இதெல்லாம் ஏன்பா ரிலீஸ் ஆச்சுனு யோசிக்கும் படங்களுக்கு இடையில் ,பெரிய ஹீரோ ஹீரோயின் இல்லாமாமல் கதையை மட்டும் வைத்து இயக்கப்படும் படங்கள் சமீப காலங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது...
அந்த வகையில் இப்போது சேர்ந்திருப்பது மைனா...
நாயகன் விதார்த் "தொட்டுப்பார்" படத்தில் தொடாத நாயகன் இதில் செம டச்...நாயகி அமலா பால். "சிந்து சமவெளி" பார்த்தவர்கள் யாரும் இவரை அவ்ளோ சீக்கிரம் மறக்க மாட்டாங்க... ;) (நான் படத்தை மட்டும் தான் சொன்னேன்.தப்பா நெனசுக்காதீங்க)
தீபாவளிக்கு முந்தைய தினத்தில் இருந்து நகர்கிறது கதை...15 நாள் ரிமாண்டில் வைக்கப்படும் நாயகன் ஒரு நாள் முன்னதாகவே தப்பிக்கிறான்...
தலை தீபாவளிக்காக தயாராகும் போலீஸ்கும்பல் இவனால் பிரச்சனையில் சிக்க,அவனை தேடி ஊருக்கு செல்கிறார்கள் சேதுவும் ராமையாவும்...அந்த நேரத்தில் மைனாவுக்கு கல்யாணம் முடிவு செய்ய அடிதடியில் அவனை பிடித்து மீண்டும் திரும்பி ஜெயில் வரும் வரை நடக்கும் விஷயங்கள் தான் இப்படத்தின் கதை...
நாயகி மைனாவும் நாயகன் சுருளியும் சிறு வயதில் இருந்தே ஒன்றாய் திரிபவர்கள்...நாயகியும் அவளது அம்மாவும் நாடு தெருவில் நிற்கும் பொது உதவுகிறான்...நாயகி நன்றாய் படிக்கிறாள்...மற்ற படத்தில் வருவது போலவே நம்ம நாயகனுக்கும் படிப்பு பெரிதாய் ஏறவில்லை....எனவே வேலைக்கு செல்கிறான்...காலம் நகர நாயகி பூப்படைந்த பின் வேறு ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறாள் மைனாவின் அம்மா இதனால் சண்டை ஏற்ப்பட நாயகன் ரிமாண்ட் ஆகிறான்...
படத்தின் பாதி நேரம் இந்த நான்கு பேருடன் கரைகிறது...மேலும் அதிகமான கேரக்டர்கள்.ஆனால் பயன்படுத்தி இருக்கும் நேரம் கொஞ்சமே...மைனாவின் அம்மா,சுருளியின் சீட்டாடும் அப்பா,லுங்கிகட்டின பையன்,ராமையாவுடன் போனில் பேசும் முகம் கட்டாத மனைவி,ரியல் எஸ்டேட் நபர்,வணக்கம் வைக்கும் ஆசாமி,மூணார் ஹோட்டலில் மிரட்டும் நபர்,போலீசின் மனைவி என படி நீளுகிறது....
காமெடிக்கு பஞ்சமில்லை...தொடக்கத்தில் லுங்கி கட்டின சின்ன பையன் பேசும் பேச்சு அப்பப்பா....நாயகனும் ராமையாவும் செய்யும் அலும்பல்கள்...
நாயகி ஒரு பாட்டில் செட்டில் ஆனா எப்படி இருக்கும் என கேட்கும் பொது ஜட்டியை வைத்து விளக்கம் சொல்லும் போதும்,வழி சொல்கிறேன் பேர்வழி என்று வழி மாறி கூட்டி செல்லும் போதும்,லட்டுக்கு ஆசைப்பட்டு கோட்டை விடும் போதும்,இதற்கும் மேலாக மலையில் கவிழ்ந்த பேருந்து நடத்துனரிடம்,ஒருவர் மீதி சில்லறை கேட்க்கும் போதும் யப்பா முடியல டா சாமி...
படத்தில் முதலில் பாராட்டப்பட வேண்டியவர் கேமிரா மேன் சுகுமார்... மனுஷன் வெளுத்து கட்டியிருக்கிறார்...மூனாரின் அழகை கேமிராவில் கொட்டி தீர்த்திருக்கிறார்...முக்கியமாய் அந்த டாப் ஆங்கிள் ஷாட்..போதிய வெளிச்சத்தை மட்டும் வைத்து அதிகம் லைட் உபயோகம் இல்லாமல் எடுத்திருக்கும் விதம் நிச்சயம் பாராட்டத்தக்கது...
நாயகனின் உழைப்பு மைனாவை தூக்கிகொண்டு சுற்றும் போதும்,மைனா படிக்க சைக்கிள் லைட் சுற்றும் போதும்,மைனா வயது வந்ததும் ஒளிந்து பார்க்கும் தருணத்திலும் பாராட்டத்தக்கது...நாயகியும் தன் பங்கை தெளிவாக நிரப்பியுள்ளார்...ராமையா முதலில் குறிப்பிட்டது போலவே காமேடிக்கென முக்கியதுவமாய் செர்க்கப்படிருக்கிறார் போல..ஆனால் இறுதியில் பேருந்தில் காப்பாற்றிய பிறகு இணையும் தருணத்திலும் மனைவிக்கு போன் செய்து சுருளியிடம் பேச சொல்லும் தருணத்திலும்,குழந்தை இல்லை என சொல்லி அழும் காட்சியிலும் நெஞ்சில் ஸ்டூல் போட்டு நிற்கிறார்...இன்ஸ்பெக்டர் சேது நான்காம் ரேன்க் தான்...க்ளைமாக்சில் அதையும் நிரப்பி விடுகிறார்...அதுக்காகவே அவருக்கு சல்யூட் அடிக்கலாம்...
இமானின் இசையும் பின்னணி இசையும் அழகாய் செவிகளை நிரப்புகிறது...ஒவ்வொரு பாடலுக்கும் அவரில் உழைப்பு தெரிகிறது...முக்கியமாக ஜிங்கி ஜிங்கி மற்றும் கைய புடி பாடல்கள்...
குறைகள் உள்ளதா என்றால் உண்டு....
1.சிறு வயதில் காப்பாற்றி உதவும் நாயகன் மேல் மைனாவின் அம்மாவுக்கு எப்படி அன்பு இல்லாமல் போனது???
2.கதைக்கு காமெடி வேண்டும் என்பதற்காக ராமையாவை வடிவேலாக்கி கும்மியைப்பது ஏன்???
3.சிறு வயதில் இருந்தே ஜீப் ட்ரிப் அடிக்கும் நாயகனுக்கு தெரியாதா ஈசியான வழி???
இந்த குறைகள் படத்தை பெரிதும் பாதிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்...படத்தின் ஒவ்வொரு FRAME லும் அனைவரின் உழைப்பும் தெரிகிறது...
கல்பாத்தி அகோரம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸை நிச்சயம் பாராட்ட வேண்டும்...இது போன்ற சிறிய படங்களை மார்கெட் செய்து விரைவில் மக்களுக்கு சென்றடைய இவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்...
பிரபு சாலமன் பற்றி சொல்லவே வேண்டாம்...கொக்கி,லீ,லாடம்,கிங் என அனைத்துமே சொல்லிக்கொள்ளும் விதம் தான்...முக்கியமாக கொக்கி படத்தின் சேசிங் காட்சிகள் யாரும் மறந்திருக்க மாடீர்கள்...நல்ல படத்தை கொடுத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்....
"யாரு என்ன விமர்சனம் பன்றான்களோ,அதா பத்தி எனக்கு கவலை இல்லை...எனக்கு இந்த படம் பிடிச்சு இருக்கு" என்று கமல் சாரே சான்றிதழ் கொடுத்துட்டார்...இதுக்கு மேல என்ன வேணும்????
தீபாவளிக்கு வந்த படங்கள் ஏதும் பெரிதாக சோபிக்காத வேளையில்,மைனா மட்டும் ஆறுதல்...எனவே போட்டிக்கு ஆளில்லை...போட்டுத்தாக்கு மாப்ள...
மொத்தத்தில் : மைனா - அழகாய் பறக்கிறது....
குறிப்பு : படம் பார்த்து வெளி வரும் நேரத்தில் நாயகன் விதார்த் என்ட்ரி கொடுக்க கூட்டம்மொச்சிக்கொண்டது...பார்த்து விட்டு திரும்பினால் அருகில் நிரவ் ஷா மற்றும் களவாணி விமல்...அனைவரும் நல்ல ரிசல்ட் கொடுத்து விட்டு தான் சென்றார்கள்...
Comments
அடடா... நான் இன்னும் பாக்கலையே... இப்போவே டவுன்லோட் பண்ணிடுறேன்...
hat's off Gowtham.