

பன்னைபட்டி என்ற கிராமத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஊரை விட்டு போய் படம் பார்த்ததற்காக கண்டிக்கபடுகிராகள்...(அதும் ஆங்கிலப்படமாம்!!!)இதனால் ஊரை விட்டு சிறிது காலம் போய் விடலாம் என்று என்னும் மூவரும் மதுரையில் உள்ள நண்பனை பார்க்க செல்கிறார்கள்...அங்கே அவனுக்கு வெள்ளைக்காரியுடன் திருமணம் நடக்க அதிர்கின்றனர்...அவனோ கோவா வில் இவளை பிடித்ததாக கூற மூவரும் கோவா சென்று ஆங்கில பெண்களைக் காதலித்து கல்யாணம் செய்து வெளிநாடு போய் விடலாம் என்று கில்மாவான திட்டம் போடுகிறார்கள்...கோவா கிளம்புகிறார்கள் பின்னர் என்னை நடக்கிறது?காதலித்தார்களா இல்லை ஊருக்கே திரும்பி போய்டாங்களா என்பது தான் கதை...(கதை இருக்கிறதா படத்தில்?????)
அக்கர் பிக்சர்சின் முதல் படம் நல்ல தொடக்கம்...பழைய வெங்கட் பிரபுவின் படங்களை பார்க்கும் போது இந்த படத்தில் சில விர்சில்கள் நன்றாகவே தெரிகிறது.ஏதோ ஒன்று படத்தில் இல்லாதாதது போல இருக்கிறது(கதை என்று நினைத்து விடாதீர்கள் அது எப்போதும் இருக்காது)...

இந்த படத்தில் செம லீடிங் என்றால் அது நம்ம பிரேம்ஜி தான்...நன்றாக நடித்திருக்கிறார்...அதே போல அவரை முக்கியமாக வைத்தே கதை நகர்கிறது...
காமெடியிலும் சும்மா விட்டு வைக்கவில்லை...முக்கியமாக மெளனி செய்யும் அலும்புகள்,கண்கள் இரண்டால் பாடல் என திரை அரங்கமே அதிர்கிறது.

ஜெய் யும் வைபவும் இரண்டாம் தரமாக தான் கதையில் தோன்றுகிறார்கள்...பியாவின் அறிமுக சீன் பழைய மாவு...எனினும் அழகாக இருக்கிறார்...கதை பெரும்பாலும் பிரேம்ஜியை யை நம்பியே நகர்கிறது...ஸ்னேஹா தேவை இல்லாத சேர்க்கை...இந்த படத்தில் பெரிய கப்பலின் ஒனர் ஆக இருக்கிறார்... வைபவ் ஸ்னேஹா காதல் காட்சிகள் அறுவை...
பியா அவ்வப்போது வந்து போகிறார்..."இது வரை " பாடல் அருமை...ஒரு பாடலில் மனதில் நிற்கிறார் பியா...ஜெய்,பியா காதல் காட்சிகள் அதிகமாக மனதில் நிற்காமல் போய் விட்டது...
அர்விந்த் ஆகாஷ்,சம்பத் காதல் காட்சிகள் மற்றும் சம்பத் பிரேம்ஜியிடம் பேசும் போது அரவிந்த் பீல் பண்ணும் காட்சிகள் வயிற்றை பதம் பார்கின்றன...தமிழ் சினிமா வில் முதன் முறையாக gay பாடல் காட்சி("வாலிபா வா வா" பாடல்) ...Dosthana படத்தை போல நல்ல முயற்சி...
யுவன் இசை எப்போதும் போல சூப்பர்..."கோவா கோவா " பாடல் இதற்க்கு ஒரு உதாரணம் ...சக்தி சரவணனின் ஒளிப்பதிவு அருமை...கோவா வின் கொட்டிக்கிடக்கும் அழகை காட்டத்தவறவில்லை...
இத்தனை இருந்தும் வெங்கட் பிரபு நம்மை ஏமாற்றி விட்டார்...இந்த படத்தில் ஹீரோ யார் என்று கேட்டால் எல்லாரும் பிரேம்ஜியை தான் கை காட்டுவார்கள்...அவர் காதல் தான் மனதில் பெரும்பாலும் நிற்கிறது...தான் காதலனுக்காக பாஸ்போர்ட் ஐ கிழித்து எரியும் மெளனி யின் காதல் நெஞ்சை தொடுகிறது...கிராமத்து சேலையில் சூப்பர்...
க்ளைமாக்ஸ் இல் நயன்தாரா,சிம்பு காட்சி நல்ல டச்...
படத்தில் சில காட்சிகள் நம்பும் படி இல்லை...
மதுரை யில் இருந்து லாரி இல் கோவா இறங்கும் மூவரும் ஹோட்டல் இல் அதும் பீச் பக்கத்தில் இருக்கும் ஹோட்டல் இல் தங்குவது...(கோவா வில் ஹோட்டல்க்கான செலவை கெட்டால் மயக்கமே வந்துவிடும் அந்த அளவுக்கு அதிகம்)
கோவில் நகையை திருடியவர்களை போலீஸ் இல் புகார் கொடுக்காத ஊர் மக்கள், மூவரும் ஊருக்கு திரும்பியதும் நயன்தாராவை கட்டி வைப்பது...
அதுத்த படமாவது இன்னும் நல்லா ட்ரை பண்ணுங்க வெங்கட் சார் மற்றும் சௌந்தர்யா மேடம்...
Comments