அவர் ட்ரைலர் - என் கை வண்ணத்தில்

என் நண்பர் செல்வக்குமார் அவர்களின் "அவர்" திரைப்படத்திற்கு ட்ரைலர் உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது...கணினியில் உட்கார்ந்தவுடன் ஆன்டணி, லெனின் ,V.T.விஜயன் என எல்லாரும் உள்ளே ஆதிக்கம் செய்ய துவங்கி கொண்டார்கள்...

கமல் சாரின் "மகாநதி" யில் தொடங்கிய AVID தொழில்நுட்பம் இன்னும் தமிழ் சினிமாவின் கைக்குள் சுழல்கிறது...

கோபி  கலை கல்லூரியில் படிக்கும் போதே ADOBE PREMIERE சாப்ட்வேரை பயன்படுத்தி சினிமா பாடல்களை எடிட் செய்து பார்ப்பேன்...கல்லூரி ஆண்டு விழாக்களிலும் என் எடிட்டிங் புகுந்து விளையாடியது  இன்னொரு கதை...

அது போக ADOBE AFTER EFFECTS இல் வீடியோக்களுக்கு விஷுவல் எபக்ட்ஸ் (VISUAL EFFECTS) செய்து பார்ப்பேன்...

அதற்க்கான இணைப்பு இதோ....

ADOBE PREMIERE இல் துவங்கிய என் சகாப்தம் இன்று இந்த படம் வரை வந்துள்ளது...கிடைத்த வாய்ப்பை விட முடியுமா என்ன???


ஆன்டணி சாரை மனதில் வேண்டிக்கொண்டு கை வைத்தேன்...என் கைவண்ணத்தில் எப்படியோ ட்ரைலர் எடிட்டிங் முடிந்துவிட்டது...இந்த படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் முற்றிலும் டிஜிட்டல்...இதோ  உங்களுக்காக!!!!!








இந்த படத்தில் நடிக்கும் அனைவரும் புது முகங்கள்...ஒரு குடும்பத்தில் நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் தான் கதை...ஆனால் கொலையோ கொள்ளையோ இல்லாத சஸ்பென்ஸ் த்ரில்லர். No Skin show!...எனவே குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் அமர்ந்து இரசிக்கலாம்.



மிக முக்கியமான அம்சம் விஷிவல் கம்யுனிகேஷன் படிக்கும் மாணவர்கள் படத்தில் ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட துறைகளில்          பயன்படுத்தப்படுவார்கள்.

இதற்க்கு என்னுடைய எடிட்டிங் ஒரு சிறந்த உதாரணம்...







இந்த படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் என்ன அனைத்தும் செல்வக்குமார் அவர்கள்...நல்ல வேலை எடிட்டிங், இசை , கேமரவையாச்சும் விட்டு வைத்துள்ளாரே...
இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் படத்தின் பூஜையே டிஜிட்டல் சினிமா பற்றிய கருத்தரங்குடன்தான் துவங்கியது...அனாவசிய சினிமா அலட்டல்கள் இல்லாத அமைதியான துவக்கம்...இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

மேலும் ,

FACEBOOK இல்,

அவர் பக்கத்தில் இணைய  http://tinyurl.com/AVAR-in-Facebook
 
அவர்  புகைப்படங்கள் - http://tinyurl.com/avar-Launch-photos
அவர்  பாடல் ரெக்கார்டிங் படங்கள் - http://tinyurl.com/AVAR-song-recording

இணையுங்கள் எங்களுடன் ...
உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கபடுகிறது...
மறக்காமல் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள்...

Comments

Unknown said…
ட்ரைலர் அசத்துகிறது.. வாழ்த்துக்கள் ...
Gowtham GA said…
நன்றி தோழரே.... :)