இனிது இனிது - விமர்சனம்



மறந்து போன இனிமையான நமது கல்லூரி வாழ்க்கையை நினைவு படுத்தும் ஒரு படம் தான் இனிது இனிது...தெலுங்கில் படுஹிட்டான ஹாப்பி டேஸ் படம் இரண்டு வருடத்திற்கு பிறகு ரீமேக் ஆகியிருக்கிறது...தெலுங்கில் ஹிட் ஆன படங்களில் நாம் எத்தனையோ படங்களை ரீமேக் செய்து அதை தமிழில் ஹிட் செய்திருந்தாலும்,இனிது இனிது தமிழில் ரீமேக் செய்ய அவசியமான படம் தான்...புரியாத மொழியில் பார்த்திருந்தாலும் அந்த படம் கல்லூரி வாழ்க்கையின் ஒரு பகுதியை அழகாய் படம் பிடித்து காத்திருக்கும்...

அந்த வகையில் பாராட்டலாம்...இந்த படமும் தமிழில் ரீமேக் ஆனால் எப்படி இருக்கும் என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான் தமிழில் ஓகே ஆனது பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் மூலமாக...இப்போது நமக்கு புரிந்த 
மொழியில் அதும் திரையில்.....


படத்தில் நான்கு நாயகன்,நாயகிகள் என மொத்தம் எட்டு பேரை களம் இறக்கியுள்ளார் இயக்குனர் மற்றும் கேமராமேன் K.V.குகன்...திரைக்கதை செதுக்கும் பணியில் தெளிவாய் இருந்திருக்கிறார்...மொக்கையான காட்சிகள் என்று சொல்லும் அளவுக்கு அதிகம் இல்லை...

படத்தின் கதை, நாயகன் சித்து (ஆதித்) முதலாம் ஆண்டு கல்லூரி செல்கிறார்...முதல் நாளே நாயகனுக்கும் நாயகி மதுவுக்கும் (ரேஷ்மி) அறிமுகம் ஏற்படுகிறது...நாயகி நன்றாக பாடுவதை பார்த்த ஒரு சீனியர் பின் அலைய ஆரம்பிக்கிறார்...ரேகிங் மூலமாக டைசன்(நாராயண்),விமல்(விமல்),ஷங்கர்(ஷரண்), அபர்ணா(பெனாஸ்),சங்கீதா(ஜியா) என அனைவரும் தோழர்கள் ஆகிறார்கள்....கேலி கிண்டல்கள் என அனைத்தும் குறுகிய காலத்தில் சேர பல ஆண்டுகள் பழகியது போல கல்லூரி முழுதும் திரிகிறார்கள்...எல்லாரும் ஒன்றாக இருந்தாலும் சித்து - மது,அப்பு - விமல்,ஷங்கர் - சங்கீதா என தங்களுக்குள் அதிக நெருக்கமாக இருக்கிறார்கள்...பிறகு எப்போதும் போல சண்டைகள்,மன்னிப்பு கேட்டு அலைதல்,ஈகோ என கதை நகர இவர்களின் ஜோடி சேர்ந்ததா என்பது தான் மீதி கதை...

ஒரு பக்கம் சீனியர்களின் ராகிங்..மறு பக்கம் கேலி கிண்டல்கள் என வாழ்க்கை நகர்கிறது...இதில் சீனியர் மாணவியான ஷ்ரவந்தியை(தெலுங்கில் வந்த அதே சோனியா தீப்பி)பாலோ செய்யும் டைசன்,கதையில் ஒரு விறுவிறுப்பு....பேர் கேட்கும் காட்சியிலும்,கேண்டீன் செல்லும் காட்சியிலும் சரி,நண்பர்கள் ஷங்கர்க்கு நட்போட வேல்யு தெரியாது நு சொல்லும் போது ,"ஆனா எனக்கு தெரியும் டா...அவன் என் தோழன் டா" நு சொல்லி அழும் காட்சிகளில் பின்னி எடுக்கிறார்...

நாயகன் ஆதித் லேசாக வினய் சாயலில் இருக்கிறார்...பாடி லேங்குவேஜில் பட்டையை கிளப்புகிறார்...விமல் அப்பு ரகளைகள் படு உச்சம்....கிராமத்தில் இருந்து வரும் பால்பாண்டி படிக்க முடியாமல் கல்லூரியை விட்டு செல்ல முயலும் போதும்,இறுதி ஆண்டில் தனது கிராமத்தின் நிலையை ஆங்கிலத்தில் பேசி கலக்கும் போதும் நம்மிடம் கைதட்டுகளை பெறுகிறார்....


தொடக்கத்தில் இருந்தே ஜுனியார்களை முறைக்கும் போதும்,கிரிக்கெட்டில் தோற்கும் போதும்,க்ளைமாக்ஸ்சில் ஜுனியர்களை கட்டி தலுவும்போதும் க்யூட்...

டான்மாக்ஸ் எடிட்டிங் தெளிவான பொலிவு....மிக்கி ஜே மேயர் இசையில் 
அனைத்து பாடல்களும் தெலுங்கில் இருந்து நேரடி இறக்குமதி...தெலுங்கை விட தமிழில் சற்று தடுமாற்றமே...

மொத்தத்தில் "இனிது இனிது" ஒரு அழகான இனிய கல்லூரி ஆல்பம்...

Comments

பிரகாஷ் ராஜ் தயாரிப்பு என்று நீங்கள் சொல்லித்தான் தெரிந்துக்கொண்டேன்... பெரிய அளவில் பப்ளிசிட்டி இல்லை போல... பார்த்து விடவேண்டியது தான்...
Gowtham GA said…
எல்லா நல்ல படங்களும் பெரிதாக பப்ளிசிட்டி செய்வதில்லை...அதுவும் பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது...குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது..
உதாரணம் : கண்ட நாள் முதல்,மொழி,அபியும் நானும்...தெலுங்கில் ஹப்பி டைஸ் பார்த்திருந்தால் விறுவிறுப்பு இருக்காது...
Anonymous said…
i like ur way of writing.. if i read ur review , i feel like i watched a movie ..good job... excel ur writing kills da... all the best..