தமிழ் படம்- சிரிப்பு சரவெடி

சென்னை யில் வெட்டியாக இருப்பதை விட்டு விட்டு உருப்படியாக திருச்சி க்கு ஒரு செமினார் க்காக வந்தேன்.அரங்கம் நிறைந்த அந்த ஊர்வசி தியேட்டரில் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கினோம் தமிழ் படத்திற்காக...


இந்தியாவில் முதன் முறையாக Spoofing என்னும் மற்ற படங்களை கிண்டலடிக்கும் முறை இந்த படத்தில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

படம் தொடக்கத்தில் இருந்தே காமெடி அருவி கொட்ட ஆரம்பிக்கிறது.கள்ளிப்பால் ("சுத்தமானது சுகாதாரமானது என்று பிரிண்ட் செய்யப்பட்ட டப்பாவில்") கொடுக்கும் போது என்னை மெட்ராஸ் அனுப்பிவிடுங்க என்று குழந்தை சொல்வது.


ஹீரோ பெரியவன் ஆக சைக்கிள் சக்கரத்தை சுற்றுவது,ஒரே பாட்டில் அதும் காபி சொல்லி வருவதற்கும் முன்பே ஹீரோ பணக்காரன் ஆவது (அண்ணாமலை,படையப்பா) என தமிழ் சினிமா வின் முந்தைய சகிக்க முடியாத விஷயங்களை கலாய்திருக்கிரார்கள்...




இவர்களின் லொள்ளு பயணத்தில் இளைய தளபதியையும் விட்டு வைக்கவில்லை." பச்ச மஞ்ச " பாடலில் "இந்த பாடலை பாடியவர் உங்கள் சிவா" என்று முதலில் போடப்படுகிறது.பிறகு "என்று போடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்" என்று போட்டு பழைய விஜய் படங்களில் அவர் செய்த அலும்புகளை திரையிட்டுள்ளர்.அதே பாடல் வரிகளிலும் விஜய் யை சராமாரியாக கொன்றிருக்கிறார்கள்.இனிமேலாவது திருந்துவார்களா இந்த அதிரடி ஹீரோக்கள்.இனிமேல் வரும் ஹீரோக்கள் opening சாங் வைக்கலாமா என்று கண்டிப்பாக யோசிப்பார்கள்.


Nirav Shah வின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் கண்களில் பதிய வைக்கிறது.கேமரா சிவா வை சுற்றி சுற்றி காட்டுவது ரஜினி,விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் கேமரா அலும்புகளுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.

கண்ணனின் இசை அருமை. "ஓ மகசியா" பாடல் 50 பட பாடல்களின் வரிகளை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது."லாலாக்கு டோல் டப்பி மா" வரிகளில் அரங்கங்கள் அதிர்கிறது.


சிவா படத்திற்கு நன்றாக பொருந்துகிறார்.காதலுக்கு மரியாதை ஸ்டைல் இல் புத்தகம் கொடுக்கும் போதும் அந்த பெண் திருமணமானவர் என்று தெரிந்து மொக்கை வாங்குவது.பாஸ்கர்,வெண்ணிற ஆடை மூர்த்தி,மனோபாலா ஆகிய யூத் களுடன் (படங்களில் மட்டும்)  பாய்ஸ் படத்தை ஸ்பூப் செய்வது என வெளுத்து வாங்குகிறார்.

இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக தான் நகர்கிறது.முதல் பாதி அளவுக்கு இல்லை என்று தான் கூற வேண்டும்.அந்த அளவுக்கு சற்று தோய்ந்து விட்டது.

க்ளைமாக்சில் பரவை முனியம்மா வை வில்லியாக காட்டும் நேரத்தில் "எல்லா டைரக்டர்,producer உம் அவங்க பசங்கள வச்சு படம் எடுத்து பெரிய ஹீரோ ஆக்கிடுறாங்க" என்று விஜய் திரைக்கு வந்த வழியை தெளிவாக சுட்டிக்காடுயுள்ளார்.


அது போக ராமநாராயணன்,ராஜ் கிரண்,ராமராஜன் நாட்டாமை விஜயகுமார்,பி.வாசு படங்கள் என அனைத்தும் இவர்களின் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்த படத்தில் பெரிதாக பாதிக்கப்பட்டவர்கள் மாஸ் ஹீரோக்கள் தான்.முக்கியமாக விஜய் தான்.இனிமேலாவது நடிப்பதற்கு முயற்சி செய்வாரா?

பல கோடி ருபாய் செலவில் படம் எடுத்து அதற்கு வெட்டி விளம்பரங்கள் என ரசிகர்களை கடுப்பேற்றுவதர்க்கு பதிலாக குறைந்த பட்ஜெட்டில் வெற்றி கண்ட நாடோடிகள்,பசங்க,சுப்ரமணியபுறம்,வெண்ணிலா கபடிகுழு போன்ற கதையை நம்பி எடுக்கப்பட்ட  படங்களுக்கு முக்கியத்துவம் தரலாம்.

இதற்கு பிறகும் திருந்தவில்லை என்றால் ஆண்டவனே வந்தாலும் தமிழ் சினிமா வை காப்பாற்ற முடியாது.         

Comments

மிக அருமையாக இருந்தது உங்கள் விமர்சனம்