் வரவே மாட்டேன் என்கிறது....

மொத்தத்தில் "மைனா" வால் இந்த தீபாவளியில்  ஓரளவு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்...

Comments

என்ன பன்றது படம் எடுக்க ஆள் இருந்தாலும் படம் பார்க்க ஆள் வருவதில்லை...

தீபாவளிக்கு கோபி எப்படி இருந்தது...
Gowtham GA said…
தீபாவளி நல்லாதான் இருந்துது...படங்கள் தான் வந்து மொக்கை ஆக்கிடுசுங்க...தீபாவளி அன்னைக்கு கூட ஹவுஸ்புல் ஆகல...அடிச்சு புடிச்சு போனோம் சொல்லிக்குற மாதிரி கூட்டம் எந்த படத்துக்கும் இல்லை..நாகையா தியேட்டரில் குவாட்டர் கட்டிங் பார்த்துட்டு மொக்கை வாங்கிட்டு வந்தோம்...
Gowtham GA said…
நல்ல படம் யாரு எடுத்தாலும் எந்த நேரத்திலும் ஓடும்...

உதாரணம் : கொக்கி,அங்காடி தெரு,நாடோடிகள்,சுப்ரமணியபுரம்,
ரேணிகுண்டா,வெண்ணிலா கபடிக்குழு...Etc
எனக்கும் மைனா தான் பிடித்திருந்தது...

// நாகையா தியேட்டரில் குவாட்டர் கட்டிங் பார்த்துட்டு மொக்கை வாங்கிட்டு வந்தோம் //
விமர்சனம் எங்கே...
Gowtham GA said…
@philosophy - அது தான் ஒரே லைன் ல எழுதிட்டேன்...படம் மொக்கைனு..இதுக்கு மேல என்ன இருக்கு சொல்ல???