திருச்சி to நெல்லை


ஒரு குறும்பட விழாவிற்காக ஜனவரி 28 அன்று திருச்சி சென்றோம்...பாரதிதாசன் பல்கழைக்கழகத்தில் "பயாஸ்கோப்" என்ற பெயரில் இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடந்தது...குறும்பட இயக்குனரும் நான் காண வேண்டும் என நினைத்த இயக்குனருமான இயக்குனர் R.P அமுதன் அவர் வருகை புரிந்திரயுந்தார்...அவரை காண வேண்டும் என நான் நினைத்ததற்கு முக்கியமான காரணம் ஒரு முறை எடிட்டர் லெனின் அவரையும் அவரின் "பீ" குறும்படத்தைபற்றியும் கூறியது தான்... 


சில குறும்படங்கள் (அமுதனின் "பீ" உட்பட)திரையிடப்பட்டன...அதைப்பற்றிய விவாதங்களும் நடைபெற்றன...பல்கழைக்கழகத்தின் மாணவர்கள்,ஆசிரியர்கள் என அனைவரும் எங்களை நன்றாக கவனித்துக்கொண்டார்கள்...அவர்களுக்கு என் நன்றி என்றும் உண்டு...

 முடிவில் அமுதன் அவர்களுடன் உரையாடிவிட்டு சான்றிதழ்களுடன் விடை பெற்றுக்கொண்டோம்...

சான்றிதழ்களுடன் வெளியே வரும்போது தான் அங்கு ஷக்ரியா என்ற போட்டிக்கான கோப்பையை பார்த்தேன்...இதை பார்க்கும் போது சென்ற வருடம் தனியாக வந்து இரண்டு பரிசுகளுடன் சென்ற நிகழ்வு நினைவுக்கு வந்தது...அப்போது நான் கோபி கலைக்கல்லூரியில் படித்து வந்தேன்...




பிளாஷ் பேக் : 
"சென்ற முறை என் கல்லூரியில் இந்த போட்டிக்கு யாரும் வர விருப்பம் இல்லாததால் நான் மட்டும் தனியாக திருச்சி சென்றேன்...அனைவரும் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்...பின்ன ஒரு கல்லூரியில் இருந்து ஒரு பையன் மட்டும் வந்தால்???
இரண்டு பரிசுடன் பத்து புள்ளியில் கோப்பையை ஜெயிக்க முடியாமல் ஊர் திரும்பினேன்..."

இந்த வருடம் S.R.M இன் பிரதிநிதியாக செல்ல விரும்புகிறேன்... 

இதற்கடுத்து பிப்ரவரி 1 அன்று  திருச்சியில் இருந்து திருநெல்வேலி சென்றோம்...
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கழைக்கழகத்தில் நடக்கும் "கரிசல் திருவிழா" என்னும் போட்டிக்காக சென்றோம்...(உனக்கு வேற பொழப்பே இல்லையா என யாரும் நினைககதீர்கள்...எங்களுக்கு இது தான் பொழப்பு )

ஒரு நாளுக்கு முன்பே நெல்லைக்கு சென்றோம்...காரணம் அருகில் இருக்கும் குற்றாலம்...ஹோட்டல் சங்குந்தலா வில் ரூம் புக் செய்து விட்டு தென் காசி பஸ்ஸை    பிடித்தோம்...


குற்றாலத்தின் முனால் நின்று கொண்டு குளிக்காமல் நிற்கும் கொடுமையை விட வேறு எந்த கொடுமையும் இல்லை...எனேன்றால அன்று எனக்கும் என்னோடு வந்த இன்னொரு மாணவனுக்கும் பலத்த  காய்ச்சல்...வடிவேலு ஸ்டைலில் அழுது கொண்டு வெறும் போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பி வந்தோம்...


 திரும்பிவந்து ஒழுங்காக பல்கழைக்கலகத்திர்க்கு கிளம்பினோம்...அருமையான உபசரிப்பு...உண்மையான மாணவர்களின் கடின உழைப்பினை இங்கு தான் நான் பார்த்தேன்...உணவு வகைகளில் இருந்து பரிமாறுவது வரை அனைத்து வேலைகளும் மாணவ மாணவிகளே செய்தனர்...அவர்களின் உழைப்புக்கு சிறந்த ஊதியம் உண்டு...அது போக விடை பெரும் முந்திய தினம் இரவு நமது கலாசார இசை அரங்க்றேற்றம்..தோள்கள் தசை முழுக்க நடனமாடிய அற்புதம் நமது பாரம்பரிய இசையில் மட்டுமே நிகழும்..


போட்டிகள் என்றாலே கரும்பு தின்ன கூலி வேண்டுமா என அடித்து பிடித்து ஓடும் எனக்கு இந்த முறை போட்டி சற்று கடினமாகவே இருந்தது...எப்படியோ அடித்துப்பிடித்து அனிமேஷன் இல் ஒரு பரிசு வாங்கி விட்டேன்...மொத்தம் ஐந்து பரிசுகளுடன் திருநெல்வேலி இல் இருந்து திரும்பி வந்தோம்...வாழ்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்...

Comments