Visitors

hit counters

Tuesday, January 19, 2010

ஆயிரத்தில் ஒருவன் (இதை முதலில் கேளுங்கோல்)

பொங்கலன்று வெளிவந்த படங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் முக்கியமான படம்...35 கோடி செலவு,3 வருடம்,கடும் உழைப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது...

...ஆயிரத்தில் ஒருவன்...

என்ன தான் சத்யம்,அயனாக்ஸ்,மாயாஜால் என்று இருந்தாலும் நமது சொந்த ஊரில் நமது நண்பர்களுடன் விசிலடித்தும் சத்தம் போட்டுக்கொண்டும் பார்க்கும் சுகம் வேறு எங்கும் இல்லை...

எனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் பொங்கலை கொண்டாடிய பிறகு அங்குள்ள நாகையா தியேட்டர் க்கு அடித்து புதிது டிக்கெட் வாங்கி போகும் போது கிட்டதட்ட படத்தின் முதல் 15 நிமிடமே முடிந்து விட்டது...ஒரு வழியாக என்ன கதை என்பதை பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு ஊகிதுக்கொண்டோம்.


வியட்நாம் அருகே உள்ள ஒரு தீவில் சோழர்கள் தங்கள் கடைசி நாட்களை கழித்தார்கள் என்ற வரலாற்றின் படி அவர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க பயணிக்கிறது ரீமா சென் தலைமையிலான  குழு...ஏற்கனவே இதை தேடிப்போன பிரதாப் திரும்பி வராததால் அதையும் கண்டுபிடிக்க அவர் மகளாக ஆண்ட்ரியா அந்த குழுவுடன் வருகிறார்...இந்த குழுவில் அல்லக்கைகளின் தலைவனாக கார்த்தி வருகிறார்...

சோழன் போகும் போது ஏழு வகையான தடைகளை எற்படுதிச்செல்ல,எப்படியோ ஒரு வழியாக கடந்து சென்று விடுகிறார்கள்...பின் அங்கு இன்னும் கொஞ்சம்  சோழர்கள் தலைமுறைகளாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது . பார்த்திபன் தான் அங்கு மன்னன்...பசி பட்டினி என்று வாடும் மக்களிடம்  ஒரு தூதுவன் வருவான்...துன்புருவான்...மழை பெய்யும் எல்லோரும் தஞ்சை செல்வோம் என்று எதிர்பார்க்கிறார்கள்...அவர்களிடம் கார்த்தி,ஆண்ட்ரியா,ரீமா மூவரும் மாட்டிக்கொள்கிறார்கள்...இவர்களின் உடைகளை கழற்றிவிட்டு சோதனை செய்யும் பொழுது கார்த்தி உடலில் புலி ( சோழ நாட்டின் சின்னம் ) கண்டறிய , உடனே அவர் தான் தூதுவன் என்று நினைக்கிறார்கள்...பின்னர் சாதாரண மனிதன் தான் என்று தெரிந்தவுடன் கொடுமை செய்கிறார்கள்...மூவரையும் கொல்லப்போகும் பொழுது ஆடைகளை கழற்றி உடலில் புலி சின்னம் காட்டி நான் தான் தூதுவன் என்று காட்டுகிறார் ரீமா...ஆனால் கடைசியில் தான் தெரிகிறது ரீமாசென் பாண்டிய வம்சவழியில் மிஞ்சி இருப்பவர்...


சோழர்கள் செய்த  கொடுமைகளுக்கு தலைமுறை கடந்து பழி வாங்க இப்போது வந்திருக்கிறார்...மழை பெய்யவில்லை என்பதால் ரீமாசென் மீது சந்தேகம் வருகிறது...ரீமாசென் அவர்களை நம்ப வைத்து பழி வாங்க வந்தவள் என்பது  இறுதியில் தெரிகிறது...அப்பொழுது தான் கார்த்தி உண்மையான தூதுவர் என்று தெரிகிறது...பிறகு இந்திய ராணுவப்படை வியட்நாம் விரைகிறது...அங்கு நம் ராணுவப்படைக்கும் சோழர்களுக்கும் போர் நடக்கிறது ... அதில் சோழர்கள் தோற்றுப்போகிறார்கள்...பார்த்திபன் சாக,கார்த்தி ஒரு சிறுவனுடன் தப்பிக்க "சோழன் பயணம் தொடரும்" என்று படம் முடிகிறது...படத்தை பாதியில் இருந்து  பார்ப்பதை தவிர்க்கவும் (உங்கள் நன்மைக்கு)

கதை நன்றாக இருக்கிறது...ஆனால் திரைக்கதை தான் பலருக்கு புரியாத புதிராக உள்ளது..இரண்டு முறை பார்த்தல் தான் படம் புரியும்...அப்போது தான் இன்னொரு முறை கலெக்சன் ஆகும்...இதுவும் ஒரு நல்ல ஐடியாவாக இருக்கிறது போல???

படத்தில் பல காட்சிகளை தவிர்த்திருக்கலாம்...

முதல்பாதி பார்த்த ஆர்வம் குறைய தொடங்கும் அளவுக்கு இரண்டாம்பாதி அடிபட்ட குதிரை போல இழுக்கிறது...
உன் மேல ஆச தான் பாடல் முடிந்தவுனே அவர்களை ஓட வைத்து நம்மை கடுப்பேற்றி விட்டார் இயக்குனர்...

ரீமாவும் ஆண்ட்ரியாவும் ஆங்கிலத்தில் திட்டிக்கொள்ளும் கேட்ட வார்த்தைகள் மண்டையை சொரிய வைக்கின்றன...

அந்த கால சோழ மக்கள் பேசும் பாஷை ஒன்னும் விளங்கவில்லை...(அதுவும் தமிழ் தான்)

"மாலை நேரம்" பாடல் சேர்க்கப்படவில்லை...

கார்த்தி சண்டை போடும் அந்த காட்சி க்ளாடியேட்டர் படத்தை நினைவூட்டுகிறது...

இத்தனை குறிகளிலும் சில நிறைகளும் உண்டு...

மிகுந்த மெனக்கெட்டு இப்படி ஒரு கதைக்களம் அமைக்கப்படிருப்பது உண்மையில் வரவேற்க்கதக்கது...செல்வராகவனுக்கு ஜே ஜே...
கார்த்தி பருத்திவீரன் இல் வருவதைப்போலவே இந்த படத்திலும் நன்றாக கலாய்திருக்கிறார்...லொள்ளுக்கும்,இரட்டைஅர்த்த வசனங்களும் அவருக்கு பஞ்சமில்லை...

ரீமாசென் நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றாக நடித்துள்ளார்...

கேமராமென்  இன்  பிரமாண்டம்...

ஒரு பெண்ணின் மார்பகம் க்ளோசப்பில் காட்டப்படிருப்பது...ஒரு பெண் தன் மார்பகத்தை அழுத்தி ரதத்தை காட்டி தன் வறுமை நிலையை மன்னிடம் தெரிவிப்பது நம்மை துக்கத்தின்  உச்சியில் உக்கார வைக்கிறது...

பின்னணி இசை பல இடங்களில் சிறப்பாக இருந்தாலும் சில இடங்களில் காதை கிழிக்கிறது...

கூட்டலையும் கழித்தலையும்  ஒரு வழியாக முடிவுக்கு கொண்டுவருவோம்...

கடின உழைப்பு,பிரமாண்டம் என எத்தனை போர்வைகளை போர்த்தினாலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு திரைக்கதை தெளிவிருந்தால்,இரண்டாவது பாதி இன்னும் வேகம் இருந்திருந்தால் ஒரு புது சரித்திரம் விரைவில் படைக்கலாம்...

1 comment:

Anonymous said...

nice

You may like this