யார் டாக்டர் ????



டாக்டர்களை கடவுளாக வழிபடும் நமது இந்திய நாட்டில் டாக்டர்கள் மீதான வழக்குகளும் அதிகரித்த வண்ணமே உள்ளன...எடுத்துக்காட்டாக, நான் அடையாரில சென்று கொண்டு இருந்தபோது  சாலையில் திடீரென கூட்டம் நிரம்பி வழிந்தது...ட்ராபிக் ஜாம் ஆகாதது தான் குறை என்னுமளவுக்கு அப்படியொரு கூட்டம்...

என்ன தான் நடக்குது என பார்க்கும் போது தான் தெரிந்தது...அந்த இடம் அடையார் மலர் மருத்துவமனையின் முகப்பு என்று...ஒரு டாக்டரின் கவனக்குறைவால் ஒரு வயதானவர் இறந்துவிட்டார்...முதலில் வந்து இறங்கியது சன் டிவியும்,தமிழன் டிவியும்...கண்மூடி கண்திறக்கும் நேரத்திற்குள் அடுக்கடுக்காய் வந்து கடைவிரித்து விட்டன ஏனைய டிவிகளும் ...


 நள்ளிரவு அட்மிட் செய்த ஒரு வயதானவரை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எந்த ஒரு மருத்துவ வசதியும் கொடுக்காததால் தான், அவர் இறந்திருப்பதாக இறந்தவரின் உறவினர் டிவியில் பேட்டி அளித்துள்ளார்...ஒரு மருத்துவமனையில் அவசரத்திற்கு கூட ஒரு மருத்துவர் இல்லை என்றால் எந்த அளவில் அந்த நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என நீங்களே ஊகிதுக்கொல்லுங்கள்...

ஒரு பக்கம் பணத்திற்காக சுகப்ரசவம் செய்ய விடாமல் ஆப்றேஷன் செய்யும் டாக்ரர்கள்,மறு பக்கம் இப்படி நோயாளிகள் மீது கவலை கொள்ளாத நிர்வாகம்...அரசு மருத்துவமனைகளில் சரியாக கவனிக்க மாட்டார்கள் என்றுதான் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கிறார்கள்...அங்கும் இப்படி என்றால் சாதாரண மக்கள் வேறு எங்கு தான் போவார்கள்???

Comments

ஈசு தமிழ் said…
பதிவுலகிலும் டாக்டர் என்று சொல்லிக்கொண்டு போலிகள் உலவுகின்றன்ரே தெரியுமா ?
Gowtham GA said…
ஆமாங்க...எங்க போனாலும் போலிகள் இருக்கத்தான் செய்யுறாங்க...
Anonymous said…
//ஒரு டாக்டரின் கவனக்குறைவால் ஒரு வயதானவர் இறந்துவிட்டார்...முதலில் வந்து இறங்கியது சன் டிவியும்,தமிழன் டிவியும்.//
irappantharku munpa? irantha pinpa?
Gowtham GA said…
நம்ம ஆளுங்க என்னைக்கு முன்னாடி வந்திருக்காங்க???? எப்பவுமே கடைசி தானே !!!!!

அவர் இறந்த பிறகு கிட்டத்தட்ட மதியம் ஆகும் பொது தான் மலர் ஹாஸ்பிடல்க்கு வந்திருக்காங்க...
எல்லாமே வியாபாரம் ஆயாச்சே கௌதம். கேள்வி கேட்க கூட நேரம் இல்லாம தான் நம்ம வாழ்க்கை ஓடுதே! :(
Gowtham GA said…
//கேள்வி கேட்க கூட நேரம் இல்லாம தான் நம்ம வாழ்க்கை ஓடுதே! :( //

சரி தான்..கேள்வி கேட்க கூட நேரம் இல்லாம தான் நம்ம வாழ்கை ஓடுது...ஆனா இப்படியே போனால் நம்ம வாழ்கையே கேள்விக்குரியாகிடும் போல???
//அரசு மருத்துவமனைகளில் சரியாக கவனிக்க மாட்டார்கள் என்றுதான் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கிறார்கள்..// இல்லை நண்பரே இன்னும் கிராமப்புரங்களில் அரசாங்க ஆஸ்பத்திரியைத்தான் நாடி வருகிறார்கள்.அரசு மருத்துவணை என்றாலே நன்றாக கவனிக்க மாட்டார்கள் என்பது நடுத்தர/உயர் வர்க்க மனோபாவம்.ரேஷன் அரிசி,பொது மருத்துவமணை, இதெல்லாம் இவ்வர்கங்களுக்கு அலர்ஜி.கிராமத்திற்கு வாருங்கள்.தலைமுறை தலைமுறையாக அரசாங்க மருத்துவ மணைகளில் பிரசவம் பார்த்து வரும் மக்களும் ஊள்ளனர்.