சச்சின் - சாதனைகளின் கதவு


உலகெங்கும் உள்ள ஒட்டு மோத்த கிரிகெட் ரசிகர்களின் மனதிலும் இன்னும் நிலைத்து நிற்கும் வரலாறு நாயகன் சச்சின் தான்...இன்று வரை கிரிக்கெட்டில் இந்தியாவின் அடையாளம்...கிரிக்கெட் உலகின் அழியாப்புகழ் கொண்டவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் நிற்கும் இவர் எத்தனையோ காயங்களுக்கு பிறகும் அறுவை சிகிச்சைக்கு பிறகும் இன்னும் களத்தில் புகுந்து மக்கள் மனதை வேட்டையாடிக்கொண்டு விளையாண்டு கொண்டிருக்கிறார்...(வேட்டையாடு விளையாடு)


தனது முந்தைய சாதனைகளை முறியடிப்பது தான் சச்சின் அவர்களுக்கு பொழுது போக்கு என்றே கூறலாம்...அந்த அளவுக்கு  தலைவர்  செய்யாத  சாதனைகளே  கிடையாது ...இது வரை அவரின் கனவாக இருந்த இரட்டை சதமும் அடித்து, இரட்டை சதம் அடித்த முதல் மனிதர் மற்றும் முதல் இந்தியர் என நமது தேசத்திற்கே  பெருமை தேடிக் கொடுத்து விட்டார் ...(கோவில் பட வடிவேலு ஸ்டைல் இல் எங்கயாச்சும் ஆள வச்சு இதெல்லாம் பண்றீங்கள???)  

அவரின் சில துணுக்குகள் :

எல்லா பவுலர்களின் பந்தையும் சிதறடிக்கும் சச்சின் 98 இல் ஷேன் வார்னே  வின் பந்துகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டவர்...அதன் பின் ஒரு மாதத்திற்கும மேலாக சென்னை இல் தங்கி சிவராமகிருஷ்ணரிடம் பயிற்சி எடுத்திருக்கிறார்...(அதற்க்கு பிறகு அவர் ஆடிய ஆட்டமென்ன????)



எந்த நகரத்திற்கு விளையாட போனாலும்  தாடி,கூலிங்க்ளாஸ் என கெட்டப்பை மாற்றிக்கொண்டு நகர்வலம் வருவார்...(மும்பை தாக்குதலுக்கு முன்பு வரை)...


இது வரை ஐந்து உலக கோப்பைகளில் விளையாடி இருக்கிறார்..இந்தியா,தென் ஆப்ரிக்கா வில் நடந்த உலக கோப்பை போட்டிகளில் மேன் ஆப் தி சீரீஸ் நம்ம பாஸ் தான்...(ஆனா நம்ம நாடு வெண்கல கிண்ணம் கூட வாங்கலையே தல)



சச்சின்க்கு பிடித்த நம்பர் 10..அதை நீங்கள் அவரின் டீ ஷர்ட் இல் பார்க்கலாம்...அது போக வண்டி நம்பர் இல் 9999 நம்பரை யாருக்கும் விட்டு தர மாட்டார்...

                                                                (அச்ரேக்கர்-சச்சின்)

சிறு வயதில் நான்கு மணி நேரமானாலும் அவரை யாராலும் அவுட் செய்ய முடியாது...பயிற்சியாளர் அச்ரேக்கர் ஸ்டம்ப் மீது ஒரு ருபாய் வைத்து சச்சினை அவுட் செய்பவர்களுக்கு இந்த ஒரு ருபாய் என்று சொல்வாராம்...(அப்ப அஞ்சலி பவுலிங் பண்ணி இருந்தா முதல் பாலிலேயே அவுட் ஆகிருப்பாருல ???)



சச்சினுக்கு கார்ரேஸ் என்றால் முகவும் பிரியமாம்...நரேன் கார்த்திகேயனுடன் பேசி புது வேகமான கார்களை பற்றி அப்டேட் செய்து கொள்வாராம்...


அவரிடம் இருந்து யாருக்கு எஸ்.எம்.எஸ் வந்தாலும் "THANKS AND LOVE SACHIN" என்பது இறுதி வாக்கியமாக இருக்குமாம்...(எங்களுக்கும் அனுபுவீங்களா சார்??? :) )

என்றுமே உங்கள் ஆட்டதிற்கு நாங்கள் அடிமை சார்...ஒரு பக்கம்  இசையில் இரண்டு ஆஸ்காருடன் இந்தியாவை முதலே தலை நிமிர்த்தி விட்டார் ஒருவர்...இப்போது இவரின் இரட்டை சதம்...இப்போது புரியட்டும் இந்தியா என்ன செய்கிறது என்ன எழுதலாம் என துடிக்கும் உலக பத்திரிக்கைகளுக்கு...

நன்றி : விகடன்,இனைய பத்திரிக்கைகள்...

Comments

//என்றுமே உங்கள் ஆட்டதிற்கு நாங்கள் அடிமை சார்..// //.இப்போது புரியட்டும் இந்தியா என்ன செய்கிறது என்ன எழுதலாம் என துடிக்கும் உலக பத்திரிக்கைகளுக்கு...// செம்ம அடி! இப்போதாவது புரியட்டும் உலகப் பத்திரிகைகளுக்கு - இந்தியா அடிமைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் புண்ணியபூமி என்று! சும்மா டமாசு பாஸு, டென்சன் ஆயிடாதீங்க :)) அப்படியே கீழே இந்த வேர்ட் வெரிபிகேசனைத் தூக்கினாப் புண்ணியமாப் போவும். அதை வேற தட்டணுமான்னு கமெண்ட் போட வர்றவனும் போடாம போயிடுவான்.
Gowtham GA said…
விடுங்க பாஸ் இதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா???(வின்னர் பட ஸ்டைல்இல்)
எனக்கு மிகவும் பிடித்தமான கிரிக்கெட் பிளேயர் சச்சின் தான்... 194 சாதனையை அவர்தான் முறியடிக்க வேண்டுமென்று மிகவும் ஆசை பட்டேன்... அது நிறைவேறியது மட்டுமல்லாமல், 200 ம் அடித்து சாதனை மன்னன் சச்சின் என்பதை மீண்டும் ஒரு முறை நிறுபித்துவிட்டார்...!
Gowtham GA said…
எத்தனை நட்சத்திரங்கள் வானத்தில் மின்னினாலும் சூரியன் ஒன்று தான்..அவர் தான் சச்சின்...